Saturday, June 25, 2016

விஜயகாந்த் வழியில் விஷால்:

தென் மாவட்டத்தில் பிறந்த விஜயகாந்துக்கு அங்கே செலவாக்கு இல்லை எனவே வட மாவட்ட இளைஞர்களை தன் வசப்பபடுத்திக் கொண்டார். அதே போல தன் சொந்த மாநிலமான தெலுங்கு சினிமா விஷாலை  உள்ளெ வர தடுத்ததினால் தமிழ் சினிமாவில் தஞ்சம் புகுந்தார். ஆனாலும் இங்கு எந்த விதமான பிடிப்பும் கிடைக்கவில்லை . இப்படியே சென்றால் தன்னுடைய அண்னன்(விக்ரம் கிருஷ்ணா) மாதிரி தானும் சீக்கிரமே சினிமாவிலிருந்து காணாமல் போய்விடுவோம் என்று அஞ்சினார். 



மூன்றே படத்தில் தன்னுடைய மார்க்கெட்டை விஜய் மற்றும் அஜித்துக்கு அடுத்த நிலைக்கு எடுத்து சென்று விட்டார் சிவ கார்த்திகேயன். இதனால் விஜயகாந்த் எப்படி வட மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் உள்ள  வன்னியர்களை வளைத்து மிகப் பெரும் வெற்றி அடைந்தாரோ அதே வழியில் செல்ல நினைத்தார். இது போன்ற ஒரு சூழலில் தான் விஷாலுக்கு தெற்குப் பகுதியில் வாழும் தேவர் இன இளைஞர்களைக் குறிவைத்துப் படம் எடுத்தால் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கனக்குப் போட்டார். வேறு யாரேனும் கூட இந்த யோசனையை வழங்கி இருக்கக் கூடும். 


முதன் முதலாக சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டிய நாடு என்று மதுரையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்து சோதனை முயற்சி செய்தார்.மதுரைக்காரன்டா என்ற வசனத்தை சொன்னதன் மூலம் மந்திரித்து விட்ட கோழியாக மதுரைக்காரர்கள் இவரின் ரசிகராக மாறினர். அதற்கடுத்து சாதிப் பெருமையை பேசும் படங்களை எடுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த முத்தையாவின் இயக்கத்தில் மருது படம் நடித்து முழு நேர தேவர் அரிதாரம் பூசிக் கொண்டுள்ளார்.

கார்த்தி மற்றும் பிரபு இருவரும் தேவரினத்தை குஷிப்படுத்தும் வகையிலானப் பல படங்களை எடுத்து அவர்களை தங்கள் வசபப்டுத்தி வைத்து இருந்தனர். ஆனால் தற்போது அது போன்று யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தேவர் இளைஞர்களுக்கு விஷால் தான் இப்போது ஆறுதலாக இருக்கின்றார். பிரபு மற்றும் கார்த்தியின் வாரிசுகள் வளரும் வரை விஷாலுக்கு தென் மாவட்டத்தில் சிறந்த வரவேற்பு கிடைக்கும்.


திரையில் மட்டுமல்ல போது வெளியிலும் விஜயகாந்த் வழியினைப் பின்பற்றி பொதுத் தொண்டு செய்வது , ரசிகர் மன்றங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவது என அண்ணன் விஜயகாந்த் வழியில் சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றார். அது மட்டுமன்றி தமிழரல்லாதோர் பொறுப்புக்கு வருவதற்கு துவாக உள்ள அமைப்பான தென்னிந்திய திரைப்பட சங்கத்திலும் செயலாளராகி விட்டார். தெலுங்கு நடிகையான ரோகிணி பூவுலகு அமைப்பின் மூலம் விவசாயிகள் சங்கத்திற்கும் விஷாலை அழைத்து சென்று கவுரப்பப்டுத்தி  இருக்கின்றார்.


அடுத்து விஜகாந்த் வழியில் அரசியலை நோக்கி செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எண்ணுகின்றேன். 

சாதிவெறியும் சினிமா வெறியும் தமிழனின் கண்ணை மறைத்தால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற நிலை மாறி வந்தாரை ஆள வைக்கும் மாநிலம் என்ற சிறப்பு பெயர் பெற்று விளங்கும்

நன்றி 
செங்கதிரோன்


நடிகர் சங்க தேர்தல் குறித்த பதிவு 

இசை உலகின் தேவதைகள்: பெர்ஜி ( Fergie)


தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் மிகப்பெரிய பாடகியான பெர்ஜி பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம். ஆசிரிய பெற்றோருக்கு பிறந்த பெர்ஜி நடிப்பு மற்றும் பாட்டுத் திறமையில் சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆர்வமுடியவராக இருந்தார். இதனாலேயே தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. 


இசைத் துறையில் நுழைய ஆர்வமுடன் இருந்த போது black eyed peas என்ற இசைக்குழுமம் இவரை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டது. அந்த அணியின் மிகப்பெரிய வெற்றிக்கு இவரின் குரல் மிகப் பெரும் பலமாக அமைந்தது. எடுத்துக் காட்டாக கீழே உள்ள Pump it பாடலின் காணொளியைப் பாருங்கள், நிச்சயம் நீங்கள் மெய்மறந்து விடுவீர்கள்.


இந்த இசைக்க குழுமம் வெளியிட்ட இசைத்தொகுப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இடையில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்கவும் செய்தார்.2006ல் தனது சொந்த ஆல்பமான dutchess வெளியிட்டார். பெண்களின் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த தொகுப்புக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது . இதனால் அமெரிக்க இசைத் துறையின் அதிகம் விரும்பப்பட்ட  பெண் பாடகி (Favourite female artist ) விருது கிட்டியது. இந்த தொகுப்பின் சிறந்த மற்றும் எனக்குப் பிடித்த பாடலான Clumsyன் காணொளி இணைப்பைக் கொடுத்திருக்கின்றேன் கண்டு மகிழுங்கள்.



எனக்குப் பிடித்த மற்ற பாடல்கள்.
1.My humps 
2.I gotta feeling 
3.Dont stop the party 

பெர்ஜியின் அழகில் மட்டுமல்ல குரலிலும் நீங்கள் மயங்கி இன்பமாக இந்த வார விடுமுறையைக் கொண்டாடுங்கள்.


நன்றி 
செங்கதிரோன் 

Friday, June 24, 2016

ராஜாவின் எடுப்பு சுப்ரமணியசாமியின் கொடுக்காக மாறியதன் பிண்ணனி:

வளர்த்த கடா மார்பில் பாய்வது நம்மில் பலருக்கும் நடந்திருக்கும். ஏழை பிராமணனை சோறு ஊட்டி வளர்த்து தன்னையுடைய எடுப்பாக எட்டாண்டுக்கும் மேலாக வைத்திருந்த ராஜாவுக்கு தெரியவில்லை , அந்த எடுப்பு தான் தன் அரசியல் வாழிவினை முடிக்க வந்த சூனியம் என்று , ஆமாம் அவர் தான்  ஆசிர்வாதம் ஆச்சாரி ,இவரை சமீப காலங்களில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் காண முடியும்.


பிராமணர்களின் அறிவுத் திறமையும் அப்பாவித் தனத்தையும் நம்பி அருகில் வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ராஜா மற்றும் ஆசிர்வாதம் ஆச்சாரி ஒரு சிறந்த உதாரணம். தலித் குடும்பத்தில் பிறந்து மிகவும் கடினப்பட்டு இந்த பதவிக்கு வந்த ராஜா ஊரார் பணத்திற்கு ஆசைப்பட்டதோடு அல்லாமல் , தன்னுடைய சமூகம் சார்ந்த ஒருவரை தன் அருகில் வைத்திராமல் , காலம் காலமாக நம்பப்படும் உயர்சாதியினர் அறிவாளிகள் என்று நம்பி ஆசிர்வாதத்தினை அருகில் வைத்தனால் ராஜாவின் அரசியல் வாழ்வு அஸ்தமனமானது. இப்படிப்பட்ட ஒருவரை திமுக என்றோ கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும். இருப்பினும் சுயமரியாதைக் கட்சியின் இந்த சுயநலப் போக்கு ஒன்றும் ஆச்சரியத்துக்கு உரியதல்ல.


ஆசிர்வாதம் ஆச்சாரி என்ற அம்பி எப்படி அந்நியனாக மாறினார் என்று பார்ப்போம்.
இந்தியன் எக்ஸ்பிரஸில் இவர் சொன்ன செய்தி, சும்மா சுற்றித் திரிந்து கொண்டிருந்த எனக்கு பல நாள் சோறு போட்டு பின்னர் வேலையும் போட்டுக் கொடுத்த ராஜா அவர்களை நான் என்னுடைய மூத்த சகோதரர் போல எண்ணுகின்றேன்.
இந்தியன் எக்ஸ்பிரஸில் சொன்ன வாசகம் அப்படியே அடைப்புக்குறிக்குள் 
(Achary became emotional,saying,“Deep in my heart he (Raja) is still like my elder brother. I used to take food in his house many times. He was very fond of giving me food. Especially when I was a bachelor,he was very protective of me. I will never forget this.)”


ராஜா சுற்று சூழல் அமைச்சராக இருந்து தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த காலம் வரை அவரின் உதவியாளராக இவரை தான் வைத்திருந்தார்.ராஜாவை வசமாக சிபிஐயில் காட்டிக் கொடுத்த பின் இதையெல்லாம் சொல்கின்றார். இருப்பினும் இந்த யோக்கிய சிகாமணியின் மேலும் ஊழல் வழக்கு இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஜெயலலிதா மேல இருக்கும் அதே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு இவர் மேலும் இருக்கின்றது. எனவே தான் ராம் ஜெத்மலானி  அவர்கள் இவரை குறுக்கு விசாரணை செய்கையில் 2009ல் இந்த வழக்கு நடந்து வருகையில் திடீரென்று இப்பொழுது அப்ரூவராக மாறியதற்கு சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிப்பதற்கா என்று கேட்டபோது இவரிடம் முறையான பதிலில்லை.


இப்படிப்பட்ட ஊழல் பேர்வழியை, அரசியல் வாழ்வு அஸ்தமனமாகக் கூடிய நிலையில் இருந்த சுப்ரமணிய சாமி தன் வீட்டின் பின் வாசல் வழியாக தன் மனைவியின் மூலம் இந்த ஆசிர்வாதம் ஆச்சாரி ராஜாவின் அலுவலகத்தில் இருந்து திருடிக் கொண்டுவந்து கொடுத்த ஆவணங்களை வைத்து பூச்சாண்டி சாமியாக அவதாரமெடுத்தார். ஒரு ஏழை பிராமணனுக்கு வாழக்கை கொடுத்த ராசாவுக்கு அதற்கு பரிசாக மற்றோரு பிராமணர் தலித் சமூகத்திற்கு காலத்தால் அழியாத இழிவினை ஏற்படுத்தித் தந்தார். 2ஜியால் பலனடைந்து அம்பானி ,டாட்டா போன்ற்வர்களைப் பற்றி சிறிதும் வாய் திறக்காத இந்த சுப்ரமணிய சாமி ராஜாவை மிக மிக இழிவாகப் பலமுறைப் பேசினார். குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆசிர்வாதம் ஆச்சாரி ஒரு நாள் கூட சிறையில் அடைக்கப்படாத மர்மம் என்னவேறு தெரியவில்லை.


2ஜியால் மிகப்பெரும் பலனடைந்த பிஜேபி ஆசீவாதம் ஆச்சாரிக்கு தன் கட்சியில்  தேசிய செயலாளர் பதவியும் , ரயில்வேயில் பயணிகள் வசதிக்கான துறையின் தலைமைப் பொறுப்பையும் வழங்கி கவுரவித்திருக்கின்றது. இப்பொழுது முழு நேர சுப்ரமணிய சாமியின் கொடுக்காக மாறி பல கருத்துக்களை தமிழ் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றார்.

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் விளைவித்த ஆசிர்வாதம் ஆச்சாரியின் இந்த செயலின் மூலம் நாமும் நம் வாழ்க்கையில் யாரையும் நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருத்தல் மிக நல்லது.

'அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்'என்று சிலப்பதிகாரத்தில் வரும் சொற்றோடரினைப் பள்ளியில் படிக்கும் போது அர்த்தம் விளங்கவில்லை . இருப்பினும் எந்நேரமும் சிறுவயதில் அதை சொல்லிக் கொண்டேயிருப்பேன். ஆனால் அதன் அர்த்தம் புரிந்த பிறகு அந்த சொற்றோடரே அரசியல் பிழைத்தோருக்கு புறம் கூற்றாகும் என்று மாறிவிட்டது. நம் அன்றாட வாழ்க்கையிலும் இது போன்று  எண்ணற்ற ஆசிர்வாதம் இருக்கின்றார்கள் ,பிழைப்புவாதம் மட்டுமே அவர்களின் நோக்கம் . அவர்களிடம் இருந்து தப்பித்து வாழ்வது தான் சாதனை. 

நன்றி 
செங்கதிரோன் 




Tuesday, June 21, 2016

இசை உலகின் பொறுக்கிகள்: மொட்டை பொறுக்கி

நம்ம மொட்டை ராஜேந்திரன் போலவே எப்பொழுதும் மொட்டைத் தலையுடன் பவனி வரும் இந்த இசைப் பொறுக்கியின் பெயர் பிட்புல் (Pitbull ). அமெரிக்காவின் அழகிய கடற்கரை நகரமான மியாமியில் கியூபன் (Cuba )பெற்றோருக்குப் பிறந்த இவர் சிறுவயதிலேயே நம் பாரதியாரைப் போன்றே கியூபன் தேசியக் கவியின் பாடல்களை முழுக்க ஒப்புவிக்கும் திறமை பெற்றிருந்தார்.
பிட்புல்(pitbull) 

ஆர்மண்டோ (Armando Christian Pérez) என்ற தன் சொந்தப் பெயரினை மாற்றி பிட்புல்(pitbull) என்ற நாயினத்தின் ஒரு வகையினை வைத்துக் கொண்டதற்குக் காரணம் அந்த நாயின் போராட்ட குணமே என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.


