Friday, April 21, 2017

Kon -Tiki : வரலாற்றை நிரூபிக்க நீண்ட படகு பயணம்.


நார்வேவை சார்ந்த எழுத்தாளர் தோர் பாலினீசியா என்ற தீவில் வாழும்  மக்கள் பெரு நாட்டில்  இருந்து வந்தார்கள் என்று நம்புகின்றார். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் அவர்கள் ஆசியாவை சார்ந்தவர்கள் என்று உறுதியாக நம்புகின்றார்.

தூரோ பாலினீசியாவில் வாழும் மக்களின் கலாச்சாரம் பெரு நாட்டோடு ஒத்துப் போவதால் அவர்கள் ஆசியாவை சார்ந்தவர்கள் இல்லை என்று அனைவருக்கும் எடுத்துரைக்கின்றார். இதனை நிரூபிக்க அரசாங்கத்திடம் உதவி கேட்கின்றார்.
படத்தில் வரும் சுறா மீனுடனான சண்டைக் காட்சி 


 அதாவது பெரு நாட்டிலிருந்து முன்னோர்கள் சென்ற பாதையில் பாலினீசியாவை அடைவது தான் அவரது திட்டம். ஆனால் அரசாங்கமோ அவரை முட்டாளாக பார்க்கின்றது. அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. எனவே அவர் தன நண்பர்களின் உதவியுடன் 6500 கிலோமீட்டர் நீளமுள்ள கடல் வழி பாதையை கண்டுபிடித்து பல இன்னல்களுக்கு பிறகு அங்கு சென்றடைகின்றார். அவரின் இந்தப்பயணம் படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தின் பெயர்  தான்  Kon -Tiki .  Kon -Tiki  எனப்து இன்கா  என்ற இனக்குழுமத்தின் சூரியக் கடவுளின் பெயர். நார்வே அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் ஆஸ்கார் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான போட்டியில் தேர்வு செய்யப்பட்டது. வரலாறு மற்றும் சாகச விரும்பிகளாக இருப்பின்  இந்தப் படத்தினை பாருங்கள் 






நன்றி 
செங்கதிரோன் 

Thursday, April 20, 2017

தனுஷ் கலைஞன் TO படைப்பாளி:


பவர் பாண்டி படம் தனுஷ் நடிகரிலிந்து இயக்குனராக உருவாகியிருக்கும் படம். தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை சென்னையில் உள்ள சங்கம் தீயேட்டரில் பார்த்து விட்டு நண்பர்களுடன் ஆட்டோவில் வந்து கொண்டுயிருந்தேன். அப்போது படம் பற்றி பேசி கொண்டிருதோம். அனைவரும்  தனுஷின் தோற்றம் பற்றியும் நடிப்பு பற்றியும் விமர்சனம் செய்து கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் நான் மட்டும் அவர்களிடம் உறுதியாக சொன்னேன் தனுஷிற்கு சினிமாவில் நல்ல எதிர் காலம் காத்துக்கொண்டிருக்கிறது என்று. அப்போது ஒருவரை தோற்றத்தை வைத்து கணிப்பதைவிட திறமையை வைத்து கணிப்பதே சாலச்சிறந்தது என்று என்னுடைய உள்மனதிற்கு தோன்றியது. அன்று எனக்கு தோன்றியது இன்று காலப்போக்கில் நடந்தே விட்டது. கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை நடித்து விட்டார். நாட்டின் உயரிய விருதான தேசிய விருதையும் நடிப்புக்காக பெற்றுவிட்டார்.


