Wednesday, December 17, 2014

ஆரியத்துக்கு அந்துமணி திராவிடத்துக்கு கிளி மூக்கு அரக்கன்

தினமலரில் வெகுகாலமாக வந்து கொண்டிருக்கும் அந்துமணி கேள்வி பதில் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பெரியார், கலைஞர் குறித்து கிண்டலாக பதிலளிப்பது ,திராவிட கட்சிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்கள் என்று வாரமலரில் வாராவாரம் வரும். நீண்ட காலமாக இன்றுந்து வரும் இந்த பகுதிக்கு தகுந்த பதிலடிகள் இதுவரை இல்லாமல் இருந்து வந்தது. திராவிடர்களின் அந்த மனக்குறையைப் போக்கும் வகையில் முகநூலில் இளம் தலைமுறைக்கு திராவிட சிந்தனைகள் குறித்து பாடம் எடுத்து வருபவர் தான் கிளி மூக்கு அரக்கன்.


இருவருக்கும் உள்ள மிக முக்கிய ஒற்றுமை unknown identity அதாவது பெரும்பான்மையானோருக்கு அந்துமணி மற்றும் கிளிமூக்கு அரக்கன் யாரென்றே யாருக்கும் தெரியாது.





இருவருமே தங்களால் இயன்ற அளவுக்கு மக்க்ளிடம் திராவிடம் ஆரியம் குறித்த சிந்தனைகளை பரப்பி வருகின்றனர்.

Wednesday, December 10, 2014

இசை உலகின் பொறுக்கிகள்


நம் நாட்டில் சென்ற நூற்றாண்டு வரை இசை உலகம் என்பதே பக்திமான்களும் ஒழுக்கம் நிறைந்தவர்களும் கொண்ட ஒரு உலகமாகவே இருந்து வந்தது.இதற்கு வாழும் உதாரணம் இளையராஜா. ஆனால் தற்பொழுது அனிருத் செய்யும் அட்டகாசங்களை பார்த்தாலே இசை உலகம் எப்படி மாறிவிட்டது என்பதனை புரிந்து கொள்ள முடியும். இந்த மாற்றம் அனிருத்தின் தவறு அல்ல , எப்படி நம் திரைப்படங்களில் பாடல்கள் முதல் பின்ணணி இசை வரை வெளி நாட்டுப் படங்களில் இருந்து காப்பி அடிக்கப் படுகின்றதோ அதே போல அந்த இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை போல நம் நாட்டு இசை அமைப்பாளர்களும் வாழ ஆசைப் படுகின்றனர். அவர்களை போன்றே உடை அணிதல் , விலயுர்ந்த வாகனங்களை
வாங்குதல் மற்றும் பெண்கள் 
மீது மோகம் என்று தங்கள் வாழ்க்கை முறையையே மாற்றி வருகின்றனர்.கீழே உள்ள படத்தின் மூலம்  அனிருத் வெளிநாட்டு இசைக்கலைஞர் tyga போன்றே உடை அணிந்து அவர்களைப் போன்றே இருக்க இவர்களும் முயற்சிப்பதனை தெரிந்து கொள்ள முடியும். எனினும் மலேசியாவில் இயங்கி வரும் தமிழ்  ராப் பாடகர்களும் இதே போன்று தான் உடை அணிவர் என்பதும் உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன்.

                 
                                   
                    Tyga                          Anirudh


 அந்த இசைக் கலைஞர்கள் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் சிறந்த பாடல்கள் பற்றி வரும் வாரங்களில் எழுத இருக்கின்றேன். இதற்கு முன்பு இசை உலகின் தேவதைகள் என்று பாப் இசை உலகின் அழகிய இளம் பெண்கள் குறித்து எழுதி இருந்தேன்

இசை உலகின் இளம் தேவதைகள்: கேட்டி பெர்ரி (Katy Perry )
நிக்கி மினாஜ் (Nicki Minaj):இசை உலகின் இளம் தேவதைகள்
அடேல் :இசை உலகின் இளம் தேவதைகள்
இசை உலகின் இளம் தேவதைகள்:டெய்லர் ஸ்விப்ட்
இசை உலகின் இளம் தேவதைகள் :ரியான்னா(Rihanna
இசை உலகின் இளம் தேவதைகள்:அலிசியா கீஸ் 
 நேரம் கிடைக்கும் பொழுது இந்த தேவதைகள் குறித்து படித்துவிட்டு அவர்களின் இசையை கேட்டு மகிழுங்கள் 

ஏன் இசை உலகின் பொறுக்கிகள் என்று குறிப்பிடுகிறேன் என்றால் இவ்வகையான பாடகர்கள் அதிகம் முன்னிலைப் படுத்துவது வன்முறை
மற்றும்ஆபாசம். ஆனாலும்  நமது கானாப் பாடல்கள் போலவே இதற்கும் உலகெங்கும் மிகப் பெரிய வரவேற்பு உண்டு. தாளத்தோடு வரும் அந்தப் பாடல்களை முதல் தடவை கேட்கும் போது புரிந்து கொள்ள மிக சிரமம் தான் , ஆனால் அந்தப் பாடல்களின் காணொளியுடன் காணும் போது நடன அசைவுகளினாலும் அவர்கள் செய்யும் சேஷ்டைகளாலும் இந்தப் பாடல்கள் மிகவும் ரசிக்கத்‌தக்கவையாகவே இருக்கும். இதனை ராப்பர் உலகம் என்று அழைப்பர். ஆப்பிரிக்கர்களே அதிகம் இயங்கும் இவ்வகையான இசையில் எமினம் போன்ற வெள்ளையர்களும்   கலக்கி வருகின்றனர்.

 இந்த வகையான பாடகர்களின் ரசிகர்கள் பொதுவாக டீன் ஏஜ் வயதினராகத் தான் இருப்பர். ராப் இசை ரசிகர்களுக்கென்றே பொதுவான உடை அமைப்பே உண்டு. இடுப்பிலே நிற்காத ஜீன்ஸ் பேண்டும் ஹூடி என்று சொல்லப்படும் தலையினை மூடிக் கொள்ளும்படியான முழுக்கை சட்டையும் ,ஒரு பெரிய ஹெட் போன் (head phone) அணிந்து கொண்டு இருப்பர். இவர்களுக்காகவே தனியாக ஆடை விற்பனை செய்யும் கடைகளை பெரிய நகரங்களில் காணலாம். கீழே உள்ள புகைப்படம் அது போன்ற ஒரு கடையில் எடுக்கப்பட்டது.


இனி வரும் பதிவுகளில் ராப் இசையில் பிரபலமான பணக்கார பொறுக்கி குண்டு பொறுக்கி , கஞ்சா பொறுக்கி, குடிகார பொறுக்கி , கிரிமனல் பொறுக்கி என ஏகப்பட்ட இசை பொறுக்கிகள் குறித்து எழுத உள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பொறுக்கிகள் உங்களையும் கவர்ந்து விடுவார்கள் .








Monday, December 8, 2014

அய்யர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் ஆச்சரியமான ஓற்றுமைகள்:

லைப்பு பார்த்து பலருக்கும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போப்போடுவது போல் இருக்கின்றதே என்று நினைப்பீர்கள். ஏனென்றால் வரலாறு ரீதியாக ஆப்பிர்க்கர்களுக்கும் தமிழர்களுக்கும்(திராவிடர்கள்) உள்ள ஓற்றுமை குறித்து ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றது. பதிவர் கலையரசன் அவர்கள் கலாசார மற்றும் பண்பாட்டு ரீதியாக திராவிடர்களுக்கும் ஆப்பிர்ரிக்கர்களுக்கும் உள்ள தொடரப்பு குறித்த பல முக்கியக் கட்டுரைகளை எழுதி உள்ளார். அது மட்டுமன்றி முன்னால் அமைச்சர் பொன்முடி அவர்கள் கறுப்பர் இயக்கம் மற்றும் திராவிட இயக்கங்களின் செயல்பாட்டு ஓற்றுமை குறித்து புத்தகம் எழுதி இருக்கின்றார்.


ஆப்பிரிக்க மற்றும் அய்யர் சமூகங்களிடையேயான ஒற்றுமைகள் என்பது கால மாற்றத்தினால் ஏற்பட்டது. முதல் ஒற்றுமை என்பது இடம் பெயர்தல் . ஆப்பிரிக்கர்கள் அடிமை சமூகமாக மேலை நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று சொல்லப்படினும் அவர்கள் தங்கள் நாட்டில் பிழைப்புக்கு வழி இல்லாத காரணத்தால் தான் அவர்கள் அடிமைகளாக சென்றனர். பின்னர் அங்கேயே குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் ஏராளமான பிராமணர்கள் நன்கு படித்திருந்த காரணத்தினால் முதலில் பிரிட்டனுக்கும் பின்னர் மற்ற நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தனர். நிறைய ஊர்களில் அந்த ஊரை விட்டு முதலில் இடம் பெயர்ந்தது அய்யர்களாகத் தான் இருப்பார்கள் .நகரத்தை நோக்கி செல்வதில் மிக ஆர்வமாக இருப்பார்கள்.மற்ற சமூகத்தினர் இடம் பெயர்தலில் அதிக ஆர்வமற்றும் , தன் சொந்த இடத்தினை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே வாழ்ந்து மடிவர். ஒரு சிலர் வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தாலும் தன் ஓய்வு காலத்தில் சொந்த ஊருக்கே திரும்பி வந்து வாழ்வார்கள். இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான எந்த இணைப்பும் பிராமணர்களிடம் இருக்காது. ஆனால் நான் இதை ஒரு குற்றச்சாட்டாக சொல்லவில்லை. முதல் ஒற்றுமையான இடம் பெயர்தல் குறித்து பார்த்தோம்.



இடம்பெயர்ந்த இடத்தில் இவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தில் பல ஒற்றுமைகள் உள்ளன. முதலில் தொழிலினை தேர்ந்தெடுக்கும் போது இருவருமே வணிகம் சார்ந்த துறைகளில் சேர்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டுவர் . அதனால் தான்  மேல் நாடுகளில் வங்கிகள், வியாபார நிறுவனங்களில் அதிகம் ஆப்பிரிக்கர்கள் இருப்பர்.அதே போன்று நம்மூர் ஐஐடி களில் தொழிற் படிப்பினை படித்த பின்னர் எம்பிஏ படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவோர் பெரும்பாலானோர் அய்யர்களாகவே இருப்பர்.உடனடியாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புடைய பணிகளில் தான் அதிகம் விரும்புவர்.முன்னர் கணினி தொடர்பான வேலைகளில் ஆர்வம் காட்டினர் ,தற்போது அங்கு பணி நிரந்தர உறுதியின்மையால் வியாபாரம் மற்றும் வர்த்தக துறைகளில் செல்கின்றனர்.ஆனால் இது போன்றதொரு திட்டமிட்டு தன் வாழ்க்கைக்கான பணியினை தேர்ந்தெடுக்கும் போக்கு இதர சமூக மக்களிடம் நான் கண்டது குறைவுதான். ஆனால் நான் மேற்குறிப்பிட்ட இரு சமூகத்தினரும் தன் வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்த துறை பயனளிக்குமோ அதை மட்டும் தான் தேர்வு செய்வர். இரண்டாவதாக தொழில் நிமித்தம் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை குறித்து பார்த்தோம்.




கண்டம் விட்டு கண்டம் இடம் பெயர்ந்தாலும் இவர்கள் வாழ்க்கை முறையில் எந்த ஒரு மாறுதலும் ஏற்படவே இல்லை. வெளி நாட்டுக்கு சென்ற பின்னரும் தங்கள் வழிபாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். உணவு முறைகளில் சைவ உணவுப் பழக்கங்களை அந்தளவு பின்பற்ற முடியாவிட்டாலும் முக்கிய விரத நாட்களில் அசைவ உணவுகளை உண்பதே இல்லை.அசைவ உணவுகளில் முட்டை , கோழி தவிர எதையும் பெரும்பாலான பிராமணர்கள் உண்பதில்லை. ஆனால் பிரமாண வகுப்பை சாராத மற்றவர்கள் குறிப்பாக ஆண்கள் வெளிநாடு சென்ற உடன் இது போன்ற மரபான பழக்கங்களை உடைத்தெறிகின்றனர். நல்ல உணவுகளை தேடி தேடி உண்பதில் நம் கேபிள் சங்கர் போல மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.ஆப்பிரிக்கர்கள் வெளி நாட்டுக்கு சென்று பல நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அவர்கள் மேலை நாட்டினர் உண்ணும் உணவுகளை உண்பதில்லை .அதிகமாக இறைச்சி உண்பது , அரிசி அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது , junk food களான  pizaa ,burger அதிகம் சாப்பிடுவது என தனித்தன்மையுடன் வாழ்கின்றனர். வாழ்வியலைப் பொறுத்தவரை இவ்விரு சமூகத்திற்குமான ஒற்றுமை

 என்பது தத்தம் பழக்கவழக்கங்களை உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் விட்டுக் கொடுக்காமல் வாழ்வது தான், ஆனால் பிற இனத்தவரோ தங்கள் அடையாளங்களை இழப்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடனேயே வாழ்கின்றனர்.


இசை மற்றும் நடனம் இவை இரண்டையுமே இவ்விரு சமூகத்தினரும் தாங்கள் சென்றவிடமெல்லாம் கொண்டு சென்றனர். ஆப்பிரிக்கர்களுக்கு ஹிப் ஹாப் நடனம் மற்றும் இசை என்றால் பிராமணர்களுக்கு பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசை தனி அடியாளமாகத் திகழ்கின்றது. இந்த துறைகளில் இவ்விரு சமூகம் சாராத மக்கள் நுழைவது என்பது மிகக் கடினமான ஒன்று. வெள்ளை இனத்தை சேர்ந்த பிரபல ராப்  பாடகரான எமினம் (Eminem) அவர்களை ஆப்பிரிக்க ஹிப் ஹாப் சமூகம் இன்றளவும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை.அதே போன்ற நிலை தான் இங்கே இசை ஞாநி இளையராஜாவுக்கும் கர்நாடக சங்கீத சபையில் இது வரை எந்த ஒரு சிறப்பான அங்கீகாரமும் அவருக்கு அளிக்கப்படவில்லை. இதிலிருந்து அறிவது ஆபிரிக்கர்களும் அய்யர்களும் தங்கள் சமுதாயம் சாராத மக்களுக்கு என்றுமே அங்கீகாரம் அளிக்க மாட்டார்கள். 

மேல சொன்ன ஒப்பீடுகள் ஒரு மாறுபட்ட கோணத்திலிருந்துதான்  சொல்லப்பட்டவை என்றாலும் இவை அனைத்தும் உண்மையே என்பதனை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். 

Tuesday, December 2, 2014

வெளி நாட்டுப் பெண்கள் எல்லாம் விபசாரிகளா?

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான குணங்கள் பல உண்டு. உணவு வகைகளில் காரம் அதிகம் சேர்த்து சாப்பிடுவது, பண விவகாரங்களில் மிகவும் கஞ்சத்தனமாக நடந்து கொள்வது என்று ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றுள் வெளிநாட்டுப் பெண்கள் குறித்து இந்திய செய்திஊடகங்களும் திரைப்படங்களும் ஏற்படுத்தி இருக்கின்ற மாயத் தோற்றம் குறித்து தான் இந்தப் பதிவு.

வெளிநாட்டுக்கு சென்று வந்த ஒவ்வொரு இந்திய ஆணும் கன்னி கழிந்து விட்டதாகவே அனைவரும் நம்புகிறனர்.வெளி நாடு செல்லும் ஆண்களும் இதைப் போன்ற அதீதமான கற்பனைகளுடன் தான் செல்கின்றனர். காந்தி அவர்கள் வெளி நாடு செல்லும் போது தன் அன்னைக்கு செய்த சாத்தியங்களில் பெண்கள் தொடர்பான சத்தியத்தையும் செய்து கொடுத்தார். அந்தளவுக்கு அங்கே பெண்கள் சுகம் மிக மலிவாக கிடைப்பதாக ஒரு பிம்பம் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. அது எந்தளவுக்கு உண்மை எனபததைப் பார்ப்போம்.


ஹாலிவுட் படங்கள் மற்றும் போர்நொ படங்களில் காண்பிக்கப்படும் காட்சிகளை மட்டும் கருத்தில் கொண்டே வெளிநாட்டுப் பெண்களை பற்றி ஒரு முன் முடிவுக்கு நாம் வந்து விடுகின்றோம். இங்கே நிலவும் பாலியல் வறட்சியினாலும் காட்டுப்பட்டியான சமூக அமைப்பினாலும் நம் நாட்டுப் பெண்களை அவர்களுடன் ஒப்பிட்டு வெளிநாட்டுப்பெண்கள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று ஆணித்த்ததரமாக நம்புகின்றோம்.

முதலாவதாக அவர்களின் ஆடை அணியும் விதத்தை வைத்து தான் இந்த விமர்சனகள் அதிகம் வைக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள  ஒவ்வொரு பெண்ணும் என்ன மாதிரியான உடை அணிய வேண்டும் என்பதனை அப்பெண்ணின் பெற்றோர்கள், சகோதரர்கள் , மாமனார் அல்லது மாமியார் மற்றும் மிக முக்கியமாக கணவனோ தான் தீர்மானைக்கின்றார்கள். இப்படியான எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி அவர்களுக்கான உடையினை அவர்களே தேர்வு செய்கின்றனர். தாங்கள் உடை அணிவது மற்றவர்களுக்கு தான் பார்க்க அழகாக தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் உடை அணிவதாக அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.  இங்குள்ள மேலை நாட்டு ஆண்களும் அவர்கள் அது போல உடை அணிவதைத்தான் விரும்புகின்றனர். ஆண்களுமே கோடை காலங்களில் மேல் சட்டை இல்லாமல் வெற்றுடம்புடன் ஆனந்தமாகத் திரிவதைக் காணலாம். மேலும் இங்கு சின்ன பெண்  குழந்தை முதல் கிழவி வரை கவுன் மட்டுமே அணிந்து கொண்டிருப்பர். நம்மூர் போல உடை என்பது வயதுக்கு ஏற்றவாறு எந்த மாற்றமும் அடையாது. எனவே உடை அணியும் பழக்கத்தினை வைத்து அவர்களின் குணத்தினை மதிப்பீடு செய்யும் இந்திய மனம் வெளிநாடுகளில் பொருந்தவே பொருந்தாது. குறிப்பிடத்தக்க மற்றோர் செய்தி பெண் மருத்துவர்களுமே அரை குறை ஆடைகளைத்தான் அணிந்திருப்பார்கள். முதல் முதலாக நான் மருத்துவரைப் பார்க்க சென்ற போது அம்மருத்துவர் அணிந்திருந்த உடையைப் பார்த்தவுடன் நான் என்னுடய நோய் பற்றி சரிவர சொல்லாமல் திரும்பி வந்து விட்டேன். ஆனால் இந்த நான்கு வருடங்களில் அது கொஞ்ச கொஞ்சமாக சரியாகி விட்டது.

இரண்டாவதாக பொது  இடங்களில் அவர்கள் பேசும் விதத்தினை வைத்து மதிப்பீடு செய்கின்றார்கள்.நம்மூரில்  இரட்டை அர்த்த ஜோக்குகளை அதிகம் பெண்கள் தங்கள் பெண் நண்பர்களுடனும் , ஆண்கள் தங்கள் நண்பர்களுடனும் அல்லது காதலியிடமோ மட்டும் தான் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் இங்கே நிலமை தலைகிழானது, போது இடங்களிலும் , வேலை செய்யும் இடங்களிலும் மிக இயல்பாக ஆண் பெண் வித்தியாசமின்றி ஜோக்குகளை பறிமாறிக் கொள்வது வழக்கம். அதுவும் பார்ட்டிகளில் இது மிக அதிகமாக நடக்கும். என் வாழ்வில் நடந்த ஒன்றையும் குறிப்பிடுகின்றேன் . ஒரு வீட்டில் நடந்த பார்ட்டியில் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அக்குழந்தையின் தாய் வரவில்லை தந்தை மட்டுமே வந்திருந்தார். என் தோழி ஒருத்தி எல்லோரும் இருக்கும் அவ்விடத்தில் தன் மார்பகத்தை சுட்டி இதில் பால் இல்லை இருந்திருந்தால் கொடுத்திருப்பேன் என்று சொல்லி சத்தமாக சிரிக்க அனைவரும் கைதட்டி சிரிக்கின்றனர். எனவே பாலியியல் குறித்து மிக வெளிப்படையாகவே   போது இடங்களில் பேசுகின்றனர். பெண்ணின் அங்க வர்ணனைகளை அவளுக்குத் தெரிந்த நண்பர்கள் சொல்லும் போது ஒரு சிரிப்புடன் கடந்து விடுகின்றனர். அதை அவர்கள் அழகை ரசிக்கும் தன்மை என்று மட்டுமே பார்க்கின்றனர். ஓட்டல்களில் நாம் பார்க்கும் பெண் மிக அழகாக இருப்பின் நாம் சென்று நீங்கள் மிக அழகு என்று சொன்னால் thanks என்று சொல்லி சிரிப்பார்கள், அதே நம்மூரில் நடந்தால் செருப்படி தான் கிடைக்கும்.







மேற்சொன்ன இரண்டு செய்திகளில் இருந்து வெளிநாட்டுப் பெண்கள் அனைவரும் மிக யோக்கியமானவர்கள் என்பதை நான் நிறுவ முயலவில்லை. ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரில் போது இடங்களில் பெண்கள் ஆண்களை கூவி கூவி அழைப்பதையும் காண முடியும். சனிக்கிழமை இரவுகளில் அவர்கள் அணிந்து செல்லும் உடைகளைப் பார்த்தால் நம் உணர்வுகளைக் கட்டுப் படுத்தவே முடியாது. அதே போல கடற்கரைகளில்  மிக மிக கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு மிக அங்கும் இங்கும் படுத்துக் கொண்டிருப்பார்கள். எனவே ஆண் வெகு சுலபமாக பெண்ணை நோக்கி ஈர்க்கப் படுகின்றான். பாலுணர்வு எனபதை பசி உணர்வு போல அந்த உணர்வு ஏற்படும்
போது அதனை தீர்த்துக் கொள்கின்றனர். அதை ஒரு வாழ்வியல் சார்ந்த ஒன்றாகப் பார்ப்பதில்லை. சனிக்கிழமை இரவுகளிலும் கொண்டாட்ட காலங்களிலும் மிக மகிழ்ச்சியாக இந்த பாலியியல் உணர்வை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த செயல் தான் நமக்கு மிக அருவருப்பாகவும் அந்தப் பெண்களை விபசாரிகள் என்று எண்ணுவதற்கு காரணமாக அமைகின்றது.

வெளிநாடுகளிலும் நம்மூர் போலவே குடும்ப அமைப்புகள் மிக வலுவாக இருக்கின்றது என்பதனை கேட்க நம்புவதற்கு கடினமாகத் தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை. நம்மூர் வழக்கப்படி பெண்ணை காதலிப்பது என்பதன் அர்த்தமே அவளை திருமணம் செய்து கொள்வதற்கான முதல் படி, மேலை நாட்டில் குறைந்தது இரண்டு மூன்று வருடம் காதலிப்பார்கள் அதற்குப் பிறகு தான் திருமணம் என்ற பந்தததிற்குள் நுழைவதைப் பற்றி யோசிப்பார்கள். அதனாலேயே இங்கே திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

வெளிநாடுகளில் இருக்கும் strip club (ஆடை அவிழ்த்து ஆடும் கூடம்) மற்றும் பெண்களின் உடை ,பழக்க வாழ்க்கங்கள் கொண்டு மட்டும் அப்பெண்ணின் குணத்தினை தீர்மானிக்க முடியாது. அவர்கள் தான் யாரோடு உறவு கொள்ள வேண்டும் எனபதனை தான் தான் முடிவு செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதனை மேல் நாட்டு ஆண்கள் நன்கு உணர்ந்திருப்பதால் தான் இங்கே கற்பழிப்பு சம்பவங்கள் நடப்பது குறைவாக இருக்கிறது. மாறாக வெளிநாட்டுப் பெண்களை அதிகம் கற்பழிப்புக்கு உள்ளாவது அதிகம் இந்தியாவில் நடப்பதற்கான காரணமே நாம் அவர்கள் விபசாரிகளைப் போன்றவர்கள் என்ற பொது புத்தி தான். மேலே குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து அவர்கள் பற்றிய ஒரு பொய்யான பிம்பத்தில் இருந்து நாம் வெளியே வருவோம் என்றும் நம்புகிறேன்.


 இந்தியாவில் விபசாரத்தினை சட்டப்பூர்வமாக்க இந்திய அரசு முயற்சி செய்வது அபாயகரமான விளைவுகளை உண்டாக்கும். கற்பழிப்புகள் வாடிக்கை நிகழ்வாக இருக்கும் நிலையில் இனி கற்பழிக்கும் ஆண்கள்  கற்பழிக்கப்பட்ட அப்பெண் விபசாரி என்று தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். மேலை நாடுகளில் அனைத்துத் துறைகளிலுமே பெண்கள் ஆண்களுக்கு நிகரான அளவில் பணிபுரிகின்றனர். ஆனால் நாம் நாட்டில் பெண்கள் பல துறைகளில் நுழைய முடியாத அளவிற்கு ஆண் ஆதிக்கம் உள்ளது. எனவே ஏழைப் பெண்களையும் தனித்து வாழும் பெண்களையும் கட்டாயமாக விபசாரத்திற்கு தள்ளும் விபரீதம் நிகழும்.

Saturday, November 29, 2014

ஜாக்கியின் வீடியோ பதிவுகள் எப்படி இருக்கு?

ஜாக்கி ஒரு புதிய முயற்சியில் இறங்கி இருக்கின்றார். அதாவது தனது வலைப்பூவில் சினிமா விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தவர் அடுத்து சினிமா விமர்சனங்களை வீடியோ பதிவாக வெளியிட ஆரம்பித்து இருக்கின்றார்.
வீடியோ பதிவுகளில் ஈடுபட்டதன் நோக்கமே தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக என்று குறிப்பிட்டிருக்கின்றார்.தன் திறமைகளை வெளிப்படுத்திக்கொள்ளவும் இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாக கூறியிருக்கின்றார்..வெளிநாடுகளில் தங்களையே சுயமாக விளம்பரப் படுத்திக்க்கொள்ளுதல் என்பது மிக சாதாரணமாக நடக்கும். வெளிநாட்டில் நீண்ட நாட்கள் இருந்த இந்தியர்கள் கூட இதனை செய்வார்கள். அதே போல தன்னை பிராண்ட் செய்து கொள்ளவே இந்த வீடியோ பதிவு என்றும் கூறியிருக்கின்றார். இவ்வளவு உயரிய நோக்கங்கள் கொண்ட இந்த முயற்சி குறித்த நமது கருத்தை பதிவு செய்து அவருக்கு ஊக்கமளிக்கவே இந்தப் பதிவு.

 
இந்தப் பதிவில் ஜாக்கியின் வீடியோ பதிவுகள் குறித்த நிறை குறைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம்.
Pros:நிறைகள்
1. ஒப்பீடு செய்து பார்ப்பது என்பது உலகம் முழுக்கவே இருக்கும் நடைமுறை. ஏற்கனவே இது போன்ற  இருக்கும் ஒருவர் பற்றி பார்ப்போம் நம்ம இமான் அண்ணாச்சி போன்று இருக்கும் நபர் இவர் சாதாரண சென்னை பாஷை போன்றதொரு மொழியில் பேசுவார்.

இவர் படம் குறித்த செய்திகள் மட்டுமே பேசுவார். ஆனால் ஜாக்கியின் வீடியோ பதிவின் சிறப்பே அவருடைய வலைப்பதிவில் எழுதுவது போலவே அந்தப் பட நடிகர் அல்லது இயக்குனர் குறித்த முன் குறிப்பு அல்லது ஜாக்கிக்கும் அந்தப் படத்துக்கும் தொடர்பான ஏதேனும் ஒரு செய்தி சொன்ன பிறகு இப்படம் குறித்து விமர்சனம் செய்வார்.



2. படம் பார்த்த திரையரங்கம் குறித்தும் , ரசிகர்களின் வரவேற்பு குறித்தும் எழுதுவது ஒரு நேரடி ரிப்போர்ட் போன்ற உணர்வைத் தருவது ஜாக்கியின் பதிவின் கூடுதல் சிறப்பம்சம்.

.3. படத்தினைப் பற்றி மிக சுருக்கமாகவும் அனைவருக்கும் புரியும்படியும் ஐந்தே நிமிடத்தில் கூறுவது அவ்வளவு சுலபமல்ல. இருப்பினும் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் விளக்கியிருக்கின்றார். எனவே இந்தப் படத்தினை பார்க்க செல்லும் முன் தியேட்டர் வாசலில் இருந்து கொண்டே உங்கள் மொபைலில் ஜாக்கியின் விமர்சனத்தைப் பார்த்து விட்டு செல்லலாம்.வெளிநாடுகளில் வசிப்பவர்களும் படம் பார்க்கும் முன் அநதப் படம் குறித்த ஜாக்கியின் வீடியோ பதிவைப் பார்த்த பின் பார்க்கலாம்.

Cons:குறைகள் மிகக் குறைவு தான்.

1. இந்த வீடியோ பதிவுகளை ஏதோ 3டியில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏனெனில் திரை முழுவதையும் ஜாக்கியின் முகம் ஆக்கிரமத்திருக்கின்றது. அவரின் கை அசைவுகள் அல்லது முக பாவனைகள் அவர் என்ன பேசுகின்றார் எனபதனை கவனிக்க இயலாதவாறு சில நேரங்களில் இடையூறு செய்கின்றது.

2.மிக இயல்பாகப் பேசப் போவதாகத்தான் சொன்னார். ஆனால் ஏதோ ஒரு அவசரத்தில் பேசுவது போலவும், முகத்தின் உணர்வுகளில்
 (Expressions)
எந்த ஒரு மாற்றமின்றி பேசுவது போல் தான் இருக்கின்றது. எனவே முக மலர்ச்சியுடன் பேசுவது அனைவரையும் ஈர்ப்பதற்கு வசதியாக இருக்கும் அதுவும் குறிப்பாக பெண்கள் இதனை விரும்புவர்.

3.நிறையில் சொன்னது தான் படம் பற்றி பேசுவதற்கு முன் சொல்லும் செய்திகள் சில நேரம் அலுப்பூட்டுவதாக உள்ளது. எனவே அதனை கொஞ்சம் குறைத்து படம் பற்றி சற்று விரிவாகப் பேசலாம்.அதே போல கொஞ்சமாக அரிதாரம் (makeup) போட்டு கொள்ளலாம். ( இதில் specialist ஆன மனுஷுயபுத்திரனிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள்)

மொத்தத்தில் ஜாக்கியின் இந்தப் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Friday, October 31, 2014

டிடிக்கு ( விஜய் டிவி) டூரெட் வியாதியா? (Tourette syndrome)

டூரெட் வியாதி என்பது வித விதமாக உடல் அசைவுகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது. இது ஒரு மூளை தொடர்பான நோய். மருத்துவம் மேற்கொள்ளும் அளவுக்கு ஒரு மோசமான நோய் அல்ல. இருப்பினும் சமூகத்தில் இதைப் போன்ற செயல்களைக் கொண்டவர்களால் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதே உண்மை. கீழிருக்கும் உங்கள் குழாய் காணொளியில் இஙோய் கொண்டவர் போது இடங்களில் செய்யும் சேட்டைகளை தெரிந்து கொள்ளலாம்.



நானே ஒரு முறை பேருந்தில் செல்லும் பொழுது இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் ஒருவர் இது போன்ற செயலினை தொடர்ந்து செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். இந்நோய் பரவலாக மேற்கத்திய நாடுகளிலும் மற்றும் அமெரிக்காவில் மட்டுமே இருக்கும் என்று எங்கள் நரம்பியல் பேராசிரியர் சொல்லி இருக்கின்றார்.  
 ஆனால் சமீபத்தில் விஜய் தொலைக்காட்ச்ச்சியில் காபி வித் டிடி நிகழ்ச்சியினை பார்த்த பொழுதுதான் நம்மூரிலும் இந்நோயால் தாக்கப் பட்டவர்கள் இருக்கின்றார்கள் அதுவும் நிகழ்ச்சியை நடத்தும் டிடி யின் செய்கைகள் டூரெட் நோயின் அறிகுறிகளுடன் மிகவும்
 ஓத்துபோகின்றது என்பதனை தெரிந்து கொண்டேன்.

மேலுள்ள உங்கள் குழாய் காணொளியினையும் ,காபி வித் டிடி யையும் பார்த்தவர்களுக்கு இருவர் செய்கைகளின் ஓற்றுமையினை உணர்ந்து கொள்ள முடியும்.

 இந்த ஒப்பீடு டிடி குறித்து வதந்தி கிளப்ப அல்ல , ஏனென்றால் மற்ற தொகுப்பாளர்களையும் விட டிடி அதிகம் கவனம் பெறுவதற்குக் காரணமே இதை போன்ற உடல் அசை
வுகளும் , தொடர்பே இல்லாமல் அவர் எழுப்புகின்ற குரல் ஒலிகள். ஆக இந்த நோய் போன்ற குறிக்குனங்களே அவர் பிரபலமான தொகுப்பாளர் ஆகக் காரணமாக அமைந்திருக்கின்றது.மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரபலங்கள் உள்ளனர் அவர்களில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர் இசை மேதை மோஸார்ட்.

சினிமா உதவி இயக்குனர்கள் vs ஆராய்ச்சி மாணவர்கள்(PhD Students)

திரைப்படத் துறையும் அறிவியல் ஆராய்ச்சியில் முற்றிலும் வேறுபட்ட இரண்டு துறைகள். இருப்பினும் இவ்விரண்டு துறைகளிலும் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பல்வேறு வகையான ஓற்றுமைகள் உள்ளன. அவை என்ன என்ன என்பதனை சுவாராசியமாகப் பார்க்கலாம்.
ஆசான் தேர்ந்தெடுத்தல்
முதலில் ஒரு உதவி இயக்குனாராக விருப்பப்படுபவர் ஒரு நல்ல இயக்குனரிடம் பணியாற்ற விருப்பப்படுவார். நல்ல இயக்குனர் என்பது அவர் கொடுத்த ஹிட் படங்களின் மூலமே கணக்கிடப்படௌம் என்பது நாம் அறிந்ததே..இதைப் போன்றே அளவுகோல் தான் ஆராய்ச்சி மாணவர்களும் தங்களுக்கான பேராசிரியரை தேர்ந்தெடுக்கும் போது செயல் படுத்துவர். எப்படி எனில் ஒரு பேராசிரியர்களின் ஆய்வுக் கட்டுரை எந்த அளவுக்கு பிரபலமான தான ஒன்றோ அதைப் பொறுத்தே மாணவர்கள் அந்தப் பேராசிரியரின் ஆய்வகத்தில் சேருவது குறித்து முடிவு செய்வார்.

இன்னும் சற்று விரிவாக விளக்க வேண்டுமென்றால் , பேராசிரியர்கள் தங்கள் ஆய்வினை பல அறிவியல் பத்திரிக்கைகளில் வெளியிடுவர். ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு அளவுகோல் உண்டு. உ-ம். science என்ற பத்திரிக்கையில் தான் ஆராய்ச்சினை வெளித்டவர் மிகப் பெரிய பேராசிரியராகக் கருதப் படுவார். எனவே அவரின் ஆய்வகத்தில் பணி யாற்ற நிறைய மாணவர்கள் விருப்பப்படுவார்.(ஆனால் இந்தியாவில் science போன்ற பத்திரிக்கைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதென்பது மிக அபூர்வமாகவே நடக்கும்.)இதை சினிமா மொழியில் சொல்வதென்றால் மணிரத்னம் மற்றும் சங்கரிடம் பணி யாற்ற எப்படி ஒரு ஆர்வமும் போட்டியும் இருக்குமோ அதைப்போலத்தான் இருக்கும்.

 இது வரை நாம் பார்த்தது ஒரு மாணவரோ அல்லது உதவி இயக்குனரோ தனக்கான ஆசானை தேர்ந்தெடுப்பதில் உள்ள ஓற்றுமையினை பார்த்தோம்..இனி இவர்கள் இருவருக்குமிடையே பணி செய்யும் இடத்தில் உள்ள ஓற்றுமைகள் என்னவென்று பார்க்கலாம்.
இரண்டாவது மிக முக்கியமான ஒற்றுமை பணி நேரம். இந்த இரண்டு துறைகளிலுமே வேலை என்பது இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். ஒரு நாளில் சில சமயம் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கடுத்த முக்கிய ஒற்றுமை உடல் உழைப்பு மட்டுமன்றி ,மிகுதியான சிந்திக்கும் திறனும் இருந்தால் மட்டுமே இத்துறையில் சாதிக்க முடியும்.
பணி நேரம்
பட ஷூட்டிங்கின் போது எப்படி உதவி இயக்குனர்கள் தங்களது இயக்குனரின் எண்ணத்திற்கு ஏற்ப காட்சி அமைப்பில் உதவி புரிய வேண்டுமோ அதே வேலையை தான் ஆராய்ச்சி மாணவர்களும் தங்கள் பேராசரியரின் எண்ணத்திற்கு ஏற்ப தங்கள் ஆய்வுகளை சரி வர செய்ய வேண்டும். இது போன்ற வேலைகள் செய்யும் பொழுது திட்டு வாங்குவது என்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே இந்த இரு துறை சார்ந்தவர்களுக்கும் இருக்கும்.
 ஒரு இயக்குனரிடம் பல உதவி இயக்குனர்கள் இருப்பது போல இங்கும் பலவேறு ஆய்வு மாணவர்கள் ஒரு பேராசிரியரிடம் இருப்பர். இதனால் இங்கே பல்வேறு ஈகோ இருக்கும் ,சீனியர்  ஜூனியர் என்ற போட்டியும் அதிகமாகவே இருக்கும்.

 சம்பளம்
 சம்பளம் மிக முக்கியமான அம்சம் , உதவி  இயக்குனர்களும் சரி ஆராய்ச்சி மாணவர்களும் சரி இவர்கள் இருவருக்குமே உழைக்கும் உழைப்பிற்கும் அவர்களின் தகுதிக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படுவதே இல்லை.ஒரு படம் ஒரு கோடி முதல் நூறு கோடி வரை லாபம் ஈட்டும் படத்தின் லாபத்தில் நூறில் ஒரு பங்கு கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஏறக்குறைய இதே நிலைதான் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் , இரவு பகல் பாராமல் உழைப்பதோடு மட்டுமன்றி தங்கள் குடும்பத்திற்கும் நேரம் செலவிடாமல் ஆராச்சிக்கூடமே கதி என்று கிடக்கும் இவர்களுக்கு கிடைப்பதோ மிக சொற்ப ஊதியம் மட்டுமே. 

குடும்பம் மற்றும் திருமணம்


இதன் பாதிப்பு திருமணம் என்ற பந்தம் மிக தாமதமாகவே இந்த இரு துறை சார்ந்தவர்களுக்கும் நடக்கும் ,ஒரு சிலருக்கு அது கிட்டாமல் போவதும் உண்டு.அதே போல முதல் படம் எடுத்துவிட்டுதான் திருமணம் செய்வேன் என்று அனைவரும் சொல்வது போல PhD முடித்து விட்டு தான் திருமணம் என்று இங்கும் அனைத்து மாணவர்களும் சொல்வர்.இது மட்டுமன்றி தாய் தந்தையர்களை மாறிரும் சகோதர சகோதரிகளை கவனிக்காமல் எந்த ஓட்டுதலும் இன்றி தனி மரமாகவே வாழ்கின்றனர்.

அறிவு திருட்டு:
இந்த அறிவு  திருட்டு என்பது மிக சாதாரணமாக எந்த வெட்கமும் இல்லாமல் இந்த இரு துறைகளிலுமே மிக சர்வ சாதாரணமாக நடக்கும். திரைப்பட துறை அதிகமாக ஊடகங்களால் கவனிக்கப் படுவதால் அங்கு நடக்கும் உழைப்பு திருட்டுகள் வெளிச்சத்திற்கு வருகின்றது. ஆனால் அங்கு வெளிச்சத்திற்கு வராமல் நடக்கும்  திருட்டுகளும் அதிகம். சமீபத்திய மிக முக்கிய உதாரணம் கத்தி பட விவகாரம். ஓராண்டுக்கும் மேலாக கத்தி படத்திற்கான மூலக் கதையினை தயார் செய்த கோபியினை முருகதாஸ் ஏமாற்றியது அனைவரும் அறிந்ததே.

இ தைப் போன்ற ஏராளமான அறிவு திருட்டுகள் அறிவியல் துறைகளிலும் நடக்கின்றன. ஆனால் அவை வெளிஉலகிற்கு தெரிவதில்லை. இருப்பினும் இது நடப்பது மாணவர்களுக்கு மட்டுமன்றி அறிவியல் அறிஞர்களுக்கும் நடக்கும்.எப்படி ஆப்பிள் மொபைல் போன் போல சாம் சங் வடிவமைத்ததோ அதே போல மற்ற அறிஞரின்

ஐடியாவினை உருவி இவர்களே உருவாக்கிது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துவர்.

வாழ்க்கை நிலை: (வழுக்கை நிலை )
 சினிமாவில் ஒரு படம் இயக்குவதற்கான வாய்ப்பு என்பது அனைத்து இயக்குனர்களுக்கும் கிடைக்காது அது போல தான் PhD படித்த அனைத்து மாணவர்களும் தனியான அறிவியல் அறிஞர் ஆக முடியாது. போட்டி மிக அதிகம். உதவி இயக்குனர்களாகவே தங்கள் காலம் முழுக்க இருப்பது போல காலம் முழுக்க ஏதோ ஒரு ஆய்வுக் கூடத்தில் ஒரு அறிஞரிடம் உதவியாளராகவே தங்கள் காலம் முழுக்க இருப்பவர்களும் ஏராளம். அடைப்புக் குறியில் வழுக்கை நிலை என்று குறிப்பிட்டதற்கான காரணம் அதிகமாக சிந்தித்து சிந்தித்து இரு துறைகளிலும் ஏராளமான வழுக்கைத் தலையர்கள் இருப்பார்கள்.
ஆர்வம்.

இந்த இரண்டு துறையை சார்ந்தவர்களுக்கும் சமூகத்தில் மிகுந்த மதிப்பு உண்டு. இதனாலேயே மிக அதிகமான பேர் இவ்விரண்டு துறைக்கும் வரத் துடிக்கின்றனர். வாய்ப்பு கிடைத்தவர்கள் சாதிக்கின்றனர். மற்றவர்கள் கனவிலே காலத்தினை கழிக்கின்றனர் .

மேற்கண்ட உதாரணகள் மூலம் இவ்விரண்டு துறை சார்ந்த் மனிதர்களின் வாழ்வில் எவ்வளவு ஆச்சர்யமான ஒற்றுமைகள் உள்ளன என்பதனை பதிவு செய்துள்ளேன்.


Friday, October 24, 2014

பதிவர் வியாதி (Blogger Syndrome)

சினிமா ரசிகர்கள். அரசியல் தொண்டர்கள் போல பதிவர்களுக்கும் பல தனித்தன்மைகள் உள்ளன. அதனை பதிவர் வியாதி அல்லது blogger syndrome என்றும் அழைக்கலாம்.

உள்ளூர் அரசியல்,சினமா, வியாபாரம் தொடங்கி உலக அரங்கில் நடக்கும் சினமா ,அரசியல் பற்றி பல்வேறு செய்திகளை மற்ற பதிவுகளை படிப்பதன் மூலம் தெரிந்து வைத்த்திருப்பதனால் பதிவுலகில் இயங்காத மற்றவர்களை  முட்டாள்கள்  அல்லது உலக விஷயங்களில்  ஞானம் இல்லாதவர்கள் என்று நினைப்பதில் தொடங்கும் இந்த நோய் பல தளங்களிலும் இதே கருத்தினை கொண்டிருக்கும் நோய் முற்றிய நிலை அடையவும் கார்ணமாக் அமைகின்றது.

முதலில் சினிமாவில் இருந்தே தொடங்குவோம். உலகப்பட பதிவர்கள் ஜாக்கி முதல் கருந்தேள் வரை அனைவரின் பதிவுகளையும் விடாமல் படித்ததானால்   தமிழ் சினமா குப்பை என்ற  முடிவுக்கு வந்தது. மலையாள சினிமாவும் ஈரானிய சினிமாவும் மட்டுமே உலகில் மனிதன் பார்க்கத் தகுந்த படங்கள் என்ற  முத்த்திரையே  குத்தி விட்டனர். ஆனால் நிஜம் வேறு மாதிரியா உள்ளது. என்னுடன் பணியாற்றும்
ஈரானிய நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் பாலிவுட் சினிமா பற்றி சிலாகித்து கூறும் போது தான் தெரிந்தது, நாம் நினத்த்துக் கொண்டிருப்பது போல அவர்கள் தங்களது சினிமா மட்டுமே உலகில் உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பதும் fantasy படங்கள் அவர்கள் மிகவும் ரசிக்கின்றார்கள் என்பதும்  விளங்கியது.

மலையாள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதனை விரிவாக் சொல்ல வேண்டியதில்லை. விஜை கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது தவிரி விழுந்த சேட்டனின் செயல் மூலம் தமிழ் சினிமாவே அவர்களின் முதல் சாய்ஸ் ஆக உள்ளது எனபதனை விளங்கிக் கொள்ளலாம். தமிழ் சினிமா மட்டுமன்றி தமிழ் தொலைக்காட்சிகளையும் அவர்கள் விரும்பி பார்ப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலைப் பொருத்தவரை பதிவர்கள் அனைவரும் சினிமாவைப் போலன்றி ஒவ்வொருவருமே தனித்தனி அடையாளங்களைக் கொண்டு குழுவாக இயங்கி வருகிறனர். இதில் எனக்குத் தெரிந்து மூன்றே அணிகள் தான் உள்ளன. ஒன்று திராவிட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் (உ-ம் லக்கி யுவகிருஷ்ணா, இரண்டாவது திராவிட அரசியல் நிலப்பட்டினை முழுவதும் நிராகரிப்பவர்கள் உ-ம். திருமுருகன் காந்தி ,மூன்றாவது இடது சாரிகள் அதாவது பாரதிய ஜனதா மற்றும் அதிமுக வை ஆதரிப்பவர்கள்.(உ-ம் பத்ரி)

இலக்கிய உலகம் அரசியல் அரங்கைத்தை விட மிக மோசமாக உள்ளது. ஏகப்பட்ட கோஷ்டிகள் , தினம் ஒரு பிரச்சனை ,தனி மனித தாக்குதல் என்று பல பிரச்ச்னைகள் இருப்பதால் நாம் தினமும் பிசியாக இருக்க உதவுகின்றது. இவை அனைத்தும் இருந்தாலும் நாம் சிந்தனைத் தெளிவடைய எழுத்தாளர்களின் பல முக்கியப் பதிவுகள் காரணம்.
இப்படி பலதரப்பட்ட பதிவுகளை படித்து மண்டை வீங்கி மற்ற மனிதர்களில் இருந்து விலகி வெறிரு கிரக வாசிகள் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் மேற்கூறிய அனைத்தும் உங்கள் மத்திலும் இருந்தால் நீங்களும் பதிவர் நோயால் தாக்கப்பட்டிருக்கலாம். இந்த நோய்க்கு காலம் தான் மிக சரியான மருந்து.

Monday, July 14, 2014

மீண்டும் கதை வசனம் கேட்டல்


கதை வசனம் கேட்பது என்பது மிகப் பிரபலாமான ஒன்றாக தொன்னூறுகளின் தொடக்கம் வரை பிரபலாமாக ஒன்றாக இருந்தது.  ஆனால் தொலைக்காட்சியின் வருகைக்குப்பின் இதன் வீழ்ச்சியினை  ஆரம்பமானது. மேலும் டி.ராஜேந்தர் அவர்களின் படங்களுக்கான மவுசு குறைந்த பின்னர் இப்பழக்கமும் முற்றிலும் இல்லாமலாகிவிட்டது.



ஏனேனில் டி.ஆர்.படங்களில் வசனங்களுக்கு அதிக முக்கியத்த்துவம் அளிக்கப்பட்டிருக்கும். எனவே அதனை விரும்பி கேட்கும் பழக்கம் இருந்து வந்தது. டி.ஆர். காலத்திற்கு முன்பே சிவாஜி படங்கள் குறிப்பாக பாலும் பழமும் ,தில்லானா மோகனாம்பாள் மாறிரும் எம்.ஜி.ஆரின் மாட்டுக்கார வேலன் போன்ற படங்களின் கதை வசனம் கேட்டுக்கொண்டிருந்தனர்.அதிலும் வானொலியில் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை ஒலி பரப்பியதனால் இப்பழக்கம் மிக நெடுங்காலம் மக்களின் வாழ்க்கையில் இருந்து வந்தது.

ஆனால் பின்னர் வந்த திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளுக்கும், கதையையும் மீறி படங்கள் அவை எடுக்கப்படும் விதங்களுக்காகவே உ-ம்: வெளிநாட்டுக்காட்சிகள், மிக அதிகப்படியான ஒப்பனைகள்,பார்வையாளனை பிரமிக்க வைக்கத்தக்க கேமரா கோணங்கள், காதல் காட்சிகளின் நெருக்கம்

போன்றவைகள் நிறைந்த படங்களின் வருகையினால் கதை மற்றும் வசனத்தின் பங்கு மிகவும் குறைந்து விட்டது.



மீண்டும் இரண்டாயிரத்த்தின் தொடக்கத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்த்துவம் அளிக்கும் படங்களின் வருகையினால் கதை வசனம் கேட்பது சிறிது அதிகரித்திருக்கின்றது. இப்படங்களில் கதை எனப்து இல்லாவிட்டாலும் கூட வசனகளுக்காகவே அதிகம் ரசிக்கப்படுகிறன.




என்னுடைய விருப்ப பட்டியலில் உள்ள படங்கள் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வ.வா.சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் சுந்தர் சி. யின் படங்களான தீயா வேல செய்யனும் குமார் , மருதமலை இன்னும் பிற.(கரகாட்டகாரன் கூட இந்தப் பட்டியலில் சேர்க்க மிக தகுதியான ஒன்று)





தற்பொழுது உள்ள அதி நவீன மொபைல்  ipod இவைகளில்  ஏதேனும் ஒரு படத்தினை பதிவிறக்கி வைத்துக் கொண்டால் பயணத்தின் போதோ வேலை செய்யும் போதோ கேட்டுக் கொண்டே வேலை செய்யலாம்.




Friday, June 27, 2014

தொக்கணமும் கைரோபதியும் ஒன்றே...

தொக்கணம் என்றாலே என்னவென்று தெரியாது இதில் கைரோபதி என்ற புதிய வார்த்தையையும் இணைத்து என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.

கடந்த இரண்டு வாரமாக கடுமையான தோள்பட்டை வலி, இது வரை மூன்று மருத்துவர்களைப் பார்த்து விட்டேன். வலி குறையவே இல்லை. சினிமா வைத்தியமான உற்சாக பானம் அருந்தியும் வலி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் நண்பர் ஒருவர் கைரோபதி வைத்தியம் பாருங்கள் நல்ல தீர்வு கிடைக்கும் என்றதனால் , கைரோபதி என்றால் என்ன என்று அறிந்து கொள்ள விக்கிபீடியாவில் படித்ததும் உடன் நினைவுக்கு எனக்கு நினைவுக்கு வந்தது தொக்கணம் என்ற சித்த மருத்துவ சிகிச்சை முறை.

தொக்கணம் என்பதன் அர்த்தம் மிக எளிது. தொக்கு+ அணம். அதாவது தொக்கு என்றால் நம்முடைய தோல் (skin), அணம் என்றால் பொருந்தி செய்யும் முறை. இப்பொழுது இரண்டு வார்த்தைகளையும் இணைத்தால் தோலினைப் பொருந்தி செய்யும் முறை என்று பொருள்படும். இந்த சிகிச்சை முறை சித்த மருத்துவ பாடத்திட்டத்தில் அறுவை மருத்துவத்துடன் இணைத்து வைக்கப் பட்டிருப்பதனாலேயே எலும்பு சமந்தப்பட்ட நோய்களுக்கு இது அவசியம் என்று புரிந்து கொள்ளலாம்.

சித்த மருத்துவத்தில் எந்த ஒரு குறிப்பினையும் மேலோட்டமாகவோ அல்லது உரிய விளக்கங்கள் இல்லாமலோ எழுதவதில்லை.  தொக்கணத்திணையும்  எண் வகையாகப் பிரித்து ஒவ்வொன்றிணையும் செய்யும் முறை மற்றும் அது எந்த வகையான நோய்க்கு ஏற்றது என்றும் மிகத் தெளிவாக கூறியுள்ளனர். ஆயுர்வேத மருத்துவத்திலும் இதனைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றது எனினும் அது நான்கு வகையுடன் மட்டுமே உள்ளது.

இவை மட்டுமன்றி தொக்கணத்திணை தகுந்த மருந்து கலந்த எண்ணைய் சேர்த்து செய்யும் பழக்கமும் உள்ளது. இந்த  முறையினை ஒகேனக்கல் அருவி மற்றும் பாபனாசத்தில் உள்ள அகத்தியர் அருவியில் பயிற்சி பெற்ற maaseures என்று சொல்லக்கூடிய ஆட்கள் சுற்றுலா பயணிகளுக்கு செய்வதைக் காணலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிகிச்சை முறையினை நாம் சரிவரப் பயன்படுத்துவதில்லை. ஆனால் மேற்குலகம் கைரோபதி  என்ற பெயரில் நம்முடைய தொக்கண சிகிச்சை முறையினை சற்று மேம்படுத்தி  மக்களுக்கு பயனளிக்கும் வகையில் என்பு மற்றும் மூட்டு சார்ந்த நோய்களுக்கு தீர்வளிக்கின்றனர்.

இந்தப் பதிவின் மூலம் சொல்ல வரும் செய்தி என்னவென்றால்  நம் மண் சார்ந்த மருத்துவத்தின் வழியாகவே சிகிச்சை எடுத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். தொக்கண சிகிச்சையானது தாம்பரத்தில்உள்ள தேசிய சித்த  மருத்துவ மனையிலும் மற்றும் அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா மருத்துவ மனையிலும் வழங்கப்படுகிறது. 

Friday, April 4, 2014

Bad boy bubby 18+ படம்

1993ல் வெளிவந்த இத்திரைப்படத்தினை இரண்டாம் முறையாக நேற்று  பார்த்தவுடன் இதனைப் பற்றி சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதே இப்பதிவன் நோக்கம்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த போது இதனை ஒரு மேட்டர் படம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால்  நேற்று IMDBல் அதிக ரேட்டிங் செய்யப்பட்ட படங்களின் இந்தப் படத்தின் பெயரைக் கண்டவுடன் அப்படியே shock ஆயிட்டேன். அங்கே படம் பற்றி எழுதியிருக்கும் விமர்சனங்களில் இப்படத்தினைக் காவியம்என்றும், மிக மிக அரிதானப் படைப்பு என்று பெரும்பாலானோர் எழுதியதைக் கருத்தில் கொண்டு மீண்டும்  இப்படத்தினைப் பார்த்தேன்.



படத்தின் கதை பிறந்ததிலிருந்து முப்பது வருடங்களாக வீட்டில் அடைக்கப்பட்டு வளர்ந்த ஒருவன் அதிலிருந்து மீண்டு வந்து வெளி உலகில் அவன் செய்யும் அட்டகாசங்களின் தொகுப்பே இப்படம்.

படம் முழுக்க நகைச்சுவையும் காமக் காட்சிகளும் நிரம்பி இருக்கிறது. இரண்டாம் முறைப் பார்க்கின்ற போது காமக் காட்சிகள் எவையும் திணிக்கப்பட்டவையாகத் தெரியவில்லை. எனவே இப்படத்தினை நம் வயதின் வெவ்வேறான கால கட்டத்தில் பார்க்கும் போது படத்தில் சொல்ல வரும் செய்தியினை உணர முடியும்.

எச்சரிக்கை;  இப்படத்தினை குடும்பத்துடனோ அல்லது பொது இடத்தில் உட்கார்ந்தோ பார்க்க முடியாது என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அதையும் மீறி பார்த்தால் தர்ம அடி தான் விழும் என்பதை கவனித்தல் கொள்ளுங்கள்.

Tuesday, March 25, 2014

ஜூனியர் விகடன் கழுகு காக்காவாக மாறியது

ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் வரும் மிஸ்டர் கழுகு பகுதி மிக பிரபலமான ஒன்று என்பது நெடுங்காலமாக அப்பத்திரிக்கையினை வாசித்து வருபவர்கள் நன்கு அறிவர். அரசியல்வாதிகள் ,நடிகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் குறித்த ரகசிய செய்திகளினை மிஸ்டர் கழுகு பகுதியில் வழங்கி வந்தனர். எனவே இத்த்னைப் படிக்க மிகவும் ஆர்வமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்.இப்பகுதியில் அரசியல் மட்டத்தில் நடைபெறும் செய்திகளை முன்கூட்டியே  மிஸ்டர் கழுகார் மூலம் தெரியப்படுத்துவதினாலும் அவை அப்படியே நிகழ்வதாலும் அதற்கு ஒரு நம்பகத் தன்மை இருந்தது.

கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் மாநிலத்தில் நடக்கும் கட்சிக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் எழுதுவதினை தலையாப் பணியாக செய்து வருகின்றது. தமிழக்த்தில் மின் தட்டுப்பாடு நிலவிய தி.மு.க. ஆட்சி காலகட்டத்தில் ஜெ.ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் இருந்து மின்சாரம் தருவித்து தமிழகத்தினை இருளில் இருந்து மீட்பார் என்று ஜெயலலிதாவே சொல்லாத ஒன்றை இவர்களாகவே கூறி மக்களை ஏமாற்றினர்.

கலக்குரல் பதிவில் கூறியது போல இவர்கள் பத்திரிக்கையின் நிலையக் கலைஞரான தமிழருவியை கருவியாகப் பயன்படுத்தி பா.ஜ.க.தலமையில் கூட்டணி அமைய இவர்கள் எழுதிய பொய்களுக்கு அளவே இல்லை. ஜெ.வை குழிப்படுத்த விஜயகாந்துக்கு செல்வாக்கே இல்லை என்று போலியான ஒரு கருத்துக் கணிப்பினை வெளியிட்டனர்.

அழகிரியை ஜெ.வுக்கு பயந்து நடுங்கும் ஆடு போன்று உருவகப்படுத்துவது ,ஆனால் அதே அழகிரி தி.மு.க. வினை எதிர்த்தால் புலி போல உருவகப்படுத்த்துவது என பிழைப்புவாதம் செய்தே மிஸ்டர் கழுகு இன்று காக்காவாக மாறிக் கொண்டிருக்கிறது.

இன்னுமொரு உதாரணம் சுப்ரமணியசாமி , இவரை அரசியல் கோமாளியாக தமிழக மக்களுக்கு அடையாளம் காண்பித்ததில் ஜூ.வி.முக்கியப் பங்குண்டு. ஆனால் அதே சுப்ரமணியசாமி பா.ஜ.க. ஆதரவாளராக மாறியபின் ஒரு சக்தி வாய்ந்த அரசியல்வாதியாக முன்னிலைப்படுத்துகின்றனர்.

நடுநிலையான செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த மிஸடர் கழுகு பகுதியில் தற்பொழுது முழுக்க முழுக்க கருணாநிதி குடும்பத்தின் செய்திகளை திரித்து கூறுவதேயே தொழிலாகக் கொண்டுள்ளது.எனவே இனி மிஸ்டர் க்ழுகார் பகுதிக்கு மிஸ்டர் காக்கா என பெயர் சூட்டி மகிழ்வோம்.

ஏன் இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலையில் இறங்கி இருக்கிறார்கள் என்று பார்த்தால் இந்தியாவினை காங்கிரசின் ஊழல் ஆட்சியில் இருந்து விடுவிக்கவே இப்படி கழுகார் காக்காவாக மாறி இருப்பதாக தப்பு கணக்கு போட வேண்டாம்.இதன்  பின்னணியில் ஒரு மிகப்பெரிய சுய நல அரசியலே மேலோங்கி இருக்கின்றது.

அது என்னவென்றால் தொலைக்காட்சி ஆசை. விஜய் தொலைக்காட்சியின் மக்கத்த்தான வெற்றியும் தந்தி ,புதிய தலைமுறை போன்ற நாளிதழ்கள் தங்களுக்கென  தனி தொலைக்காட்சி வைத்திருப்பதனால் இவர்களுக்கும் அந்த ஆசை வந்து விட்டது இதனை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கழுகு காக்காவாக நரேந்திர மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் கரைந்து கொண்டிருக்கிறது.

Friday, March 21, 2014

ராகுல் காந்தியை எதிர்த்து சிவகார்த்திகேயன் போட்டி :

நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் துணைத்த்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் குமார் விஸ்வாஸ் தோற்றத்தில் சிவகார்த்திகேயனைப் போன்றே இருப்பார்.

அரசியலில் மிக அதிகம் பிரபலமற்ற இவரை போட்டியிட தெரிவு செய்ததற்கான காரணம் இவரும் நம் சிவகார்த்திகேயனைப் போன்றே மேடைகளில் நகைச்சுவையாகப் பேசி மக்களிடம் எளிதில் சென்றடையக் கூடிய திறமைசாலி. கடந்த மூன்று மாதமாக தனது தொகுதியான ரேபரேலியில் தங்கி ராகுலை தோற்கடிக்க தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.


சிவகார்த்திகேயனும் வ.வா.சங்க திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தரமான இடத்தினை பிடிக்க முயன்று கொண்டிருக்கிறார். 

வரும் கால்த்தில் சிவா கார்த்திகேயனும் எதேரும் ஒரு முக்கிய அரசியல் பிரபலத்தினை எதிர்த்து போட்டியிடும் காட்சியினை நாம் காண நேரிடலாம்.

Wednesday, March 12, 2014

ப்லேக்ரிஸம் என்னும் வல்காரிசம்





மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய `அமைதிப்படை அமாவாசைநபர் அடுத்த்தவர்களின்  பதிவுகளையே காப்பி அடித்து பத்திரிக்கைகளில் வெளியிடுவது ,பத்திரிக்கை செய்திகளை காப்பி அடித்து தனது பதிவாக வெளியிடுவது  என பதிவுலக்த்தில் தனி ராஜாங்கமே சில காலம் நடத்திக் கொண்டிருந்தார்.
 அறிவியல்  துறையிலும் இதனைப் போன்ற அறிவுத் திருட்டுகள் மிகவும் சாதாரணமாக நடக்கின்றது. உயிரினங்களில் உள்ள ஜீன்களில் உள்ள டி.என்.எ.வின் அமைப்பினைக் கண்டுபிடித்த்தில் நடந்த திருட்டு இன்றும் அறிவியலாளர்களால் மறக்க முடியாத ஒன்று.டி.என்.எ. அமைப்பினைக் கண்டுபிடித்த மூவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த மூவரும் இவர்களின் கண்டுபிடிப்புக்கு முக்கிய ஆதாரமான ஒன்றினை மாற்றோர் விஞ்ஞானி தனது உரையின் போது வெளியிட்ட படத்தினை அடிப்படையாகக் கொண்டு தங்கள் ஆய்வினை முடித்து நோபல் பரிசினை வென்றனர். தகவல் தொழில் நுட்பம் வளராத அக்காலத்தில் நடந்த இந்த அறிவுத் திருட்டு இன்றும் உலகில் பல்வேறு முன்னணி ஆய்வுக் கூடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
திரைஉலகம் முழுக்க முழுக்க ப்லேக்ரிஸம் ஆக்கிரமித்த்துக் கொண்டுள்ளது.உலக இயக்குனர் ,உலக நடிகர் தொடங்கி புதிதாக அறிமுகமாகும் இயக்குனர் வரை அனைவருமே இந்த காப்பி அடிக்கும் பணியினை செய்கின்றன்ர். the taking of pelhm 123 என்னும் ஆங்கிலப் படத்தில் வரும் இறுதிக் காட்சியினை நம் உலக் நாயகர் உல்டா பண்ணியிருப்பார்.அந்த கழுத்து அசைவு முக பாவனை என ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் உன்னைப்போல் ஒருவன் படத்தில் அடித்திருக்கும் காப்பி மறக்கவே முடியாது.


ப்லகரிஸத்தினை  நான் வல்கரிஸம் என்று குறிப்பிடக் காரணம்  அது அடுத்தவரின் உழைப்பு, எண்ணம் ஆகியவற்றை திருடியதோடு மட்டுமன்றி அது சமூகத்தல் ஓரு தவறான முன்னுதாரணத்தினை ஏற்படுத்துகின்றது.

வெற்றிக்கான ஓரு குறுக்கு வழியாக இதனைப் பயன்படுத்துவதினால் மற்றவர்களக்கு ஓரு தவறான முன்னுதாரணத்தினை உண்டாக்குகின்றது. 


இத்னால் அனைத்து துறைகளிலும் சுயமாக சிந்திக்கக்கூடிய திறன் கொண்ட ஒரு சமூகத்தினை உருவாக்க இயலவில்லை.

ப்லேக்‌ரிஸத்தினை ஒரு அசிங்கமான அல்ல்து ஒரு அவமானமான செயல் என்று உணர்ந்தால்தான் இத்தனை மூறிரிலும் ஒழிக்க முடியும்.

Thursday, March 6, 2014

கேஜ்ரிவாலின் மொழி தீவிரவாதம்

இந்த நூற்றாண்டின் நம்பிக்கைக்குரிய தலைவராக உருவெடுத்துள்ள கேஜ்ரிவாலின் உரைகளையும் பேட்டிகளையும் கேட்க ஆர்வம் மிகுந்த தென்னிந்தியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

கட்சி  ஆரம்பிக்கும் முன்னர் ஆங்கிலத்தில்பேசிக் கொண்டிருந்தவர், ஆம் ஆத்மி ஆரம்பித்த பின்னர் இந்தியில் மட்டுமே பேசுகின்றார்.

என.டி.டிவி யில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இந்தியயில் மட்டுமே பதிலளிப்பதனை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த பழக்கம் ஆங்கிலமே தெரியாத வட இந்தியர்களுக்கு சரியான ஓன்றாக இருக்கலாம். ஆனால் தேசிய அளவிலானசெய்திகளை அறிந்து கொள்ள ஆர்வமுடையவ்ர்களுக்கு கேஜ்ரிவாலின் கருத்துகளை அவருடைய பேட்டியின் வாயிலாக   அறிந்து கொள்ள  பெரும் தடையாக இந்தி  மொழி விளங்குகின்றது.  

நமக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கிடையில் புதிதாக ஓரு மொழியினைக் கற்றுக் கொள்ள நேரமோ பொறுமையோ இல்லை.  

ஆங்கில ஊடகங்களில் விவாத நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் அனைவரும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகின்றனர். ஆங்கிலமே தெரியாத ஓரு சிலர் மட்டுமே இந்தியில் பேசுகினறனர். இந்நிலையில் நன்கு ஆங்கிலம் தெரிந்த கெஜ்ரிவால்  ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலம் இந்தியில் மட்டும் பதிலளிப்ப்து என்று  தீவிரமாக இருக்கின்றார்