ஈழப்போராட்டம் நமக்குப் பல முக்கிய ஆளுமைகளை அடையாளம் காட்டி இருக்கின்றது. அவர்களில் ஒருவர் தான் கார்ட்டூனிஸ்ட் பாலா , அரசியல் அவலங்களை மிக அருமையாக தன் கார்ட்டூன்கள் மூலம் வெளிப்படுத்தி அதிர்வுகளை உண்டாக்கியவர்.
2011ல் கருணாநிதி ஆட்சி முடியும் தருவாயில் சவுக்கு சங்கர் மிக பிரபலமானவராக இருந்தார் அப்பொழுது நடைபெற்ற திமுக ஆட்சியில் நடந்த திரைமறைவு பேரங்களையும் , அதிகார மமதையில் நடந்த பல அட்டூழியங்களையும் மிக தைரியமாக எழுதினார். அமெரிக்காவின் CIA வுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அசான்ஜெவுடன் இவரை ஒப்பிடும் நிலை அளவுக்கு உயர்ந்தார்.இவரின் கட்டுரைகள் மிகப் பிரபலமானது , இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் கூட உருவானது.சவுக்கு சங்கர் உட்பட பலராலும் உண்டாக்கப்பட்ட கடுமையான திமுக எதிர்ப்பு பிரச்சாரத்தினால் எதிர்க்கட்சி அங்கீகாரம் கூட இல்லாமல் வீழ்ந்துது.
2016ல் அதே திமுக ஆட்சியை அடையக் கடுமையாக முயற்சி செய்கின்றது.புதிய வாக்களர்களை முன்னிறுத்தி இணையத்தில் அதன் பிரச்சாரம் அசுர வேகத்தில் நடக்கின்றது.இந்த வேகத்திற்கு தடை போடுவதில் முதன்மையானவர்களில் ஒருவர் கார்ட்டூனிஸ்ட் பாலா. அதற்கு அவர் தேர்ந்தேடுத்து ஈழப்பிரச்சனை.தன்னுடைய முகப்புத்தகத்தில் கீழ்க்காணும் படத்தினை பகிர்ந்து திமுக மீதான வெறுப்பினை தீவிரமாக்குகின்றார். இப்படி செய்வதன் மூலம் அதிமுக மீதான எதிர்ப்பு அலைக்கான ஓட்டுகள் திமுகவுக்கு விழுந்து விடாமல் தடுக்கலாம் என்று எண்ணுகின்றார்.
இவருடைய முயற்சிக்கு வெற்றி கிட்டுமா கிட்டதா என்று பார்ப்பதற்கு முன் சவுக்கு சங்கர் 2011ல் செய்த திமுக எதிர்ப்புப் பிரச்சாரத்தினால் வந்த அதிமுக செய்த காரியங்களைப் பாப்போம். சவுக்கால் ஆதாயம் அடைந்த அதிமுக அவரையே அடக்கியதுதான் மிகக் கொடுமை. சவுக்கு திமுககவுக்கு எதிராக சாட்டையை சுழற்றியபோழுது ஆதரவளித்த அதிமுக காரர்கள் . அக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அவரையே கழுதை சாட்டை என்று அழைத்து அசிங்கப்படுத்துகின்றனர். குறிப்பாக முஸ்லிம் வேடதாரி-கிஷோர்சாமி -சவுக்குக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தவர் இப்பொழுது அவரையே அடிக்கின்றார்.சவுக்குக்கு தற்பொழுது கரடியே காறித்துப்பிய மொமென்ட் தான்.
கழுதை சாட்டை என்று குறிப்பிடுவது சவுக்கு சங்கரை |
இதையும் விட மிக முக்கியமானது சவுக்கின் நோக்கம் திமுக அதிமுகவை விட , தன்னைப் பழிவாங்கிய காவல்துறை அதிகாரி ஜாபர்சேட்டை நோக்கி அதிகம் இருந்ததால் அவரும் தற்போதைய அதிமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. திமுக ஆட்சியின் போது சவுக்கு சங்கரை ஒரே ஒரு மொக்கையான வழக்கு மட்டும் போட்டு சிறையில் தள்ளினர். ஆனால் அதிமுக ஆட்சியில் இது போலெல்லாம் செய்யமாட்டார்கள் ஐஏஸ் அதிகாரி மேலே ஆசிட் வீசியவர்களுக்கு சவுக்கு சங்கர் எல்லாம் ஜுஜுபி.இது தெரிந்தே அவரின் நலம் விரும்பிகளின் ஆலோசனைப் படி அதிமுக அரசின் முதல் நான்காண்டு காலம் அமைதியாக இருந்து விட்டு இப்பொழுது ஆட்சி முடியும் தருவாயில் சாட்டையை மீண்டும் கையில் எடுத்திருக்கின்றார்.
