Tuesday, March 25, 2014

ஜூனியர் விகடன் கழுகு காக்காவாக மாறியது

ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் வரும் மிஸ்டர் கழுகு பகுதி மிக பிரபலமான ஒன்று என்பது நெடுங்காலமாக அப்பத்திரிக்கையினை வாசித்து வருபவர்கள் நன்கு அறிவர். அரசியல்வாதிகள் ,நடிகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் குறித்த ரகசிய செய்திகளினை மிஸ்டர் கழுகு பகுதியில் வழங்கி வந்தனர். எனவே இத்த்னைப் படிக்க மிகவும் ஆர்வமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்.இப்பகுதியில் அரசியல் மட்டத்தில் நடைபெறும் செய்திகளை முன்கூட்டியே  மிஸ்டர் கழுகார் மூலம் தெரியப்படுத்துவதினாலும் அவை அப்படியே நிகழ்வதாலும் அதற்கு ஒரு நம்பகத் தன்மை இருந்தது.

கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் மாநிலத்தில் நடக்கும் கட்சிக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் எழுதுவதினை தலையாப் பணியாக செய்து வருகின்றது. தமிழக்த்தில் மின் தட்டுப்பாடு நிலவிய தி.மு.க. ஆட்சி காலகட்டத்தில் ஜெ.ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் இருந்து மின்சாரம் தருவித்து தமிழகத்தினை இருளில் இருந்து மீட்பார் என்று ஜெயலலிதாவே சொல்லாத ஒன்றை இவர்களாகவே கூறி மக்களை ஏமாற்றினர்.

கலக்குரல் பதிவில் கூறியது போல இவர்கள் பத்திரிக்கையின் நிலையக் கலைஞரான தமிழருவியை கருவியாகப் பயன்படுத்தி பா.ஜ.க.தலமையில் கூட்டணி அமைய இவர்கள் எழுதிய பொய்களுக்கு அளவே இல்லை. ஜெ.வை குழிப்படுத்த விஜயகாந்துக்கு செல்வாக்கே இல்லை என்று போலியான ஒரு கருத்துக் கணிப்பினை வெளியிட்டனர்.

அழகிரியை ஜெ.வுக்கு பயந்து நடுங்கும் ஆடு போன்று உருவகப்படுத்துவது ,ஆனால் அதே அழகிரி தி.மு.க. வினை எதிர்த்தால் புலி போல உருவகப்படுத்த்துவது என பிழைப்புவாதம் செய்தே மிஸ்டர் கழுகு இன்று காக்காவாக மாறிக் கொண்டிருக்கிறது.

இன்னுமொரு உதாரணம் சுப்ரமணியசாமி , இவரை அரசியல் கோமாளியாக தமிழக மக்களுக்கு அடையாளம் காண்பித்ததில் ஜூ.வி.முக்கியப் பங்குண்டு. ஆனால் அதே சுப்ரமணியசாமி பா.ஜ.க. ஆதரவாளராக மாறியபின் ஒரு சக்தி வாய்ந்த அரசியல்வாதியாக முன்னிலைப்படுத்துகின்றனர்.

நடுநிலையான செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த மிஸடர் கழுகு பகுதியில் தற்பொழுது முழுக்க முழுக்க கருணாநிதி குடும்பத்தின் செய்திகளை திரித்து கூறுவதேயே தொழிலாகக் கொண்டுள்ளது.எனவே இனி மிஸ்டர் க்ழுகார் பகுதிக்கு மிஸ்டர் காக்கா என பெயர் சூட்டி மகிழ்வோம்.

ஏன் இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலையில் இறங்கி இருக்கிறார்கள் என்று பார்த்தால் இந்தியாவினை காங்கிரசின் ஊழல் ஆட்சியில் இருந்து விடுவிக்கவே இப்படி கழுகார் காக்காவாக மாறி இருப்பதாக தப்பு கணக்கு போட வேண்டாம்.இதன்  பின்னணியில் ஒரு மிகப்பெரிய சுய நல அரசியலே மேலோங்கி இருக்கின்றது.

அது என்னவென்றால் தொலைக்காட்சி ஆசை. விஜய் தொலைக்காட்சியின் மக்கத்த்தான வெற்றியும் தந்தி ,புதிய தலைமுறை போன்ற நாளிதழ்கள் தங்களுக்கென  தனி தொலைக்காட்சி வைத்திருப்பதனால் இவர்களுக்கும் அந்த ஆசை வந்து விட்டது இதனை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கழுகு காக்காவாக நரேந்திர மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் கரைந்து கொண்டிருக்கிறது.

Friday, March 21, 2014

ராகுல் காந்தியை எதிர்த்து சிவகார்த்திகேயன் போட்டி :

நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் துணைத்த்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் குமார் விஸ்வாஸ் தோற்றத்தில் சிவகார்த்திகேயனைப் போன்றே இருப்பார்.

அரசியலில் மிக அதிகம் பிரபலமற்ற இவரை போட்டியிட தெரிவு செய்ததற்கான காரணம் இவரும் நம் சிவகார்த்திகேயனைப் போன்றே மேடைகளில் நகைச்சுவையாகப் பேசி மக்களிடம் எளிதில் சென்றடையக் கூடிய திறமைசாலி. கடந்த மூன்று மாதமாக தனது தொகுதியான ரேபரேலியில் தங்கி ராகுலை தோற்கடிக்க தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.


சிவகார்த்திகேயனும் வ.வா.சங்க திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தரமான இடத்தினை பிடிக்க முயன்று கொண்டிருக்கிறார். 

வரும் கால்த்தில் சிவா கார்த்திகேயனும் எதேரும் ஒரு முக்கிய அரசியல் பிரபலத்தினை எதிர்த்து போட்டியிடும் காட்சியினை நாம் காண நேரிடலாம்.

Wednesday, March 12, 2014

ப்லேக்ரிஸம் என்னும் வல்காரிசம்





மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய `அமைதிப்படை அமாவாசைநபர் அடுத்த்தவர்களின்  பதிவுகளையே காப்பி அடித்து பத்திரிக்கைகளில் வெளியிடுவது ,பத்திரிக்கை செய்திகளை காப்பி அடித்து தனது பதிவாக வெளியிடுவது  என பதிவுலக்த்தில் தனி ராஜாங்கமே சில காலம் நடத்திக் கொண்டிருந்தார்.
 அறிவியல்  துறையிலும் இதனைப் போன்ற அறிவுத் திருட்டுகள் மிகவும் சாதாரணமாக நடக்கின்றது. உயிரினங்களில் உள்ள ஜீன்களில் உள்ள டி.என்.எ.வின் அமைப்பினைக் கண்டுபிடித்த்தில் நடந்த திருட்டு இன்றும் அறிவியலாளர்களால் மறக்க முடியாத ஒன்று.டி.என்.எ. அமைப்பினைக் கண்டுபிடித்த மூவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த மூவரும் இவர்களின் கண்டுபிடிப்புக்கு முக்கிய ஆதாரமான ஒன்றினை மாற்றோர் விஞ்ஞானி தனது உரையின் போது வெளியிட்ட படத்தினை அடிப்படையாகக் கொண்டு தங்கள் ஆய்வினை முடித்து நோபல் பரிசினை வென்றனர். தகவல் தொழில் நுட்பம் வளராத அக்காலத்தில் நடந்த இந்த அறிவுத் திருட்டு இன்றும் உலகில் பல்வேறு முன்னணி ஆய்வுக் கூடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
திரைஉலகம் முழுக்க முழுக்க ப்லேக்ரிஸம் ஆக்கிரமித்த்துக் கொண்டுள்ளது.உலக இயக்குனர் ,உலக நடிகர் தொடங்கி புதிதாக அறிமுகமாகும் இயக்குனர் வரை அனைவருமே இந்த காப்பி அடிக்கும் பணியினை செய்கின்றன்ர். the taking of pelhm 123 என்னும் ஆங்கிலப் படத்தில் வரும் இறுதிக் காட்சியினை நம் உலக் நாயகர் உல்டா பண்ணியிருப்பார்.அந்த கழுத்து அசைவு முக பாவனை என ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் உன்னைப்போல் ஒருவன் படத்தில் அடித்திருக்கும் காப்பி மறக்கவே முடியாது.


ப்லகரிஸத்தினை  நான் வல்கரிஸம் என்று குறிப்பிடக் காரணம்  அது அடுத்தவரின் உழைப்பு, எண்ணம் ஆகியவற்றை திருடியதோடு மட்டுமன்றி அது சமூகத்தல் ஓரு தவறான முன்னுதாரணத்தினை ஏற்படுத்துகின்றது.

