என்னது ஒரு தமிழ்ப் பெண் ஆங்கில் இசை உலகிலா என்ற உங்களின் ஆச்சர்யம் புரிந்து கொள்ள முடிகின்றது ,ஆமாம் அது தான் உண்மை. மாதங்கி மாயா அருள்பிரகாசம் என்பதன் சுருக்கம் தான் M.I.A , விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான அருள்பிரகாசத்தின் மகளான மாயா , நம்ம சென்னையில் சில காலம் வாழ்ந்து பின்னர் லண்டனில் தாயுடன் குடியேறினார்.
அங்கே தொடங்கிய இசைப்பயணம் உலகம் கவனிக்கும் ஒரு பாடகியாக உயர்ந்தார். இவரின் இசைத்திறமை அறிந்து slumdog படத்தில் இசைப்புயல் இவரைப் பயன்படுத்திக் கொண்டார். O saya எனற பாடல் மாயா பாடியது தான். இந்தப் பாட்டிற்கான விருது விழாவில் ரகுமான் ,மாயாவுக்கு நன்றி தெரிவித்தார்.
இவரின் பாடல்கள் மக்களின் பிரச்சனகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருக்கும். ஈழப்பிரச்சனை , சவூதி அரேபியாவில் உள்ள பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கான அனுமதி குறித்து என பல பாடல்கள் அந்தப் பிரச்சனைகள் குறித்து அமைக்கப்பட்டிருக்கும்.
இவரின் பாடல்கள் பல உயரிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன . நம் தமிழச்சியின் பாடல்களைஉங்கள் குழாயில் கண்டு கேட்டு (youtube )மகிழுங்கள் .
1. Bad girls
2.Paper planes
நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment