Monday, May 11, 2015

கமல் நடனத்தை பரிகாசித்த பாண்டியராஜன்


நடனமே ஆடதெரியாத பாண்டியராஜன் எப்படி கமலை விமர்சிக்கலாம் என்ற உங்கள் கோபம் புரிந்தாலும் இதுதான் உண்மை .இது நடந்தது 1989ஆம் ஆண்டு வாக்கில் , தனது நெத்தியடி படத்தில் தான் இதனை செய்தார். 

நெத்தியடி படம் பல சிறப்புகளை உள்ளடக்கிய படம் , ஆனால் இடைவேளை வரை மட்டும்தான் படம் நனறாக நகைச்சுவையாக இருக்கும்.

1. அன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாததால் இறப்பு செய்தியினை அந்த ஊரில் உள்ள இளைஞர்களை  அருகில் உள்ள சொந்த பந்தங்களுக்கு செய்தி சொல்ல  அனுப்புவார்கள். அப்படி செய்தி சொல்ல செல்லும் பாண்டியராஜன் காலை மதியம் இரவு என்று  சினிமா பார்த்து அவர் அப்பா ஜனகராஜை ஏமாற்ற முயற்சிக்கும் காட்சி மிக அருமையாக இருக்கும்.
 2. இந்தப் படத்தின் நாயகி வைஷ்ணவி , இவர் குளிக்கும் போது  அவரின் முதுகை அழகை பார்த்து பாண்டியராஜனுக்கு காய்ச்சல் வந்து விடும். அடுத்து குளித்து முடித்தவுடன் கமலின்(stud) திருவானி தொலைந்து விடும் . முன்பெல்லாம் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்தது, அப்போது திருவானி தொலைத்து விட்டு அம்மாவிடம் திட்டு வாங்கிய பெண்கள் ஏராளமான பேர் இருப்பர்.

3.செந்தில் பல கட்சி பச்சையப்பன் என்ற அரசியல்வாதி கதாபத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார் .
4. ஜனகராஜ் கல்யாண சமையல்காரராக நடித்து இருப்பார் , இதில் அவர் பேசிய ஒரு வசனம் மிக பிரபலமானது , ''சரக்கு உன்து சைட் டிஷ் என்து'' 
5. மிக முக்கியமான் அம்சம் பாண்டியராஜனின் இன்னொரு ஜோடியாக அமலா நடித்திருப்பார்.
நேரம் கிடைத்தால் இந்தப் படத்தினை இடைவேளை வரை கண்டு மகிழுங்கள்.உங்கள் குழாயில் (Youtube ) இலவசமாகக் கிடைக்கினறது.

இப்பொழுது  தலைப்பிற்கு வருவோம். படம் பார்க்க  குழந்தையுடன் வரும் பெண்ணிடம் டிக்கெட் பரிசோதகர் குழந்தைக்கு டிக்கெட் எங்கு என்று கேட்டு  , எந்தக்  கழுதையாக இருந்தாலும் டிக்கெட் இருந்தாதான் உள்ளே விடுவேன் என்று சொல்ல ,கழுதையின் கழுத்தில் டிக்கெட் கட்டி தியேட்டாருக்குள்  செல்ல அந்த நேரம் கமல் குயிலியுடன் சூரசம்ஹாரம் படத்தின் வேதாளம் வந்திருக்கிறது பாட்டிற்கு குயிலயுடன்  ஆடிக்கொண்டிருப்பார்.



கமல் கிழே படுத்து உருண்டு இடுப்பை ஆட்டி ஆட கழுதை காட்டு கத்தல் கத்தி கமலை இம்சிக்கும். இந்தக் காட்சியைப்  பார்த்தால் தான் சொன்னது உண்மை என்று தெரியவரும். இது கமலுக்கு பாண்டியராஜன் கொடுத்த நெத்தியடி என்றும் வைத்துக் கொள்ளல்லாம் .

பி.கு. நான் உத்தம வில்லன் பார்த்தேன் படம் சூப்பர் .


No comments: