Sunday, February 1, 2015

பானு கோம்ஸ் -என்னமா இப்படிப் பண்றீங்களேம்மா ..

அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தினைக் கொண்டு வந்த போது அதனை மாயாவதி ,முலாயம் மற்றும் லாலு ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். அவர்கள் எதிர்த்தற்கான காரணம் இது சமூகத்தில் பின் தங்கிய பெண்களுக்கான குரல் ஒலிக்காமல் ,அங்கும் உயர் சாதிப் பெண்களே ஆதிக்கம் செய்வார்கள் என்பதனால் தான், அதனை மெய்பிக்கும் வகையில் செயல்படுவர்தான் பானு கோம்ஸ்.

ஏற்கனெவே அரசியலில் மம்தா மற்றும் நமது மக்கள் முதல்வர் ஆகிய உயர் சாதிப் பெண்களின் அரசியல் திறமைகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இவர்களை முன் மாதிரியாகக் கொண்டு மற்ற பெண்களும் தங்கள் அரசியல் வாழ்வை தொடங்கினால் பெண்களின் பங்களிப்பு அரசியலில் கேலிக் கூத்தாகிவிடும்.

பானு கோம்ஸ் அன்னா  ஹசராவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் கேஜ்ரியோடு பணியாற்றி பின்னர் சமூக ஆர்வலர் என்ற அடையாளத்துடன் புதிய தலைமுறையில் நேர்பட பேசு மற்றும் புதுபுது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் அடிக்கடி தோன்றி பிஜேபியை பாராட்டியும் திராவிட இயக்கங்களை திட்டியும் வருபவர்.



மேலே உள்ள புகைப்படத்தில் கேஜ்ரிவாளுடன்  சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் பனுகோம்ஸ் தற்பொழுது கேஜ்ரிவால் போபியா வந்தது போல் அவர் பெயரக் கண்டாலே அலறுகிறார்.

அது மட்டுமன்றி முகப் புத்தகத்தில் பொன் மொழிகள் குறிப்பிடுவதில் வல்லவர். உதாரணத்துக்கு அவரின் பொன் மொழி ''இட ஒதுக்கீடு மூலம் படித்த மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கின்றார்''.இட ஒதுக்கீடு மூலம் படித்து தமிழக்த்தில் தலை சிறந்த மருத்துவர்கள் ஏராளமான பேர் இருக்கின்றனர்.இந்தியாவில் முதல் முறையாக கல்லீரல் மாற்று (liver transplantation) செய்து சாதனை புரிந்த Dr.சுரேந்திரன் , மருத்துவ உலகின் ரஜினி என்று நான் குறிப்பிட்ட Dr.தெய்வ நாயகம் , இருதய நோய் நிபுணர் Dr.சிவ கடாட்சம் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படி இட ஒதுக்கீடு மூலம் படித்தவர்களை கொச்சைப் படுத்துபவரை என்னமா இப்படி பண்றீங்களேம்மா என்று கேட்பது தானே சரியாக இருக்கும்.

இந்தப் பதிவின் நோக்கம் பானு கோம்ஸ் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த மட்டுமன்றி, நாம் அனைவருமே தங்கள் மனைவி,தோழி ,சகோதரி மற்றும் தாயாரிடம் அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்து பேச வேண்டும்.ஆரம்பத்தில் அவர்களுக்கு போராடித்தாலும் பின்னர் காத்து கொடுத்து கேட்க ஆரம்பிப்பார்கள். அவர்களை தெளிவடைய வைத்தாலே போதும் பானு கோம்ஸ் போன்ற நேற்று முளைத்த காலங்களை நமது சமூக பெண்கள் எளிதில் ஒதுக்கி தள்ளி விடுவார்கள்.






No comments: