கடந்த ஒரு வாரமாக அதாவது ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் சவுக்கின் சாட்டை தொலைந்து விட்டது. சவுக்குக்கு எந்த அறிமுகமும் தேவையே இல்லை. இணையத்தில் அரசியல் நிகழ்வுகளை தீவிரமாகப் படித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் சவுக்கின் வீர சாகசங்கள் தெரிந்திருக்கும்.
கடந்த தி.மு.க. ஆட்சியின் இறுதிக் காலத்தில் சவுக்கு கருணாநிதி ஆட்சியின் முக்கிய அமைச்சர்கள் ,அதிகாரிகள் ஆகியோரின் ஊழலை அம்பலப்படுத்தியதன் மூலமாக சவுக்கு இணையதளம் மிகப் பிரபலமானது. தமிழ்நாட்டில் புலனாய்வுப் புலி இதழ்கள் எல்லாம் வெளிப்படுத்தத் தயங்கிய செய்திகளை துணிச்சலாக வெளிப்படுத்தி அனைவர் மத்தியிலும் பாராட்டினைப் பெற்றது.
தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் ஒரு வசனம் போல இந்த அநியாத்தைத் தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான் சொல்வார்களே அந்த வசனத்துக்கு மிகப் பொருத்தமான நபராகத் திகழ்ந்தார்.அதுவும் காவல் துறையில் மலிந்திருந்த ஊழலை தகுந்த ஆதரங்களுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.ஜாபர் செட்டின் தற்போதைய நிலைக்கு சவுக்கு மிக முக்கியக் காரணம், வார இதழ்களெல்லாம் இது போன்ற நபர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கையில் எதற்கும் அஞ்சாமல் ஒவ்வொரு நாளும் புது புது ஊழல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்த தொடர் நடவடிக்கையினால் தி.மு.க. ஆட்சியில் ஒரு முறை சிறைக்கும் சென்றார்.அபபொழுது சவுக்கின் நலன் விரும்பிகள் துடிதுடித்துப் போனார்கள். இருப்பினும் ஒரு சில ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டதால், அழுத்தம் காரணமாக விரைவில் ஜாமீனில் வெளிவந்தார்.
அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் முன்பு இருந்த அதே தீவிரத்துடன் செயல்பட முடியாவிட்டாலும், வேறு துறைகளில் மலிந்திருந்த ஊழல்களை வெளிக் கொண்டு வருவதில் முக்கிய கவனம் செலுத்தினார். நீதிபதிகளின் மறுபக்கத்தினை சவுக்கு வெட்ட வெளிச்சமாக்கியபோழுது ஒருவராலும் நம்ப முடியாத அநியாயங்கள் வெளிவந்தன. நீதி அரசர் என்று நாம் நம்பிக் கொண்டிருந்த பலர் எப்படி நீதி வியாபாரிகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதனை உணமையான ஆதாரங்களுடன் நிரூபித்தார் .
கடந்த ஒரு வருடமாக அதிமுக அரசின் ஊழல்களைக் குறிப்பாக மின்துறையில் நடக்கும் ஊழல்களை ஆதாரங்களுடன் அடுக்கினார்.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு செய்தி, மாறன் சகோதரர்களின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சவுக்குக்கு மிக முக்கியப் பங்குண்டு.
இப்படி இரண்டு ஆட்சிக்கும் எதிரானவராக இருப்பதால், அந்தக் கட்சிகளின் அபினமானிகளுக்கு இவர் பெயரைக் கேட்டாலே அலறும் நிலை உண்டாகி விட்டது.திமுககாரர்கள் எங்கள் ஆட்சியின் பொது சவுக்குக்கு இருந்த தைரியம் அதிமுக ஆட்சியின் போது இல்லை என்று குறைபட்டுக் கொள்வார்கள்.
தமிழகத்தின் ஜூனியர் ஆசாஞ்சே என்று பாராட்டபடும் சவுக்கு citizen journalism என்ற ஒன்றுக்கு மிகப் பொருத்தமானவராகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார். எதற்கும் அஞ்சாமல் தன் சாட்டையடிப் பதிவுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
காணமல் போன சாட்டை என்பது அவரின் சாட்டையடிப் பதிவுகளைத் தான்.
நன்றி
No comments:
Post a Comment