பரந்து விரிந்து இருக்கும் இசை உலகில் இயங்கும் தேவதைகள் , பொறுக்கிகளை அடுத்து ரோமியோக்கள் பற்றியும் சில தகவல்களை அறிந்து கொள்ளலாம். அழகிய இசை தேவதைகளைப் போலவே இவர்களும் மிக அழகானவர்களாக மட்டுமல்லாமல் மிக மிக வசீகரமானக் குரல் வளத்தைக் கொண்டவர்கள்.
கார்த்திக் |
நம்மூரிலும் இது போன்ற பல அழகான பாடகர்கள் இருந்தாலும் அவர்கள் திரைக்குப் பின்னே இயங்குவதானால் அதிகம் கவனிக்கப்பட்டதில்லை. ஆனால் வெளிநாடுகளில் தனிப் பாடகர்களாகவும் குழுவாகவும் இயங்கும் இவர்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கின்றது.
மைக்கேல் ஜாக்சனில் ஆரம்பித்து ஜஸ்டின் டிம்பேர்லக் என பலரும் இந்த ரோமியோக்கள் வகையில் அடங்குவர். இருப்பினும் நான் இந்த வரிசையில் அதிகம் அறியப்படாத ஆனால் மிக திறமை வாய்ந்த கலைஞர்களை குறித்து தனித்தனி பதிவாக எழுத உள்ளேன்.
மைக்கேல் ஜாக்சன் |
இந்த ரோமியாக்களில் சிலர் நடனத் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதானால் கூடுதல் சிறப்பு ,ஏனென்றால் குழந்தைகளையும் கவர்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.
நம் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த MK தியாகராஜ பாகவதர் நடிகர் மட்டுமன்றி சிறந்த பாடகரும் கூட , அவரைப் போலவே ஆங்கில இசை உலகைக் கலக்கிக் கொண்டிருந்த ஒருவர் எல்விஸ். அவர் இறந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் அவரின் இசை போற்றப்பட்டு வருகின்றது.
எல்விஸ் |
எல்விஸின் மிகச் சிறந்த பாடலான Always on my mind பாடலைக் கேட்டுப் பாருங்கள் . பிறகு புரியும் ஏன் இன்றும் அவரின் இசை கொண்டாடப்பட்டு வருகிற்னறது என தெளிவாகும்.
நன்றி
செங்கதிரோன்
1 comment:
வாவ்
Post a Comment