தமிழ் படங்களில் வரும் வில்லன்கள் கழுத்து நிறைய கனமான செயின்களை அணிந்து கொண்டு வருவர். பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஆர்வம் இருக்கும் என்ற நிலை மாறி ,இது போன்ற பெரிய தாதாக்களுக்கும் தங்க ஆபரணங்கள் அணிவது விருப்பமாகி விட்டது. இது போன்று அரசியல் தலைவர்களும் தங்கள் தலைமையின் பெயர் பதித்த மோதிரம், செயின் பிரேஸ்லெட் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மறைந்த தாமரைக்கனி அவர்கள் தான் அணைந்திருந்த கனமான இந்த மோதிரத்தால் தான் சட்டசபையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கை உடைத்தார்.
இந்த ஆபரணங்கள் அணிவது தங்களின் ஆடம்பரத்தை வெளிஉலகிற்கு காண்பிக்க ஒரு குறியீடாகப் பயன்படுத்துகின்றனர்.ராப்பர் இசை உலகின் அனைத்து பாடகர்களுமே இது போன்று நிறைய செயின்களை கழுத்தில் மாட்டிக் கொண்டிருப்பார். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட ஒருவரை மட்டும் செயின் பொறுக்கி என்று சொல்வதற்கான காரணம் இவருடைய பெயரே அது தான், 2 Chainz .இவருடைய சொந்த பெயர் Tauheed Epps , ஆனால் இவராக சூட்டிக் கொண்டது 2 Chainz , கூடைபந்தாட்ட வீரரான இவர், இசை உலகில் பிரபலமானது 2012ல் , இதற்கு முன்னர் பல இசைக் குழுக்களில் இயங்கி வந்தாலும் , தனியாக இவரே பாடி வெளியான பாடல்களின் மூலம் தான் இசை உலகில் பிரபலமானார்.
No Lie , Birthday songஇரண்டும் மிகப் பிரபலமானவை, இந்தப் பாடல்களை நீங்கள் மீண்டும் மீண்டும் பார்ப்பீர்கள், அந்தளவுக்கு காட்சி அமைப்புகள் இருக்கும். ஏனெனில் இது போன்ற பாடல்களில் மிக மிக அழகான பெண்களை மிக ரசனையாக தேர்ந்தெடுத்து அந்த நடன அசைவுக்கு தக்கவாறு இசையும் அமைத்து கலக்கி இருப்பார்.அதுவும் Birthday song இசை உலகின் முரட்டு பொறுக்கியான Kayne West உடன் இணைந்து அதகளம் பண்ணி இருப்பார்.கண்டிப்பாக இந்தப் பாடலை பார்க்கும் ஒவ்வொருவரும் உங்கள் நண்பரின் பிறந்த நாளுக்கு இந்தப் பாடலை dedicate செய்வீர்கள் , நான் சொல்வது எவ்வளவு உண்மை என்பதனை கீழே உள்ள உங்கள் குழாய் இணைப்பில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இது போன்ற இசைப் பணியும் தாண்டி இவரின் மற்றொரு செய்கையின் மூலம் அனைவருக்கும் அறிமுகம். நம்மூர் பாடகர் சினேகன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் மற்றும் பொது மேடைகளில் கட்டிபிடி வைத்தியம் செய்து தமிழகத்தில் மிக பரபரப்பாக செய்திகளில் இடம் பிடித்தார். ஆனால் 2 Chainz உலகில் மிக விலையுர்ந்த பொருட்களை வாங்குவது ,உண்பது போன்ற சாதனைகளை செய்து கொண்டு வருகின்றார்.
தொப்பி -15 இலட்சம்,ஒரு பாட்டில் தண்ணிர் -5 இலட்சம் , பல் விளக்கும் டூத் பிரஷ் -25,000 ரூபாய் இப்படி இவர் உலகின் அதிக விலை கொண்ட அனைத்தையும் வாங்குவதையும் பயன்படுத்துவதையும் பொழுது போக்காகக் கொண்டுள்ளார்.
