மிகவும் குறிப்பிட்டு சொல்ல
வேண்டிய `அமைதிப்படை அமாவாசை`
நபர் அடுத்த்தவர்களின் பதிவுகளையே காப்பி அடித்து பத்திரிக்கைகளில்
வெளியிடுவது ,பத்திரிக்கை செய்திகளை காப்பி
அடித்து தனது பதிவாக வெளியிடுவது என பதிவுலக்த்தில் தனி ராஜாங்கமே சில காலம் நடத்திக் கொண்டிருந்தார்.
அறிவியல்
துறையிலும் இதனைப் போன்ற அறிவுத்
திருட்டுகள் மிகவும் சாதாரணமாக நடக்கின்றது. உயிரினங்களில் உள்ள ஜீன்களில் உள்ள டி.என்.எ.வின்
அமைப்பினைக் கண்டுபிடித்த்தில்
நடந்த திருட்டு இன்றும் அறிவியலாளர்களால் மறக்க முடியாத ஒன்று.டி.என்.எ. அமைப்பினைக் கண்டுபிடித்த
மூவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த மூவரும்
இவர்களின் கண்டுபிடிப்புக்கு முக்கிய ஆதாரமான ஒன்றினை மாற்றோர் விஞ்ஞானி தனது உரையின் போது வெளியிட்ட
படத்தினை அடிப்படையாகக் கொண்டு தங்கள்
ஆய்வினை முடித்து நோபல் பரிசினை வென்றனர். தகவல் தொழில் நுட்பம் வளராத அக்காலத்தில் நடந்த இந்த அறிவுத்
திருட்டு இன்றும் உலகில் பல்வேறு முன்னணி
ஆய்வுக் கூடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
திரைஉலகம்
முழுக்க முழுக்க ப்லேக்ரிஸம் ஆக்கிரமித்த்துக் கொண்டுள்ளது.உலக இயக்குனர் ,உலக நடிகர் தொடங்கி புதிதாக அறிமுகமாகும்
இயக்குனர் வரை அனைவருமே இந்த காப்பி அடிக்கும் பணியினை செய்கின்றன்ர். the taking
of pelhm 123 என்னும் ஆங்கிலப் படத்தில்
வரும் இறுதிக் காட்சியினை நம் உலக் நாயகர் உல்டா பண்ணியிருப்பார்.அந்த கழுத்து அசைவு முக
பாவனை என ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் உன்னைப்போல் ஒருவன் படத்தில் அடித்திருக்கும் காப்பி மறக்கவே முடியாது.
ப்லகரிஸத்தினை நான் வல்கரிஸம் என்று குறிப்பிடக் காரணம் அது அடுத்தவரின் உழைப்பு, எண்ணம் ஆகியவற்றை திருடியதோடு மட்டுமன்றி அது
சமூகத்தல் ஓரு தவறான முன்னுதாரணத்தினை ஏற்படுத்துகின்றது.
வெற்றிக்கான ஓரு குறுக்கு வழியாக இதனைப்
பயன்படுத்துவதினால் மற்றவர்களக்கு ஓரு தவறான முன்னுதாரணத்தினை உண்டாக்குகின்றது.
இத்னால் அனைத்து துறைகளிலும் சுயமாக சிந்திக்கக்கூடிய திறன் கொண்ட ஒரு சமூகத்தினை உருவாக்க இயலவில்லை.
No comments:
Post a Comment