திருமணத்திற்கு சாதி மதத்தை விட அதிகம் தடையாக இருந்த ஒரு சக்தி செவ்வாய் தோஷம் . செவ்வாய் தோஷம் உள்ள ஆண் பெண்ணுக்கு திருமணம் நடப்பது என்பது மிக மிக கடினமாக இருந்தது . செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணின் பெற்றோரை சமூகமே பரிதாபமாக பார்த்தது.
கவுண்டமணி , சத்யராஜ் கூட்டணியில் வெளிவந்த நடிகன் படத்திலும் இந்த செவ்வாய் தோஷம் முக்கிய பங்கு வகித்தது. வயதான தோற்றம் கொண்ட நடிப்பில் அன்றும் இன்றும் அசத்திக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் சத்யராஜ் மட்டுமே , விஜயகாந்த் , கமல் ,ரஜினி போன்றோர் வயதான தோற்றத்தில் நடித்திருந்தாலும் , சத்யராஜுக்கு மட்டுமே கனகச்சிதமாகப் பொருந்தியது.
நடிகன் படத்தில் கவுண்டமணி நகைச்சுவை காட்சிகளை விளக்கவே தேவையில்லை . படம் பார்த்த எல்லோருக்கும் மறக்க முடியாத வசனம் புளி சாதத்தில் முட்டையை வைத்து பிரயாணின்னு ஏமாத்தறான்யா என்பார் . ஆனால் இந்த படத்தில் கவுண்டமணி செய்த ஒரு விஷயத்தை ,சந்தானம் அப்படியே செய்திருக்கின்றார் . அது என்னவென்றால் சிவா மனசுல சக்தி என்ற படத்தில் ஒரு காட்சியில் சந்தானம் தொப்பி , கண்ணாடி , சட்டை போன்றவற்றில் விலைப்பட்டியலுடன் (price tage) அணிந்திருப்பார் . இதே போன்றே கவுண்டமணியும் நடிகன் படத்தில் ஒரு காட்சியில் வருவார் . சந்தானம் , நடிகன் படத்தில் இருந்து inspire ஆகி சிவா மனசுல சக்தி படத்தில் அதே போல செய்தாரா என்பது அந்தப் படத்தை இயக்கிய ராஜேஷிடம் தான் கேட்க வேண்டும் .
இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய நபர் , வெண்ணிற ஆடை மூர்த்தி . எனக்குத் தெரிந்து அவர் double meaning இல்லாமல் நகைச்சுவை செய்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன் . அவருக்கு ஒரே வசம் தான் ஐஸ்லேண்ட் எஸ்ட்டேட் எங்கே எங்கே என்று படம் நெடுக்க கேட்டுக் கொண்டிருப்பார்.
மனோரமா இளமை முதுமை என்று இரண்டு தோற்றத்திலும் அசத்தி எடுத்து இருப்பார். கமல் கோவை சரளா ஜோடி எவ்வளவு பொருத்தமாக இருந்ததோ அதே அளவுக்கு வயதான சத்தியராஜ் , மனோரமா ஜோடிப்பொருத்தம் சிறப்பாக அமைந்திருந்தது.
படத்தில் இவர்கள் இருவருக்கும் ஒன்றாக இருப்பது செவ்வாய் தோஷம் தான் , அதனால் திருமணம் ஆகாமலே இருந்ததாக மனோரமா குறிப்பிடுவார் .
திருமணங்கள் தற்பொழுது செவ்வாய் தோஷத்தினையெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளமல் , கல்விதகுதி ,பணம் இவை இரண்டை மட்டுமே பிரதானமாக வைத்து நிச்சியிக்கப்படுகின்றது .
நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment