Thursday, February 28, 2013

6.இசை உலகின் இளம் தேவதைகள்:அலிசியா கீஸ் (Alicia Keys )

  
இசை உலகின் இளம் தேவதைகளின் தொடரில் நாம் அடுத்துப் பார்க்கப் போவது அலிசியா கீஸ்.  முப்பத்தொரு வயது நிரம்பிய அமெரிக்கப் பாடகி அலிசியா தனது இசைப் பயணத்தினை தொடங்கியது  பதினாறு வயதில் ,இசைப் பள்ளியில் பியானோ வாசித்தல் , பாடல் எழுதுவது மற்றும் குழுப்பாடல் (choir ) பாடுவதில் தேர்ச்சி பெற்ற பின்னர் men in black  உள்ளிட்ட திரைப்படங்களில் பின்ன்னணிப் பாடல்களைப் பாடினார்.


2001 ல் வெளியிட்ட songs in  a Minor  என்ற இசைத் தொகுப்பின் மூலம் இசைப் பிரியர்களுக்கு தன் தனித்தன்மையான பியானோ இசையுடன் கலந்த புது வித இசையினை வழங்கி முன்னணிப் பாடகி ஆனார். இசை உலகின் முக்கிய விருதான் கிராமி விருதினை தனது முதல் இசைத் தொகுப்பிற்கே மொத்தம் ஐந்து விருகளை வென்று சாதனை புரிந்தார்.
பின்னர் 2005 லும்  diary of Alicia keys மற்றும் unplugged  என்ற இசைத் தொகுப்பின் மூலம் நான்கு கிராமி விருதுகள் பெற்றார். அதிலும் if aint  got  you  என்ற பாடலுக்காக சிறந்த பாடகி விருதினை வென்றார்.அந்தப் பாடலின் உங்கள் குழாய் இணைப்புக் கீழே இணைத்திருக்கின்றேன் பார்த்து மகிழுங்கள்.



பெரும்பான்மையானப்  பாடல்கள் காதல், காதலர்கள் உறவு மற்றும்  அதனால் பெண்களுக்கு உண்டாகும் மாற்றங்கள் குறித்தே இருந்தாலும் சமீபத்தில் வெளியான this girl is on  fire  என்ற பாடல் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.ஏனெனில் வீட்டில் குழந்தைகளையும் வயதனவர்களியும்   பெண்களுக்கு அந்த   வேலைப் பளுவினை சமாளிக்கும் அளவுக்கான ஆற்றல் என்னும் தீ அவர்களிடம் அடங்கி இருப்பதாக  தாய்மையின்  பெருமை குறித்த அந்தப் பாடல் காணொளி அனைவரும் கட்டாயம் காண வேண்டிய ஒன்று.



மற்ற  சிறந்த பாடல்கள்:
1.No  one 
2.Brand  new me 
3.Fallin 
4.My  Boo 
5.Super woman 
6.When you really love someone 

நன்றி
செங்கதிரோன் 

Friday, February 22, 2013

தெனாலியை வீழ்த்திய கத்தரிக்காய்:


 வார இறுதி எனபதால் தெனாலி ராமன் குறித்த ஒரு நகைச்சுவைக் கதையினை உங்களுடன்  பகிர்ந்து கொள்கின்றேன் . தெனாலி ராமன் புத்திசாலி என்பதும் அதனால் அரசவையில் பல தீர்க்க முடியாத பிரச்சனைகளை மிக எளிதாக தன்  புத்திகூர்மையால் தீர்த்து வைத்துப் புகழ் பெற்றவன் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

எண்ணெய் கத்தரிக்காயுக்கு ஆசைப்பட்டு மன்னரின் தண்டனைக்கு ஆளாக இருந்த தெனாலி அதிலிருந்து எவ்வாறு மீண்டான் எனபதை நகைச்சுவையுடன் பார்ப்போம்.

பார்ட்டி கலாச்சாரம் என்பது இபொழுது தொடங்கிய ஒன்று என்றே நாமில் பலர் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் மன்னர்கள் காலத்தில்   தற்பொழுது நடைபெறும் பார்ட்டிகளை விட பன்மடங்கு மிகப் பிரம்மாண்டமான பார்ட்டிகள் நடைபெற்றிருக்கின்றன என்பதே உண்மை. அவ்வாறு நடை பெற்ற மன்னர் விருந்தில் கலந்து கொண்ட தெனாலி ராமனுக்கு எண்ணெய்  கத்தரிக்காய் பரிமாறப்பட்டது.

