Monday, June 7, 2010

மூன்றாம் பிறையும் சேதுவும் ஒரு ஒப்பீடு .



மூன்றாம் பிறையும் சேதுவும் ஒரு ஒப்பீடு ....

சமீபத்தில் மூன்றம் பிறை படம் பார்த்தேன்.மூன்றாம் பிறை படத்தின் இறுதிக் காட்சிகளும் சேது படத்தின் காட்சிகளும் ஒன்றாக இருப்பதைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவியை குணப்படுத்த மூலிகை மருத்துவம் பயன்படுத்துவதுபோல சேது படத்திலும் விக்ரமின் மன நோயை குணப்படுத்த மூலிகை மருத்துவம் பயன்படுத்தப்படும். இதைப் போல பல்வேறு ஒப்பீடுகளை சொல்ல முடியும் .காதல் காட்சிகளில் உடை அமைப்பை கூர்ந்து கவனித்தால் அதன் ஒற்றுமை விளங்கும் . மூலிகை மருத்துவத்த்தில் இது போன்ற நோய்களை குணப்படுத்த முடியும் என்பதனை இருவருமே உண்மையிலேயே ஒப்புக்கொள்கிறார்களா என்பதும் தெளிவாக குறிப்படப்படவில்லை .இருப்பினும் பாலாவின் நான் கடவுள் மற்றும் பிதாமகன் இரண்டும் தமிழ் சினிமாவின் அபூர்வமான படம் என்பது மிகையல்ல. இரண்டு படங்களிலும் வெவ்வேறு வகையான உலகங்களை அறிமுகப்படுத்தி இருப்பார். பாலா ஒரு ரசிகனாக உங்களிடம் எதிர்பார்ப்பது நான் கடவுள் போன்றதான இன்னொரு அருமையான படத்தை விரைவில் வழங்க வேண்டும்.