மேக்டோன்னல்டில்(Mc Donald ) 2$ க்கு ஜூனியர் கிடைக்கும், யானைப் பசிக்கு சோளப் பொறி போல இருந்தாலும் நம்ம பட்ஜெட்டுக்கு அதை சாப்பிடுவதை தவிர வழி இல்லை. ஆனால் , 2 Chainz சாப்பிட்ட பார்கரின் விலை 295$(15,000 ரூபாய் ).ஒரே ஒரு பர்கரின் விலை, வெவேறு நாடுகளில் இருந்து வரவைக்கப்பட்ட சிறந்த மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பார்கரின் கூடுதல் அம்சம் 24 காரட் தங்கப் பொடி தூவப்பட்டிருப்பதும், வைர பற்குச்சியும்(Tooth pick) இணைந்திருப்பது தான். கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட அந்த பர்கரை 2 chainz சாப்பிடுவதின் காணொளியைப் பாருங்கள்.
செயின் பொறுக்கி குறித்த இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன். அடுத்து இசை உலகின் முரட்டு பொறுக்கி குறித்து பார்ப்போம்.நன்றி
பலபேருக்கு தகுதியும் திறமையும் அதிகம் குவிந்து இருந்தாலும் பணம் மட்டும் அவர்களிடம் குவியாது, மற்றொரு புறம் ஒரு சிலரிடம் எந்த வித் திறமையும் தகுதியும் இல்லாமல் பணம் ஏகப்பட்ட அளவில் குவிந்து கிடக்கும். இதற்கான காரணம் தத்துவார்த்த ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் பார்த்தால் ஏதேனும் ஒரு அதிர்ஷ்டமோ அல்லது அவர்களுக்குள் ஒளிந்து இருக்கும் (Hidden talent) ஒரு குறிப்பிட்ட திறமை கண்டுபிடிக்கப்பட்டு அதனால் மிகப் பெரிய புகழை அடைவார்கள்.
முன்னதற்கான உதாரணம், டெல்லிக்கு அருக்கமையில் உள்ள குர்கானில் தொழிற்சாலை அமைப்பதற்காக இடம் கையகப்படுத்தும்போது மூன்று சகோதரர்கள் ஒரு குடிசையில் ரோட்டோரம் வாழ்ந்து கொண்டிருந்தனர்.அவர்கள் இடம் தொழிற்சாலை எடுத்தவுடன் கிடைத்த தொகை 15 கோடி. அந்த சகோதரர்களில் ஒருவர் அரசு நிறுவனத்தில் ஒரு கடை நிலை ஊழியர். கோடீஸ்வரரான பின்னும் இன்றும் அதே வேலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றார், அந்த நிறுவனத்தின் உயரதிகாரியின் காரை விட இந்த கடை நிலை ஊழியனின் கார் அதிக விலை கொண்டந்து. அந்த வளாகமே அவரைப் பார்த்து வியக்கினறது. ஏனெனில் பணக்காரவதற்கு முன் அவரின் தோற்றமும் நடைவடிக்கையும் நன்கு அறிந்த அந்த மக்களால் அப்படி ஒரு அதிர்ஷ்டம் நம் வாழ்க்கையிலும் நடக்காதா என்று எண்ணி பெருமூச்சு விடுகின்றனர்.
இரண்டாவதற்கான உதாரணம் நிறைய பேர் இருந்தாலும் சமீபத்தில் வெற்றி பெற்ற சிவகார்த்திகேயனைக் குறிப்பிட்டு சொல்லலாம். பொறியியல் படித்து விட்டு தன்னுடைய மிமிக்ரி திறமையில் அபார நம்பிக்கைக் கொண்டு அதன் மூலம் படிப்படியாக முன்னேறி இன்று முன்னணி நடிகர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த இரண்டாம் வகையை சேர்ந்தவர் தான் லில் வைன் (Lil Wayne ).
தனது 8 வயதிலே ராப் பாடல் எழுதத் தொடங்கி இன்று ராப் இசை உலகின் முன்னணிப் பாடகராக மட்டுமன்றி, ராப் உலகின் பணக்காரர்களில் முதலிடத்தினைப் பிடித்திருக்கின்றார்.(ஆதாரம்:போர்ப்ஸ் பத்திரிக்கை).அவரின் தோற்றத்திற்கும் அவர் அடைந்திருக்கும் இந்த உயரத்திற்கும் எந்த வித தொடர்பும் இருக்காது. உலகம் முழுக்க ராப் இசை ரசிகர்களுக்கு மிகப் பிடித்தமானவர்களில் இவருக்கு முக்கிய இடம் இருக்கின்றனது. அதுவும் அமரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய ஐபாடில் லில் வேன் பாடல்கள் இருக்கின்றது எனவும் தனக்கு அவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றார்.
இவர் காதில் மாடிக் கொண்டிருக்கும் head phone ,வைரம் பதிக்கப் பட்டது, இதன் விலை அதிகம் இல்லை ஜென்டிலமேன் ஒரு மில்லியன் டாலர் தான்.(இந்திய ரூபாயில் 5கோடி )
ஐந்தடிக்கும் குறைவான உஅரம், பற்களில் வித்தியாசமான கறை , சுருண்ட முடி என மாறுப்பட தோற்றம் கொண்டிருந்தாலும் பாடல்கள் மிகப் பிரபலம்.கானாப் பாடல்கள் ஒரு சிலருக்கு சுத்தமாகப் பிடிக்கவே பிடிக்காது . அப்படிப்பட்டவர்களால்,லில் வேன் ஏற்றுக் கொள்வதில் மிக சிரமமாக இருக்கும். எனக்கு எல்லா வகையான இசையும் பிடிக்கும், இதே போன்ற ரசனை கொண்டவர்கள் நிச்சயம் லில் வேனை மிகவும் ரசிப்பார்கள்.
God bless Amerika , Mirror , How to love ஆகிய மூன்று பாடல்களும் நான் அடிக்கடி கேட்கும் பாடல்கள், இவற்றில் how to love ராப் இசையில் தாயின் வலியை கலந்து மிக அற்புதமாக எடுக்கப்பட்ட பாடல்.God bless Amerika பாடலின் உங்கள் குழாய் காணொளியைப் பாருங்கள்.
இசை உலகின் பொறுக்கிகளில் இதுவரை ஆப்பிரிக்க அமிர்க்கர்களை (Afro -Americans ) மட்டும் குறிப்பிட்டிருக்கின்றேன், வெள்ளை அமெரிக்கர்களும் ராப் உலகில் இருக்கின்றனர், இவர்களில் மிக பிரபலமான எமினம் குறித்து தான் அடுத்த இசை உலகின் பொறுக்கிகள் வரிசயில் பார்க்க இருக்கின்றோம், மேலும் எமினம் பாடல் குறித்து அவருடைய அம்மாவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எது ஏன் என்று விரிவாக பார்ப்போம்.
முப்பது வயதை நெருங்கும் பாடகி எல்லீ ,அனைவருக்கும் பிடித்த பாடகியாக மாறியது எப்படி என்று பார்ப்போம். இதற்கு முன்பு இசை உலகின் தேவதைகள் வரிசையில் நான் குறிப்பிட்ட அடேல் போலவே இவரும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்.நான் முப்பது வயது என்று குறிப்பிட்டிருந்தாலும் , எல்லீ அவர்கள் பார்ப்பதற்கு இருபது வயது போல தான் இருப்பார். தேவதை என்ற சொல்லுக்கு மிக பொருத்தமாக மிக அழகாக இருப்பார்.நான் சொலவது எவ்வளவுஉண்மை என்பதனை கீழே உள்ள படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சில பேர் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பர்கள், பேச ஆரம்பித்ததாமல் நாம் காத தூரம் ஓடும் அளவுக்கு அவர்கள் குரல் இருக்கும்.ஆனால் எல்லீ குரல் நம்மை அதிதீமான ஒரு எழுச்சி நிலைக்கு கொண்டு செல்லும். எழுச்சி நிலைக்குக் கொண்டு செல்லக் காரணம் எப்பொழுதுமே காதல் குறித்த பாடல்களை உச்சஸ்தாயில் பாடுவார், இருப்பினும் இவர் மென்மையான குரலில் பாடுவதால் அது நமக்கு மன்மத ராசா பாடல் பாடிய மாலதியின் குரல் போலல்லாது ஒரு வித மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும்.