கத்தரிக்காயை உண்ட தெனாலி ராமனுக்கு மனம் நிலை கொள்ள வில்லை. இப்படி ஒரு சுவையான் ஒன்றை தன் வாழ் நாளிலேயே முதல் முறையாக சாப்பிடுவதாக மன்னரிடம் கூறினான். மன்னர் அவனது பாராட்டினை ஏற்றுக் கொண்டு அதன் பின்னர் சொன்ன செய்தியினைக் கேட்டு அதிர்ந்து விட்டான். ஏனெனெனில் அந்த கத்தரிக்காய் மன்னர் தோட்டத்தில் மட்டுமே விளைவிக்க படுவதாகவும் வேறு யாருக்கும் அது வழங்கப்படமாட்டாது, இங்கிருந்து அதனை திருடி செல்பவர்களின் கை வெட்டப்படும் என்பதான தண்டனை இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் ஒரு நாள்  தோட்டத்தில் யாரும் இல்லாத சமயத்தில் தேவையான அளவுக்கப் பறித்துக் கொண்டு சென்று விட்டான். வீட்டில் தடல் புடலாக கத்தரிக்காய் சமைக்கப்பட்டது. கத்தரிக்கை உண்ட அவனது  மனைவி ஏகத்துக்கும் தன் கணவனைப் புகழ்ந்து தள்ளி விட்டாள் . ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்து விட்டதாக இவர்கள் எண்ணி இருந்த தருணத்தில் தான் இரவுக் காவலர்கள் தெனாலி வீடு வழியாக செல்லும் பொது காணமல் போன கத்தரிக்காயினை  தெனாலி தான் திருடினான் என்ற உணமையினை கண்டுபிடித்து மன்னனிடம் கூறிவிட்டார்கள்.
மறுநாள் அரசவையில் தெனாலியிடம்  இது குறித்து மன்னர் விசாரணை மேற்கொண்டார், தெனாலியொ  சிறிதும் மசியவில்லை. தான் அதனை திருடவே இல்லை அவன்  மட்டுமன்றி அவன் மனைவியும் மறுத்தனர். எனவே அவர்களுடைய மகனிடம் விசாரிக்க முடிவு  செய்யப்பட்டது.

ஆனால் முந்தய நாள் இரவு தன்  மகனை உணவு உண்ண வைப்பதற்காக செய்த காரியம் அவனை மன்னரின் தண்டனையிலிருந்து தப்பிக்க உதவியது. விளையாடிய அசதியில் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்ப அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தான் ,மகனோ மழை பெயவ்தாக எண்ணி விழித்துக் கொண்டான். தெனாலியும் மழை பெய்வதாக சொல்லி வீட்டுக்குள் அழைத்து  வந்து உணவு கொடுத்தான்.

மன்னர் விசாரணையின் போது  நேற்று என்ன உணவு உண்டாய் என்ற கேள்விக்கு கத்தரிக்காய் உண்டதாக சொன்னான் .உடன் சுதார்த்துக் கொண்ட தெனாலி மன்னரிடம் தன மகனிடம் நேற்று மழை பெய்ததா என்று கேட்க சொன்னான் மன்னரும் கேட்டார், பலத்த மழை பெய்த்தாகக் கூறினான். மன்னருக்கு ஒரே வியப்பு இடைமறித்த  தெனாலி குழந்தைகள்  கனவில் கனடதையெல்லாம்  உண்மை என நம்புவார்கள்  எனவே அதனை சாட்சியாகக் கருத முடியாது என்று தப்பித்துக் கொண்டான்.

Friday, February 15, 2013

பிரபல பதிவர்களின் மேதாவித்தனம்

பிரபலமாகிவிட்டதாலேயே கேபிள் மற்றும் ஜாக்கி இருவருக்கும் பொது விவகாரங்களில் தங்கள் கருத்தை பதிவு செய்வதில் அவர்களுக்கு இருக்கும்  ஆர்வம் நமக்குப் புரிந்தாலும் தான் சொல்லப் போகும் பிரச்சனை குறித்தான முழுமையானப் பார்வையாகத்தான் அது இருக்க வேண்டுமே தவிர சுயநலன் சார்ந்த ஒன்றாக ஒருபோதும் இருத்தல் கூடாது.

கடந்த வார நீயா நானாவில் குறிப்பிட்டது போல தமிழ் நாட்டின் இளைஞர்களுக்கு மட்டுமல்ல தங்களுக்கு நிறைய தெரியும் என்ற எண்ணம் கொண்ட இந்த இரு பதிவர்களுக்கும் எந்த ஒரு பிரச்சனை குறித்தும் முழுமையானதொரு பார்வை எனபதே அறவே இல்லை.

