Friday, April 24, 2015

ஆட்டோகாரர்களுக்கு அது பெரிதா இருக்குமோ

நாம் எல்லோருக்கும்  முன்பே தெரிந்த  ஒன்று  ஆட்டோகாரர்களுக்கு வாய் மிக நீளம். ஆனால் மிக முக்கியமான ஒன்று  பகுதி பெரிதாக இருக்கும் என நான் எண்ணுவதற்கான  கரணம் நான் மூளை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதானால் இந்த ஐயம் உண்டானது.

லண்டன் மாநகரம் மிக சிக்கலான பல தெருக்கள் கொண்ட ஒரு இடம். அங்கு இருக்கும் வாடகை  கார் ஓட்டுனர்கள் பயணிகள் சொல்லும் இடத்திற்கு மிக எளிதாக செல்வதனை பார்த்து ஆச்சரியப்பட்ட பேராசிரியர் ஒருவர் அவர்களின் மூளை குறித்து ஆராய்ச்சி செய்தார். அந்த ஆய்வின் முடிவுகள் மிக ஆச்சர்யமூட்டுவதாக  அமைந்தது.

நம் மூளையில்  உள்ள ஹிப்போகாம்புஸ் எனப்படும் பகுதியானது நம் ஞாபக சக்தியினை சேமித்து வைக்கும் கிடங்கு போன்றதொரு பகுதியாகும். அது மட்டுமன்றி நாம்  வழித்தடங்களை சரியாக நினைவில வைத்துக் கொள்வதில் முக்கியப் பங்காற்றுகின்றது.இது மூளையில் இடது வலது என இரண்டு பக்கமும் இருக்கும்.இது கடல் குதிரை போன்றதொரு தோற்றத்தில்  இருப்பதனால் ஹிப்போகம்பஸ்(hippocampus ) எனப் பெயரிடப்பட்டது. 


வாடகை கார்  ஓட்டிகள் மற்றும் சாதரண மக்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் ஹிப்போகம்பஸ் (hippocampus )பகுதியின் பின் அளவு (posterior ) அதிகம் இருப்பது தெரிய வந்தது.இந்தப் பின் பகுதியானது இடங்களை அல்லது வழித்தடங்களை ஞாபகம் வைத்துக் கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கக் கூடியது.

மேலே உள்ள புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி  எலியனார் அவர்கள்  தான் இந்த ஆய்வினை மேற்கொண்டவர். பதினாறு கார் ஓட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து இந்த முடிவுக்கு அவர் வந்தார். இது  மூளை ஆராய்ச்சியில் மிக முக்கியக் கண்டு பிடிப்பு ஆகும். எனவே தான் லண்டன் போலவே பல சிக்கலான தெரு அமைப்புகளைக் கொண்டிருக்கும் சென்னையிலும் ஆட்டோகரர்களுக்கு ஹிப்போகம்பஸ் பகுதியானது பெரிதாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
ரஜினி பாடியது போல ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாளும்  தெரிஞ்ச ரூட்டுக்காரன் என்பது அவர்களின் மூளையில்  உள்ள இந்தப் பகுதி பெரிதாக இருப்பதால் தான் சந்து பொந்துகளில்  புகுந்து நாம் சேர வேண்டிய இடத்திற்கு சரியாக கொண்டு சேர்க்கும் திறமை இருக்கின்றது. 

Wednesday, April 22, 2015

அராத்து -ஆல் இன் ஆல் அழகு ராஜா


மன்மத ராசன்னு தான் பெயர் வைக்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனாலும் நம்ம ஆள் சினிமா ,இலக்கியம் , அரசியல் என்று ஒரு இடம் விடாம அழுத்தமான ஒரு தடயத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பதானால் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாகத் தெரிகின்றார்.

முகப்புத்தகத்தில் பல பிரபலங்கள் தினமும் என்னதான் எழுதிக் குவித்தாலும் அவற்றில் அனைத்துமே நம்மக் கவருவதில்லை. ஆனால் அராத்துவின் முகப்புத்தகத்தில் enterntainment full guarantee .அவர் இடும் பதிவுகளில் தொண்ணுறு சதத்திற்கும் மேலானவை ரசைக்கக்த்தக்கதாகவே இருக்கும். குறிப்பாக சமிபத்தில் சீதாராம் யெச்சூரி பொது செயலாளர் ஆனதை ஒட்டி எழுதியது கிண்டலின் உச்சகட்டம்.





சினிமா விமர்சங்கள் எல்லாமே நச்சுனு இருக்கும். அதுவும் விக்ரமின் ஐ படத்தினை கிழி கிழி ன்னு கிழ்ச்ச்தை யாரும் மறக்கவே மாட்டங்க.,அந்த விமர்சனம் எனக்கு முழு  உடன்பாடு இல்லை எனினும் அவர் சுட்டிக் காட்டிய உண்மைகள் சரி என்றே தோன்றியது.அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அராத்தின் பங்களிப்பினை கௌதம் மேனன் டைட்டில்  கார்டில் போட்டு கவுரவப் படுத்தினார்.




அடுத்ததாக நீயா நானா நிகழ்ச்சியில் அரத்துவின் ராஜாங்கம் . முதிலில் உடை  அணியும் விதம் , பெண்கள் தான் இது போன்ற பொது நிகழ்ச்சிக்கு வரும் பொது உடைகளில் அதிகம் கவனம் செலுத்துவர். ஆனால் முதன் முதலில் ஒரு ஆண்  உடையில் அதிகம் கவன செலுத்திப் பார்த்தது அராத்து தான், உதாரணத்திற்கு உணவங்கள் குறித்த  நீயா நானா நிகழ்ச்சியில்  பச்சக் கலர் பேன்ட் அணிந்து கொண்டு வந்ததைப் பார்த்து மிரண்டு விட்டேன்.உடையையும் தாண்டி அவர் வைக்கும் கருத்துகள் அனைத்துமே எந்த ஒரு சாமானிய மனிதனும் எண்ணிப் பார்க்க இல்யலாத வகையிலான  ஒரு புது வித கோணத்தில் இருக்கும்.  அந்த நிகழ்ச்சியில் பலர் பேசி இருந்தாலும் ஒரு சிலரின் கருத்துகள் மட்டுமே நம் நினைவில் இருக்கும், அது போன்றதொரு கருத்தாக இருப்பது ஆச்சர்யமளிக்கக் கூடியதாக இருக்கின்றது.

பெண்கள்  மற்றும் காமம் குறித்த இவரது இவரது பார்வை தான் மற்றவரிடமிருந்து தனித்து இவரைத் தெரிய வைக்கும் ஒன்றாக இருந்து வருகின்றது. பெண்கள் ஆண்களிடம் பழகுவதில் எச்சரிக்கையாக இருக்க இவர் கூறும்  டிப்ஸ் அனைத்தும்  கிண்டலுடன் கலந்த  அறிவுரைகள்.

பெண்களுக்கு - அராத்து அருளுரை - 2
நீங்க ஐ லவ் யூ தான் சொல்லணும்னு அவசியம் இல்லை. நீங்க என்னென்ன வார்த்தைகளையெல்லாம் சொன்னால் , அவன் ஐ லவ் யூ ந்னு எடுத்துப்பான்னு பார்க்கலாம். வாங்க கிளாஸை ஆரம்பிக்கலாம்.

looking handsome - i love u
sweet dreams - i love u
take care - i love u
dear - i love u
awesome - i love u
send ur photo - i love u
waiting for ur reply - i love u
had dinner ? gud nyt - i love u
ur dress is super - i love u
r u in love with anyone - i love u
ur mobile number plz - i love u
when shall we meet - i love u
ur email id - i love u
what is DOB : i love u
i love u - i want to fuck u.

  சென்னையில் உதவி கமிஷனர்  ஒரு பெண்ணுடன் உரையாடிய விடியோ குறித்து ஆண்களின் மன நிலையினை அச்சு அசலாக பிரதிபலித்து இருந்தார்.
 மேற்கூறிய அனைத்து விடங்களில் இருந்து நான் எண்ணுவது மாதிரியே நீங்களும் அராத்து ஒரு ஆல் ஆல் அழகு ராஜா என்ற  முடிவுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கயுடன் முடிகின்றேன்.

நன்றி 
செங்கதிரோன்



Tuesday, April 21, 2015

தமிழகத்தின் அடுத்த சோ.ராமசாமி இவர்தான்

தமிழக அரசியல் சூழலை மிக சரியாக விமர்சிப்பதோடு மட்டுமன்றி அரசியல் தலைவர்களுடனும் நல்ல நட்புறவுடன் திகழ்ந்து வருபவர் சோ , கடந்த பதினைந்து வருடங்களாக தன்னை தீவிர இந்துத்துவ பார்ப்பன அரசியலில் சுருக்கிக் கொண்டதால் இவரின் கருத்துகளுக்கு அவர் சாதி சார்ந்த மக்கள் மற்றும் இதர உயர் சாதிகள் மட்டுமே ஆதரிக்கும் நிலை உண்டாகியது. அரசியல் சூழலில் தீவிர ஜெ  ஆதரவுப் போக்கினால் பத்திரிக்கைகளும் இவரை தற்போது கண்டு கொள்வதில்லை. அதுவும் மிடாஸ்  சாராய ஆலைக்கு சில காலம் மேலாளாராக இருந்தை அவர்  சமூகம் சார்ந்த மக்கள் கூட  அருவருப்புடன் பார்க்கின்றனர்.

எனவே அவ்வெற்றிடத்தினை நிரப்ப தகுதியான ஆள் அதே சமூகத்தில் இருந்து உருவாக வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது .சிலவருடங்களுக்கு முன்னர் எஸ் வி சேகர் அவர்கள் தான் பிற்காலத்தில் சோ போல அரசியல் விமர்சகர் ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.சோவைப் போல சினிமா பின்புலம் இருந்தாலும் நாரதர் கலகம் மற்றும் தரகு வேலை செய்தல் போன்ற சோவின் குணாதிசியங்கள் இல்லாததால் எந்த ஆட்சி வருகின்றதோ அந்த ஆட்சிக்கு அடிமையாக இருப்பதையே தொழிலாக மாற்றிக் கொண்டார்.

ஆனால் எந்தப் பின்புலமும் இல்லாமல் வெளிநாட்டில் முனைவர் பட்டம் பெற்று இங்கே பதிப்பகம்  தொடங்கி பின்னர் அரசியல் விமர்சகராக மாறி வலம் வரும் பத்ரி தான் அடுத்த சோ என அவரின் நண்பர்கள் அடிப்பொடிகள் நம்பிக் கொண்டிருந்த வேளையில் தான் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு  பல்கலைக் கழகத்தில் இருந்து களம் இறங்கியிருக்கிறார் ஸ்ரீதர் சுப்ரமணியம்.


நீயா நானாவில் கலந்து கொண்டு எந்த விதமான அலங்காரத் தொனியும் இல்லாமல் வெறும் தலைப்புக்கு தொடர்பான கருத்துக்களை மட்டும் கூறுவதனால் இவரை கோபிநாத்துக்கு மிகவும் பிடிக்கும். வெகு சீக்கிரமாக தமிழர்கள் அனைவருக்கும் பிடிக்கும் காலம் வரும். இலங்கை தொடர்பான  இவரின் கருத்துகள்  எல்லா உயர் சாதியினரின்  கருத்தைப் பிரதிபலிப்பதாகவே இருந்தாலும் நம் சம காலத்து சிறந்த கதை சொல்லி ஷோபா சக்தியை மன்னிப்பது போல இவரையும் மன்னித்து விடலாம் அல்லது கால சூழலில் ஈழ மக்களின் நியாய உணர்வினை ஐவரும் புரிந்து கொள்ளும் சூழலும் ஏற்படலாம் . 

தனுஷ்  எப்படி வெகு சாதரணமாக அறிமுகமாகி இன்று நம்பிக்கை தரும் நட்சத்திரமாக  திகழ்கின்றாரோ அதே போல ஸ்ரீதரும் திகழ்வார் என்பதற்கான காரணங்கள் பல ,முன்பே கூறியது போல கருத்துகளை மிக தெளிவாக எடுத்துரைத்தல் , நன்கு  கற்றறிந்தவர், சோவைப் போலவே அனைவருடனும் இணக்கமாக பழகும் இயல்பு கொண்டவர் என்று எண்ணுகிறேன் . இது மிகவும் முன்கூட்டியே எடுக்கப்பட்ட அனுமானமாக இருந்தாலும் இது உண்மையாக மாறுவதற்கான  வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே எண்ணுகின்றேன. 


இப்பதிவு ஸ்ரீதர்  அவர்களின் புகழ் பாடுவதற்காக அல்ல , மாறாக சோவாக தன்னால் மட்டுமே மாற முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பத்ரி சேஷாத்ரிக்கு அதற்கான வாய்ப்பே இல்லை என்று எடுத்துரைக்கவே இந்தப் பதிவு.பத்ரிக்கு  ஏன்  அந்தத் தகுதி இல்லை. பதிர்யின் மூர்க்கத் தனம், தான் மிக்கப் படித்தவன் என்ற அகங்காரம். திருவள்ளுவர்  மற்றும் ஒவையார்  வழி வந்த தமிழ் பரம்பரைக்கு இது இரண்டுமே ஒவ்வாமையை உண்டாக்கக் கூடியவை. அதுவும்  கால மாற்றத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளாமல்   தீவிர இந்துத்துவ ஆதரவு ,சாதி வெறி இரண்டும்  இரண்டு கண் போல இயங்கும் பத்ரியை    தமிழ்  பத்திரிகை உலகம் சகித்துக் கொள்ளாது. அப்புறம் சோ ராமசாமியின் இறுதிக் காலம் போலவே வெறும் 500 பிரதி விற்பனையாகும் பத்திரிக்கை ஆரம்பித்து  அதிலேயே தலையங்கம் முதல் அனைத்ததையும் எழுதி பொழுதக் கழிக்க வேண்டிய நிலை தான் ஏற்படும்.
நன்றி 
செங்கதிரோன் 

சிட்டுக் குருவி லேகியத்தின் சூட்சுமம்


உலக சிட்டுக் குருவிகளின் நாளில் இந்த ரகசியத்தினை ஒரு சித்த மருத்துவராக உலகுக்கு சொல்ல வேண்டிய கடைமை இருக்கின்றது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூவி கூவி விற்கப்படும் சிட்டுக் குருவி லேகியத்திற்கும் சித்த மருத்துவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நான் அறிந்த வரையில் எந்த ஒரு குறிப்புகளும் சித்தார்களால் எழுதப்படவில்லை.



சிட்டுக் குருவி லேகியம் என்பது சிட்டுக் குருவியின் இறைச்சி கொண்டு செய்யப்படுவது இல்லை. இன்ப உணர்வைத் (காம ) தூண்டக் கூடிய லேகியத்தினை நேரடியாகக் குறிப்பிட்டு போது இடத்தில் விற்கும் போது வரும் சங்கடத்தினைப் போக்கவே ,அதற்கு சிட்டுக் குருவி லேகியம் என்று பெயர் வைத்தனர். இருப்பினும் குறிப்பாக சிட்டுக் குருவியின் பெயரை அந்த லேகியத்திற்கு சூட்டக் காரணம் ,சிட்டுக் குருவியின் மிதமிஞ்சிய காதல் உணர்வுக் கொண்டப் பறவை என்பது தான்.எனவே மக்களுக்கு இந்த லேகியம் விற்கும் போது சிட்டுக் கிஉறுவியின் பேயரை ஒருக் குறியீடாகத் தான் பயன்படுத்தி வந்து இருக்கின்றனர்.