Thursday, September 24, 2015

விவேகானந்தரின் புகழை மறைத்த கருணாநிதி



வல்லபாய் படேல் சிலையை குஜராத்தில் அமைக்க முயலும் மோடியின் முயற்சிக்கும் , திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் அமைத்த கருணாநிதியின் செயலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே எண்ணுகின்றேன்.ஏனென்றால் குஜாரத் மட்டுமல்ல இந்தியாவிற்குமே அடையாளமாகத் திகழும் காந்தியின் புகழை மட்டுப்படுத்தவே படேலின் சிலையின் மிக பிரம்மாண்டமாக அமைத்து  மோடி திருப்திபட்டுக்கொள்ள நினைக்கின்றார்.

முதலில் விவேகானதருக்கும்  தமிழகத்துக்குமான  தொடர்பு குறித்து பார்ப்போம் .தெரிந்த செய்தி அவர் கன்னியாகுமரியின் பாறையில் தவம் செய்ததும் அதனால் அங்கே அவருக்கு மணி மண்டபம் கட்டி விவேகானந்தர் பாறை ஒரு சுற்றுலா தளமாக விளங்கி வருவதும், தெரியாத செய்தி  அவர் வரலாற்றில் இடம் பெற மிக முக்கியக் காரணமாக இருந்தது ஒரு தமிழரின் முயற்சி என்பதுதான்.

வரலாற்று சிறப்பு மிக்க அந்த உதவியினை செய்தது ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகாந்தருக்கு சிகாகோவில் நடைபெற்ற  உலக ஆன்மீக மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைத்தாலும்  பயண செலவுக்கு பணம் இல்லை. எனவே தமிழகம் வந்த அவர் பாஸ்கர சேதுபதியிடம் உதவி பெற்றே அமேரிக்கா சென்றார்.அது மட்டுமன்றி அமேரிக்கா சென்று திரும்பிய விவேகானந்தரை வரவேற்க சென்னை சென்ற பாஸ்கர சேதுபதி குதிரை பூட்டிய வண்டியில் அவைகளை அகற்றி விட்டு தானே விவேகானந்தரை வண்டியில் வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றார்.  அது மட்டுமன்றி விவகானந்தரை தன் பங்களாவில் தங்க வைத்தார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அந்த பங்களாவே தற்பொழுது விவேகாந்தர் இல்லம் என்று அழைக்கப்படுகின்றது .  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த உதவி செய்தவரின்  பெயர்  விவேகனந்தரின் விக்கிபீடியா பக்கத்தில் இடம் பெறவே இல்லை.

பாஸ்கர சேதுபதி


வங்காளத்தில் பிறந்த ஒருவருக்கு தமிழன் செய்த இந்த உதவிக்கு கைமாறாக வங்காளம் ஏதேனும் அவரை சிறப்பிக்க முயற்சி எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. வந்தாரை  வாழவைக்கும் நாம் சின்ன உதவி ஒருவன் செய்தாலும் பெரிய அளவில் அவர்களைப் பாராட்டுவதே தொழிலாகக் கொண்டுள்ளோம்.

எனவே  தான் கருணாநிதி விவேகநாதர் பாறை கன்னியாகுமரியின் அடையாளமாக இருக்கக்கூடாது என்றி எண்ணியே மாபெரும் திருவள்ளுவர் சிலையினை அமைத்திருக்கக் கூடும்.பக்கத்தில் உள்ள கர்நாடகாவில் நம் திருவள்ளுவர் சிலையை திறக்க நாம் பட்ட பாடு தெரியும். நம் மாநிலத்தில் பிறந்த ஒருவரை யாரும் அவ்வளவு எளிதாக அங்கீகரிப்பதில்லை , ஆனால் நாமோ எந்த மனத்தடையுமன்றி அடுத்த மாநிலத்தவரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தோடு இருக்கின்றோம் .



இருப்பினும்  கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையினையும் தொடங்கி வைத்து கருணாநிதி எனபது தான் வரலாறு. திருவள்ளுவர் சிலையினை  கன்னியாகுமரியில் அமைத்து மிக சரியான முடிவு , ஏனென்றால உலகப் பொது  மறை படைத்த ஒருவரின் புகழ் பரவ அதுவே சரியான இடம். 


இன்றும் நாளையும் கன்னியாகுமரியின் அடையாள சின்னமாக திருவள்ளுவர் சிலையே திகழும். 