வெற்றிக்கான ஓரு குறுக்கு வழியாக இதனைப் பயன்படுத்துவதினால் மற்றவர்களக்கு ஓரு தவறான முன்னுதாரணத்தினை உண்டாக்குகின்றது. 


இத்னால் அனைத்து துறைகளிலும் சுயமாக சிந்திக்கக்கூடிய திறன் கொண்ட ஒரு சமூகத்தினை உருவாக்க இயலவில்லை.

ப்லேக்‌ரிஸத்தினை ஒரு அசிங்கமான அல்ல்து ஒரு அவமானமான செயல் என்று உணர்ந்தால்தான் இத்தனை மூறிரிலும் ஒழிக்க முடியும்.

Thursday, March 6, 2014

கேஜ்ரிவாலின் மொழி தீவிரவாதம்

இந்த நூற்றாண்டின் நம்பிக்கைக்குரிய தலைவராக உருவெடுத்துள்ள கேஜ்ரிவாலின் உரைகளையும் பேட்டிகளையும் கேட்க ஆர்வம் மிகுந்த தென்னிந்தியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

கட்சி  ஆரம்பிக்கும் முன்னர் ஆங்கிலத்தில்பேசிக் கொண்டிருந்தவர், ஆம் ஆத்மி ஆரம்பித்த பின்னர் இந்தியில் மட்டுமே பேசுகின்றார்.

என.டி.டிவி யில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இந்தியயில் மட்டுமே பதிலளிப்பதனை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த பழக்கம் ஆங்கிலமே தெரியாத வட இந்தியர்களுக்கு சரியான ஓன்றாக இருக்கலாம். ஆனால் தேசிய அளவிலானசெய்திகளை அறிந்து கொள்ள ஆர்வமுடையவ்ர்களுக்கு கேஜ்ரிவாலின் கருத்துகளை அவருடைய பேட்டியின் வாயிலாக   அறிந்து கொள்ள  பெரும் தடையாக இந்தி  மொழி விளங்குகின்றது.  

நமக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கிடையில் புதிதாக ஓரு மொழியினைக் கற்றுக் கொள்ள நேரமோ பொறுமையோ இல்லை.  

ஆங்கில ஊடகங்களில் விவாத நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் அனைவரும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகின்றனர். ஆங்கிலமே தெரியாத ஓரு சிலர் மட்டுமே இந்தியில் பேசுகினறனர். இந்நிலையில் நன்கு ஆங்கிலம் தெரிந்த கெஜ்ரிவால்  ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலம் இந்தியில் மட்டும் பதிலளிப்ப்து என்று  தீவிரமாக இருக்கின்றார்
        

Monday, March 3, 2014

மேல்மருவத்தூரின் மேன்மைகள் :

மேல்மருவத்தூரின் மேன்மைகள் :

இன்று பங்காரு அடிகாளாரின் அவதரித்த நாள். இந்நன்நாளில் மேல்மருவத்தூரின் பெருமைகளையும்' சிறப்புகளையும் நினைவு கூறுவோம். சென்னைக்கும் திண்டிவனத்த்திற்கும் இடையில் அமைந்துள்ள இவ்வழகிய திருத்த்தலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்த்து செல்லும் வகையில் மிகப் பிரம்மாணடமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏழை பணக்கார வித்த்த்தயாசமின்றி அனைவரும் ஒரே வரிசையில் சென்று தரிசனம் செய்யும் முறை கொண்ட ஒரு சில ஆலயங்களில் இதுவும் ஒன்று.

அடிகளார் அவர்கள் பாத்தபூஜையின் போது பக்தர்களிடம் அவர்களின் மனக்குறையினை கேட்டறிந்து அவகளை தீர்ப்பதற்குண்டான வழிமுறைகளையும் கூறி நல்வழிப்படுதித்தி வருகின்றார்.

ஒம்சக்தியே பராசக்தியே
ஒம்சக்தியே மருவூர் அரசியே
ஒம்சக்தியே ஓம் விநாயாகா
ஒம்சக்தியே ஓம்  காமாட்சியே
ஒம்சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே
ஒம்சக்தியே கூறுவதி சரணம் திருவடி சரணம்.

இம்மந்தீரத்த்திணைநாள் தோறும் கூறி வழிபட்ட்து ஆதிபராசகதி அருள் பெறுவோம்.