அதுவும் சினிமா துறையில் இயங்கும் கேபிளும் ,ஜாக்கியும்  சமூகப் பிரச்சனைகளில் தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் உளறிக் கொட்டுவதை சகிக்க முடியவில்லை. ஏற்கனவே பத்திரிகை மற்றும் சினிமா உலகம் இரண்டுமே மக்களுக்கு மட்டமான செய்திகளையும் உணர்வுகளை மட்டும் தூண்டி வியாபாரம் செய்யும் இத்தருணத்தில் பதிவுலகிலும் இதைப் போன்ற நிலை இருப்பது மிக வருத்தமாக உள்ளது.



கேபிள் மற்றும் ஜாக்கி இருவருமே சினிமா விமர்சனம் எழுதவதில் வல்லவர்கள் மற்றும் அதில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உண்டாக்கி அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பாக இயங்கி வருகின்றார்கள் எனபது நூறு சதவீதம் உண்மை.ஆனால் இந்த தகுதியை மூலதனமாக வைத்துக் கொண்டு பொதுப் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது எனபதைத் தான் நான் மேதாவித்தனம் என்று குறிப்பிட விரும்புகின்றேன்.

கேபிள் விஸ்வரூபம் குறித்து தொடர்ந்து வெளியிட்டு வரும் கருத்துக்கள் அனைத்துமே சமூகம் குறித்த ஒரு அக்கறையின்மையும்   தான் சார்ந்த சினிமா துறையின்  மீதான சுயநலன் மட்டுமே வெளிப்படுகின்றது. சென்னையிலே வாழும் கேபிளுக்கு அங்கே  இஸ்லாமிய மக்கள் வீடு கிடைக்கப் படும் பாடும் , அவர்கள் அனைவரையுமே சமூகம் தற்போது குற்றவாளிகள் போல பார்க்கும் நிலைக்கு  இந்த பாழாகப் போன சினிமாவும் ,ஊடகங்களும்   தான் முக்கியக் காரணம் என்பதனை உணராமல் இருப்பது வேதனையான ஒன்று. இதைப் போன்ற நிலையில் பதிவுலகத்தில் பிரபலமாக இருக்கும் கேபிள் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தினை கொச்சைப் படுத்துவது போன்று எழுதுவது எதை எழுதினாலும் படிக்க நான்கு பேர் இருக்கின்றார்கள் என்ற மேதாவித்தனம் தான் முக்கியக் காரணம்.

 ஜாக்கி வால்மார்ட் வருவது குறித்து எழுதிய ஒரு பதிவே போதும்  அவருடைய சமூகம் குறித்தான மேலோட்டமான பார்வைக்கு, அமெரிக்காவில் மூடப்படும் கடைகளை இங்கு குப்பத்தொட்டியாகப் பயன்படுத்தப் போகும் ஒரு செயலுக்கு வக்காலத்து வாங்கி எழுதிய அந்தப் பதிவு முழுக்க முழுக்க சுயநலன் சார்ந்த ஒன்று.ஜாக்கி அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று மேலை நாடுகளில்  இருப்பது சமநிலைச் சமுதாயம்.  பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்பது மிகக் குறைவு. ஆனால் நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு இதைப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களாலோ  டாடா அம்பானி போன்றவர்களால் எந்த நன்மையும் இல்லை. இது நாட்டின் சீரான வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது மாறாக அந்த கம்பெனிகளின் வயிறு வளர்க்கவே பயன்படும். அந்தக் கருத்தினை நியாயபடுத்தி சமூகத்தில் திணிக்க நினைப்பது என்னைப் பொறுத்தவரை    ஏழை மக்களுக்கும் விவசாயத்திற்கும் செய்யும் பாவச் செயல்..

 இவர்களின் கருத்தின் தாக்கம் எனபது இவர்களை மட்டுமே தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு தவறான வழிகாட்டுலாக அமைந்து விடும் ஆபத்தான சூழல்  உள்ளது.இறுதியாக சொல்ல வேண்டியது என்னவெனில் கருத்து சுதந்திரம் என்பதனை தவறாகப் புரிந்து வைத்துக் கொண்டு மனதில் படத்தை எல்லாம் எழுதாமல் சொல்லப் போகும் கருத்தின் முழு விவரங்களையும் படித்தோ கேட்டோ அதன் பின்னர்  உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.