திரைப்படத்
துறையும் அறிவியல் ஆராய்ச்சியில் முற்றிலும் வேறுபட்ட இரண்டு துறைகள்.
இருப்பினும் இவ்விரண்டு துறைகளிலும் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கும்
ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பல்வேறு வகையான ஓற்றுமைகள் உள்ளன. அவை என்ன என்ன
என்பதனை சுவாராசியமாகப் பார்க்கலாம்.
ஆசான் தேர்ந்தெடுத்தல்
முதலில்
ஒரு உதவி இயக்குனாராக விருப்பப்படுபவர் ஒரு நல்ல இயக்குனரிடம் பணியாற்ற
விருப்பப்படுவார். நல்ல இயக்குனர் என்பது அவர் கொடுத்த ஹிட் படங்களின்
மூலமே கணக்கிடப்படௌம் என்பது நாம் அறிந்ததே..இதைப் போன்றே அளவுகோல் தான்
ஆராய்ச்சி மாணவர்களும் தங்களுக்கான பேராசிரியரை தேர்ந்தெடுக்கும் போது
செயல் படுத்துவர். எப்படி எனில் ஒரு பேராசிரியர்களின் ஆய்வுக் கட்டுரை எந்த
அளவுக்கு பிரபலமான தான ஒன்றோ அதைப் பொறுத்தே மாணவர்கள் அந்தப்
பேராசிரியரின் ஆய்வகத்தில் சேருவது குறித்து முடிவு செய்வார்.
இன்னும் சற்று விரிவாக விளக்க
வேண்டுமென்றால் , பேராசிரியர்கள் தங்கள் ஆய்வினை பல அறிவியல்
பத்திரிக்கைகளில் வெளியிடுவர். ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு அளவுகோல்
உண்டு. உ-ம். science என்ற பத்திரிக்கையில் தான் ஆராய்ச்சினை வெளித்டவர்
மிகப் பெரிய பேராசிரியராகக் கருதப் படுவார். எனவே அவரின் ஆய்வகத்தில் பணி
யாற்ற நிறைய மாணவர்கள் விருப்பப்படுவார்.(ஆனால் இந்தியாவில் science போன்ற பத்திரிக்கைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதென்பது மிக அபூர்வமாகவே நடக்கும்.)இதை
சினிமா மொழியில் சொல்வதென்றால் மணிரத்னம் மற்றும் சங்கரிடம் பணி யாற்ற
எப்படி ஒரு ஆர்வமும் போட்டியும் இருக்குமோ அதைப்போலத்தான் இருக்கும்.
இது வரை நாம் பார்த்தது ஒரு மாணவரோ அல்லது உதவி இயக்குனரோ தனக்கான ஆசானை தேர்ந்தெடுப்பதில் உள்ள ஓற்றுமையினை பார்த்தோம்..இனி இவர்கள் இருவருக்குமிடையே பணி செய்யும் இடத்தில் உள்ள ஓற்றுமைகள் என்னவென்று பார்க்கலாம்.
இரண்டாவது மிக முக்கியமான ஒற்றுமை
பணி நேரம். இந்த இரண்டு துறைகளிலுமே வேலை என்பது இரவு பகல் பாராமல் உழைக்க
வேண்டும். ஒரு நாளில் சில சமயம் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்க
வேண்டும். அதற்கடுத்த முக்கிய ஒற்றுமை உடல் உழைப்பு மட்டுமன்றி ,மிகுதியான சிந்திக்கும் திறனும் இருந்தால் மட்டுமே இத்துறையில் சாதிக்க முடியும்.
பணி நேரம்
பட
ஷூட்டிங்கின் போது எப்படி உதவி இயக்குனர்கள் தங்களது இயக்குனரின்
எண்ணத்திற்கு ஏற்ப காட்சி அமைப்பில் உதவி புரிய வேண்டுமோ அதே வேலையை தான்
ஆராய்ச்சி மாணவர்களும் தங்கள் பேராசரியரின் எண்ணத்திற்கு ஏற்ப தங்கள்
ஆய்வுகளை சரி வர செய்ய வேண்டும். இது போன்ற வேலைகள் செய்யும் பொழுது திட்டு
வாங்குவது என்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே இந்த இரு துறை
சார்ந்தவர்களுக்கும் இருக்கும்.
ஒரு இயக்குனரிடம் பல உதவி இயக்குனர்கள் இருப்பது போல இங்கும் பலவேறு ஆய்வு
மாணவர்கள் ஒரு பேராசிரியரிடம் இருப்பர். இதனால் இங்கே பல்வேறு ஈகோ
இருக்கும் ,சீனியர் ஜூனியர் என்ற போட்டியும் அதிகமாகவே இருக்கும்.