இசை உலகில் 2002ம் ஆண்டு நுழைந்த ஆரம்பகாலத்திலேயே   Fast and furious படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரின் oye பாடல் இடம் பெற்று புகழ் வெளிச்சம் படத் தொடங்கியது. 

2004ல் தன்னுடைய ஊரின் பெயரில் வெளியிட்ட மியாமி ஆல்பம் பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து மற்ற இசைக்க கலைஞர்களுடன் கைகோர்த்து பல ஆல்பங்களை வெளியிட்டார். அவற்றில் இசை உலகின் ரோமியாவான கிறிஸ் பிரவுன் (Chris Brown)உடன் வெளியிட்ட International love பாடல் மிகப்பெரிய ஹிட்.அதன் காணொளியைப் பாருங்கள், இதைப் பார்த்த பின்பு நீங்களும் மொட்டைப் பொறுக்கியான பிட்புல்லின் ரசிகராக மாறி விடுவீர்கள். 

மற்ற சிறந்த பாடல்கள் 
1.Give me Everything
2.Hey Baby
3.Rain over me

2014 உலகக் கால்பந்துப் போட்டிக்காக பாடிய oye oye பாடலும் மிகப் பிரபலம் அதனையும் கீழே  கொடுக்கப்பட்ட உங்கள் குழாய் இணைப்பில் கண்டு மகிழுங்கள். 
நன்றி 
செங்கதிரோன் 

Sunday, June 19, 2016

எனக்கு இன்னொரு பேர் இருக்கு; சப்பை


ஆரம்பத்திலேயே சொல்லி விடுகின்றேன் நான் இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்து விட்டேன். ஆனால் படம் யாரை மையபப்டுத்தி எடுக்கப்பட்டதோ அவரை விட மற்றவர்கள் தான் அதிகம் மிளிர்கின்றார்கள். இருப்பினும் இனி ஜீவியின் படங்கள் என்றாலே அது ஆண்களுக்கான படம் என்றளவுக்கு முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பார்க்கும் படமாக அமைந்திருக்கின்றது .


ஜிவி இந்தப் படத்தில் சிம்பு ,தனுஷ் , விஜய் ,டீ.ராஜேந்தர் என எல்லோரையும் இமிடேட் செய்து நடித்திருக்கின்றார்.மூன்றாவது படத்திலேயே காமரா பயம் துளியும் இன்றி தனக்கு என்ன வருகின்றதோ அதை செய்திருக்கின்றார். 

இவரின் கடந்த மூன்று படங்களிலும் இவரை விட அதிகம் கவனம் பெற்றது இவருடன் சேர்ந்து நடித்தவர்கள் தான் , இந்தப் படத்திலும் அது தான் நடந்திருக்கின்றது. யோகி பாபு , கருணாஸ் இல்லை என்றால் படம் அம்பேல் தான் , இவர்கள் வரும் காட்சி ஒவ்வொன்றும் அருமை.


கதாநாயகி கயலுக்கு சிறிதும் முக்கியத்துவம் இல்லை.ஊறுகாய் போல தான் பயன்படுத்தி இருக்கின்றார். இரண்டாம் பாதியில் வரும் வில்லன் பெயர் தெரிய வில்லை ,ஆனால் நன்றாகவே நடித்த்திருக்கின்றார்.


நைனாவாக வரும் சரவணன் பருத்தி வீரனுக்குப் பிறகு ஓரளவு மனதில் நிற்கும் பாத்திரம். நிரோஷா அம்மா கேரக்டரில் அசத்தல்.நைனாவாக வரும் சரவணன் பருத்தி வீரனுக்குப் பிறகு ஓரளவு மனதில் நிற்கும் பாத்திரம். நிரோஷா அம்மா கேரக்டரில் அசத்தல்.
இயக்குனர் சாம் ஆண்டன் 


இவ்வளவு பேர் சேர்ந்து இந்தப் படத்தை முன்னிறுத்தினாலும் ஜீவியின் திறமை படத்தில் சொலவ்து போல் சப்பை என்று தான் சொல்ல  வேண்டும்.

நன்றி 
செங்கதிரோன்