வருங்கால இந்திய பிரதமருக்கான போட்டியில் முன்னணியில் இருப்பவர் மோடி. இந்த நிலையை அடைய , கலைஞர் அரசியலில் உயர்ந்த நிலையினை அடைய பின்பற்றிய அனைத்து வழிமுறைகளையும் போலவே மோடியும் செய்தே இந்த நிலையினை அடைந்தார் என்பதுதான் ஆச்சர்யம்.
கலைஞரைப் போன்றே மோடியும் மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தில் பிறந்தவர் அதாவது மட்பாண்டம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். அதுவே அவர் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை பற்றிய அதிகமான புரிதலுக்கு முக்கியமான காரணம் ஆகும். அதேப் போன்று கலைஞருக்கு எப்படி அண்ணா பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும் திராவிடக் கொள்கைகளையும் பரப்புவதற்கும் மிகச் சிறந்த வழி காட்டியாக அமைந்தாரோ அதனைப் போன்று மோடிக்கு இந்து தீவிரவாதத்தினையும் முஸ்லிம்களின் மீதான வெறுப்பினையும் கற்றுக் கொடுத்த குரு யாரென்றால் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் வழக்கறிஞர் .
ஈழப் போர் உச்சத்தில் இருந்த பொழுது அமைதியாக வேடிக்கை பார்த்த கலைஞரைப் போன்றே தன் மாநிலத்தில் வாழும் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப் பட்டபொழுது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தவர் மோடி.
இவை அனைத்தையும் விட முக்கியமான ஒற்றுமையே கலைஞர் எப்படி அண்ணாவுக்குப் பிறகு தன்னை தமிழகத்தின் முதல்வராவதற்கும் தி.மு.க. தலைவராவதற்கும் முன்னிறுத்திக் கொண்டாரோ அதனையே மோடி மிக குறுகிய காலத்தில் செய்து இன்று பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் பா.ஜ.க .வில் முன்னணியில் இருக்கின்றார்.
கட்சியில் அன்பழகன் ,நெடுஞ்செழியன் போன்ற திறமையானவர்கள் இருந்தும் மாவட்ட செயலாளர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாதால் கலைஞர் முதல்வரானார். அத்வானி காலம் முழுக்க கட்சிக்காகப் பாடுபட்டு உழைத்திருந்தாலும் தனக்கான ஒரு வலுவான கூட்டத்தினை உருவாக்கிட முடியாததனால் இன்று பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் அவரை வெகு சுலபமாக பின்னுக்குத் தள்ளி விட்டத்துதான் மோடியின் மிகப் பெரிய சாதனை.
இவை மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான ஒற்றுமைகளை குறிப்பிட முடியும். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொன்று கலைஞர் ஈழப் போருக்கு ஆதரவாக உண்ணா விரதம் நடத்தியதனைப் போன்றே முஸ்லீம்கள் கொல்லப் பட்டபொழுது எந்த நடவடிக்கையும் எடுக்காத மோடி அதற்குப் பிறகு மத நல்லிணக்கம் என்ற பெயரில் ஆடம்பர உண்ணா விரத நாடகம் நடத்தி அவர் கட்சியினரையே திகைக்க வைத்தார்.
மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவிக்கும் பட்சத்தில் கருணாநிதி அவரை ஆதரிக்க எந்த தயக்கமும் காண்பிக்க மாட்டார், அதற்கு நான் சொன்னதைப் போன்றே பிறபடுத்தப் பட்ட சமூகத்தை சார்ந்தவர் அதானலே தான் ஆதரிப்பதாக நிச்சயம் கூறுவார்.
சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆ.ராசா கூறியதைப் போன்றே கலைஞர் இந்திய அரசியலில் மிக முக்கியமானவர். அவரை முன்னுதாரணமாகக் (நல்லது,கெட்டது இரண்டுக்குமே ) கொண்டே பலரும் இன்று அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.
மற்றுமொரு பதிவில் மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் தானா என்பதனை பற்றி பார்ப்போம்.