சவுக்கு சங்கர் எழுதிய ஊழல் உளவு அரசியல் இந்த புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரின் கூர்மையான அரசியல் விமர்சனத்தை தொடர்ந்து படித்து வருவதனால் ஏற்பட்டது.
இந்த புத்தகம் அவரின் சுயசரிதை அல்லது வாழ்வியல் போராட்டம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
முகப்புத்தகத்தில் அவர் இடும் நக்கல் பதிவுகளை வைத்து அவரை மிக சாதாரணமானவராக எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் இந்த புத்தகம் படித்தால் அவர் குறித்த ஒரு உயரிய மதிப்பு ஏற்படும்.
ஆங்கிலம் கற்றுக்கொள்ள எடுத்த முயற்சிகள், பரந்துபட்ட புத்தகம் வாசிப்பு, , உயர் அதிகாரிகளுக்கு எதிரான போராட்டம் , சிறை வாழ்க்கை என்று அவர் இளம்வயதில் செய்த அனைத்தும் மிக அசாத்தியமானவை. ஆனால் அவருக்கு நடந்த துயரமான நிகழ்வுகள் வேறு யாருக்கும் நடக்க கூடாது.
2010 முதலே அவரின் வலைப்பக்கத்தில் பல கட்டுரைகள் படித்து இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை இந்தப் புத்தகம் படித்து தான் அறிய முடிந்தது.
நன்றி
செங்கதிரோன்
செங்கதிரோன்
No comments:
Post a Comment