ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் கனெக்ஷன் நிகழ்ச்சி நண்டு ஜெகன் அவர்களால் தொகுத்து வழங்கப்படுகின்றது. இளம் சமூகத்தினர் மற்றும் குழந்தைகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்தப் பதிவினை நண்பர் பிரபா ஒயின் ஷாப் அவர்கள் நிறைய எழுதியுள்ளார்.
நான் மிகவும் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று.மொத்தம் நான்கு சுற்றுகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் இரண்டு சுற்றுகள் திரையில் காண்பிக்கப்படும் படங்களை இணைத்து வார்த்தைகளை பதில் அளிக்க வேண்டும். மூன்றாவது சுற்று முழுக்க முழுக்க சினிமா சம்பத்தப்பட்ட சுற்று. பாடல்கள் மற்றும் படங்களின் தலைப்பைக் கண்டு பிடிக்க வேண்டும். இறுதி சுற்று 50 மதிப்பெண்கள் ஒரு படத்தின் பெயர் காண்பிக்கப்படும் ஐந்துப் படங்களிலிருந்து கண்டுபிடிக்க வேண்டும். நிகழ்ச்சி மிக மிக விறுவிறுப்பாக இருக்கும்.
இப்பொழுது சர்ச்சைக்கு வருவோம். ஜெகன் இந்த நிகழ்ச்சியில் அதிகம் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவது உண்மைதான் , அதுவும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களின் உடை , சிரிப்பு ஆகியவற்றை குறித்து அதிகம் விமர்சனம் செய்வார், அது சில சமயங்களில் எல்லை மீறய ஒன்றாக இருக்கும். இந்த தவறை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அந்த நிர்வாகத்திற்கு அதிகம் உண்டு.
ஆனால் அதிமுக அடிமைகள் முகப்புத்தகத்தில் கடந்த வார கனெக்ஷன் நிகழ்ச்சியில் சர் சிவி ராமன் அவர்களை அவமதித்து விட்டதாக அவதூறு கிளப்பி வருகின்றனர்.இந்த அவதூறின் பின்னணி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வெள்ள நிவாரணத்திபோது அதிமுகாரர்கள் ஸ்டிக்கர் ஒட்டியதை கலாய்த்தது தான்.அந்த ஆத்திரத்தினைதான் சர் சிவி ராமன் மேல் இவர்களுக்கு திடீர் பாசம் பொங்கி அவரை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி பொங்கல் வைக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை நீங்களும் இந்த இணைப்பில் கண்டு எது உண்மை என்று முடிவெடுங்கள்.
நன்றி
செங்கதிரோன்
1 comment:
இவை மட்டுமின்றி இதில் பங்குபெறும் பெண்களை வாடி,போடி, வா, போ என ஒருமையில் அழைப்பது கொடுமை. இதே போன்றுதான் நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் ஈரோடு மகேஷ். இவர் தமிழ் மேல்நிலை பட்டதாரி என்பது இதிலும் கொடுமை. இதே போல பெண்களும் இவர்களை வாடா, போடா என அழைத்தால் ஏற்றுக்கொள்வார்களா? முறையே இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் சூர மொக்கை, மொக்கை என வரிசைப்படுத்தலாம்.
அதிமுக அடிமைகளை எதிர்க்கிறோம் என்பதிற்காக இந்த மொக்கைகளுக்கு நீங்கள் பில்டப் கொடுக்கலாமா? :)
Post a Comment