நாம் எல்லோருக்கும் முன்பே தெரிந்த ஒன்று ஆட்டோகாரர்களுக்கு வாய் மிக நீளம். ஆனால் மிக முக்கியமான ஒன்று பகுதி பெரிதாக இருக்கும் என நான் எண்ணுவதற்கான கரணம் நான் மூளை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதானால் இந்த ஐயம் உண்டானது.
லண்டன் மாநகரம் மிக சிக்கலான பல தெருக்கள் கொண்ட ஒரு இடம். அங்கு இருக்கும் வாடகை கார் ஓட்டுனர்கள் பயணிகள் சொல்லும் இடத்திற்கு மிக எளிதாக செல்வதனை பார்த்து ஆச்சரியப்பட்ட பேராசிரியர் ஒருவர் அவர்களின் மூளை குறித்து ஆராய்ச்சி செய்தார். அந்த ஆய்வின் முடிவுகள் மிக ஆச்சர்யமூட்டுவதாக அமைந்தது.
நம் மூளையில் உள்ள ஹிப்போகாம்புஸ் எனப்படும் பகுதியானது நம் ஞாபக சக்தியினை சேமித்து வைக்கும் கிடங்கு போன்றதொரு பகுதியாகும். அது மட்டுமன்றி நாம் வழித்தடங்களை சரியாக நினைவில வைத்துக் கொள்வதில் முக்கியப் பங்காற்றுகின்றது.இது மூளையில் இடது வலது என இரண்டு பக்கமும் இருக்கும்.இது கடல் குதிரை போன்றதொரு தோற்றத்தில் இருப்பதனால் ஹிப்போகம்பஸ்(hippocampus ) எனப் பெயரிடப்பட்டது.
வாடகை கார் ஓட்டிகள் மற்றும் சாதரண மக்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் ஹிப்போகம்பஸ் (hippocampus )பகுதியின் பின் அளவு (posterior ) அதிகம் இருப்பது தெரிய வந்தது.இந்தப் பின் பகுதியானது இடங்களை அல்லது வழித்தடங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கக் கூடியது.
மேலே உள்ள புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி எலியனார் அவர்கள் தான் இந்த ஆய்வினை மேற்கொண்டவர். பதினாறு கார் ஓட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து இந்த முடிவுக்கு அவர் வந்தார். இது மூளை ஆராய்ச்சியில் மிக முக்கியக் கண்டு பிடிப்பு ஆகும். எனவே தான் லண்டன் போலவே பல சிக்கலான தெரு அமைப்புகளைக் கொண்டிருக்கும் சென்னையிலும் ஆட்டோகரர்களுக்கு ஹிப்போகம்பஸ் பகுதியானது பெரிதாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
ரஜினி பாடியது போல ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் என்பது அவர்களின் மூளையில் உள்ள இந்தப் பகுதி பெரிதாக இருப்பதால் தான் சந்து பொந்துகளில் புகுந்து நாம் சேர வேண்டிய இடத்திற்கு சரியாக கொண்டு சேர்க்கும் திறமை இருக்கின்றது.
2 comments:
It could be due to the evolution of brain (development or enlargement of brain) after several days practice on driving many routes. Otherwise these auto people are not born with big hippocampus. Everything is due to continued use of brain!
I haven't mentioned anywhere in my post, autowalas born with larger hippocampus.
Post a Comment