வல்லபாய் படேல் சிலையை குஜராத்தில் அமைக்க முயலும் மோடியின் முயற்சிக்கும் , திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் அமைத்த கருணாநிதியின் செயலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே எண்ணுகின்றேன்.ஏனென்றால் குஜாரத் மட்டுமல்ல இந்தியாவிற்குமே அடையாளமாகத் திகழும் காந்தியின் புகழை மட்டுப்படுத்தவே படேலின் சிலையின் மிக பிரம்மாண்டமாக அமைத்து மோடி திருப்திபட்டுக்கொள்ள நினைக்கின்றார்.
முதலில் விவேகானதருக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு குறித்து பார்ப்போம் .தெரிந்த செய்தி அவர் கன்னியாகுமரியின் பாறையில் தவம் செய்ததும் அதனால் அங்கே அவருக்கு மணி மண்டபம் கட்டி விவேகானந்தர் பாறை ஒரு சுற்றுலா தளமாக விளங்கி வருவதும், தெரியாத செய்தி அவர் வரலாற்றில் இடம் பெற மிக முக்கியக் காரணமாக இருந்தது ஒரு தமிழரின் முயற்சி என்பதுதான்.
வரலாற்று சிறப்பு மிக்க அந்த உதவியினை செய்தது ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகாந்தருக்கு சிகாகோவில் நடைபெற்ற உலக ஆன்மீக மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைத்தாலும் பயண செலவுக்கு பணம் இல்லை. எனவே தமிழகம் வந்த அவர் பாஸ்கர சேதுபதியிடம் உதவி பெற்றே அமேரிக்கா சென்றார்.அது மட்டுமன்றி அமேரிக்கா சென்று திரும்பிய விவேகானந்தரை வரவேற்க சென்னை சென்ற பாஸ்கர சேதுபதி குதிரை பூட்டிய வண்டியில் அவைகளை அகற்றி விட்டு தானே விவேகானந்தரை வண்டியில் வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றார். அது மட்டுமன்றி விவகானந்தரை தன் பங்களாவில் தங்க வைத்தார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அந்த பங்களாவே தற்பொழுது விவேகாந்தர் இல்லம் என்று அழைக்கப்படுகின்றது . அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த உதவி செய்தவரின் பெயர் விவேகனந்தரின் விக்கிபீடியா பக்கத்தில் இடம் பெறவே இல்லை.
பாஸ்கர சேதுபதி |
வங்காளத்தில் பிறந்த ஒருவருக்கு தமிழன் செய்த இந்த உதவிக்கு கைமாறாக வங்காளம் ஏதேனும் அவரை சிறப்பிக்க முயற்சி எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. வந்தாரை வாழவைக்கும் நாம் சின்ன உதவி ஒருவன் செய்தாலும் பெரிய அளவில் அவர்களைப் பாராட்டுவதே தொழிலாகக் கொண்டுள்ளோம்.
எனவே தான் கருணாநிதி விவேகநாதர் பாறை கன்னியாகுமரியின் அடையாளமாக இருக்கக்கூடாது என்றி எண்ணியே மாபெரும் திருவள்ளுவர் சிலையினை அமைத்திருக்கக் கூடும்.பக்கத்தில் உள்ள கர்நாடகாவில் நம் திருவள்ளுவர் சிலையை திறக்க நாம் பட்ட பாடு தெரியும். நம் மாநிலத்தில் பிறந்த ஒருவரை யாரும் அவ்வளவு எளிதாக அங்கீகரிப்பதில்லை , ஆனால் நாமோ எந்த மனத்தடையுமன்றி அடுத்த மாநிலத்தவரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தோடு இருக்கின்றோம் .
இருப்பினும் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையினையும் தொடங்கி வைத்து கருணாநிதி எனபது தான் வரலாறு. திருவள்ளுவர் சிலையினை கன்னியாகுமரியில் அமைத்து மிக சரியான முடிவு , ஏனென்றால உலகப் பொது மறை படைத்த ஒருவரின் புகழ் பரவ அதுவே சரியான இடம்.
இன்றும் நாளையும் கன்னியாகுமரியின் அடையாள சின்னமாக திருவள்ளுவர் சிலையே திகழும்.
இத்தருணத்தில் கருணாநிதிக்கும் மோடிக்கும் உள்ள ஒற்றுமை குறித்து நான் எழுதிய முந்தையப் பதிவினையும் படித்துப் பாருங்கள்
No comments:
Post a Comment