இப்பொழுது பாலாவின் நோக்கம் குறித்து சற்று விரிவாக பார்ப்போம். எண்பதுகளில் பிறந்தவர்களுக்கு ஈழப்பிரச்சனை குறித்து ஒரு தெளிவான புரிதல் இருக்கும். தமிழ் மக்கள் எப்படி அங்கு ஒடுக்கப்பட்டர்கள் , அவர்களின் உரிமை பறிக்கபட்டது குறித்தெல்லாம் தெளிவாகத் தெரியும்.எம்ஜிஆர் செய்த ஏராளமான உதவிகள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். எம்ஜிஆருக்குப் பிறகு கருணாநிதியும் அவர்களுக்கு ஆதரவளித்தது மட்டுமன்றி அவரின் ஆட்சியும் 89ல் கலைக்கப்பட்டது.அதுவும் ராஜீவ் காந்தி படுகொலை நடந்த சமயம் தமிழகம் முழுவதும் திமுகவினரும் அவர்களின் சொத்துக்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. உள்ளாகின.என்னுடைய சொந்த ஊரில் திமுககாரரின் மிதிவண்டிக்கடையும் , தேநீர்க் கடையும் அடித்து நொறுக்கப்பட்டதை நான் பார்த்த ருக்கிறேன்.
ஈழப்பிரச்சனையால் தங்களுக்கு ஏற்பட்ட இது போன்ற இழப்புகளுக்குப் பின்னர் கருணாநிதி , முழுக்க முழுக்க இந்திய அரசு ஈழம் தொடர்பாக என்ன முடிவுகள் எடுத்தாலும் மிகப் பெரிதாக எதிர்ப்பு காண்பிக்காமல் அமைதி காக்க ஆரம்பித்தார்.மறுபக்கம் விடுதலைப்புலிகளும் நெடுமாறன் வைகோ போன்றவர்களை நம்ப ஆரம்பித்தனர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் ஆண்டன் பாலசிங்கம் சொன்னவாறு ஜனநாயகப் பாதைக்கு திரும்ப மறுத்த பிரபாகரன் , ராஜபக்சே விரித்த வலையில் விழுந்து அவனாலேயே ஈழப்போரில் வீரமரணம் அடைந்தார். இன்னும் அந்தக்காட்சிகள் நெஞ்சை விட்டு அகலவில்லை. 1980ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சியோடு பிரபாகரன் இறந்த நிகழ்வைப் பார்க்க 1985-90 களில் பிறந்தவர்களுக்கு இது மற்றுமொரு செய்தியாக மிக சுலபமாகக் கடந்து செல்கின்றனர்.
ஏன் தமிழகத்தில் ஈழப்பிரச்சனை தேர்தலில் எப்பொழுதும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதற்கு முக்கியக் காரணம் , தமிழகத்தில் உள்ள இளம் சமுதாயத்தினருக்கு ஈழப்பிரச்சனை குறித்து அடியும் தெரியாது நுனியும் தெரியாது.
பாலா போன்றவர்கள் ஈழபிரச்சனை குறித்து தெளிவினை உண்டாக்க முயற்சிக்காமல் கருணாநிதியையும் திமுகவையும் அழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பது கூலிக்கு மாரடிக்கும் நிகழ்வாக மட்டுமே எல்லோராலும் பார்க்கப்படும். ஈழத்தமிழர்களே எதிர்காலத் திட்டமிடல் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போது பாலா போன்றவர்கள் புண்ணை மீண்டும் மீண்டும் நோண்டும் பணியினை விட்டு விட்டு ஆக்கபூர்வப் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது.
மேலும் இணையத்தில் முன்னாள் ஈழப்போராளி ஷோபா சக்தி , எழுத்தாளர் கலையரசன் , ஈழத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் ஆகியோர் ஈழப்போர் குறித்து வைக்கும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதை விட்டு விட்டு , செத்தப் பாம்பை அடிப்பது போல் திமுகவை அடிப்பது யாருக்கும் பலனளிக்காது. இந்தியாவினை உள்ளடக்கிய ஒரு மாநிலமாகத் தமிழகம் இருக்கையில் தமிழ்நாட்டுக்கு யார் முதல்வராக வந்தாலும் ஈழப்பிரச்சனையில் இந்தியஅரசின் கொள்கைக்கு இயந்தே நடக்க வேண்டி இருக்கும்.
பாலா அவர்கள் ,சவுக்கு சங்கரின் சாட்டை ஜாபர் சேட்டை மட்டும் நோக்கி இருந்தது போல, பாலாவும் ஈழப்பிரச்சனையில் கருணாநிதியை மட்டும் ஒற்றை எதிரியாக அடையாளப்படுத்தித் தாக்கினால் , வைகோ எவ்வாறு தற்பொழுது அட்டைக்கத்தி வீரராக அடையாளம் காண்பிக்கப்படுகின்றாரோ அதே இடம் பாலாவுக்கும் அவரின் ஆதரவு சக்திகளாலேயே வழங்கப்படும் என்பது உறுதி.
இந்த நீண்ட நெடியப் பதிவை வாசித்த உள்ளங்களுக்கு நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment