Friday, February 15, 2013

பிரபல பதிவர்களின் மேதாவித்தனம்

பிரபலமாகிவிட்டதாலேயே கேபிள் மற்றும் ஜாக்கி இருவருக்கும் பொது விவகாரங்களில் தங்கள் கருத்தை பதிவு செய்வதில் அவர்களுக்கு இருக்கும்  ஆர்வம் நமக்குப் புரிந்தாலும் தான் சொல்லப் போகும் பிரச்சனை குறித்தான முழுமையானப் பார்வையாகத்தான் அது இருக்க வேண்டுமே தவிர சுயநலன் சார்ந்த ஒன்றாக ஒருபோதும் இருத்தல் கூடாது.

கடந்த வார நீயா நானாவில் குறிப்பிட்டது போல தமிழ் நாட்டின் இளைஞர்களுக்கு மட்டுமல்ல தங்களுக்கு நிறைய தெரியும் என்ற எண்ணம் கொண்ட இந்த இரு பதிவர்களுக்கும் எந்த ஒரு பிரச்சனை குறித்தும் முழுமையானதொரு பார்வை எனபதே அறவே இல்லை.

அதுவும் சினிமா துறையில் இயங்கும் கேபிளும் ,ஜாக்கியும்  சமூகப் பிரச்சனைகளில் தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் உளறிக் கொட்டுவதை சகிக்க முடியவில்லை. ஏற்கனவே பத்திரிகை மற்றும் சினிமா உலகம் இரண்டுமே மக்களுக்கு மட்டமான செய்திகளையும் உணர்வுகளை மட்டும் தூண்டி வியாபாரம் செய்யும் இத்தருணத்தில் பதிவுலகிலும் இதைப் போன்ற நிலை இருப்பது மிக வருத்தமாக உள்ளது.



கேபிள் மற்றும் ஜாக்கி இருவருமே சினிமா விமர்சனம் எழுதவதில் வல்லவர்கள் மற்றும் அதில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உண்டாக்கி அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பாக இயங்கி வருகின்றார்கள் எனபது நூறு சதவீதம் உண்மை.ஆனால் இந்த தகுதியை மூலதனமாக வைத்துக் கொண்டு பொதுப் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது எனபதைத் தான் நான் மேதாவித்தனம் என்று குறிப்பிட விரும்புகின்றேன்.

கேபிள் விஸ்வரூபம் குறித்து தொடர்ந்து வெளியிட்டு வரும் கருத்துக்கள் அனைத்துமே சமூகம் குறித்த ஒரு அக்கறையின்மையும்   தான் சார்ந்த சினிமா துறையின்  மீதான சுயநலன் மட்டுமே வெளிப்படுகின்றது. சென்னையிலே வாழும் கேபிளுக்கு அங்கே  இஸ்லாமிய மக்கள் வீடு கிடைக்கப் படும் பாடும் , அவர்கள் அனைவரையுமே சமூகம் தற்போது குற்றவாளிகள் போல பார்க்கும் நிலைக்கு  இந்த பாழாகப் போன சினிமாவும் ,ஊடகங்களும்   தான் முக்கியக் காரணம் என்பதனை உணராமல் இருப்பது வேதனையான ஒன்று. இதைப் போன்ற நிலையில் பதிவுலகத்தில் பிரபலமாக இருக்கும் கேபிள் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தினை கொச்சைப் படுத்துவது போன்று எழுதுவது எதை எழுதினாலும் படிக்க நான்கு பேர் இருக்கின்றார்கள் என்ற மேதாவித்தனம் தான் முக்கியக் காரணம்.

 ஜாக்கி வால்மார்ட் வருவது குறித்து எழுதிய ஒரு பதிவே போதும்  அவருடைய சமூகம் குறித்தான மேலோட்டமான பார்வைக்கு, அமெரிக்காவில் மூடப்படும் கடைகளை இங்கு குப்பத்தொட்டியாகப் பயன்படுத்தப் போகும் ஒரு செயலுக்கு வக்காலத்து வாங்கி எழுதிய அந்தப் பதிவு முழுக்க முழுக்க சுயநலன் சார்ந்த ஒன்று.ஜாக்கி அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று மேலை நாடுகளில்  இருப்பது சமநிலைச் சமுதாயம்.  பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்பது மிகக் குறைவு. ஆனால் நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு இதைப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களாலோ  டாடா அம்பானி போன்றவர்களால் எந்த நன்மையும் இல்லை. இது நாட்டின் சீரான வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது மாறாக அந்த கம்பெனிகளின் வயிறு வளர்க்கவே பயன்படும். அந்தக் கருத்தினை நியாயபடுத்தி சமூகத்தில் திணிக்க நினைப்பது என்னைப் பொறுத்தவரை    ஏழை மக்களுக்கும் விவசாயத்திற்கும் செய்யும் பாவச் செயல்..

 இவர்களின் கருத்தின் தாக்கம் எனபது இவர்களை மட்டுமே தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு தவறான வழிகாட்டுலாக அமைந்து விடும் ஆபத்தான சூழல்  உள்ளது.இறுதியாக சொல்ல வேண்டியது என்னவெனில் கருத்து சுதந்திரம் என்பதனை தவறாகப் புரிந்து வைத்துக் கொண்டு மனதில் படத்தை எல்லாம் எழுதாமல் சொல்லப் போகும் கருத்தின் முழு விவரங்களையும் படித்தோ கேட்டோ அதன் பின்னர்  உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

13 comments:

ravikumar said...

Well Said. Their Review also not neutral. If it is Kamal movie they accept everything if it is others they show their biased

செங்கதிரோன் said...

Thanks for your comment Rajkumar.I do feel the same about their cinema reviews.

Jayadev Das said...

எவ்வளவு பெரிய பதிவர்களாக இருந்தா என்ன, அவங்களைப் பத்தி எனக்கு என்ன நியாயமா தோணுதோ அதைச் சொல்றேன் என தைரியமா சொல்லியிருக்கீங்க. நன்று!! ஒரு துறையில் மேதாவியா இருப்பவன் எல்லா துறையிலும் விஷயம் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்ற அவசிமில்லை. இவங்க மட்டுமல்ல, இவர்கள் ஆதரிக்கும் திரையுலகினரும் இதே மாதிரிதான் இருக்கிறார்கள். நடிகர்கள் சிறந்த கலைஞர்கள், சந்தேகமில்லை, ஆனால் சமூகப் பிரச்சினையை உணர்ந்த வல்லுனர்கள் என்று சொல்லிவிடமுடியுமா? திருமணம், இறைநம்பிக்கை, அரசியல் பிரச்சினைகள் இங்கெல்லாம் வந்து கருத்து கந்தசாமிகளாக வந்து உளறிக் கொட்டுகிறார்கள். இது எந்த மாதிரியான விளைவுகளை மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதை இவர்கள் ஒருபோதும் சிந்திப்பதேயில்லை. இவர்கள் முட்டாள்கள் என்ற விஷயம் மக்களுக்குத் தெரியாதே இருப்பினும் இவர்கள் சொல்வதை மக்கள் நம்புவார்கள் என்பதையும் இவர்கள் சிந்தித்து இவ்வாறு உளறுவதை இவர்களாகவே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Word Verification ஐ நீக்கினால் பின்னூட்டமிடுவது எளிதாக இருக்கும்!!

iTTiAM said...

hmmmm....
so Muslims were getting houses for rent in any area in Chennai earlier!
Just ponder over this :
Has it changed after the movies and these reviews?
If not ie., it was like this before this too, why?
Is it that Christians are getting houses for rent easily?
If time permits just have a tour round around these areas :
Thanjavur to Nagappattinam / Kumbakonam - Mayiladuthurai

Vellore - Mel vishaaram

Pudukkoottai - Kayalpattinam - Muththuppettai etc., then post your views.

iTTiAM said...

hmmmm....
so Muslims were getting houses for rent in any area in Chennai earlier!
Just ponder over this :
Has it changed after the movies and these reviews?
If not ie., it was like this before this too, why?
Is it that Christians are getting houses for rent easily?
If time permits just have a tour round around these areas :
Thanjavur to Nagappattinam / Kumbakonam - Mayiladuthurai

Vellore - Mel vishaaram

Pudukkoottai - Kayalpattinam - Muththuppettai etc., then post your views.

My request is, it would be better if you take the holistic view, look at both the side and then make your mind / argument.

rahman said...

விஸ்வரூபத்துக்கு கண்மூடித்தனமான ஆதரவு ஆனால் படத்தில் ஒன்றும் இல்லை

சிராஜ் said...

//கேபிள் மற்றும் ஜாக்கி இருவருமே சினிமா விமர்சனம் எழுதவதில் வல்லவர்கள் //

ம்க்கும்.... இவங்க ரிவியூ படிச்சிட்டு படம் பார்க்க போறாங்களா???

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

சிராஜ் said...

// இதைப் போன்ற நிலையில் பதிவுலகத்தில் பிரபலமாக இருக்கும் கேபிள் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தினை கொச்சைப் படுத்துவது போன்று எழுதுவது எதை எழுதினாலும் படிக்க நான்கு பேர் இருக்கின்றார்கள் என்ற மேதாவித்தனம் தான் முக்கியக் காரணம். //

ரிவியூவிலும் நேர்மை இல்லை... சரி ஓக்கே, அதைக்கூட அவர் கருத்து என்று விட்டுவிடலாம்.. ஆனால் என்னமோ இவர் தான் படத்துக்கு பைனான்ஸ் பண்ணி பல கோடியை இழந்தது மாதிரி போகும் இடங்களில் எல்லாம் இஸ்லாமியர்களை வசை பாடிக் கொண்டு இருக்கிறார்... அதுவும் கேவலமான வார்த்தைகளில்...

ஒருவர் பேசும் பேச்சு அவர் எவ்வளவு தகுதி படைத்தவர்/மேன்மையானவர் என்பதை காட்டும்... அந்த விஷயத்தில் இஸ்லாமியர்களை திட்டிய திட்டில் கேபிள் தன் தகுதியை உலகிற்கு நிரூபித்து இருக்கிறார்.

செங்கதிரோன் said...

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே.இணையம் பரவலாகிவிட்ட பிறகு பதிவுகள் உஊடகங்கலுக்கு அடுத்த நிலைக்கு கவனிக்கப் படும் சூழலில் இதைப் போன்ற பொறுப்பற்ற கருத்துக்கள் சமூக சீரழிவுக்கே வழிவகுக்கும்

செங்கதிரோன் said...

இஸ்லாமியர்களுக்கு வாடகை வீடு கிடைக்காத நிலை கடந்த பத்து பதினைந்து வருடங்களாகத்தான் ஏற்பட்டது.அதற்கு முன்னர் எந்தப் பிரச்சனையும் இல்லை. நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இளம் இஸ்லாமிய சமூகம் பற்றித்தான் அவர்களுடைய கனவுகள் அனைத்தும் இதைப் போன்ற போலிப் புனைவுகளினால் சீரழிந்து விடும்.

செங்கதிரோன் said...

சிராஜ் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இவர்களின் விமர்சனம் படிச்சிட்டு படத்துக்குப் போறாங்களோ இல்லையோ ஆனால் என்ன தான் இவர்கள் அந்தப் படத்தினைப் பற்றி எழுதி இருக்கின்றார்கள் என்ற ஆர்வத்துடன் வாசிப்பவர்களே அதிகம். ஏனென்றால் விமர்சனம் என்பதையும் தாண்டி நமக்குப் பிடித்த நாயகனோ நாயகியோ அல்லது இயக்குனருக்காகவோ அந்தப் படத்தினைப் பார்ப்பவ்ஸ்ரின் எண்ணிக்கையே அதிகம்

செங்கதிரோன் said...

ரஹ்மான் பின்னூட்டத்திற்கு நன்றி. அந்த விசவரூபம் விமர்சனம் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் மிகைபடுத்தி எழுதப்பட்ட ஒன்று

Rafik said...

Good post!