Wednesday, April 20, 2016

வயாக்ராவின் வாழ்க்கை வரலாறு:

 மருத்துவ உலகில் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் ஒன்றாக இன்றளவும் வயாக்ரா  திகழ்கின்றது.அமெரிக்காவை சேர்ந்த நிக்கோலஸ் தெர்ரெட் (Dr .Nicholas  Terrett ) என்பவரும் அவருடைய் உதவியாளர்களும் 1991ம் ஆண்டு சில்டனபில் (Sildenafil )ன்னும் மருந்தினை உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலிக்காக கண்டு பிடித்தனர்.



Clinical Trails என்று சொல்லப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் போது நோயாளிகள் தங்களுக்கு விறைப்புதன்மை அதிகம் நிகழ்வதாகக் கூறினர். இது மட்டுமன்றி அமரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உள்ள இருதய சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்தினைப் பரிசோதனை முறையில் வழங்கிய போது அங்கு பணிபுரிந்த நர்ஸ்களிடம் (Nurse )நோயாளிகள் வழக்கத்துக்கு மரறாக அவர்களிடம் ஆசை வார்த்தை கூறுவது ,வித்தியாசமாகப் பார்ப்பது என்று நடத்து கொள்ள , அவர்கள் மருத்துவரிடம் முறையிட்டனர்.

அதன் பின்னர்தான் முறியாக இம்மருந்தினை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ஆண்களிடம் பரிசோதனை செய்ததில் இது ரத்த ஓட்டத்தினை அதிகப்படுத்தி விறைப்புத்தனமையை ஊக்குவிக்கின்றது என்று கண்டறிந்தனர். இறுதியாக அமெரிக்கவின் FDA (Food and  drug Administration) 19918ம் ஆண்டு இம்மருந்தினை அதிகாரப்பூர்வமாக ஆண்களின் பாலியல் பிரச்னைக்கு தகுந்த ஒன்றாக அங்கீகாரம் அளித்தது.

விறைப்புத்தன்மை குறையக் காரணம் என்ன?

முதிர் வயது முக்கியக் காரணமாக இருந்தாலும் நிரிழிவு , உடல் பருமன், அதிக கொழுப்பு சேர்ந்திருத்தல் ,உயர் ரத்த அழுத்தம் , அதிகமானக் குடிப்பழக்கம்,மன அழுத்தம் போன்றவை விறைப்புத்தனமியினைக் குறைக்க செய்யும். 2000ம் ஆண்டுக்கு முன்பு வரை மருத்துவ உலகில் எந்த  ஒரு சக்தி வாய்ந்த மருந்தும் விறைபுத்தன்மையினை உண்டாக்க வல்லவையாக இல்லை. வயாக்ராவின் வருகைக்குப் பின் 80% அதிகமாகவே பலனளித்தது.

பயன்படுத்தும் முறை:
சின்ன நீல மாத்திரை என்று செல்லமாக அழைக்கப்படும் இம்மருந்தானது கலவி அல்லது உறவுக்கு ஒன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.மருத்துவரின் ஆலோசனை பெற்று மட்டுமே சாப்பிட வேண்டும்.

இயற்கையாக நம் உடலில் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் முறைகள்:

நிறையப் பழவைகள் மற்றும் தானியங்கள் குறிப்பாக வாழைப்பழம் , தர்பூசணி ,மாதுளை ,ஆவகடோ போன்றவைரத்த ஓட்டம் அதிகரிக்க செய்யும்.

மிக முக்கியமாக தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதானால் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் சரிவரப் பாயும்.(மித வேக நடை பயற்சி , ஓட்டம் நன்கு பலனளிக்கக் கூடியவை)


வயாக்ராவின் வியத்தகு வரலாற்றின் அறிந்த்ருப்பீர்கள்.

நன்றி 
செங்கதிரோன் 

No comments: