Saturday, November 21, 2015

வேதாளத்தைத் தூங்கியும் தூங்காவனத்தை தூங்காமலும் பார்த்தேன்

ஆரூர் முனா மற்றும் ஜாக்கியின் வேதாளம் விமர்சனம் படித்தவர்களுக்கு மிகுந்த குழப்பமே ஏற்பட்டிருக்கும். ஒருவர் சூர  மொக்கை என்றும் மற்றொருவர் படம் சூப்பர் என்று சொல்லும்போது எது உண்மை என்று குழப்பமே மேலோங்கி இருக்கின்றது. அதுவும் பல்வேறு உலகப்படங்கள் குறித்து மிகவும் சிலாகித்து எழுதிய ஜாக்கியே  வேதாளம் குறித்து ஆஹோ ஓஹோ என்று சொல்லும் போது ஜாக்கியின் பரிந்துரையில் பல  உலகப் படம் பார்த்து வேறு ரசனைக்கு சென்ற ரசிகனை  மீண்டும் கீழ்மட்ட ரசனை உள்ள படங்களை ரசிக்குமாறு கூறுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.


அண்ணன் ஆரூர் முனா அவர்கள் சூர மொக்கை என்று சொன்னதற்கான வலுவான காரணம் நான் மேற்சொன்னவாறு ஜாக்கி போன்றோரின் பாதிப்பால் நல்ல சினிமா பார்த்தவர் வேதாளம் குறித்து அபப்டி ஒரு கருத்தை தான் சொல்வார்.
ஆரூர் முனா அவர்களின் விமர்சனம் 

வேதாளம் மற்றும் தூங்கவனம் இரண்டுமே copycat படங்கள்தான் , ஆனால் இந்த இரண்டு படம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அதனை நேர்மையாக ஒப்புக் கொள்வதில் தயக்கமோ அல்லது ரசிகன் நாம் எப்படி எடுத்தாலும் அதை ரசிப்பான் என்ற ஒரு தன்னம்பிக்கையும் கூட காரணமாக இருக்கலாம்.

ஏன் ஒரு வேதாளம் படத்தைத் தூங்கியும் தூங்கவனத்தைத் தூங்காமலும் பார்க்க வேண்டும் எனபதற்கு வலுவான காரணம் இருக்கின்றது.  வேதாளம்  படத்தில் மூன்று  வில்லன்களை கொல்லுவதற்கும் ஒரே காரணம் தான் அவர்களும் ஒரே அளவான வலிமை உடையவர்கள்தான் அதுவும் ஒரே மாதிரியான உத்திகள் தான் . அடுத்து அவர்களை அஜித் கண்டிப்பாக பழி வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.அவர்களும் இவரைத் தேடிக் கொண்டும் இல்லை. எனவே நீங்கள் இடையில் தூங்கி விட்டாலும் கதை மிக நன்றாகவேப் புரியும்.இடையில் தூங்கி எழுந்து பார்த்தால் கண்டிப்பாக அஜித் யாரோ ஒருவரை கொன்று கொண்டிருப்பார். அது எதற்கு என்று அவருக்கும் தெரியாதபோது நமக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை இது பாட்ஷா படத்தின் காப்பி என்பவர்களுக்கு  இரண்டுக்கும் உள்ள முக்கய வித்தியசத்தினைக் கண்டு பிடிக்காதது ஆச்சரியம் தான் , சிறுத்தை சிவா அவர்கள் செய்த அந்த வித்தியாசம் என்னவெனில் பாட்ஷாவில் பிளாஷ்பேக்கில் ரஜினி வயசான தோற்றத்திலும் ஆட்டோக்கராரக இருக்கையில் இளமையாகவும் இருப்பார் . அதை அப்படியே உல்டா அடித்து பிளாஷ்பேக்கில் அஜீத்தை இளமையாகக் காண்பித்து டாக்சி டிரைவராக இருக்கையில் வயசானவராகமாற்றம் செய்து  காண்பித்து இருக்கிறார்கள் .எனவே இனிமேலாவது இது பாட்ஷா படத்தின் காப்பி என்று சொல்வதை நிறுத்துங்கள்.


தூங்கவனம் படத்தின் கதையினை விளக்கும் போது கமல் அனைத்து நடிகர்களிடம் ஒன்று சொல்லி இருப்பார் என்று நினைக்கின்றேன். யாரும் இந்தப் படத்தின் ஒரு காட்சியில் கூட சிரிக்கவே கூடாது என்று, அந்தளவுக்கு அனைவரும் முகத்தை அந்தளவுக்கு இறுக்கமாக வைத்திருக்கின்றனர். படம் பார்க்கும் போது தூங்கி விட்டால் கண்டிப்பாக இந்தப் படம் புரியவே புரியாது. ஏன் இப்படி எல்லாரும் இந்த பப்பில் சுத்தி சுத்தி வருகின்றார்கள் என்றே நினைக்கத் தோன்றும். அதுவும் கமல் , திரிஷா , கிஷோர்  போன்றோர் காவல் துறை அதிகாரிகள் என்று காண்பிக்கப் படும் காட்சிகள் வரும்போது தூங்கி விட்டால் ரொம்ப சுத்தம். ஏன் என்றால் அவர்கள் அனைவருமே மப்டியில் தான் இருக்கின்றனர். அதுவும் தமிழ் மீது காதல் கொண்டிருக்கும் கமல் narcotics என்பதனை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்று கூட தன வாயால் சொல்ல வில்லை.தன்னை சுற்றி இருக்கும் மக்கள் போல தான் தமிழ்நாடு முழுக்க இருக்கின்றார்கள் என்று நினைத்து விட்டரரா அல்லது இது சென்னை மக்களுக்கு மட்டும் இந்தப் படத்தினை எடுத்தாரா என்றும் தெரியவில்லை.


என்னுடையப் பார்வையில் இரண்டுமே சுமாரானப் படங்கள்தான். மிக மோசம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ரசிகர்களுக்கு சினிமா ரசனையை மேம்படுத்தியக் கமல் உலக சினிமா கதையினை ஏன் எடுத்தார் என்று புரியவில்லை.இணையம் மிக பரவலடைந்த பிறகு ரசிகன் பார்த்து விட்ட அதே படத்தினை மீண்டும் எடுப்பது யாருக்காக என்று தெரியவில்லை.தன்னுடைய ஆத்ம திருப்திக்கு படம் எடுக்க வேண்டுமென்றால் ஒரு நாடகமாகக் கூட இதே கதையினைக் கொண்டு  அமைத்திருக்கலாம். இங்கே இந்த தமிழ் சமூகத்தில் சொல்லபடாத கதைகள் குவிந்து கிடக்கும் போது இப்படித் தழுவல் படங்களை தொடர்ந்து எடுத்தால் எஞ்சி இருக்கும் அவரின் ரசிகர்களையும் அவர் வெகு சீக்கிரம் இழக்க வேண்டி வரும் 

அஜித்துக்கெல்லாம் நாம் எந்த ஆலோசனையும் வழங்க முடியாது .சினிமாவில் நடிப்பதற்காக காசு வாங்கும் நிலை மாறி நடப்பதற்காக காசு வாங்கிக் கொண்டிருப்பவர் தான் நம்ம தல அஜீத். அவருக்கு சினிமா என்பது தொழில் மட்டுமே  அதன் மீது ஈடுபாடு எனப்தெல்லாம் இல்லை என்பதனை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களே மிக சிறந்த உதாரணங்கள். 

நாம் உழைத்து சம்பாரித்த பணத்தினை உருப்படி இல்லாமல் செலவு செய்ய தகுந்தவை இது போன்ற படங்கள் தான். தொடர்ந்து இந்த சேவையை செய்வோம் என் உறுதி எடுப்போம்.

நன்றி 
செங்கதிரோன் 


Friday, November 20, 2015

கத்துக்குட்டி படத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பில்லாத அம்சங்கள்



கத்துக்குட்டி படத்தின் ஒரே நோக்கம் மீத்தேன் திட்டம் ஆபத்து குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்துவதுதான்.நீங்களும் இந்த மீத்தேன் திட்ட ஆபத்து குறித்து பல்வேறு செய்தித்தாள்களில் படித்து இருந்தாலும் அதனை மிக சரியாக காட்சிப்படுத்தி சொல்லும் போது நம் மனதில் சரியாகப் பதியும்.இப்படி நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட இப்படத்தில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பில்லாத அம்சங்கள் குறித்த சின்ன பதிவு.



சிறப்பம்சங்கள்:

