கதை வசனம்
கேட்பது என்பது மிகப் பிரபலாமான ஒன்றாக தொன்னூறுகளின் தொடக்கம் வரை பிரபலாமாக
ஒன்றாக இருந்தது. ஆனால்
தொலைக்காட்சியின் வருகைக்குப்பின் இதன் வீழ்ச்சியினை ஆரம்பமானது. மேலும் டி.ராஜேந்தர் அவர்களின்
படங்களுக்கான மவுசு குறைந்த பின்னர் இப்பழக்கமும் முற்றிலும் இல்லாமலாகிவிட்டது.
ஏனேனில் டி.ஆர்.படங்களில்
வசனங்களுக்கு அதிக முக்கியத்த்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.
எனவே அதனை விரும்பி கேட்கும் பழக்கம் இருந்து வந்தது. டி.ஆர். காலத்திற்கு முன்பே சிவாஜி
படங்கள் குறிப்பாக பாலும் பழமும்
,தில்லானா மோகனாம்பாள் மாறிரும் எம்.ஜி.ஆரின்
மாட்டுக்கார வேலன் போன்ற
படங்களின் கதை வசனம் கேட்டுக்கொண்டிருந்தனர்.அதிலும் வானொலியில் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை ஒலி
பரப்பியதனால் இப்பழக்கம் மிக நெடுங்காலம்
மக்களின் வாழ்க்கையில் இருந்து வந்தது.
ஆனால் பின்னர் வந்த
திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளுக்கும், கதையையும் மீறி படங்கள் அவை எடுக்கப்படும் விதங்களுக்காகவே உ-ம்: வெளிநாட்டுக்காட்சிகள்,
மிக அதிகப்படியான ஒப்பனைகள்,பார்வையாளனை பிரமிக்க வைக்கத்தக்க கேமரா
கோணங்கள், காதல் காட்சிகளின்
நெருக்கம்
போன்றவைகள் நிறைந்த படங்களின் வருகையினால் கதை மற்றும்
வசனத்தின் பங்கு மிகவும் குறைந்து விட்டது.
மீண்டும் இரண்டாயிரத்த்தின்
தொடக்கத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்த்துவம் அளிக்கும் படங்களின் வருகையினால் கதை வசனம் கேட்பது
சிறிது அதிகரித்திருக்கின்றது. இப்படங்களில்
கதை எனப்து இல்லாவிட்டாலும் கூட வசனகளுக்காகவே அதிகம் ரசிக்கப்படுகிறன.
என்னுடைய விருப்ப
பட்டியலில் உள்ள படங்கள் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வ.வா.சங்கம், கேடி
பில்லா கில்லாடி ரங்கா மற்றும் சுந்தர் சி. யின் படங்களான தீயா வேல செய்யனும் குமார் , மருதமலை இன்னும் பிற.(கரகாட்டகாரன் கூட இந்தப் பட்டியலில் சேர்க்க மிக
தகுதியான ஒன்று)
தற்பொழுது உள்ள
அதி நவீன மொபைல்
ipod இவைகளில் ஏதேனும் ஒரு படத்தினை பதிவிறக்கி வைத்துக் கொண்டால் பயணத்தின் போதோ வேலை
செய்யும் போதோ கேட்டுக் கொண்டே வேலை செய்யலாம்.
No comments:
Post a Comment