பெண்களின் மிகபெரும் ஆயுதங்களில் ஒன்றாக இருந்தது தலையணை மந்திரம் . கூட்டுகுடும்பத்தில் வாழ்ந்த போது இரவு படுக்கும் போது மட்டுமே கணவனிடம் தனிமையில் பேசும் வாய்ப்பு மனைவிக்கு கிடைக்கும் . அப்போது மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை , புதிய சேலை , நகை போன்ற பலவற்றை குறித்து கணவனிடம் "கனிவான" முறையில் எடுத்துக் கூறி சாதித்துக் கொள்வதன் முறைக்குப் பெயர்தான் தலையணை மந்திரம்.
கூட்டுக்குடும்ப முறைகள் குறைந்ததோடு மட்டுமல்லாமல் , பெண்களும் தாங்களாகவே உழைத்து தனக்குத்தேவையான பொருட்களை வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்ட பிறகு இந்த தலையணை மந்திரத்தின் தேவை மிக சுருங்கி விட்டது.
முன்பு பெண்களுக்கு படிப்பு மறுக்கப்பட்டதனாலும், வீட்டைத்தவிர வெளியிடங்களுக்கு செல்லாமல் முடங்கி இருந்ததாலும் அவர்களின் உலகம் மிக சிறிதாக இருந்தது .ஆனால் ஆண்களுக்கு தொன்று தொட்டு அனைத்துவகையான சுதந்திரமும் இருந்ததால் அவர்களால் உலகின் எந்த மூலைக்கும் பயணித்து பல்வேறு அனுபவங்களைப் பெறமுடிந்தது இதனால் அக்காலத்தில் ஆண் பெண் இருவரின் உலகமும் வெவ்வேறானதாக இருந்தது. இருவருக்குமான உரையாடலூக்கான பொதுவான விஷயங்கள் மிக மிக குறைவாகவே இருந்தன.
இன்றோ நிலைமை மிக மிக மாறிவிட்டது , ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெணகள் முன்னேறி வருகின்றனர் . வீட்டிலேயே இருக்கும் பெண்ணாக இருந்தாலும் தொலைக்காட்சி , செல்போன் போன்றவை மூலம் உலக நடப்புகளை தெரிந்து வைத்திருக்கின்றனர் .இதனால் தற்பொழுது இருவர் வாழும் உலகமும் ஒரே உலகமாக மாறிவிட்டது.
மாறிவிட்ட இந்த சமூக சூழலினால் ஆணுக்குப் படுக்கையறையில் மனைவியுடன் அன்றாட அரசியல் நிகழ்வுகள் , சினிமா என பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்துப் பேச முடியும். இது போன்ற உரையாடலினால் ஒருவரை ஒருவர் மேலும் புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான நெருக்கத்தினை அதிகரிக்கின்றது . (இதுவரை மனைவிடம் பொது விஷயங்கள் குறித்து பேசத்தவர்க, இனியாவது பேசத்தொடங்குங்கள் )
இருப்பினும் அரசியல் , சாதி,மதம் போன்றவை இன்றும்பெண்களுக்கு புடிபடாத ஒன்றாகவே இருக்கின்றது.
எனவே இவை குறித்து கணவன் எவ்வளவு சீரியஸாக சொன்னாலும் ,நகைச்ச்சுவையாக சொன்னாலும் ஒன்றுமே புரியாத காரணத்தினால் அமைதியாக கேட்டுக்கொள்வார்கள் .ஆண்களால் இது போன்ற கருத்துக்களை பொதுவெளியில் நண்பர்களுடனோ , உடன் பணியாருப்பவர்களுடனோ பேச முடியாது , மீறிப்பேசினால் மனஸ்தாபம் ஏற்படும் அல்லது நட்பில் விரிசல் ஏற்படும்ஒரு சில சமயங்களில் கைகலப்பு கூட உண்டாகும்.ஆண்களுக்கும் எந்த விதமான எதிர்வினையும் வராத ஒரு புதிய தளம் கிடைத்திருப்பதால் தன்னுடைய வீர உரைகளை மனைவிடம் வெளிப்படுத்தி புளங்காகிதம் அடைந்தது கொள்கின்றான்.
கணவனிடம் புதிய தலையணை மந்திரத்தில் பயிற்சி பெற்றதனால் பல இல்லத்தரசிகள் இப்போது வாட்சப்பில், முகபுத்தகத்தில் அரசியல் குறித்து தீவிரமாக களமாட ஆரம்பித்திருக்கின்றனர் .
விதி விலக்காக பெண்களும் கணவர் கருத்தில் மாறுபட்டு பேசுவதுண்டு. (எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய ஆண்பால் பெண்பால் என்ற புத்தகம் எம்ஜிஆர் ரசிகையான மனைவிக்கும் , கருணாநிதியின் உடன்பிறப்பான கணவருக்கும் நடக்கும் மோதல் குறித்து விரிவாக பேசியது ).இந்த புதிய தலையணை மந்திரத்தால் பெண்களுக்கு சமூகம் குறித்து ஓரளவு விழிப்புணர்வு கிடைக்கின்றது.
செங்கதிரோன்
No comments:
Post a Comment