இவரின் சிறந்த பாடல்கள் என்ற ஒரு பட்டியல் போடுவது மிக சிரமமான ஒரு காரியம், ஏனெனில் 90% மேலான இவரின் பாடல்கள் அனைத்துமே மிக சிறப்பான பாடல்கள். எனவே இங்கு சமீபத்தில் வெளியாகி உள்ள பாடலின் உங்கள் குழாய் (Youtube ) இணைப்பை தருகின்றேன். அதனைத் தொடர்ந்து மற்ற பாடல்களை நிங்களே தேடிபிடித்து கேட்க ஆரபித்து விடுவீர்கள்.
1.Beating Heart
2.Burn
3.I know you care
இந்த மூன்று பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தம்மனவை. மேலும் Calvin Harris உடன் இணைந்து பாடிய பாடல்களான I need your love மற்றும் outside ஆகிய பாடல்களையும் கண்டு மகிழுங்கள்.
பி.கு : இந்தப் பாடகரை தமிழகத்தில் வளர்ந்து வரும் இளம்அரசியல் விமர்சகர் ஒருவருக்கு மிகவும் பிடிக்கும், என்னமா இப்படி பன்றீங்களேம்மா என்று நான் எழுதிய பானு கோம்ஸ் தான் அந்தப் பிரபலம்.
இது தவிர எல்லீ அவர்கள் ஒட்டப்பயிற்சியில் (Running) தீவிரமான ஆர்வம் உடையவர்.தினமும் ஆறு மைல் ஓடுவார். பிரபல பதிவர் அதிஷா அவர்களைப் போன்றே மாரத்தானில் ஓடுவதைத் தன் வழ நாள் லட்சியமாகக் கொண்டவர், தன்னுடைய ரசிகர்களையும் இந்த ஓட்டப் பயிற்சிகளில் கலந்து கொள்ள ஊக்கபடுத்துவார்
செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தமிழர்கள் உயிரிழந்த விவகாரம் சூடு பிடித்திருக்கும் வேளையில் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான உறவினை நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.தொப்புள் கொடி உறவு என்ற ஈழத் தமிழர்களைக் குறிப்பிடும் நாம் , பக்கத்துக்கு மாநிலங்களில் வாழும் மலையாளி, கன்னடர் மற்றும் தெலுங்கர்களை அவ்வாறு கருதாதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.
மொழி தான் நம்மைப் பிரித்து வைத்திருக்கின்றதா என்று பலர் கூறினாலும் அதில் ஓரளவுக்கு உண்மை உண்டே என்று தோன்றுகின்றது. ஏனெனில் இது போன்ற ஒரு பிரச்சனைக்கு வித்திட்டவர் மொழியியல் அறிஞர் கால்டுவெல், தமிழின் எச்சங்களே மற்ற திராவிட மொழிகள் என்ற அவரின் கோட்பாடு மற்ற மாநிலத்தவருக்கு தமிழர்களின் மேல் ஒரு வித காழ்புணர்ச்சியும் தாழ்வு மனப்பான்மையும் உண்டாக்கி விட்டது.
இதன் தொடர்ச்ச்சியாக கருணாநிதி திராவிட நாடு என்ற ஒரு புது கொள்கையினை உருவாக்கி பீதியைக் கிளப்ப ,பயந்து போன அண்டை மாநிலத்தவர்கள் , இந்த கொள்கையை ஏற்றுக் கொண்டால் தாங்கள் தமிழர்களின் எச்சம் எனபது உறுதியாகிவிடும் ,வட இந்தியர்களுடன் இணக்கமான ஒரு சூழலிணை உண்டாக்கிக் கொண்டனர்.
இறுதியாக தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பின் போது மற்ற திராவிட மாநிலங்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள மத்திய அரசின் மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொண்டனர்.இதன் விளைவாக தமிழன் இந்தியாவில் தனித்து விடப்பட்டான்.இப்பொழுது தலைப்புக்கு வருவோம் , தெலுங்கர்களுக்கு மட்டும் தான் தமிழர்களைப் பிடிக்காதா என்ற எண்ணம் ஏற்படலாம் , மற்றவர்களுக்கு ஏற்படின் அது அவ்வளவு முக்கயத்துவம் வாய்ந்தது அல்ல. தமிழகத்தின் தலை நகரம் தொடங்கி இண்டு இடுக்கு வரை வாழும் இவர்களுக்கு நம்மைப் பிடிக்க வில்லை என்றால் அது ஏன் என்று அறிந்து கொள்ள்ளவேண்டிய அவசியம் இருக்கின்றது.
வரலாறு :
முதலில் வரலாற்று ரீதியாக பார்ப்போம். தமிழர்கள் சொல்வது தெலுங்கர்கள் இங்கிருந்து தனியாகப் பிரிந்து சென்று ஒரு புது இனக்குழுவாக மாறி , தமிழும் சமஸ்கிருதமும் கலந்த ஒரு மொழியினை உருவாக்கிக் கொண்டார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் தெலுங்கர்கள் என்ன சொல்கின்றார்கள் தெரியுமா , லெமூரியக் கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் , கடல் கோள் (Tsunmai ) ஏற்பட்ட பின்னர் தமிழர்கள் தாங்கள்(தெலுங்கர்கள்) வாழ்ந்த பகுதினை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்று கூறுகின்றனர்.அதாவது நாம் தற்பொழுது வாழும் தமிழகம் என்ற நிலபரப்பு தெலுங்கர்களுக்கு சொந்தமானது என்றும் அவர்கள் ஒரு புதிய வரலாற்றினை சொல்கின்றனர்.அதனை நிரூபிக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் வாழ்ந்து வரும் தெலுங்கர்களை உதாரணமாகக் காட்டுகின்றனர்.
மேற்சொன்ன இரண்டில் எது உண்மை என்பதனை நிருபிக்க வேண்டியது வரலாற்று ஆய்வாளர்களின் கடமை. இருப்பினும் இலக்கிய அடிப்படையில் பார்த்தால் தமிழுக்கு முன்பாகவே எந்த ஒரு இலக்கியமும் அங்கு எழுதப்படவே இல்லை. இதனை தான் தமிழர்கள், தெலுங்கு தமிழில் இருந்து பிரிந்த ஒன்று , தமிழர்களே மூத்த குடி என்பதற்கான மிக முக்கிய ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.
தற்பொழுதைய காலத்திற்கு வருவோம் , வாழ்க்கை முறையில் இருந்து வழிபாட்டு முறை வரை அனைத்திலும் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டாகி விட்டது. உருவ அமைப்பிலும் உணவு பழக்க வழக்கங்களில் மட்டும் தான் நம்மிடையே ஒற்றுமை எஞ்சி இருக்கின்றனது.
சமூக நிலை:
பெரியாரால் இங்கு சமூக விடுதலையும் சாதி ஒழிப்பும் ,மூட நம்பிக்கை ஒழிப்பும் சாத்தியமாயிற்று. அங்கே இந்த நிலைமை தலை கீழாக இருக்கின்றது. ராமர் வழிபாடு மிகப்பரவலாக உள்ளது. சாதிய ரீதியாக மாணவர்கள் தனி தனியாகப் பிரிந்து கிடப்பது என்பது மிக சர்வ சாதரணமான ஒன்று. ரெட்டி மற்றும் நாயுடு தவிர்த்தவர்கள் எந்த ஒரு துறையிலும் முன்னேறுவதற்கு பல சவால்களை சந்திக்க நேரிடுகின்றது.
திராவிடர் கழகத்தால் நடைபெற்ற தாலி அகற்றும் நிக்ழச்சியைப் பார்த்து தமிழன் just like that என கடந்து விட்ட சூழலில் ஆந்திராவில் அந்த நிகழச்சி மிகப் பெரிய தலைப்பு செய்தியாகி விட்டது. திரும்ப திரும்ப ஒளி பரப்பிக் கொண்டிருகிருந்தனர் . அந்தளவுக்கு காலத்தால் பின்னோக்கி வாழ்கின்றனர்.திராவிடர் கழகத்தால் நடைபெற்ற தாலி அகற்றும் நிக்ழச்சியைப் பார்த்து தமிழன் just like that என கடந்து விட்ட சூழலில் ஆந்திராவில் அந்த நிகழச்சி மிகப் பெரிய தலைப்பு செய்தியாகி விட்டது. திரும்ப திரும்ப ஒளி பரப்பிக் கொண்டிருகிருந்தனர்.என்னுடைய தெலுங்கு நண்பன் ஒருவன் இந்த நிகழ்ச்சி குறித்து குறிப்பிட்டு சண்டைக்கே வந்து விட்டான். கீழே உள்ள உங்கள் குழாய் (Youtube ) இணைப்பில் ஆந்திர தொலைக்கட்சியில் விரிவாக ஒளிபரப்பட்ட அந்தக் காணொளியை பாருங்கள்.
கல்வி:
இப்படி மூட நம்பிக்கையினை பின்பற்றி வாழ்ந்தாலும் கல்வியில் தமிழகம் தொட முடியாத உயரத்திற்கு சென்று விட்டனர். IIT யில் அதிக எண்ணிக்கையில் பயில்வர்களில் முதலிடம் ஆந்திர மாணவர்கள்தான். இதனால் இவர்களின் வாழ்க்கைத் தரம் தமிழர்களை ஒப்பிடுகையில் மிக சிறப்பாக இருக்கின்றது. நான் பார்த்தவரையில் படிப்பில் மிக மிக கவனமாகவும் அதிக பொறுப்புணர்ச்சியுடனும் இருப்பார்கள் இதுவே இவர்களின் வெற்றிக்குமுக்கியக் காரணமாக இருக்கின்றது.
இருப்பினும் இதில் கூடவே ஒரு சில சிக்கல்களும் உள்ளது, படைப்பாற்றல் என்ற ஒன்றில் அவர்கள் எந்த வித கவனமும் செலுத்த முடிவதில்லை, எளிதாக வேலை கிடைக்கக் கூடிய படிப்புகளையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.அதனால் தான் இன்று வரை ஒரு சிறந்த விஞ்ஞானி அங்கு உருவாகவே இல்லை. தமிழ் நாட்டில் இருந்து நோபல் பரிசு பெற்றவர்கள் இருப்பது போல் அங்கு இல்லை.
பெருமையாக சொல்லிக்கொள்ள இருக்கும் ஒரே நபர் தற்பொழுதைய microsft தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா மட்டுமே. இதனை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். நாம் நம் இலக்கிய பெருமைகளைப் பேசினால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.எனவே இந்து மதத்தினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். அதனை தங்கள் வரலாறு என்று கூறிக் கொள்வதன் மூலம் தமிழர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நிறுவ முயல்கின்றனர் .
திரையுலகம்:
இங்கே சினிமா மட்டும் தான் தமிழர் தெலுங்கர்களிடையே ஒரு பெரிய இணைப்புப் பாலமாகத் திகழ்கின்றது. NTR , சிரஞ்சீவி ,தற்போது அவரின் மகன் ராம் சரண் வரை சினிமா ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.முகப் புத்தகத்தில் பதமிழக இளைஞர்கள் பலரும் தெலுங்கு கதாநாயகர்கள் புகைப்படத்தினை profile ஆக வைத்திருக்கின்றனர், இதில் பெண்களும் தெலுங்கு கதாநாயகர்களை மிகவும் ரசிக்கின்றனர்.ஆந்திராவில் தமிழ் சினிமா கதாநாயகர்களை விட இசை அமைப்பாளர் இளையராஜா , இயக்குனர்கள் , நடன இயக்குனர்களுக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கின்றது.
தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்ற குரல் சமீப காலமாக ஓங்கி ஒலிக்கின்றது. அது போல ஆந்திராவிலும் தெலுங்கர்கள் தங்கள் தமிழர்களின் நீட்சி அல்ல தாங்கள் ஒரு சுயம்பு என்பதனை நிரூபிக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.இணையத்தில் ஒரு சில இடங்கிளில் தமிழர் தெலுங்கர் விவாதம் நடந்து கொண்டு தான்இருக்கின்றது. அது வீதிக்கு வராதவரை நல்லது. நான் உணர்ந்தவரை தமிழர்களின் நீண்ட நெடியப் பாரம்பரியப் பெருமை தெலுங்கர்களுக்கு தாழ்வு மனப்பானமையை உண்டாக்குகின்றது.இதுவே அவர்களுக்கு நம் மேல் வெறுப்பு உண்டாக வித்திடுகின்றது . வேறு ஏதேனும் காரணம் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இந்த நீண்டபாதிவினை பொறுமையாகப் படித்ததற்கு மிக்க நன்றி .
இந்த தலைப்பைப் பார்த்தவுடன் தமிழ் சினிமா இசை உலகில் இயங்கும் இருவரின் முகம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல. ஆனால் நான் எழுதப் போகும் இசை பிரபலத்தினைப் போன்றே ஒருவர் மலேசியாவில் இருக்கின்றார், உங்களுக்கு மிகவும் அறிமுகமானவர் தான் அவர், தனுஷின் பொல்லாதவன் படத்தில் எங்கேயும் எப்போதும் பாடல் ரீமிக்ஸில் பாடியதோடு மட்டுமின்றி ஆடியும் இருப்பார். முதலில் இசை உலகின் பொறுக்கி என்று எழுதவதற்கான காரணம் என்ன்னவேன்று தெரிய விரும்பினால் ,இசை உலகின் பொறுக்கிகள் என்ற இந்த பதிவினைப் படிக்கவும். இந்தப் பதிவினை படித்தவர்கள் பொறுக்கிகள் என்று ஏன் குறிப்பிடுகின்றேன் என்று நன்கு புரிந்திருக்கும்.
ராப் இசை உலகில் பலரும் குண்டாக இருந்தாலும் , தற்போதைய நிலையில் மிக பிரபலமாக இருப்பவர் ரிக் ராஸ் இவரப் பற்றிதான் இன்றையப் பதிவு.இவரின் இசை பயணம் , சிறந்த பாடல்கள் குறித்து பார்ப்போம்.
மிக மிக சமீபத்தில தொடங்கிய ரிக்கின் இசைப் பயணம் , ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. ராப் பாடல்களில் சத்தம் அதிகமாக இருக்கும் என்பது தெரிந்த ஒன்று, ரிக் மிக மிக அதிக சத்தமாக பாடுவார். அதுவும் அதிக எடை கொண்ட இந்த உடம்புடன் அவர் ஆடும் பொது சில சமயம் நகைச்சுவையாகத் தோன்றினாலும், அவரின் குரலில் இருக்கும் வசீகரம் அதனை மறைத்து விடும். ஆனாலும் இளையராஜா ,ஏ .ஆர்.ரகுமான் பாடல்களைக் கேட்டு பழக்கப்பட்டவர்களுக்கு இந்த இசைக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வெகு சிரமமாக இருக்கும்.
இவரின் பாடல்களில் இரண்டே இரண்டை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன். இந்தப் பாடலகள் பிடித்திருந்தாலோ அல்லது இவரின் மற்ற பாடலகளை பார்த்து மகிழ விரும்பினால் உங்கள் குழாய் (youtube ) செல்லுங்கள்.அங்கே ஏராளமான பாடல்கள் உள்ளன. குறிப்பாக சமீபத்தில் வெளியான hood billionaiere இசை முழு தொகுப்பும் உள்ளது. diced pinepples என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அதனைக் கேளுங்கள். மேலும் hold me back என்ற மற்றுமொரு பாடல் உள்ளது, இது நமது வாடா சென்னை பகுதியில் எடுத்தது மாதிரி இருக்கும்.
எனக்கு இவருடைய சொந்த இசைத் தொகுப்பிலிருக்கும் பாடல்களை விட மற்ற ராப் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடிய பாடல்கள் தான் மிகவும் பிடிக்கும். டைகாவுடன் இணைந்து பாடிய Dope ,உஷருடன் இணைந்து பாடிய let me see ஆகிய பாடல்கள் இவரின் பங்களிப்பு மிக சிறப்பாக இருக்கும்.
அடுத்ததாக இசை உலகின் பணப் பொறுக்கி ஒருவர் குறித்து பார்ப்பபோம்.