:
பொதுவாக அனைத்துத் திரைப்படங்களுமே மனிதர்களின் வாழ்க்கையினை மிகைப்படுத்தியோ அல்லது கற்பனைக்கு எட்டாத விஷயங்களை தொழில்நுட்ப உதவியுடன் நம்ப வைக்கும் விதத்திலே தான் எடுக்கப்படுகின்றன. எனினும் மிக அரிதாகவே சில திரைப்படங்கள் மட்டுமே மக்களின் உண்மையான வாழ்க்கையினை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படுகின்றன. அதற்கு மிக சிறந்த உதாணமாக அமைந்த இரண்டு படங்கள் அவன் இவன் மற்றும் ஆரண்ய காண்டம்.
தாதாயிசம் பற்றி வந்த பெரும்பானமையான படங்கள் அனைத்துமே அவர்கள் மிக ஆடம்பரமான வீட்டில் வாழ்வது போலவும் , புத்தம் புதிதான கார்களில் சுற்றிக் கொண்டிருப்பது போலவும் காண்பித்துக் கொண்டிருந்த நிலையில் அவற்றினை தகர்த்தெறியும் விதமாக ஆரண்ய காண்டம் படத்தில் ஒரு குறுக்கு சந்தில் ,பழைய காருடன் இரண்டு மூன்று அடியாட்களோடு தாதா வாழ்வது போன்று அமைத்திருப்பார். படங்களில் வருவது போன்றே ரவுடிகள் வாழ்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருன்க்கும் மக்களுக்கு தங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலே கூட ரவுடிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற உண்மையினை என்று உணரப்போகின்றார்களோ தெரியவில்லை.
இந்த இரண்டுப் படங்களின் தோல்வியினால் கவனிக்கப்படாமல் போனவர்கள் நான்கு பேர். அவன் இவன் படத்தில் வரும் இன்ஸ்பெக்டர் ,ஆர்யாவுடன் வரும் அந்த சிறுவன் .இருவருமே வசன உச்ச்சரிப்பினையும் , முக பாவனைகளையும் மிக இயல்பாக வெளிபடுத்தி இருக்கின்றனர். அதுவும் அந்த சிறுவன் குறித்து பாலாவே விஜய் தொலைகாட்சியில் படம் பற்றி குறித்து பேசும் பொழுது படத்தில் சிறப்பாக நடித்தவர் யார் என்ற கேள்விக்கு அந்த சிறுவன் பெயரினையே குறிப்பிட்டார்.
ஆரண்ய காண்டத்தில் வரும் பழைய பண்ணையார் மற்றும் அவரின் மகனின் நடிப்பு அற்புதம் என்றால் மிகையல்ல. இருவருக்கும் இடையிலான பாசப் பிணைப் பிணைப்பினை உணர்த்தும் காட்சிகள் மிக இயல்பானவை. அந்தப் பண்ணையார் குடித்து விட்டு உற்சாக மன நிலையில் பேசும் காட்சிகளும்,சிறுவன் தன் தந்தையினை மீட்க போராடும் காட்சிகளும் தனி திரைப்படமாகவே எடுக்கும் அளவுக்கு சுவாரசியமான பகுதி.
இந்த இரண்டு திரைப்படங்களை இதுவரை பார்த்திராதவர்கள் யாரும் இருப்பின் அவசியம் பாருங்கள்!

அப்படி என்ன உணமையினை சொல்லிவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் விஞ்ஞான
வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுவிட்ட இந்த நூற்றாண்டிலும் அவன் இவன்
படத்தில் தமிழக கிராமங்களின் நிலையினை மாறாத கூரை வீடுகள் , வேலை
இல்லாமல் சுற்றித் திரியும் இளைஞர் கூட்டம் ,கிடைக்கும் சொற்ப வருமானத்தில்
நிம்மதியாக வாழும் மக்கள் என்று அனைத்தயும் தெளிவாக படம்பிடித்து
காண்பித்து இருக்கின்றார். இவை அனைத்தும் உண்மை என்பதனை கிராமங்களில்
வளர்ந்தவர்களுக்கும் அவர்கள் வாழ்க்கையினைப் பற்றி கொஞ்சமாவது
தெரிந்தவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.
தாதாயிசம் பற்றி வந்த பெரும்பானமையான படங்கள் அனைத்துமே அவர்கள் மிக ஆடம்பரமான வீட்டில் வாழ்வது போலவும் , புத்தம் புதிதான கார்களில் சுற்றிக் கொண்டிருப்பது போலவும் காண்பித்துக் கொண்டிருந்த நிலையில் அவற்றினை தகர்த்தெறியும் விதமாக ஆரண்ய காண்டம் படத்தில் ஒரு குறுக்கு சந்தில் ,பழைய காருடன் இரண்டு மூன்று அடியாட்களோடு தாதா வாழ்வது போன்று அமைத்திருப்பார். படங்களில் வருவது போன்றே ரவுடிகள் வாழ்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருன்க்கும் மக்களுக்கு தங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலே கூட ரவுடிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற உண்மையினை என்று உணரப்போகின்றார்களோ தெரியவில்லை.
இந்த இரண்டுப் படங்களின் தோல்வியினால் கவனிக்கப்படாமல் போனவர்கள் நான்கு பேர். அவன் இவன் படத்தில் வரும் இன்ஸ்பெக்டர் ,ஆர்யாவுடன் வரும் அந்த சிறுவன் .இருவருமே வசன உச்ச்சரிப்பினையும் , முக பாவனைகளையும் மிக இயல்பாக வெளிபடுத்தி இருக்கின்றனர். அதுவும் அந்த சிறுவன் குறித்து பாலாவே விஜய் தொலைகாட்சியில் படம் பற்றி குறித்து பேசும் பொழுது படத்தில் சிறப்பாக நடித்தவர் யார் என்ற கேள்விக்கு அந்த சிறுவன் பெயரினையே குறிப்பிட்டார்.
ஆரண்ய காண்டத்தில் வரும் பழைய பண்ணையார் மற்றும் அவரின் மகனின் நடிப்பு அற்புதம் என்றால் மிகையல்ல. இருவருக்கும் இடையிலான பாசப் பிணைப் பிணைப்பினை உணர்த்தும் காட்சிகள் மிக இயல்பானவை. அந்தப் பண்ணையார் குடித்து விட்டு உற்சாக மன நிலையில் பேசும் காட்சிகளும்,சிறுவன் தன் தந்தையினை மீட்க போராடும் காட்சிகளும் தனி திரைப்படமாகவே எடுக்கும் அளவுக்கு சுவாரசியமான பகுதி.
இந்த இரண்டு திரைப்படங்களை இதுவரை பார்த்திராதவர்கள் யாரும் இருப்பின் அவசியம் பாருங்கள்!
No comments:
Post a Comment