Wednesday, December 21, 2011

கம்யூனிச கலையரசன் சித்தர் கலையரசனாக மாறியது ஏன்



ஏழாம் அறிவு ஏற்படுத்திய தாக்கத்தினால் பதிவர் `கம்யூனிச` கலையரசன் சித்தர் ஆராய்ச்சியின் பக்கம் தன கவனத்தை திசை திருப்பி தொடர்ந்து தவறான தகவல்களை எழுதி வருகின்றார். அவரின் சமீபத்திய பதிவுகளான அகத்தியர்,திருமூலர் மற்றும் போகர் போன்றோர் தமிழர்களே அல்ல என்றும் குறிப்பாக அகத்தியர் ஒரு சீனர் என்பதற்கு அவர் குறிப்பிடும் மிக முக்கிய உதாரணம் அவர் குள்ளமான உருவ அமைப்பினைக் கொண்டவர் என்பதாகும்.இந்த ஒரு சின்ன உதாரணம் போதும் இவரின் கட்டுரைகள் எவ்வளவு பொய்யான செய்திகளை கொண்டு எழுதப் பட்டிருக்கின்றது என்றும் மிகத் தெளிவாகவே விளங்கும்.

இதற்கு மிகச் சரியான விளக்கம் திருவள்ளுவர் படம்.உலகில் யாருக்குமே திருவள்ளுவர் எப்படி இருந்திருப்பார் என தெரியாது அப்படி இருக்கையில் மிகக் கற்பனையாக வரையப் பட்ட உருவமே தற்பொழுது நம்மிடம் இருக்கும் திருவள்ளுவர் படம். அடுத்து கண்ணகி சிலை ,இதற்கான உருவ அமைப்பும் ஒரு நடிகையினை முன் மாதிரியாகக் கொண்டே உருவாக்கப் பட்டது. இதைப் போன்றே தான் சித்தர்களின் படங்களும், கற்பனையாக வரையப்பட்ட அந்தப் படங்களைக் கொண்டு அவர் சீனர் என்று செய்யும் வாதம் அறிவு முதிர்ச்சி அற்ற வீணர்களின் வேலையாகவேக் கருத வேண்டும். எனினும் இதைப் போன்ற தவறான பரப்புரைகளை வேரறுக்க சித்த மருத்துவத்தின் தொன்மையினையும் அவற்றின் தனிதன்மையினையும் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு எளிய முறையில் உரிய விளக்கங்களுடன் பதிவு செய்து இருக்கின்றேன்.


பொதுவாகவே தமிழகத்தில் தமிழின் மிகப் பெரிய சொத்தாக இலக்கியமே கருதப் படுகின்றது. அதை விடவும் மிக முக்கியமான உயர்ந்த இடத்தில் இருப்பது தமிழர்களின் கண்டுபிடிப்பான சித்த மருத்துவம் என்பது அதனை முழுவதும் அறிந்தவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். சித்த மருத்துவம் என்பது வெறுமென மருந்துப் பொருட்களின் தயாரிப்பு குறித்து மட்டுமே எழுதியிருப்பதாகவே பலரும் புரிந்து வைத்திருக்கின்றனர். சித்தர்கள் வாழ்வியல முறைகள் மனித உடல் தத்துவ விளக்கங்கள்,அன்றாடம் பேணப்படவேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றி நாளொழுக்கம் (Personal Hygine) என்று மிக விரிவாகவும் ,உலகம் தோற்றம் பற்றிய குறிப்புகளைப் பற்றியும் மிக தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றனர்.அவற்றில் மிக முக்கியமாக துயில் எழும் நேரம்,பல் துலக்கும் முறை,பருவ நிலைக்கேற்ற உணவு முறைகள் என்று எண்ணிலடங்கா செய்திகளை சொல்லி இருக்கின்றனர்.



அடுத்ததாக நோய் கணிக்கும் முறை : பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நோய்களை வகை படுத்தியும் அவைகளை கணிக்கும் முறைகுறித்தும் எழுதியவர்கள் சித்தர்கள் மட்டுமாகவே இருக்க முடியும். உதாரணத்திற்கு சுரம் (fever ) 64 வகையாகப் பிரித்து அவை ஒவ்வொன்றுக்கும் எப்படிப்பட்ட குறிகுணங்கள் இருக்கும் என்றும் எழுதி வைத்திருக்கின்றனர். உடம்பில் தோன்றும் மொத்த நோய்களின் எண்ணிக்கை 4334 என்று உறுதி பட கூறிய மருத்துவம் உலகிலேயே சித்த மருத்துவம் மட்டும்தான். இப்படி நோய்களை வகைபடுத்திய்தோடு மட்டுமின்றி எந்த வகையான் நோய் மருந்தினால் தீர்க்க முடியும் எந்த வகையான நோய் மருந்தினாலும் குணப் படுத்தவே முடியாது என்றும் குறிப்பிட்டு பழங்காலத்திலேயே மருத்துவ இயலின் எல்லையினையும் ஒளிவு மறைவின்றி உலகுக்கு சொன்ன மருத்துவம் சித்த மருத்வமாக மட்டுமே இருக்க முடியும்.


நோயை வகைப் படுத்தியவர்கள் அதனை கணிக்கும் முறைகுறித்து மிக எளிய சோதனைகளில் விளக்கி இருக்கின்றனர். குறிப்பாக நோயாளின் உமிழ்நீர் விழும் அளவினை பொருத்தும், சிறுநீரில் எண்ணையினை சிறிதளவு விடும் பொழுது ஏற்படும் தோற்றங்களிலிருந்து அது வாதம் சார்ந்த நோயா அலது பித்தம் சார்ந்த நோயா என்றும் வகைப் படுத்தி இருக்கின்றனர்.இது மட்டுமின்றி நாடி பார்த்து நோய் கணித்தல்,மணிக்கடை நூல் என்ற மணிக்கட்டின் (wrist ) அளவினைக் கொண்டு என்ன வகையான் நோய் என்று கணித்தல் என்று இன்னும் பல முறைகளை கூறி இருக்கின்றனர் .இவற்றில் நாடி பார்த்தல் தவிர மற்ற எவையும் எந்த முறையிலும் இல்லவை இல்லை .எனவே சைனீஸ் மருத்துவ முறைக்கும் சித்த மருத்துவத்துக்க்கும் எள்ளளவும் தொடர்பே இல்லை.



இவை மட்டுமல்லாமல் regenrative medicine என்று சொல்லப்படும் நீண்ட நாள் நோய் நொடியின்றி வாழும் முறையான காய கல்ப சிகிச்சையினை பல நூற்றாண்டுகளுக்கும் முன்பே அறிமுகப்படுத்தியப் பெருமை சித்தர்களையே சேரும். Massage therapy என்பதனை தொக்கணம்(தோல் +அணம்-தோலினை பொருந்திச் செய்யும் முறை) என்ற பெயர் கொண்டு அவற்றில் பல்வேறு முறைகளை அறிமுகப்படுத்தி நோய்க்குத்த் தகுந்தாற்போல் தொக்கணம் செய்யும் முறையினையும் தெளிவுபட எடுத்துக் கூறியவர்கள் சித்தர்களே ஆகும். ஆனால் ஆயுர்வேத மற்றும் இதர மருத்துவ முறைகளில் இதைப் போன்றதொரு தொக்கனத்தினை வகைபடுத்தி செய்யும் முறை இல்லவே இல்லை.இது போன்ற சான்றுகளின் மூலம் சித்தா மருத்துவம் எவ்வவளவு தனித்தனிமை கொண்டது என்பதனை புரிந்து கொள்ளலாம்.


மேலே உள்ள செய்திகளின் மூலம் சித்த மருத்துவம் தமிழரின் தனித்தன்மை வாய்ந்த மருத்துவம் மட்டுமின்றி ,அனைத்து சித்தர்களுமே தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் எனபதனையும் விளங்கி கொள்ளலாம்.பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று இருந்ததாகவும் அங்கு வந்து பல்வேறு நாட்டு அறிஞர்கள் சேர்ந்து சித்த மருத்துவத்தை
உருவாக்கி இருக்கலாம் என்ற கலையரசனின் முன்முடிவு மிகவும் தவறுதலானதாகும் .இதைப் போன்றதொரு செய்தி எங்குமே பதிவு செய்யப் படவில்லை.மாறாக குறைந்து 15 வருடங்களுக்கு முன்பு ஒரு அரசு சித்த மருத்துவக் கல்லூரி பழனியில் இருந்தது.அதனயே சென்னைக்கு இடமாற்றி அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா மருத்துவமனை வளாகத்தில் அமைத்தனர்.


எனது அடுத்தப் பதிவில் மருந்து தயாரிக்கும் முறை பற்றியும் குறிப்பாக தங்க பற்பம் குறித்த தவறான பரப்புரை பற்றிய உண்மைகளையும் பதிவிட இருக்கின்றேன்.



Thursday, December 1, 2011

கவிஞர் யுகபாரதி அவர்கள் தனுஷ் மேல் கோபம் கொள்வது சரியா?




இன்று என்னுடைய வங்காள நண்பன் கொலைவெறி என்றால் என்ன என்று கேட்டான் ? நான் சொன்னேன் `i will kill you,or i am going to kill you` என்று வைத்துக் கொள்ளலாம் என்று..இது போன்றதொரு அனுபவம் உங்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்ககூடும்.அந்த அளவுக்கு இந்தப் பாடல் அனைவராலும் விரும்பப் படும் பாடலாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது.இப்பப்டிப் பட்டதொரு சூழ்நிலையில் எனதுயிரே,இறகை போல,மதுர குலுங்க குலுங்க ,அஞ்சனா அஞ்சனா ,மைனா மைனா போன்ற நல்லப் பாடல்களை எழுதிய கவிஞர் யுகபாரதி கொலைவெறியுடன் `கொலைவெறி` பாடலுக்கு எதிராகக் கொதித்து எழுந்திருக்கின்றார். மேலோட்டமாக இவரது அறிக்கையினைப் பார்த்தால் பாராட்டியது மாதிரிதான் இருக்கும் ஆனால் கடுமையான விமர்சங்களை தனுஷ் மேல் செலுத்தியிருப்பதனை ஆழ்ந்து நோக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும்.

முதலாவதாக அவர் சொல்லியிருக்கும்குற்றச்சாட்டு ` ஆங்கிலத்தை அடியோடு மண்ணைவிட்டு ஒழிக்க தனுஷ் போன்றோர் முயல்வது பாராட்டுக்குரியது` என்ன ஒரு வில்லத்தனம் பாருங்க.சமீப காலங்களில் வரும் அனைத்து தமிழ் பாடல்களின் இடையிலும் ஆங்கில வரியுடன் கூடிய பாடல் சிறிது நேரம் ஒலிப்பது அனைவருக்குமே தெரியும். அதை இவர் தடுத்தி நிறுத்தியிருக்கின்றாரா? அதை பற்றிதான் எழுதியாவது இருக்கின்றாரா ? ? உங்கள் சக பாடலாசிரியர்கள் இரட்டை அர்த்தத் தொனியில் பாடலகளை எழுதியபொழுதேல்லாம் கண்டிக்காத நீங்கள் இப்பொழுது ஒரு தமிழ் பாடல் மொழி,இனம் .நாடு கடந்து செல்லும் போது பொறாமையில் எள்ளி நகையாடுவது எந்த வகையில் நியாயம் ?


இவருடய இந்த எதிர் வினையின் நோக்கம் என்னவென்றே புரியவில்லை ? கதாநாயகன் என்பவன் அவனுடைய வேலையை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார் போலும்.பழைய திரைப்படங்களில் கதாநாயகனே தான் அந்தப் பாடல்களைப் பாடுவார் என்பதை நாம் அனைவருமே அறிவோம். அதற்குப் பிறகு அந்த நிலை மாறினாலும் அதனை மீண்டும் தொடங்கி வைத்த பெருமை கமல் அவர்களையே சாரும்.இது போன்ற புதுமையான முயற்சிகளைத்தான் பார்வையாளன் மிகவும் விரும்புகின்றான். இந்த நவீன யுகத்தில் நல்ல பாடல்களை தேடி எந்த மொழியாக இருந்தாலும் அதனை விரும்பி கேட்கும் மன நிலையில் தான் இன்றைய தலைமுறையினர் இருக்கின்றனர். இதைப் போன்றதொரு போட்டி நிறைந்த உலகில் யார் வேண்டுமானாலும் தங்கள் தனித் திறமையை நிரூபிக்கலாம்.அதை தான் தனுஷ் செய்து இருக்கின்றார். தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகக் சரியாக பயன்படுத்தி வெற்றியடைந்து இருக்கின்றார்.

இந்த வார விகடன் பத்திரிகையில் பாடலாசிரியர் தபூ சங்கர்`லைலா மஜ்னு என்று படம் இயக்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள். இதை இயக்குனர்கள் எதிர்த்தால் சரியாக இருக்குமா ? இதற்கு முன்பே நா.முத்துகுமார் ஒரு திரைப்படத்தில் வசனம் எழுதினார் .இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். தன் திறமையினை வெளிப்படுத்தும் விதமாகப் பாடலாசிரியராக பணிசெய்கின்றார். எனவே இது போன்ற முயற்சிகள் அனைத்துமே அவரவரின் தனிப்பட்ட உரிமை. வெற்றி பெறுகின்றவர்கள் கவனிக்கப்படுவர்.

முக்கியமாக 2011 ஆம் ஆண்டு இளைஞன் ஆங்கிலத்தை எப்படி அணுகுகின்றான் என்று கவலையாக இருக்கின்றதாம் இவருக்கு.? முன்பிருந்த நிலையினை விட ஆங்கில அறிவு நம் இளைஞர்களிடையே மிக நல்ல நிலையில் இருப்பதனை அனைவரும் அறிவோம்.BBC இந்தப் பாடலை பெண் குரலில் வெளியிட்டு பெருமைபடுத்தி இருக்கின்றது..எனவே இதைப் போன்ற தவறான பரப்புரைகளினால் நீங்கள் தான் தரம் தாழ்ந்து போவீர்கள் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஆகவே இதைப் போன்றதொரு தனி நபர் தாக்குதல்களை தவிர்த்து மக்கள் விரும்புகின்ற வகையிலான நல்லப் பாடல்களை வழங்கி வெற்றி பெருக ..