Thursday, January 29, 2015

வெள்ளை நிற தாழ்த்தப்பட்டவர்கள்

தாழ்த்தப்பட்ட  மக்கள் என்றாலே கருப்பாக இருப்பவர்கள் என்று பதிந்து போன இந்திய மனதில் வெள்ளை நிறத்தில் எப்படி தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க முடியும் என்ற கேள்வி இயல்பானதே. ஆனாலும் இருக்கின்றார்கள் இந்தியாவில் அல்ல வெளிநாடுகளில் ,அதாவது அங்குள்ள பூர்வீகக் குடிமக்களை நம்மூரில் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு ஒதுக்கி வைக்கும் சூழ் நிலை இருக்கின்றதோ அதே நிலை தான் அவர்களுக்கும்.நிறத்தில் வெள்ளயாக இருந்தாலும் பூர்வீகக் குடிகள் என்பதாலேயே ஒதுக்கிவைக்கபப்ட்டுள்ளனர்  ,குறிப்பாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அவர்கள் ஒரு தகுதியான இடம் பிடிக்க இயலவில்லை. காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த அவர்கள் இப்பொழுது இடம் பெயர்ந்து நகரங்களுக்கு வர தொடங்கி இருக்கின்றனர். ஆனால் ஆனால் இங்கு அவர்களை வெள்ளை நிற சமூகம் அவர்களை காட்டு மிராண்டிகளாகவும் தீயவர்களாகவும் பார்க்கின்றனர். சமூகத்தால் ஒடுக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். 

தற்பொழுது பூர்வீகக் குடிமக்களின் தொடர் போராட்டம் காரணமாக ஏராளமான சலுகைகளை அரசாங்கங்கள் வழங்கி வந்தாலும் , அவற்றை சரிவரப் பயன்படுத்தி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும் தலைமை இல்லை. நம் ஊரில் இருப்பது போலவே அனைத்துத் தலைவர்களும் இந்தப் பணத்தினை பங்கு போட்டுக் கொண்டு அம்மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.அம்மக்களில் சிலர் அரசாங்கம் கொடுக்கும் பணத்தினை மட்டும் பெற்றுக் கொண்டு எந்த வேலையையும் செய்யாமல் பொழுதை கழிக்கின்றனர். அது மட்டுமன்றி காடுகளில் கீழங்குகளையும் இறைச்சிகளையும் உண்டு உடல் உறுதியுடன் வாழ்ந்தவர்கள் தற்பொழுது நகரங்களில் பல விதமான நொறுக்குத் தீனிகள் ஜங்க் உணவுகளை உண்டு ஆரோக்க்கிய மற்ற மனிதர்களாக பல்வேறு மருத்துவமனைகளில் பார்க்கும் போது மிகக் கவலையாக இருக்கின்றது.

இருப்பினும் தற்பொழுது நிலைமை சிறிது மாற்றம் அடைந்து வருகின்றது. குறிப்பாக கனடாவில் இம்மக்களுக்கு என்று தனியாக தொலைக்காட்சி நிறுவனம் பல்கலைக் கழகம் என்று இவர்களாகவே ஏற்படுத்தி தங்கள் சமூக மக்கள் முன்னேறப் பாடுபடுகின்றனர். இயற்கை 
வளங்களை பாதுகாப்பதில் இவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.



பொது இடங்களிலும் ,தொழில் நிறுவன்ங்களிலும் இவர்களை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்ப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுக்கவே பூர்வீகக் குடிகளின் இடங்களை ஆக்கிரமித்த  அந்நியர்கள் அம்மக்களின் உரிமைகளைப் பறித்ததோடு மட்டுமன்றி அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக எண்ணும் போக்கு இருக்கின்றது.

இறுதியாக சொல்ல விரும்புவது இப்பூர்வீகக் குடிகளின் உரிமைகளை நிலை நாட்டுவது மட்டுமன்றி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர்களையும் நம்மில் ஒருவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நன்றி 

செங்கதிரோன்

Thursday, January 22, 2015

ஐ ஷங்கரின் திறமைக்கு சான்று

சுஜாதாவின் பக்த கோடிகள் ஐ படம் சுஜாதா பங்களிப்பு இல்லாததால் சுவார்ஸ்யமாக இல்லை என்று கூவுகின்றனர். கமலுக்கு வெளிநாட்டு பட்ங்களைக் காப்பி அடிக்க கற்றுக்கொடுத்து அவரைக் குட்டிசுவராக்கிய பெருமை சுஜாதாவையே சேரும். அடுத்து ஷங்கரையும் அது போன்று கெடுத்து வைத்தானால் தான் அவரும் கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்ட படங்களை இயக்கினார். அதற்கு முக்கிய உதாரணம் தமிழ்நாடே காறி துப்பிய பாய்ஸ் திரைப்படம்.

சமீபத்தில் காபி வித் டிடியில் வசந்தபாலன் அவர்கள் ஷங்கரிடம் மிக அருமையான ஒரு திரைக்கதை இருப்பதாகவும் அதனை திரைப்படமாக எடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். எனவே ஷங்கரின் சொந்தத் திறமையின் மேல் நம்பிக்கை வைத்த்திருக்கும் அவரின் ரசிகர்களில் நானும் ஒருவன். சுஜாதாவின் பாதிப்பே ஷங்கர் ஐ படத்தில் திருநங்கைகள் குறித்த காட்சி என்பதனை முழுமையாக நம்புகிறேன்.

Wednesday, December 17, 2014

ஆரியத்துக்கு அந்துமணி திராவிடத்துக்கு கிளி மூக்கு அரக்கன்

தினமலரில் வெகுகாலமாக வந்து கொண்டிருக்கும் அந்துமணி கேள்வி பதில் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பெரியார், கலைஞர் குறித்து கிண்டலாக பதிலளிப்பது ,திராவிட கட்சிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்கள் என்று வாரமலரில் வாராவாரம் வரும். நீண்ட காலமாக இன்றுந்து வரும் இந்த பகுதிக்கு தகுந்த பதிலடிகள் இதுவரை இல்லாமல் இருந்து வந்தது. திராவிடர்களின் அந்த மனக்குறையைப் போக்கும் வகையில் முகநூலில் இளம் தலைமுறைக்கு திராவிட சிந்தனைகள் குறித்து பாடம் எடுத்து வருபவர் தான் கிளி மூக்கு அரக்கன்.


இருவருக்கும் உள்ள மிக முக்கிய ஒற்றுமை unknown identity அதாவது பெரும்பான்மையானோருக்கு அந்துமணி மற்றும் கிளிமூக்கு அரக்கன் யாரென்றே யாருக்கும் தெரியாது.





இருவருமே தங்களால் இயன்ற அளவுக்கு மக்க்ளிடம் திராவிடம் ஆரியம் குறித்த சிந்தனைகளை பரப்பி வருகின்றனர்.

Wednesday, December 10, 2014

இசை உலகின் பொறுக்கிகள்


நம் நாட்டில் சென்ற நூற்றாண்டு வரை இசை உலகம் என்பதே பக்திமான்களும் ஒழுக்கம் நிறைந்தவர்களும் கொண்ட ஒரு உலகமாகவே இருந்து வந்தது.இதற்கு வாழும் உதாரணம் இளையராஜா. ஆனால் தற்பொழுது அனிருத் செய்யும் அட்டகாசங்களை பார்த்தாலே இசை உலகம் எப்படி மாறிவிட்டது என்பதனை புரிந்து கொள்ள முடியும். இந்த மாற்றம் அனிருத்தின் தவறு அல்ல , எப்படி நம் திரைப்படங்களில் பாடல்கள் முதல் பின்ணணி இசை வரை வெளி நாட்டுப் படங்களில் இருந்து காப்பி அடிக்கப் படுகின்றதோ அதே போல அந்த இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை போல நம் நாட்டு இசை அமைப்பாளர்களும் வாழ ஆசைப் படுகின்றனர். அவர்களை போன்றே உடை அணிதல் , விலயுர்ந்த வாகனங்களை
வாங்குதல் மற்றும் பெண்கள் 
மீது மோகம் என்று தங்கள் வாழ்க்கை முறையையே மாற்றி வருகின்றனர்.கீழே உள்ள படத்தின் மூலம்  அனிருத் வெளிநாட்டு இசைக்கலைஞர் tyga போன்றே உடை அணிந்து அவர்களைப் போன்றே இருக்க இவர்களும் முயற்சிப்பதனை தெரிந்து கொள்ள முடியும். எனினும் மலேசியாவில் இயங்கி வரும் தமிழ்  ராப் பாடகர்களும் இதே போன்று தான் உடை அணிவர் என்பதும் உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன்.

                 
                                   
                    Tyga                          Anirudh


 அந்த இசைக் கலைஞர்கள் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் சிறந்த பாடல்கள் பற்றி வரும் வாரங்களில் எழுத இருக்கின்றேன். இதற்கு முன்பு இசை உலகின் தேவதைகள் என்று பாப் இசை உலகின் அழகிய இளம் பெண்கள் குறித்து எழுதி இருந்தேன்

இசை உலகின் இளம் தேவதைகள்: கேட்டி பெர்ரி (Katy Perry )
நிக்கி மினாஜ் (Nicki Minaj):இசை உலகின் இளம் தேவதைகள்
அடேல் :இசை உலகின் இளம் தேவதைகள்
இசை உலகின் இளம் தேவதைகள்:டெய்லர் ஸ்விப்ட்
இசை உலகின் இளம் தேவதைகள் :ரியான்னா(Rihanna
இசை உலகின் இளம் தேவதைகள்:அலிசியா கீஸ் 
 நேரம் கிடைக்கும் பொழுது இந்த தேவதைகள் குறித்து படித்துவிட்டு அவர்களின் இசையை கேட்டு மகிழுங்கள் 

ஏன் இசை உலகின் பொறுக்கிகள் என்று குறிப்பிடுகிறேன் என்றால் இவ்வகையான பாடகர்கள் அதிகம் முன்னிலைப் படுத்துவது வன்முறை
மற்றும்ஆபாசம். ஆனாலும்  நமது கானாப் பாடல்கள் போலவே இதற்கும் உலகெங்கும் மிகப் பெரிய வரவேற்பு உண்டு. தாளத்தோடு வரும் அந்தப் பாடல்களை முதல் தடவை கேட்கும் போது புரிந்து கொள்ள மிக சிரமம் தான் , ஆனால் அந்தப் பாடல்களின் காணொளியுடன் காணும் போது நடன அசைவுகளினாலும் அவர்கள் செய்யும் சேஷ்டைகளாலும் இந்தப் பாடல்கள் மிகவும் ரசிக்கத்‌தக்கவையாகவே இருக்கும். இதனை ராப்பர் உலகம் என்று அழைப்பர். ஆப்பிரிக்கர்களே அதிகம் இயங்கும் இவ்வகையான இசையில் எமினம் போன்ற வெள்ளையர்களும்   கலக்கி வருகின்றனர்.

 இந்த வகையான பாடகர்களின் ரசிகர்கள் பொதுவாக டீன் ஏஜ் வயதினராகத் தான் இருப்பர். ராப் இசை ரசிகர்களுக்கென்றே பொதுவான உடை அமைப்பே உண்டு. இடுப்பிலே நிற்காத ஜீன்ஸ் பேண்டும் ஹூடி என்று சொல்லப்படும் தலையினை மூடிக் கொள்ளும்படியான முழுக்கை சட்டையும் ,ஒரு பெரிய ஹெட் போன் (head phone) அணிந்து கொண்டு இருப்பர். இவர்களுக்காகவே தனியாக ஆடை விற்பனை செய்யும் கடைகளை பெரிய நகரங்களில் காணலாம். கீழே உள்ள புகைப்படம் அது போன்ற ஒரு கடையில் எடுக்கப்பட்டது.


இனி வரும் பதிவுகளில் ராப் இசையில் பிரபலமான பணக்கார பொறுக்கி குண்டு பொறுக்கி , கஞ்சா பொறுக்கி, குடிகார பொறுக்கி , கிரிமனல் பொறுக்கி என ஏகப்பட்ட இசை பொறுக்கிகள் குறித்து எழுத உள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பொறுக்கிகள் உங்களையும் கவர்ந்து விடுவார்கள் .








Monday, December 8, 2014

அய்யர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் ஆச்சரியமான ஓற்றுமைகள்:

லைப்பு பார்த்து பலருக்கும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போப்போடுவது போல் இருக்கின்றதே என்று நினைப்பீர்கள். ஏனென்றால் வரலாறு ரீதியாக ஆப்பிர்க்கர்களுக்கும் தமிழர்களுக்கும்(திராவிடர்கள்) உள்ள ஓற்றுமை குறித்து ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றது. பதிவர் கலையரசன் அவர்கள் கலாசார மற்றும் பண்பாட்டு ரீதியாக திராவிடர்களுக்கும் ஆப்பிர்ரிக்கர்களுக்கும் உள்ள தொடரப்பு குறித்த பல முக்கியக் கட்டுரைகளை எழுதி உள்ளார். அது மட்டுமன்றி முன்னால் அமைச்சர் பொன்முடி அவர்கள் கறுப்பர் இயக்கம் மற்றும் திராவிட இயக்கங்களின் செயல்பாட்டு ஓற்றுமை குறித்து புத்தகம் எழுதி இருக்கின்றார்.


ஆப்பிரிக்க மற்றும் அய்யர் சமூகங்களிடையேயான ஒற்றுமைகள் என்பது கால மாற்றத்தினால் ஏற்பட்டது. முதல் ஒற்றுமை என்பது இடம் பெயர்தல் . ஆப்பிரிக்கர்கள் அடிமை சமூகமாக மேலை நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று சொல்லப்படினும் அவர்கள் தங்கள் நாட்டில் பிழைப்புக்கு வழி இல்லாத காரணத்தால் தான் அவர்கள் அடிமைகளாக சென்றனர். பின்னர் அங்கேயே குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் ஏராளமான பிராமணர்கள் நன்கு படித்திருந்த காரணத்தினால் முதலில் பிரிட்டனுக்கும் பின்னர் மற்ற நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தனர். நிறைய ஊர்களில் அந்த ஊரை விட்டு முதலில் இடம் பெயர்ந்தது அய்யர்களாகத் தான் இருப்பார்கள் .நகரத்தை நோக்கி செல்வதில் மிக ஆர்வமாக இருப்பார்கள்.மற்ற சமூகத்தினர் இடம் பெயர்தலில் அதிக ஆர்வமற்றும் , தன் சொந்த இடத்தினை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே வாழ்ந்து மடிவர். ஒரு சிலர் வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தாலும் தன் ஓய்வு காலத்தில் சொந்த ஊருக்கே திரும்பி வந்து வாழ்வார்கள். இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான எந்த இணைப்பும் பிராமணர்களிடம் இருக்காது. ஆனால் நான் இதை ஒரு குற்றச்சாட்டாக சொல்லவில்லை. முதல் ஒற்றுமையான இடம் பெயர்தல் குறித்து பார்த்தோம்.



இடம்பெயர்ந்த இடத்தில் இவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தில் பல ஒற்றுமைகள் உள்ளன. முதலில் தொழிலினை தேர்ந்தெடுக்கும் போது இருவருமே வணிகம் சார்ந்த துறைகளில் சேர்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டுவர் . அதனால் தான்  மேல் நாடுகளில் வங்கிகள், வியாபார நிறுவனங்களில் அதிகம் ஆப்பிரிக்கர்கள் இருப்பர்.அதே போன்று நம்மூர் ஐஐடி களில் தொழிற் படிப்பினை படித்த பின்னர் எம்பிஏ படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவோர் பெரும்பாலானோர் அய்யர்களாகவே இருப்பர்.உடனடியாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புடைய பணிகளில் தான் அதிகம் விரும்புவர்.முன்னர் கணினி தொடர்பான வேலைகளில் ஆர்வம் காட்டினர் ,தற்போது அங்கு பணி நிரந்தர உறுதியின்மையால் வியாபாரம் மற்றும் வர்த்தக துறைகளில் செல்கின்றனர்.ஆனால் இது போன்றதொரு திட்டமிட்டு தன் வாழ்க்கைக்கான பணியினை தேர்ந்தெடுக்கும் போக்கு இதர சமூக மக்களிடம் நான் கண்டது குறைவுதான். ஆனால் நான் மேற்குறிப்பிட்ட இரு சமூகத்தினரும் தன் வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்த துறை பயனளிக்குமோ அதை மட்டும் தான் தேர்வு செய்வர். இரண்டாவதாக தொழில் நிமித்தம் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை குறித்து பார்த்தோம்.




கண்டம் விட்டு கண்டம் இடம் பெயர்ந்தாலும் இவர்கள் வாழ்க்கை முறையில் எந்த ஒரு மாறுதலும் ஏற்படவே இல்லை. வெளி நாட்டுக்கு சென்ற பின்னரும் தங்கள் வழிபாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். உணவு முறைகளில் சைவ உணவுப் பழக்கங்களை அந்தளவு பின்பற்ற முடியாவிட்டாலும் முக்கிய விரத நாட்களில் அசைவ உணவுகளை உண்பதே இல்லை.அசைவ உணவுகளில் முட்டை , கோழி தவிர எதையும் பெரும்பாலான பிராமணர்கள் உண்பதில்லை. ஆனால் பிரமாண வகுப்பை சாராத மற்றவர்கள் குறிப்பாக ஆண்கள் வெளிநாடு சென்ற உடன் இது போன்ற மரபான பழக்கங்களை உடைத்தெறிகின்றனர். நல்ல உணவுகளை தேடி தேடி உண்பதில் நம் கேபிள் சங்கர் போல மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.ஆப்பிரிக்கர்கள் வெளி நாட்டுக்கு சென்று பல நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அவர்கள் மேலை நாட்டினர் உண்ணும் உணவுகளை உண்பதில்லை .அதிகமாக இறைச்சி உண்பது , அரிசி அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது , junk food களான  pizaa ,burger அதிகம் சாப்பிடுவது என தனித்தன்மையுடன் வாழ்கின்றனர். வாழ்வியலைப் பொறுத்தவரை இவ்விரு சமூகத்திற்குமான ஒற்றுமை

 என்பது தத்தம் பழக்கவழக்கங்களை உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் விட்டுக் கொடுக்காமல் வாழ்வது தான், ஆனால் பிற இனத்தவரோ தங்கள் அடையாளங்களை இழப்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடனேயே வாழ்கின்றனர்.


இசை மற்றும் நடனம் இவை இரண்டையுமே இவ்விரு சமூகத்தினரும் தாங்கள் சென்றவிடமெல்லாம் கொண்டு சென்றனர். ஆப்பிரிக்கர்களுக்கு ஹிப் ஹாப் நடனம் மற்றும் இசை என்றால் பிராமணர்களுக்கு பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசை தனி அடியாளமாகத் திகழ்கின்றது. இந்த துறைகளில் இவ்விரு சமூகம் சாராத மக்கள் நுழைவது என்பது மிகக் கடினமான ஒன்று. வெள்ளை இனத்தை சேர்ந்த பிரபல ராப்  பாடகரான எமினம் (Eminem) அவர்களை ஆப்பிரிக்க ஹிப் ஹாப் சமூகம் இன்றளவும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை.அதே போன்ற நிலை தான் இங்கே இசை ஞாநி இளையராஜாவுக்கும் கர்நாடக சங்கீத சபையில் இது வரை எந்த ஒரு சிறப்பான அங்கீகாரமும் அவருக்கு அளிக்கப்படவில்லை. இதிலிருந்து அறிவது ஆபிரிக்கர்களும் அய்யர்களும் தங்கள் சமுதாயம் சாராத மக்களுக்கு என்றுமே அங்கீகாரம் அளிக்க மாட்டார்கள். 

மேல சொன்ன ஒப்பீடுகள் ஒரு மாறுபட்ட கோணத்திலிருந்துதான்  சொல்லப்பட்டவை என்றாலும் இவை அனைத்தும் உண்மையே என்பதனை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகின்றேன்.