டேய் அண்ணா அமேசானில் ஒரு லிங்க் அனுப்பி இருக்கேன் என் பர்ஸ் ரொம்ப கிழிஞ்சு போச்சு அதனால நா அனுப்பிச்சியிருக்கற லிங்க்ல ஒரு பர்ஸ் இருக்குடா அது எனக்கு வாங்கி அனுப்பு.
ஓகேடா லிங்க் பாத்துட்டு கூப்பிடுறேன்.
என்ன இவ்வளவு விலை போட்டிருக்கு இவனுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய பர்ஸ். டேய் தம்பி!! இவ்ளோ காஸ்ட்லி பர்ஸ் உனக்கு எதுக்குடா, முடிஞ்சா காசு சம்பாதிச்சு நீயே அந்த பரிசை வாங்கிக்க
இப்படி ஏமாத்திட்டானே, என்ன பண்ணலாம் வெறுப்பா இருக்கு, ஏதாவது ஏதாவது காமெடி பாப்போம்
எவ்வளவு நாளைக்குத்தான் இந்த வடிவேலு கவுண்டமணி வீடியோ பார்க்கிறது வித்தியாசமா ஏதாவது பார்ப்போம்.
சதுரங்க வேட்டை காமெடியா சரி பார்ப்போம்
“”ஒருத்தனை ஏமாத்தினும்னா அவன்கிட்ட கருணையே எதிர்பார்க்கக்கூடாது அவன் ஆசையை தூண்டனும்””
வாவ் கண்டுபிடிச்சுட்டன் அண்ணன்கிட்ட எப்படிப் ஏமாத்தி பர்ஸ் வாங்குவதுனு, டேய் அண்ணன் காரா உனக்கு வைக்கிறன்டா ஆப்பு
ஹலோ அண்ணா என்ன சாப்டியா?
டேய் நீ என்ன நடிச்சாலும் நான் உனக்கு பர்ஸ் வாங்கி கொடுக்க மாட்டேன்டா?
அது இல்லடா அண்ணா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு, நீ ரொம்ப ராசிக்காரன் டா போன முறை நீ ஒரு பர்ஸ் வாங்கி கொடுத்த அதனாலதான் கொஞ்சம் காசு தங்குச்சு , அதான் இப்பவும் உன்னையே மறுபடியும் பர்ஸ் வாங்கி தரச் சொல்றேன். என்கிட்ட காசு இல்லாம இல்ல நீ வாங்கி கொடுத்தா நான் நல்லா பணம் வச்சி இருப்பேன் , நான் பெரிய ஆளா ஆனா உனக்குதான்டா பெருமை ( 1000ரூ பர்ஸுக்கு எவ்வளவு பிட் போட வேண்டி இருக்கு)
டேய் தம்பி அட இவ்வளவு பொறுப்பாய்டியே டா எனக்கு ஆச்சரியமா இருக்கு டா டேய்
உடனே ஆர்டர் பண்றேன் டா உனக்கு டெலிவரி confirmation வரும் மொபைலை செக் பண்ணு
Thanks da
எப்பா சதுரங்வேட்டை டைரக்டர் செம ஐடியா கொடுத்தப்பா
எங்க அண்ணன் காரன் எவ்ளோ பெரிய ஆளு அவனே உன் படத்தோட ஒத்த வசனத்துல அவனை ஏமாரவைச்சுட்டியே
நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment