ரோமியோ ஜூலியட் படத்தில் அடியே இவளே பாடலில் ஜெயம் ரவி அணிந்து வரும் அணிந்து வரும் டி-சர்ட்டில் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் தான் எமினம். இவ்வாறு அமெரிக்க சென்று திரும்பிய இளைஞர்களில் பெரும்பாலோனோரும் இந்த எமினம் படம் போட்ட டி-சர்ட்டை அணிந்து இருப்பர். என்னிடமும் ஒன்று உண்டு.
ஆப்பிரிக்கர்கள் அதிகம் ஆக்கிரமத்திருக்கும் ராப் உலகில் நுழைந்த இந்த வெள்ளைத் தோல் இளைஞர் மிகப் பெரும் உச்சத்தினை ராப் இசையில் அடைந்தார்.மிச்சிகனில் பிறந்த எமினமின் உண்மையானப் பெயர் Marshall Bruce Mathers III. 1996ல் ஆரம்பித்த இசைப் பயணம் இன்றுவரைக் கொடிக் கட்டிப் பறக்கின்றது.
இவருடைய slim shady என்ற வார்த்தையும் , கையின் நடு விரலைக் காண்பிப்பது என்ற இரண்டும் இவருடைய தனி அடையாளமாக இசை ரசிகர்கள்.இது போன்ற டி -சர்ட் அணிவது, அவர் போல நடந்து கொள்வது மட்டுமல்லாமல் அவருடைய பாடல்களையும் கேட்டுக் கொண்டிருப்பர் .
அப்படி என்ன சிறப்பு என்ன இருக்கின்றது அவருடைய பாடல்களில் ? I am slim shady ,without me , stan ,my name is ,the way I am போன்ற பல பிரபல பாடல்கள் உள்ளன.அவரே எழுதும் இந்த பாடல் வரிகளில் உள்ள அர்த்தங்கள் தான் இளைஞர்களை அதிகம் ஈர்க்கின்றன .
stan என்ற பாடல் ஒரு ரசிகனுக்கும் இசைக்கலைஞருக்கும் இடையே நடக்கும் கடித பரிமாற்றம் குறித்த் பாடல் தான் மிக நெகிழ்ச்சியான ஒன்று. தன கடிதத்திற்கு பதில் எழுதாதால் கோபமடைந்த ரசிகன் தன கர்ப்ப மனைவியுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்யும் அளவுக்கு செல்வவ்ர். அந்தப் பாடலின் காணொளியின் உங்கள் குழாய் இணைப்பு
ஒரு பாடலில் தான் கஞ்சா புகைப்பதை விட தன் அம்மா புகைப்பார் என்று ஒரு பாடலில் வரி அமைத்து மிக சர்ச்சைக்குள்ளானார். பிறகு அவரின் அம்மா வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றார்.
அவருடைய மிகப் பிரபலமானப் பாடலான slim shady பாடலின் காணொளியைக் காணுங்கள். எமினம் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடகராக இருப்பார் என்று நம்புகின்றேன் .
நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment