Wednesday, December 10, 2014

இசை உலகின் பொறுக்கிகள்


நம் நாட்டில் சென்ற நூற்றாண்டு வரை இசை உலகம் என்பதே பக்திமான்களும் ஒழுக்கம் நிறைந்தவர்களும் கொண்ட ஒரு உலகமாகவே இருந்து வந்தது.இதற்கு வாழும் உதாரணம் இளையராஜா. ஆனால் தற்பொழுது அனிருத் செய்யும் அட்டகாசங்களை பார்த்தாலே இசை உலகம் எப்படி மாறிவிட்டது என்பதனை புரிந்து கொள்ள முடியும். இந்த மாற்றம் அனிருத்தின் தவறு அல்ல , எப்படி நம் திரைப்படங்களில் பாடல்கள் முதல் பின்ணணி இசை வரை வெளி நாட்டுப் படங்களில் இருந்து காப்பி அடிக்கப் படுகின்றதோ அதே போல அந்த இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை போல நம் நாட்டு இசை அமைப்பாளர்களும் வாழ ஆசைப் படுகின்றனர். அவர்களை போன்றே உடை அணிதல் , விலயுர்ந்த வாகனங்களை
வாங்குதல் மற்றும் பெண்கள் 
மீது மோகம் என்று தங்கள் வாழ்க்கை முறையையே மாற்றி வருகின்றனர்.கீழே உள்ள படத்தின் மூலம்  அனிருத் வெளிநாட்டு இசைக்கலைஞர் tyga போன்றே உடை அணிந்து அவர்களைப் போன்றே இருக்க இவர்களும் முயற்சிப்பதனை தெரிந்து கொள்ள முடியும். எனினும் மலேசியாவில் இயங்கி வரும் தமிழ்  ராப் பாடகர்களும் இதே போன்று தான் உடை அணிவர் என்பதும் உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன்.

                 
                                   
                    Tyga                          Anirudh


 அந்த இசைக் கலைஞர்கள் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் சிறந்த பாடல்கள் பற்றி வரும் வாரங்களில் எழுத இருக்கின்றேன். இதற்கு முன்பு இசை உலகின் தேவதைகள் என்று பாப் இசை உலகின் அழகிய இளம் பெண்கள் குறித்து எழுதி இருந்தேன்

இசை உலகின் இளம் தேவதைகள்: கேட்டி பெர்ரி (Katy Perry )
நிக்கி மினாஜ் (Nicki Minaj):இசை உலகின் இளம் தேவதைகள்
அடேல் :இசை உலகின் இளம் தேவதைகள்
இசை உலகின் இளம் தேவதைகள்:டெய்லர் ஸ்விப்ட்
இசை உலகின் இளம் தேவதைகள் :ரியான்னா(Rihanna
இசை உலகின் இளம் தேவதைகள்:அலிசியா கீஸ் 
 நேரம் கிடைக்கும் பொழுது இந்த தேவதைகள் குறித்து படித்துவிட்டு அவர்களின் இசையை கேட்டு மகிழுங்கள் 

ஏன் இசை உலகின் பொறுக்கிகள் என்று குறிப்பிடுகிறேன் என்றால் இவ்வகையான பாடகர்கள் அதிகம் முன்னிலைப் படுத்துவது வன்முறை
மற்றும்ஆபாசம். ஆனாலும்  நமது கானாப் பாடல்கள் போலவே இதற்கும் உலகெங்கும் மிகப் பெரிய வரவேற்பு உண்டு. தாளத்தோடு வரும் அந்தப் பாடல்களை முதல் தடவை கேட்கும் போது புரிந்து கொள்ள மிக சிரமம் தான் , ஆனால் அந்தப் பாடல்களின் காணொளியுடன் காணும் போது நடன அசைவுகளினாலும் அவர்கள் செய்யும் சேஷ்டைகளாலும் இந்தப் பாடல்கள் மிகவும் ரசிக்கத்‌தக்கவையாகவே இருக்கும். இதனை ராப்பர் உலகம் என்று அழைப்பர். ஆப்பிரிக்கர்களே அதிகம் இயங்கும் இவ்வகையான இசையில் எமினம் போன்ற வெள்ளையர்களும்   கலக்கி வருகின்றனர்.

 இந்த வகையான பாடகர்களின் ரசிகர்கள் பொதுவாக டீன் ஏஜ் வயதினராகத் தான் இருப்பர். ராப் இசை ரசிகர்களுக்கென்றே பொதுவான உடை அமைப்பே உண்டு. இடுப்பிலே நிற்காத ஜீன்ஸ் பேண்டும் ஹூடி என்று சொல்லப்படும் தலையினை மூடிக் கொள்ளும்படியான முழுக்கை சட்டையும் ,ஒரு பெரிய ஹெட் போன் (head phone) அணிந்து கொண்டு இருப்பர். இவர்களுக்காகவே தனியாக ஆடை விற்பனை செய்யும் கடைகளை பெரிய நகரங்களில் காணலாம். கீழே உள்ள புகைப்படம் அது போன்ற ஒரு கடையில் எடுக்கப்பட்டது.


இனி வரும் பதிவுகளில் ராப் இசையில் பிரபலமான பணக்கார பொறுக்கி குண்டு பொறுக்கி , கஞ்சா பொறுக்கி, குடிகார பொறுக்கி , கிரிமனல் பொறுக்கி என ஏகப்பட்ட இசை பொறுக்கிகள் குறித்து எழுத உள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பொறுக்கிகள் உங்களையும் கவர்ந்து விடுவார்கள் .








2 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வித்தியாசமான பதிவு. இசைஞர்கள் பற்றிய அறிய ஆவல். தொடருங்கள்

செங்கதிரோன் said...

Thanks Muralidharan