   நடிப்பில் முத்திரை பதித்து விட்ட இவர் பின்னர் பாடலாசிரியராக, பாடகராக மற்றும் இசையமைப்பாளராக வேறு பல அவதாரம் எடுத்தார். அது மட்டும் இல்லாமல் சில புதிய நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளரை தமிழ் சினிமா உலகிற்கு உருவாக்கி அறிமுகம் செய்து வைத்தார்.
முத்தாய்ப்பாக இயக்குனர் என்ற படைப்பாளி அவதாரத்தையும் இறுதியாக எடுத்துவிட்டார். நான் தனுஷ் இயக்கப்போகிறார் என்ற செய்தி வந்தவுடன் செல்வராகவன் பாணியில் தான் படம் இருக்கும் என எண்ணினேன். ஆனால் அதற்கு மாறாக முதியவர்களின் மனதில் எஞ்சியிருக்கும் காதலை வெளிப்படுத்தும் படத்தை எடுப்பார் என்று நினைக்கவில்லை.


ராஜ்கிரன்: ஒரு சண்டை பயிற்சியாளராக வரும் ராஜ்கிரணுக்கு ஒரு சண்டை பயிற்சியாளருக்கு உண்டான முரட்டுத்தனம் இல்லாமல் அவர் ஏதோ எல்லோருக்கும் ஆசீர்வாதம் அளிக்கும் பாதிரியார் போல் பார்க்கத் தோன்றுகின்றது. அதே நேரத்தில் ரேவதியுடன சந்திப்பின் போது ஒரு டீன் ஏஜ் இளைஞனின் மனதினை மிக தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கின்றார். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கான சிறப்பான பங்கினை ஆற்றியிருந்தார்கள். 
கலைஞனிலிருந்து படைப்பாளியாக மாறியிருக்கிம் தனுஷிற்கு வாழ்த்துக்கள்..!!


ஏனோ தனுஷ் வெற்றியடையும் போது நானே அந்த வெற்றியை அடைந்தது போன்ற உணர்வு எனக்கு மட்டும் தான் ஏற்படுகின்றதா என தெரியவில்லை.

படம் குறித்த சிறிய வீடியோ  விமர்சனம் 


நன்றி 
செங்கதிரோன் 


Tuesday, April 18, 2017

நீயா நானா பொய் பரப்புரைகள்;

அமெரிக்காவில் 3% சதம் மட்டுமே விவசாயம் செய்கின்றார்கள் . இது போன்ற கருத்தை பிரேம் என்ற ஒருவர்  தெரிவிக்கின்றார். இது எல்லோருக்கும் ஆச்சரியமும் வியப்பும் அளிக்கக் கூடிய கருத்தாக இருக்கும்.ஆனால் வருடத்தில் ஆறு மாதம் குளிர் நிலவக்கூடிய பிரதேசத்தில் 3%சதம் தான் விவசாயம் நடக்கும் . வருடம் முழுதும் விவசாயம் செய்வதற்கேற்ற நிலபரப்பினை வைத்துள்ளோம், அப்படியிருக்க நாம் ஏன் அமெரிக்கா போல. இருக்க வேண்டும்? 

அறிவாளி பிரேமின் கருத்தினையும், அதற்கான என் எதிர்வினையையும் கீழே உள்ள காணொளியில் பாருங்கள் .



விவசாயம் காப்போம்.

நன்றி
செங்கதிரோன் 

ஐந்து முதலைகளின் கதை: புத்தக மதிப்புரை

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்ப  வெளிநாட்டில் தொழில் செய்ய போனவர்களை  பற்றிய கதை.  

சீனர்கள் ஆண்மை விருத்திக்காக எதையும் சாப்பிடுவார்கள். அப்படி அவர்கள் விரும்பி சாப்பிடுவது தான் வெள்ளை அட்டை சூப். நம்ம ஊரில் கிடைக்கும் கருப்பு அட்டை போன்று தைமூரில் வெள்ளை அட்டை வெகுவாக கிடைக்கும். அதனை கொண்டு சூப் தயாரித்து விற்பனை செய்யலாம் வியாபாரம் பண்ணலாம்  என்று எண்ணி அவர்கள் வருகின்றனர். அப்படி வந்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்த ஊரில் வெள்ளை அட்டை மிகவும் குறைவாகவே இருந்தது மற்றும் அந்த ஊர் மிகவும் செல்வச் செழிப்பான நாடாக இல்லை. மிகவும் வறுமையுள்ள நாடாகவே தென்பற்றது. இதனை அறிந்த அவர்கள் சில நாட்கள் அங்கேயே தங்கி அடுத்ததை பற்றி சிந்திக்கின்றர். அவர்கள் அங்கே தங்கியிருந்த வேளையில் அங்கே தொழில் செய்து கொண்டிருந்த இந்திய தொழிலதிபர்களை சந்திக்கின்றனர். இங்கிருந்து சென்றவர்களுக்கு அங்கே உள்ள தொழிலதிபர்களுக்கும் நடக்கும் நட்பு, பகை மற்றும் பல ஸ்வாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பே இந்த கதை.


