அதிமுகவில் நாடகம் முடியும் தருவாயில் இருக்கையில் , இந்த நாடகம் எப்படி தொடங்கியது என்று பின்னோக்கி பார்ப்போம் . சசிகலா குடும்பத்தின் செல்லப்பிள்ளையான ஓபிஎஸ் , ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வரான பின்னர் அவர் காட்டிய பணிவு மற்றும் பயபக்தியில் ஜெயலலிதாவுக்கும் பிடித்தமானவராக மாறிப்போனார்.
பணிவு ஒரு பக்கம் பணம் சேர்த்தல் மறுபக்கம் என்று ஓபிஎஸ் தனி ராஜாங்கம் நடத்துவதை மிக தாமதமாகத்தான் சசிகலா கண்டுகொண்டார் . எனவே தான் வீட்டிலேயே அடைத்து வைத்து அத்தனை பணத்தினையும் பறிமுதல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட , ஓபிஎஸ் பாஜகவிடம் அடைக்கலம் புகுந்தார். சசிகலா வேறு வழியின்றி ஓபிஎஸ்ஸை மத்திய அரசின் மிரட்டலுக்காக முதல்வர் பதவியினை அவருக்கு வழங்கினார்.
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை பணம், பதவி மட்டுமே பிரதானம் , இதனால் தான் பாஜகவின் முதல்வர் போலவே செய்லபடத் தொடங்கினார் . ஆர்ஸ்ஸ் பேரணி அனுமதி, சட்டசபையில் முஸ்லிலிம்கள் ஜல்லிகட்டுப் போராட்டத்தில் புகுந்து கலவரம் செய்ய முயற்சித்தார்கள் என்ற காவி அரசியலை தமிழகத்திற்குள் நுழைய எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்தார். பாஜகவும் ஆளில்லாத வீட்டில் அழிச்சாட்டியம் செய்யும் எலி போல தங்கள் கொள்கைகளை மெதுவாக அதிமுக மூலம் செயல்படுத்த துவங்கினர் . அவர்களின் கட்சிக்காரர்களும் எதோ தங்கள் ஆட்சி நடப்பது போல் ஒரு மாய எண்ணத்தில் வலம் வரத் துவங்கினர்.
இப்பொழுதும் தாமதமாக இதனை கண்டுகொண்ட சசிகலா ஓபிஎஸ்ஸை பதவி விலக வற்புறுத்துகிறார். மத்திய அரசின் ஆதரவால் இதனை மறுக்க , அச்சமயத்தில் தினகரன் தனது ஆட்பலம் மூலம் ஓபிஎஸ்சினை மிரட்டி பதவி விலகி செய்தார் (மிக மிக மோசமான இந்த சம்பவம் வெளியில் வரவில்லை )
இந்த சமபவம் தான் ஓபிஎஸ்ஸினை முழுமையாக சசிகலாவிடம் இருந்து விலக்க வைத்தது. அன்று தொடங்கிய பகைதான் இன்று வரை ஓபிஎஸ் கடுமையாக சசிகலாவினை எதிர்க்க காரணமாக இருக்கின்றது .
இருப்பினும் , சசிகலா ஓபிஎஸ்ஸினை தொடர்ந்து முதல்வராக இருக்க அனுமதித்து இருந்தால் மொத்த தலைமை செயலகம் பிஜேபியின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும். அவர் ஊழல்வாதி தான் , அதே நேரத்தில் காவிக்கூட்டம் தமிழகத்தினை கபளீகரம் செய்ய காத்திருந்தததை தடுத்து நிறுத்தினார் . அதனை அவர் தற்காப்பிற்கு செய்திருந்தாலும் தமிழகம் நன்மை அடைந்திருக்கின்றது .
இவை அனைத்தையும் மீறி மிக முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது , ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த பாஜக தலைமை ஏன் அவரின் உற்ற தோழி சசிகலாவை மட்டும் கடுமையாக எதிர்க்கின்றது? பதில் ஜெயந்திரரிடம் தான் இருக்கின்றது . தீபாவளி அன்று ஒரு இந்து மடாதிபதியை கைது செய்ததனை இன்றும் பிஜேபிக்கு மறக்க முடியாத காயமாக இருக்கின்றது. அதற்கு மருந்திடும் விதமாகத் தான் சசிகலாவினை முதல்வராகாமல் தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டார் .
தமிழக அரசியலில் சசிகலா பல்வேறு தீய செயல்களுக்கு பொறுப்பானவராக பார்க்கப்படுகையில் காவிக்கு கட்டம் கட்டிய இந்த ஒரு நல்ல செய்கையினை அவர் செய்தார் என்று நான் எண்ணுகின்றேன் .இதனால்தானோ என்னவோ படித்த மேதாவிகள் கூட சசிகலாவினை 'திருட்டுப்பொறுக்கி ' என்றழைத்து தங்கள் ஆற்றாமையினை வெளிப்படுத்துகின்றனர்.
நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment