முதலில் நிம்மார்ந்தவன் என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று பார்ப்போம். நிகழ் கால உலகில் வாழாமல் தன் வாழ்வில் முன்பு நடந்த்தையோ அல்லது நடக்கப்போவதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டே இருப்பவர்களைத்தான் நிம்மார்ந்தவன் என்று அழைப்பர்.இது போன்று நிம்மார்ந்தத்தனமாக இருப்பவர்களை எளிதாக அடையாளம் காண இரண்டு உதாரணங்கள் உண்டு , ஒன்று சாவியையோ அல்லது ஏதேனும் கையில் வைத்திருந்த ஒரு பொருளை எங்கே வைத்தார்கள் என்பதனை மறந்து வீடு முழுக்கத் துழாவி கொண்டிருப்பர் .இரண்டாவது உதாரணம் எப்பொழுதுமே ஆழ்ந்த சிந்தனையில் மின் விசிறியையோ அல்லது ஏதேனும் ஒன்றைப் பார்த்துக் கொண்டே சும்மா உட்கார்ந்திருப்பார் அல்லது படுத்துக் கொண்டிருப்பர். இந்த உதாரணங்கள் மூலம் நிம்மார்ந்தவன் யார் எனபது நன்கு விளங்கி இருக்கும்.இனி இந்த நிம்மார்ந்தத்தனம் நம்மை எந்தளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்தி நிகழ்கால உலகில் வாழ்வது என்பது குறித்து பார்ப்போம்.
ஒரு நகைச்சுவை உதாரணம் தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினி வேட்டியை மறந்து விட்டு கல்லூரிக்கு செல்லும் காட்சியை அனைவரும் மறந்திருக்க மாட்டிர்கள் ,இது போன்றே absent mindednessஐ முன் வைத்து பல கார்ட்டூன்கள் மற்றும் நகைச்சுவைகள் மிகப் பிரபலம்.
சிம்புவை ஏன் நிம்மார்ந்தவன் என்று குறிப்பிட வேண்டும்? ஏற்கனவே நான் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு டுரெட் வியாதியா என்று ஒரு பதிவு எழுதி இருந்ததை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அடிப்படையில் ஒரு மருத்துவராகவும் ,தற்பொழுது மூளை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாலும் யாரிடமாவது வித்தியாசமான குறிகுணங்கள் ஏற்பட்டால் அது எந்த நோயாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது. பிரபலங்களை வைத்து நோயை அடையாளப்படுத்துவது என்பது மலிவான விளமபரத்துக்காக அல்ல ,அந்த நோய் குறித்து விழிப்புணர்வினை அனைவரிடமும் எளிதாக கொண்டு செல்வதற்கான யுக்தியாகத் தான் நான் பயன் படுத்துகின்றேன்.மூளை தொடர்பான மிக முக்கிய நோயான Amyotropic lateral sclerosis தற்பொழுது Lou Gehrig என்ற பேஸ் பால் வீரரின் பெயருடனே அழைக்கப்படுகின்றது. எனவே பிரபலங்களின் பெயரை நோயுடன் தொடர்புபடுத்துவது என்பது இது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம்.
நிம்மர்ந்தத்தனமாக இருப்பதனால் பல விதமான தொந்தரவுகள் ஏற்படும், குறிப்பாக ஏதேனும் ஒரு முக்கிய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொது வேறு எதைப் பற்றியாவது மனம் சிந்தித்துக் கொண்டிருந்தால் செய்யும் வேலையினை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் போகும் .இது தான் சிம்புவுக்கு வாலு படத்தில் நடந்திருக்கும் என்று உறுதியாக நம்புகின்றேன். அந்த ஒரு படத்தில் அதிக கவனம் செலுத்தாமல் பல்வேறு விதமான நிகழ்வுகளில் மனதினை அலைபாய விட்டால் இது போன்று தாமதங்கள் நிகழும்.இதனை சோனியா அகர்வால் அவருடன் கோவில் படத்தில் நடித்த பொது கொடுத்த பேட்டியில் சொல்லி இருக்கின்றார். சிம்பு எப்பொழுதும் படப்பிடிப்பில் தனது அடுத்த படம் குறித்த சிந்தனையிலே இருப்பார். அப்படி இருப்பது தவறில்லை என்றாலும் , தற்பொழுது நடிக்கும் படத்தில் நம் பங்களிப்பில் மிகப் பெரிய ஈடுபாடு இல்லாததால் அது சிறப்பாக வராது.
சில பேர் தங்கள் வீட்டுக் கதவை பூட்டினார்களா இல்லையா மற்றும் வீட்டில் எரிவாயு அடுப்பினை நிறுத்தினோமோ ( off ) இல்லையோ என்ற சினத்னையோடு இருப்பதனை பார்த்திருப்பீர்கள் . இதற்கான காரணம் அந்த வேலையினை செய்யும் போது வேறு ஒரு சிந்தனையில் மூழ்கிவிடுவதால் அன்றைய நாளே பாழாகும் நிலை ஏற்படும்.மேலோட்டமாக பார்த்தால் இது போன்று இருப்பது பிரச்சனையான ஒரு பழக்கமாகத் தெரிந்தாலும் ஒரு முக்கிய அலுவலில் இருக்கும் போது நம் நிம்மார்ந்தத்தனம் நம் வாழ்க்கையே திசை மாற்றி விடும் , சிம்புக்கு தன் சினமா வாழ்க்கையில் நான்கு வருடம் காணாமல் போனது போன்ற விளைவுகள் உண்டாகும்.அது மட்டுமன்றி நம்மை சார்ந்தவர்க்கும் அது பாதிப்பினை உண்டாக்கும் அதற்கு மிக சரியான உதாரணம் டி.ராஜேந்தர் , தொலைக்கட்சிகளில் வாலு படம் வெளியாகாதது குறித்து அவர் எப்படி குமுறினார் என்பதனை தமிழகமே பார்த்தது. நாம் பார்க்காதது அவரின் தாயார் மற்றும் உடன் பிறந்தோர் மற்றும் அவரின் ரசிகர்கள் பட்ட துயரங்கள் .இவ்வாறு ஒரு தனி மனிதனின் அலை பாயும் மனது நேரடியாகவும் மறைமுகமாகவும் பலரையும் துன்பத்தில் ஆழ்த்தும்.
இதற்கான தீர்வு முழுக்க முழுக்க நம்மிடம் மட்டுமே உள்ளது.நம் அலைபாயும் மனதினை கட்டுக்குள் வைத்திருக்க உறுதி ஏற்க வேண்டும்.தனிமையில் அதிகம் இல்லாமல் பிறருடன் உரையாடிக் கொண்டே இருப்பின் இது போன்ற சிந்தனைகள் வருவதற்கான சாத்தியங்களை தவிர்க்க இயலும்.கண்டிப்பாக மருத்துவரிடம் செல்லும் அளவுக்கு மோசமான ஒன்றே அல்ல.அப்படி சென்றால் நம்மை நோயாளி ஆக்கி விடுவதோடு மட்டுமன்றி நம் பணத்திற்கும் வேட்டு வைத்து விடுவார்கள்.நம் அன்றாட வாழ்க்கையில் திட்டமிட்டு செய்வதன் மூலம் அதாவது ஒரு அட்டவனை ஏற்படுத்தி காலை முதல் இரவு தூங்கும் வரையிலான இடைப்பட்ட ஒவ்வொரு மணிக்குமான வேலையினை முன்பே திட்டமிட்டு வைத்திருந்தால் இது போன்ற நிம்மர்ந்தத்தனம் முற்றிலும் இருக்காது. இதனையும் மீறி இருப்பின் மிக எளிய யோகாசனப் பயற்சிகள் மனதினை கட்டுக்குள் வைத்திருக்கும். சிம்பு ஆன்மிகப் பயணம் சென்றது கூட இந்த காரணத்திற்காகத் தான் என்று நினைக்கின்றேன்.
நன்றி
செங்கதிரோன்
செங்கதிரோன்
No comments:
Post a Comment