இத்தருணத்தில் கருணாநிதிக்கும் மோடிக்கும் உள்ள ஒற்றுமை குறித்து நான் எழுதிய முந்தையப் பதிவினையும் படித்துப் பாருங்கள் 



Wednesday, September 23, 2015

குழந்தைகளுக்கான கழனியூரனின் இரவு நேரக் கதைகள்

சில மாதங்களுக்கு முன்னர்  அமெரிக்காவில் உள்ள என் நண்பனுடன் மெசெஞ்சரில் (Messenger ) உரையாடிக் கொண்டிருந்தபொழுது, அவன் , மச்சி என் பொண்ணுக்கு தூங்க செல்லும் முன் கதை சொல்லும் நேரம் என்று சொல்லி நாளைக்குப் பேசலாம் , என்றான்  நான் கேட்டேன் என்ன கதை சொல்லுவாய் என்று, அவன் அந்தப் புத்தகங்களின் புகைப்படங்களை அனுப்பினான். அனைத்தும் ஆங்கில புத்தகங்கள். 

பின்னர் எனக்கு கழனியூரனின் "மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்" என்ற புத்தகத்தினை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிராமியக் கதைகள் என்று எண்ணித்தான் படிக்க ஆரம்பித்தேன், ஆனால் அனைத்தும் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி சொல்லுவதாக அமைக்கப்பட்டிருக்கும் நீதிக் கதைகள் .



பெரும்பாலான கதைகள் ஒரு பக்கம் இரண்டு பக்கங்களே கொண்டவை , பலவேறு கிராமிய சார்ந்த சொற்களும் , பழக்க வழக்கங்கள் குறித்த செய்திகளும் ஏராளம் உள்ளன. எனவே நகரங்களிலும் வெளிநாடுகளிலும் வசிப்பர்வர்களின் குழந்தைகள் நம் நாட்டைப் பற்றி  புதுபுது செய்திகளை அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் பயன்படும் .நீதிக் கதைகள் நிறைய இருப்பதால்  நல்லொழுக்கம் இயல்பாக வளர இந்தக் கதைகளை அவர்கள் கேட்பது மிக உதவியாக இருக்கும்.

மொத்தம் 111 கதைகள் கொண்ட இப்புத்தகம் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. விலை ரூ.175.

இந்தப் புத்தகத்தினை குழந்தைகளுக்கான பிறந்த நாள் பரிசாகவும் கொடுக்கலாம்.

கழனியூரன்





Tuesday, September 22, 2015

அதிஷாவின் பேஸ்புக் பொண்ணு -குட்டி விமர்சனம்

ஒரே மூச்சில் படித்து விடக்கூடிய அளவுக்கு மிக குறைந்த பக்கங்களே (120) கொண்ட புத்தகம். நான் இரண்டு மதிய உணவு இடைவேளையில் படித்து முடித்து விட்டேன்.இந்தப் புத்தகத்தை குட்டீஸ்களுக்கு சமர்ப்பித்திருக்கின்றார் ,குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான புத்தகம் தான் இது.

மொத்தம் 15 கதைகள் கொண்ட இந்தப் புத்தகத்தில் அனைத்துமே எதோ ஒரு வகையில் நம்மை ஈர்க்கக் கூடியதாகவே உள்ளன.அதிகம் சிரிக்க வைக்கக் கூடிய சாமியார் மாற்றும் பேஸ்புக் பொண்ணு கதைகள், சோகம் ஏற்படுத்தும் கெட்டவார்த்தை கதை மற்றும் குழதைகளுக்கான கதைகள் என பயணிக்கும் இந்த புத்தகம் படித்த அனுபவம் ஒரு முழு திருப்தி அளிக்கும்  விதமாகவே இருக்கும்.

பாஸ்கர் சக்தி அணிந்துரை எழுதியிருக்கின்றார்.அவர் குறிப்பிட்டது போல  அதிஷா குழந்தைகள் உலகத்துக்கு நம்மை அழைத்து செல்ல முயன்றிருக்கின்றார் .

அதிஷாவின் இந்தக் கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள். நீங்களும் இந்தப் புத்தகத்தினை வாங்கிப்  படித்து வளர்ந்து வரும் எழுத்தாளனை ஊக்குவியுங்கள்.

விலை ரூ.100
உயிர்மை பதிப்பகம்

நன்றி
செங்கதிரோன்

Sunday, September 20, 2015

இறக்கை முளைத்த நாய்கள் வேண்டும்

நவீனமயமாக்கல் திட்டத்தில் மனிதர்களும் அவர்களின் தொழிலான விவசாயம் மட்டும் பாதிக்கப் படுவதோடு மட்டுமன்றி நன்றி உள்ள பிராணியான நாயும் பாதிக்கப் படுவதை கண்கூடாகக் கண்டேன்.தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொது இலங்கையில் நம் தொப்புள் கொடி உறவுகள் எப்படி குண்டடி பட்டு இறந்து கிடந்தார்களோ அதே போல சாலையெங்கும் நாய்கள் விபத்தில் அடிபட்டு இறந்து கிடந்தன.அதனைப் பார்க்க மிக பரிதாபமாக இருந்தது.





விரைவான போக்குவரத்து வசதிக்காக விவசாய நிலங்களை கைப்பற்றி அவற்றில் சாலைகள் அமைத்து நாம் சொகுசாக அதில் சென்று கொண்டிருக்கும் பொது இந்த  ஐந்தறிவு ஜீவன் சாலையை கடக்கத் தெரியாமல் வாகனத்தின் சக்கரங்களில் சிக்கி சுக்கு நூறாகி விடுகின்றன.இறந்து போன அந்த நாயின் சடலங்கள் கூட அகற்றப்படாமல் அடுத்தடுத்த வாகனங்களில் மாட்டி இறந்த உடலும் இன்னலுக்கு ஆளாகின்றது.


என் சிறு வயதில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டால்  நாய்கள் இறந்தால் அவைகளை அப்புறப்படுத்த ஏன் ஒருவரும் ஆர்வம் காட்டுவதில்லை என்பது புரியும். பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது பக்கத்து ஊரில் மக்கள்  சாலையில் கூட்டமாக  நின்று கொண்டு வழிமறித்தனர்,என் என்று கேட்டபோது அந்த கூட்டத்தினை விலக்கிக் காண்பித்தனர் , அங்கே  வண்டியில்  அடிபட்டு ஆடு இறந்து கிடந்தது, எனவே அவர்கள் எந்த வண்டியில் அடிபட்டு இறந்தது என்பதனை அறிய போகும் வரும் வாகனங்களை எல்லாம் நிறுத்தி அதன் சக்கரங்களில் ரத்தக் கறை இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டிருந்தார்கள் . அப்படி ஏதேனும் கறையுடன் கூடிய  வண்டி  சிக்கினால் அவர்களிடம் ஆட்டிற்கான நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொள்வார்கள்.இங்கேயும் ஆட்டின் மீது எந்த பரிதாபமும் அல்ல  அதன்  பண மதிப்புக்க்ககதான் இவ்வளவு பேரும் கூடி நிற்கின்றார்கள் .


நமக்கு உற்றத் துணையான ஒரு நண்பனாக இருந்தாலும் அது இறந்த பின்னர் அதற்கு எந்த மதிப்பும் இல்லாததால் அவற்றின் சடலதத்தின அகற்ற யாரும் முன் வருவதில்லை.இதற்காகத்தான் நாய்களுக்கு இறக்கை தேவை என்று எண்ணுகிறேன்.கிராமங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம் , சாலையில் மேய்ந்துகொண்டிருக்கும் கோழிகள் ஏதேனும் வாகனகள் வந்து விட்டால் பறந்து தப்பித்து விடும். அவற்றால் மிக உயரப்பறக்க முடியாவிட்டாலும் கூட ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு பறக்கும் அளவிற்கு அதன் இறக்கைக்கு வலிமை உண்டு .அந்த அளவிற்கு வலிமை உடைய இறக்கை கூட போதும், நாய்கள் இது போன்று சாலை விபத்தில் இறப்பது வெகுவாகக் குறையும்.

என் தோழியின்   திவான் எனற பெயருடைய நாய்  இறந்து விட்டது.அந்த திவானுக்கு இந்தப் பதிவினை  காணிக்கையாக்குகின்றேன்.

நன்றி 
செங்கதிரோன் 



Saturday, September 19, 2015

ஹாலிவுட்டை கலக்கும் கவுண்டமணியின் வாரிசு



தன் குடும்ப உறுப்பினர்களை ஊடக வெளிச்சம்படாமல் செய்யும் கவுண்டமணி வாரிசை மட்டும் ஹாலிவுட்டில் வளர விட்டிருப்பது ஆச்சரியம் தான். அந்த வாரிசு யார்?  என்று பார்ப்போம். பாக்யராஜை தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆர். அறிவித்தது போல கவுண்டமணியின் அறிவிக்காத வாரிசுதான் வில் பெர்ரெல் (Will Ferrell ). இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஹாலிவுட்டின் சண்டைப் படங்களே அதிக விருப்பமானதாக இருக்கின்றது.நகைச்சுவை மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இல்லை. 

ஹாலிவுட் நகைச்ச்சுவை படம் அதிக அளவு அனைத்துத் தரப்பினரையும் சென்றடையததற்கு ஒரு முக்கியக் காரணம் மொழியியல் மற்றும் வாழ்வியல் சார்ந்தது.அதாவது கவுண்டமணி மற்றும் வடிவேலு படங்களில் அடுத்தவரை அடிப்பதே  மக்கு நகைச்சுவையான கட்சியாகத் தோன்றும்.ஆனால் ஹாலிவுட் படங்களில் பாலியல் கலந்த நகைச்சுவை தான் மிகப் பிரதானமாக இருக்கும். இன்னொரு அம்சம் குரலை வேறு விதமாக மாற்றிப்  (voice modulation ) பேசுவது ஒரு நகைச்சுவை வகை இதனை வேற்று மொழிக்காரர்கள் புரிந்து கொள்வது மிக சிரமம்.இதனை அனுபவப்பூர்வமாகவும் உணர்ந்துள்ளேன்.ஹோட்டலில்  வெளிநாட்டவருடன் உணவருந்தும்போது அவர்கள் சொல்லும் நகைச்சுவை துணுக்குகளுக்கு அந்த ஊர்க்காரர்கள் பலமாக  சிரிக்கும்போது இதெல்லாம்  ஒரு ஜோக்கா என்று எண்ணத் தோன்றும்.

தலைப்புக்கு வருவோம்.சார்லி சாப்ளினுக்கு பிறகு பெரிய அளவில் நம்மை யாரும் கவரவும் இல்லை, சார்லியின் நகைச்சுவையும் வசனம் இல்லாமல் செய்கைகளுக்காக மட்டும் தான் நாம் சிரிக்கின்றோம். இதேதான் சண்டைப் படங்களும் அவை அவற்றின் உச்சபட்ச காட்சி அம்மைப்புகளுக்காகத்தான் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன.



நகைச்சுவை நடிகர்களுக்கு அவர்களின் தோற்றமே முதலில் நமக்கு சிரிப்பை வரவைக்கும், அப்படி தான் வில் பெர்ரெலின் தோற்றமும் இருக்கும். கவுண்டமணியை அளவுக்கு எண்ணிலடங்கா படங்களில் நடித்தவர் அல்ல, வெகு குறைவானப் படங்களில் நடித்தவர். கவுண்டமனியோடு இவரை தொடர்பு படுத்துவதற்கு முக்கியமான காரணிகள், வில்லும் கவுண்டமணியைப் போலவே அரசியல் நய்யாண்டி செய்வது, உடன் இருப்பவர்களை நக்கல் செய்வது என பல ஒற்றுமைகள் உள்ளன.

வில் தன அம்மா அப்பா விவாகரத்து பெற்றபோது அதனை அய் ஜாலி எனக்கு இனிமே ரெண்டு கிறிஸ்மஸ் என்று சந்தோஷப்பட்டாராம் . அப்படி ஒரு மிக ஜாலியான மனிதர். சிவகர்த்திகேயன் போல தொலைக்கட்சியில் மிக பிரபலமாக இருந்து பின்னர் சினிமாவுக்கு வந்தவர். அவருடைய படங்கள் ஆரமபம் முதல் இறுதி  வரை சிரித்துக் கொண்டே இருக்கலாம் ,அந்த அளவுக்கு பொழுது போக்காக இருக்கும். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் வேடங்களில் நடித்திருந்தாலும் ,கதாநாயகனாக நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்கள் A Night at roxburry , Blades of glory, step Brothers மற்றும் Anchorman :Legend of  Ron Burgundy . குறிப்பாக நான் முதலில் சொன்ன மூன்று படங்களையும் பார்த்து விட்டால் இவர் கவுண்டமணியின் கலை வாரிசு என்பதை உறுதியாக நம்புவீர்கள்.
A Night at roxburry படத்தின் trailer 


நன்றி 
செங்கதிரோன் 

அடுத்த பதிவு : இறக்கை முளைத்த நாய்கள் வேண்டும்