சம்பளம்
சம்பளம் மிக முக்கியமான அம்சம் , உதவி இயக்குனர்களும் சரி ஆராய்ச்சி
மாணவர்களும் சரி இவர்கள் இருவருக்குமே உழைக்கும் உழைப்பிற்கும் அவர்களின்
தகுதிக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படுவதே இல்லை.ஒரு படம் ஒரு கோடி முதல் நூறு கோடி வரை லாபம் ஈட்டும் படத்தின் லாபத்தில்
நூறில் ஒரு பங்கு கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஏறக்குறைய இதே நிலைதான்
ஆராய்ச்சி மாணவர்களுக்கும் , இரவு பகல் பாராமல் உழைப்பதோடு மட்டுமன்றி
தங்கள் குடும்பத்திற்கும் நேரம் செலவிடாமல் ஆராச்சிக்கூடமே கதி என்று
கிடக்கும் இவர்களுக்கு கிடைப்பதோ மிக சொற்ப ஊதியம் மட்டுமே.
குடும்பம் மற்றும் திருமணம்
இதன் பாதிப்பு
திருமணம் என்ற பந்தம் மிக தாமதமாகவே இந்த இரு துறை சார்ந்தவர்களுக்கும்
நடக்கும் ,ஒரு சிலருக்கு அது கிட்டாமல் போவதும் உண்டு.அதே போல முதல் படம்
எடுத்துவிட்டுதான் திருமணம் செய்வேன் என்று அனைவரும் சொல்வது போல PhD
முடித்து விட்டு தான் திருமணம் என்று இங்கும் அனைத்து மாணவர்களும் சொல்வர்.இது மட்டுமன்றி தாய் தந்தையர்களை மாறிரும் சகோதர சகோதரிகளை கவனிக்காமல் எந்த ஓட்டுதலும் இன்றி தனி மரமாகவே வாழ்கின்றனர்.
அறிவு திருட்டு:
இந்த
அறிவு திருட்டு என்பது மிக சாதாரணமாக எந்த வெட்கமும் இல்லாமல் இந்த இரு
துறைகளிலுமே மிக சர்வ சாதாரணமாக நடக்கும். திரைப்பட துறை அதிகமாக
ஊடகங்களால் கவனிக்கப் படுவதால் அங்கு நடக்கும் உழைப்பு திருட்டுகள்
வெளிச்சத்திற்கு வருகின்றது. ஆனால் அங்கு வெளிச்சத்திற்கு வராமல் நடக்கும்
திருட்டுகளும் அதிகம். சமீபத்திய மிக முக்கிய உதாரணம் கத்தி பட விவகாரம்.
ஓராண்டுக்கும் மேலாக கத்தி படத்திற்கான மூலக் கதையினை தயார் செய்த கோபியினை
முருகதாஸ் ஏமாற்றியது அனைவரும் அறிந்ததே.
இ தைப் போன்ற ஏராளமான அறிவு திருட்டுகள் அறிவியல் துறைகளிலும் நடக்கின்றன.
ஆனால் அவை வெளிஉலகிற்கு தெரிவதில்லை. இருப்பினும் இது நடப்பது
மாணவர்களுக்கு மட்டுமன்றி அறிவியல் அறிஞர்களுக்கும் நடக்கும்.எப்படி
ஆப்பிள் மொபைல் போன் போல சாம் சங் வடிவமைத்ததோ அதே போல மற்ற அறிஞரின்
ஐடியாவினை உருவி இவர்களே உருவாக்கிது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துவர்.
வாழ்க்கை நிலை: (வழுக்கை நிலை )
சினிமாவில்
ஒரு படம் இயக்குவதற்கான வாய்ப்பு என்பது அனைத்து இயக்குனர்களுக்கும்
கிடைக்காது அது போல தான் PhD படித்த அனைத்து மாணவர்களும் தனியான அறிவியல்
அறிஞர் ஆக முடியாது. போட்டி மிக அதிகம். உதவி இயக்குனர்களாகவே தங்கள் காலம்
முழுக்க இருப்பது போல காலம் முழுக்க ஏதோ ஒரு ஆய்வுக் கூடத்தில் ஒரு
அறிஞரிடம் உதவியாளராகவே தங்கள் காலம் முழுக்க இருப்பவர்களும் ஏராளம்.
அடைப்புக் குறியில் வழுக்கை நிலை என்று குறிப்பிட்டதற்கான காரணம் அதிகமாக
சிந்தித்து சிந்தித்து இரு துறைகளிலும் ஏராளமான வழுக்கைத் தலையர்கள்
இருப்பார்கள்.
ஆர்வம்.
இந்த
இரண்டு துறையை சார்ந்தவர்களுக்கும் சமூகத்தில் மிகுந்த மதிப்பு உண்டு.
இதனாலேயே மிக அதிகமான பேர் இவ்விரண்டு துறைக்கும் வரத் துடிக்கின்றனர்.
வாய்ப்பு கிடைத்தவர்கள் சாதிக்கின்றனர். மற்றவர்கள் கனவிலே காலத்தினை
கழிக்கின்றனர் .
மேற்கண்ட
உதாரணகள் மூலம் இவ்விரண்டு துறை சார்ந்த் மனிதர்களின் வாழ்வில் எவ்வளவு
ஆச்சர்யமான ஒற்றுமைகள் உள்ளன என்பதனை பதிவு செய்துள்ளேன்.