வணிகத்தில் ஈடுபட்டிருப்போரும் வணிகத்தில்  ஈடுபடவிருப்போருக்கும் இந்த புத்தகம் மிகவும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக திகழும். வணிகத்தில் ஈடுபட்டிருப்போர் பல இடங்களில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நேரடியாக படித்துப்பார்த்து போல் உணர்வார்கள். அவர்களால் பல சந்தர்ப்பங்களில் தங்களை பொருத்திப்பார்க்க முடியும். எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதிய இந்த புத்தகம்  உயிர்மை  பதிப்பகத்தில்  கிடைக்கும்.

விலை ரூ.150.

நன்றி 
செங்கதிரோன் 



Friday, April 7, 2017

உலக சித்த மருத்துவ தினம் : சித்த மருத்துவத்தால் அனைத்து நோய்களும் குணமாகுமா ?

நோய்களின் வகைகள் மற்றும் அவைகளின் குறிகுணகள் குறித்தும் மிக தெளிவாக விளக்கியவர் யூகி முனி. உடம்பில் உள்ள நோய்களின் எண்ணைக்கையின் மொத்தம் 4448 என்று அறுதியிட்டு கூறியிருக்கின்றார்.எயிட்ஸ் நோய்க்குமான சிகிச்சையினை (முழுமையாக தீர்க்கக் கூடிய அளவுக்கு அல்ல ) சித்த மருத்துவத்தில் சாத்தியப்படுத்தியதற்கும் யூகிமுனியே காரணமாக அமைந்திருக்கின்றார் . ஏனென்றால் அவர் கூறிய வெட்டமேகம் என்ற நோயின் குறிகுணங்களும் எயிட்ஸ் நோயின் குறிகுணங்களும் ஒத்துப் போவதால் சித்த மருத்துவத்தில் அதற்கான சிக்கிச்சையினை வழங்கப்பட்டது .

அனைத்து நோய்களையும் தீர்க்கக் கூடிய மருத்துவ முறை ஒன்று உலகிலேயே இல்லை. அலோபதி மருத்துவர்கள் புற்று நோய்க்கு தீர்வு இல்லை என்று ஒப்புக் கொள்கின்றனர். நவீன கண்டுபிடிப்புகள் இன்றும் ஏட்டளவில் மட்டும் உள்ளது.

சித்தர்களும் எல்லா நோய்களையும் தீர்க்க முடியுமா  என்பதற்கற்கான தெளிவான விளக்கத்தினை சொல்லி இருக்கின்றனர் . அது என்ன என்பதனை காணொளியில் காணுங்கள்.




நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, April 5, 2017

சித்தர்கள் மந்திரவாதிகளா :-உலக சித்த மருத்துவ தினம்

சித்தர்கள் குறித்த பல்வேறு கற்பனையான கட்டுக்கதைகள் உள்ளன. மந்திரவாதிகள் பலரும் சித்தர்கள் பெயரினை வைத்துக் கொண்டு மாந்த்ரீகம் ,பில்லி ,சூனியம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.  சித்தர்கள் அட்டமா சித்திகள் போன்ற சக்திகள் தவ வலிமையினால் பெற்றவை .  அது குறித்த ஒரு தெளிவான ஒரு காணொளி தான் இது . பர்த்து விட்டு  உங்கள் கருத்தினைக் கூறுங்கள்.



நன்றி 
செங்கதிரோன்