தமிழ் படங்களில் வரும் வில்லன்கள் கழுத்து நிறைய கனமான செயின்களை அணிந்து கொண்டு வருவர். பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஆர்வம் இருக்கும் என்ற நிலை மாறி ,இது போன்ற பெரிய தாதாக்களுக்கும் தங்க ஆபரணங்கள் அணிவது விருப்பமாகி விட்டது. இது போன்று அரசியல் தலைவர்களும் தங்கள் தலைமையின் பெயர் பதித்த மோதிரம், செயின் பிரேஸ்லெட் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மறைந்த தாமரைக்கனி அவர்கள் தான் அணைந்திருந்த கனமான இந்த மோதிரத்தால் தான் சட்டசபையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கை உடைத்தார்.
இந்த ஆபரணங்கள் அணிவது தங்களின் ஆடம்பரத்தை வெளிஉலகிற்கு காண்பிக்க ஒரு குறியீடாகப் பயன்படுத்துகின்றனர்.ராப்பர் இசை உலகின் அனைத்து பாடகர்களுமே இது போன்று நிறைய செயின்களை கழுத்தில் மாட்டிக் கொண்டிருப்பார். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட ஒருவரை மட்டும் செயின் பொறுக்கி என்று சொல்வதற்கான காரணம் இவருடைய பெயரே அது தான், 2 Chainz .இவருடைய சொந்த பெயர் Tauheed Epps , ஆனால் இவராக சூட்டிக் கொண்டது 2 Chainz , கூடைபந்தாட்ட வீரரான இவர், இசை உலகில் பிரபலமானது 2012ல் , இதற்கு முன்னர் பல இசைக் குழுக்களில் இயங்கி வந்தாலும் , தனியாக இவரே பாடி வெளியான பாடல்களின் மூலம் தான் இசை உலகில் பிரபலமானார்.
No Lie , Birthday song இரண்டும் மிகப் பிரபலமானவை, இந்தப் பாடல்களை நீங்கள் மீண்டும் மீண்டும் பார்ப்பீர்கள், அந்தளவுக்கு காட்சி அமைப்புகள் இருக்கும். ஏனெனில் இது போன்ற பாடல்களில் மிக மிக அழகான பெண்களை மிக ரசனையாக தேர்ந்தெடுத்து அந்த நடன அசைவுக்கு தக்கவாறு இசையும் அமைத்து கலக்கி இருப்பார்.அதுவும் Birthday song இசை உலகின் முரட்டு பொறுக்கியான Kayne West உடன் இணைந்து அதகளம் பண்ணி இருப்பார்.கண்டிப்பாக இந்தப் பாடலை பார்க்கும் ஒவ்வொருவரும் உங்கள் நண்பரின் பிறந்த நாளுக்கு இந்தப் பாடலை dedicate செய்வீர்கள் , நான் சொல்வது எவ்வளவு உண்மை என்பதனை கீழே உள்ள உங்கள் குழாய் இணைப்பில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இது போன்ற இசைப் பணியும் தாண்டி இவரின் மற்றொரு செய்கையின் மூலம் அனைவருக்கும் அறிமுகம். நம்மூர் பாடகர் சினேகன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் மற்றும் பொது மேடைகளில் கட்டிபிடி வைத்தியம் செய்து தமிழகத்தில் மிக பரபரப்பாக செய்திகளில் இடம் பிடித்தார். ஆனால் 2 Chainz உலகில் மிக விலையுர்ந்த பொருட்களை வாங்குவது ,உண்பது போன்ற சாதனைகளை செய்து கொண்டு வருகின்றார்.
தொப்பி -15 இலட்சம்,ஒரு பாட்டில் தண்ணிர் -5 இலட்சம் , பல் விளக்கும் டூத் பிரஷ் -25,000 ரூபாய் இப்படி இவர் உலகின் அதிக விலை கொண்ட அனைத்தையும் வாங்குவதையும் பயன்படுத்துவதையும் பொழுது போக்காகக் கொண்டுள்ளார்.
மேக்டோன்னல்டில்(Mc Donald ) 2$ க்கு ஜூனியர் கிடைக்கும், யானைப் பசிக்கு சோளப் பொறி போல இருந்தாலும் நம்ம பட்ஜெட்டுக்கு அதை சாப்பிடுவதை தவிர வழி இல்லை. ஆனால் , 2 Chainz சாப்பிட்ட பார்கரின் விலை 295$(15,000 ரூபாய் ).ஒரே ஒரு பர்கரின் விலை, வெவேறு நாடுகளில் இருந்து வரவைக்கப்பட்ட சிறந்த மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பார்கரின் கூடுதல் அம்சம் 24 காரட் தங்கப் பொடி தூவப்பட்டிருப்பதும், வைர பற்குச்சியும்(Tooth pick) இணைந்திருப்பது தான். கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட அந்த பர்கரை 2 chainz சாப்பிடுவதின் காணொளியைப் பாருங்கள்.
செயின் பொறுக்கி குறித்த இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன். அடுத்து இசை உலகின் முரட்டு பொறுக்கி குறித்து பார்ப்போம்.நன்றி
4 comments:
இசைக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்றே தெரியவில்லை. Hip hop culture மேற்கத்திய இசையில் ஏற்பட்டிருக்கும் ஒரு கோரமான அசிங்கம். இசையை சிதைக்கும் குரூரம். இன்னும் பத்து வருடங்களில் இந்த ஆபாசத்தை யாரும் பெருமையாக நினைவுகூறப் போவதில்லை. இதை நான் எழுதியதால் என் மீது உங்களுக்கு கோபம் வர வாய்ப்பிருக்கிறது.
இந்த கருத்துக்களுக்குகாக உங்கள் மீது எந்த கோபமும் இல்லை. மாறாக உங்கள் அறியாமையை எண்ணி தான் வருத்தப்பட
வேண்டி இருக்கின்றது . அடித்தட்டு்மக்களின் இசைக்கு எந்த ஒரு வடிவமோ முறையோ இல்லாத்தால் அது நிராகரிக்கப்படுகின்றது. இன ரீதியாகவும் இது கருப்பர்களின் இசை என்ற தவறான புரிதலும் உள்ளது. ஆனால் ஏகப்பட்ட வெள்ளை இன மக்கள் rap மற்றும் hip hop ஐ மிகவும் ரசிக்குன்றனர்.
பறை சத்தத்தை வெறுப்பவர்கள் தான் இது போன்ற இசையினையும் தீண்டத்தகாதது என ஒதுக்கி வைக்கின்றனர். இசை தனி மனித விருப்பம் சார்ந்த ஒன்று.இளையராஜாவின் மென்மையான மனதை வருடும் இசையிலிருந்து வெளிவந்து ரஹ்மானின் அதிக சத்தம் கொண்ட பாடல்களை ஏற்றுக்கொண்டோம். அது போல தான் இதுவும் ஒரு வகை இசை, தனுஷ் மாதிரி கேட்ட உடனே பிடிக்காது , கேட்க கேட்க தான் பிடிக்கும்
செங்கதிரோன்,
என் அறியாமை குறித்து நீங்கள் வருத்தப் படுவதற்கு நன்றி.
இசைக்கு இனம் மொழி வட்டாரம் வட்டம் போன்ற கோடுகள் இல்லை என்று நினைப்பவன் நான். கறுப்பின மக்களின் இசை என்பதால் இது நிராகரிப்படுவதாக நீங்கள் கூறுவது உண்மையில்லை. சொல்லப்போனால் rap இசையில் eminem கருப்பர்களையே துவம்சம் செய்த வெள்ளையன். raggae, blues, rhythm & blues, ska போன்ற இசை வடிவங்களும் இதே அடி தட்டு மக்களின் இசையே. நீங்கள் ஒருவேளை கேட்டிருக்கலாம். எந்தவிதமான இரைச்சல், ஆபாச வார்த்தைகள், பெண்களை ஆட விட்டு அவர்கள் பின்னே தட்டும் செக்ஸ் சில்மிஷங்கள் இல்லாத தரமான இசை வகைகள் இவை. Jazz என்ற அற்புதம் கறுப்பர்களால் உருவாக்கப்பட்டு இன்றுவரை மேற்கத்திய இசையின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. rock, heavy metal, punk, pop போன்ற இசைகளும் அடித்தட்டு மக்களின் ஆசா பாசங்கள் வருத்தங்கள் வெறுப்புகள் துயரங்கள் சந்தோஷங்கள் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சாமானியர்களின் இசைதான். இதில் அதிகம் கருப்பர்கள் இல்லை என்பதால் இன அரசியல் கொண்டு சிலரால் இவை பெரிதாக பேசப்படுவதில்லை. அதே சமயம் ஹிப் ஹாப் ராப் இசை என்றால் அது எத்தனை கேடுகேட்டதாக இருந்தாலும் அதை உயர்வாக பேசுவது நம்மிடம் இருக்கும் அரசியல் என்று நினைக்கிறேன். அதனால்தான் பறை இசை என்ற பதத்தை முன்வைக்கிறீர்கள்.
அடித்தட்டு மக்களின் இசை என்று சொல்லும் உங்களிடம் ஒரு கேள்வி. எத்தனை ஹிப் ஹாப் ராப் பாடல்கள் நீங்கள் சொல்லும் அந்த சாமானியர்களின் பிரச்சினைகளையும் வாழ்வியல் துன்பங்களையும் சோகங்களையும் பாடல்களாக பாடியுள்ளன? பெரும்பாலும் பெண்கள், காமம், இளைஞர்களின் கனவுகள், உடலுறவு, என நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து பாலியல் பாடல்களே. Nothing sells like sex. இது இன்றைய டிரெண்ட். அவ்வளவே.
நான் உங்களுக்கு சில பாடகர்களை சிபாரிசு செய்கிறேன். இவர்கள் சமூகத்தின் கீழ்நிலை மனிதர்களின் வாழ்கையை அவர்களின் துயரங்களுடன் பாடியவர்கள். Bob Marley, Jimmy Cliff போன்ற கருப்பர்களும் Midnight Oil போன்ற வெள்ளை ராக் இசைக் குழுக்களும் தரமான பாடல்களை படைத்தவர்கள். John Mellencamp என்னும் இசைஞர் அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினரின் உரிமைகளை பாடியவர். இவர்களோடு ஒப்பிட்டால் ஹிப் ஹாப் என்ற அசிங்கத்தை நீங்களும் ஒதுக்கிவிடுவீர்கள்.
இன்னும் பேசலாம்தான். ஆனால் வேண்டாம்.
Post a Comment