குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள் எப்பதான் இந்த விண் டர் முடியும் என்று விழிமேல் விழி வைத்து காத்திருப்ப்பார்கள். விண்டர் என்றாலே வெறுமே என்பதுதான் அதன் உண்மையான அர்த்தம். ஏனென்றால் நம்ம சுற்றி இலைகளற்ற மரங்கள் , பனியால் சூழப்பட்ட புல் வெளிகள் என்று பச்சை நிறத்தினை எங்குமே பார்க்க முடியாது. வீட்டை விட்டு எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஒன்றுக்கு நூறு முறை யோசிக்கும் அளவுக்கு வெளியில் பனிப்பொழிவு இருக்கும் அதனால் வேலைக்கு செல்வது மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க செல்வதைத்தவிர வேறொரு திட்டமும் இருக்காது.
இங்கேயும் பணம் படைத்தவர்களின் வாழ்வு வித்தியாசமானது. பெரும்பாலானவர்கள் விண்டரில் அருகாமையில் உள்ள நாடுகளுக்கு சென்று விடுவார்கள். கனடாவில் உள்ளவர்கள் அமெரிக்காவில் உள்ள வெப்ப பகுதிக்கு வருடா வருடம் சென்றுவிடுவதுண்டு. மேலும் மெக்சிகோ, கியூபா , கரீபியன் போன்ற நாடுகளில் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் தஞ்சம் அடைவார்கள்.
இந்த நான்கு மாத விண்டரை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இதனால் இந்த விண்டர் எப்போது முடியும் என்று தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வமாக இருக்கும். இதனை அளவிட பார்மபரியமான ஒரு பழக்கம் கனடாவில் உண்டு . Groundhog என்று அழைக்கப்படும் பெருச்சாளி போன்று தோற்றமளிக்கும் விலங்கு (அணில் குடும்பம் சார்ந்த விலங்கு) விண்டரின் போது வெளியே வரும் , அப்போது அதன் நிழல் தெரிந்தால் இன்னும் விண்டர் முடியவில்லை என்றெண்ணி பொந்துக்குள் சென்று விடும் , நிழல் தெரியவில்ல என்றால் வசந்தகாலம் விரைவாக வந்து விட்டதாக கருதி இரை தேட வெளிய வரும். (எளிமையாக சொல்லவேண்டுமென்றால் பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு குளிர் இருந்தால் வெளியே இரை தேடும் அல்லது குளிர் அதிகம் இருந்தால் மீண்டும் பொந்துக்குள் சென்று விடும். இருப்பினும் வானியல் அறிஞர்கள் இந்த கணிப்புகளை முற்றிலும் ஏற்றுக்கொளவதில்லை )
இந்த வருடமும் Groundhog என்ன சொல்லப்போகிறது என்று ஆர்வமாக அனைவரும் காத்திருந்தனர் . இந்த பாரம்பரிய நிகழ்வினைக் காண முதலமைச்சருக்கு நிகரான பதவியில் இருப்பவர் நேரில் வந்து அந்த விழாவினை சிறப்பித்தார். Groundhog வசந்த காலம் விரைவில் வரும் என்று கணிக்க அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் விண்டர் ஒரு காட்டு காட்டியது. பெருச்சாளியோ நீங்க நம்பலனாலும் அதான் நிசம் என்று சொல்லி விட்டு பொந்துக்குள் ஓடி மறைந்து கொண்டது.
நன்றி
செங்கதிரோன்
No comments:
Post a Comment