கபாலி படம் என்றாலே நினைவுக்கு வரக்கூடிய முக்கிய அம்சம் நெருப்புடா பாடல் . அந்தப்பாடல் எப்படி உருவானது என்ற ரகசியம் வெளிவந்திருக்கின்றது, இந்தப் பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜா . இவர் பன்முகத்திறைமை கொண்டவர் , அவற்றில் ஒன்று தான் நகைச்சுவை திறமை. கபாலி படத்திற்கான அறிமுகப்பாடலை எழுத ரஞ்சித் அவர்கள் அருண்ராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் .
எவருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு , அதுவும் இதுவரை வைரமுத்து மட்டுமே செய்து வந்த அந்தப் பணி அருண்ராஜாவுக்குக் கிடைக்கின்றது . திருவிளையாடல் நாகேஷ் போல 'சொக்கா சொக்கா ' என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார் . அப்பொழுது மனதை அமைதிப்படுத்த சுட்டி டிவியில் காமெடி பார்த்துக் கொண்டிருந்தார் . அப்பொழுது தான் அந்த வரலாற்று சம்பவம் நடந்தது. அருண் விஜய் நடித்த மாஞ்சா வேலு படத்தின் காமெடி காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தது . அதில் சந்தானத்திடம் , மனோகர் நான் "நெருப்புடா" என்று சவால் விடுவார். அருண்ராஜா துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டார் ,புடிச்சிட்டேன் , புடிச்சிட்டேன் . மாஞ்சா வேலு வந்த ஆண்டு 2010. கபாலி வந்த ஆண்டு 2015. கூட்டி கழிச்சசி பார்த்தீங்கன்னா கணக்கு சரியா வரும் . கீழே அந்த படத்தின் காமெடி காட்சி பார்த்தல் நான் சொன்னது உண்மை என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் .
நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment