சித்த மருத்துவத்தில் கோரக்கர் மூலி என்றழைக்கப்படும் கஞ்சாவினை அதிகம் பயன்படுத்தும் ஒரு இசை பிரபலம் குறித்து தான் இப்பதிவு . ராப் இசைக் கலைஞர்கள் பலரும் கஞ்சாவினை பயன்படுத்தினாலும் ,ஸ்நூப் மட்டுமே இதனை மிக வெளிப்படையாக செய்வது மட்டுமன்றி . அதனை பயன்படுத்துவதையும் வெளிப்படையாக செய்வார்.
இவர் பெயருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் dogg என்பது குடுமபப் பெயர் அல்ல, மாறாக நம்மூரில் வெண்ணிற ஆடை நிர்மலா , நிழல்கள் ரவி போன்றோருக்கு அவர்கள் நடித்த முதல் படத்தில் வந்து போலதான், இவருக்கும் தனது முதல் இசை தொகுபான doggystyle என்ற மிகப்பெரிய வரவேற்பினை பெற்றதில் இருந்து இந்த dogg என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. அந்த இசைத் தொகுப்பில் வரும் whats my name பாடலில் தனது பெண் தோழியுடன் படுக்கையில் இருக்கையில் அவளின் அப்பா வரநாயாக உருவெடுத்து தப்பிக்கும் பாடலை பாருங்கள்.
அனைத்து வெளிநாட்டவருக்கும் இந்தி திரையுலகம் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும், அது ஸ்நூப் அவர்களுக்கும் இருந்தது அதன் விளைவாக அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த singh is king படத்தில் ஒரு பாடலினை பாடி நடனம் ஆடி இருப்பார். அதன் வீடியோ கீழே உள்ளது.
சர்ச்சைகளில் சிக்குவதேன்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ,பள்ளி முடித்தவுடன் கோகின் வைத்திருந்தற்காக சிறைக்கு செல்ல ஆரம்பித்தவர், தொடர்ந்து பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டார். அது போக எந்த நாடுகளுக்கெல்லாம செல்கின்றாரோ அங்கும் ஏதாவது ஒரு பிரச்சனைகளில் சிக்குவார்.குறிப்பாக ஆஸ்திரிலியா மற்றும் நார்வே ஆகிய நாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய இவருக்கு தடை விதித்தன.இருப்பினும் இந்த சர்ச்சைகள் அவருக்கு தொழில் ரீதியாக எந்த பாதிப்பினையும் உண்டாக்கவில்லை.
1993 ல் தொடங்கிய இசைப் பயணம் இன்றும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. அதும் இன்றைய இளம் தலைமுறை பாடகர்களுடன் எந்த ஒரு ஈகோவும் இன்றி அவர்களின் பாடல் தொக்குப்பில் தோன்றி கலக்கிக் கொண்டிருக்கின்றார்.நான் முன்பு இசை உலகின் இளம் தேவதைகள் பற்றி எழுதிய கேட்டி பெர்ரியுடனும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளார். ராப் இசை எனபது முதலில் புரிவதற்கு சிரமமாக இருந்தாலும் போகபோக பிடித்து விடும்.

No comments:
Post a Comment