1.படத்தில்  அனைவருமே மிக மிக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவர்களுடைய கொடுக்கப்பட்ட பணியினை மிக சிறப்பாக செய்த்ருக்கின்றனர்.
2. அதிக விரசமில்லாத காட்சிகள் 
3. ஏகப்பட்ட கருத்துகள் , எறும்புகளை மருந்து வைத்துக் கொல்லாமல் சர்க்கரை வைத்து காப்பது, கைபேசி கோபுரங்களின் தீமை குறித்து அழகான கதாநாயகியின் விளக்கம்.
4. கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் பிரபல நடிகை துளசியின் சிறப்பான பங்களிப்பு.பாரதிராஜாவின் தம்பி நரேனின் அப்பா வேடத்திற்கு மிக சரியாக பொருந்தி இருக்கின்றார். 
5.மாவட்டமாக வரும் அரசியல்வாதியின் நடவடிக்கைகள் நிஜ அரசியல்வாதிகளின்  உண்மையான முகத்தை பிரதிபலிப்பதாக இருக்கின்றது.
6. கடைசியாக சொன்னாலும் இது தான் முதன்மையானது : மீத்தேன் திட்ட பாதிப்பு குறித்த அனிமேஷன் காட்சிகள் உங்கள் மனதை விட்டு நீங்கவே நீங்காது. மிக சுருக்கமாகவும் அதே நேரத்தில் மீத்தேன்  பாதிப்பு குறித்த பின் விளைவுகள் குறித்த செய்திகள் மிக சிறப்பாக காட்சிப்படுத்த்பட்டிருக்கின்றன 

சிறப்பில்லாத அம்சங்கள் 

1. குடி குடி என்று படம் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
2.கதாநாயகனுக்கு  ஏன் அப்படி ஒரு பரட்டை தலை , மற்றும் மோசமான தாடியுடனான தோற்றம் என்று தெரியவில்லை.
3. சூரி அவர்கள் முதல் பாதியில் வ.வா.சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது போலவே  நடிக்கின்றார் ,இரண்டாம் பாதியில் கேடி பில்லாகில்லாடி ரங்கா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது போல ஒரு நடிப்பு. வெகு சில இடங்களில் நம்மை புன்முறுவல் பூக்க  வைக்கின்றார்.
4.படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே பல படத்தில் பார்த்து போல ஒரு அமைப்பு இருக்கின்றது 
5. மிக முக்கியமான குறையாக நான் எண்ணுவது படத்தொகுப்பு : ஒரு சில காட்சிகள் கோர்வையாக அமைக்கபடாமல் இருப்பது போல தோன்றுகின்றது 


படத்தின் இயக்குனர் சரவணன்

இணையத்தில் தற்பொழுது கிடைப்பதால் கண்டிப்பாக நீங்கள் வார விடுமுறையில் பார்க்க ஏற்ற படம் இது. இந்தப் படம் தொடர்புடைய அனைவரையும் வாழ்த்துவோம்.

நன்றி 
செங்கதிரோன் 

கடுகுக் குளியல் : இளமை முதுமை உறவுக் காதல் படம்

பொருந்தாக் காதல் குறித்த படம் எடுப்பதில் வல்லவரான பாலசந்தர்  அபூர்வ ராகங்கள் தொடங்கி விடுகதை வரை பல படங்கள் எடுத்து சமூகத்தின் நிலையினை அச்சு அசலாக  அதிக விரசமின்றி படம் பிடித்துக் காட்டினார். எஸ்.ஜே.சூர்யா போன்றவர்கள் இதனை மிகைப்படுத்திக் காண்பித்து இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தினை ஏற்படுத்தினர்.அதியமானுக்கும் ஓளவையாருக்கும் இருந்தது கூட காமம் சாராத ஒரு காதல் தான், அதனாலேயே காயகற்பமான நெல்லிக்க்கனியினை தான் உண்ணாமல் ஓளவைக்கு வழங்கி மகிழ்ந்தான்.
தருமபுரியில் அமைந்த்ருக்கும் ஓளவை -அதியமான் சிலை


எழுத்தாளர் சாரு சொன்னது போல பாலியல் வறட்சி காரணமாக இளைஞர்களின் ரசனையை ஆண்டி மேனியாக்கு கொண்டு சென்றுவிட்டது. இதே போல ஏகப்பட்ட மலையாளப் படங்களும் வந்து மேலும் ரசனையை பாழ்பண்ணிவிட்டன.

கடுகுக் குளியல் (mustard bath ) 1993ல் வெளிவந்த இந்தக் கனடிய நாட்டு திரைப்படம். கயானா நாட்டுக்கு  கனடாவில் இருந்து வந்த மருத்துவ மாணவனுக்கும் , ஹங்கிரியில் இருந்து வந்த  ஒரு முதிர்ந்த வயதுப் பெண்ணுக்கும் இடையிலான உறவு குறித்த படம் தான் கடுகுக் குளியல்.


கனடாவிலிருந்து கயனாவுககு மாத்திவ் வந்ததற்கான காரணம் என்னவெனில் பிரிட்டனின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் போது தன குடும்பத்துடன் வாழ்ந்த அந்த வீட்டினையும் ஊரினையும் பார்த்து விட்டு வருவதற்காகத்தான், ஆனால் சுதந்திரம் அடைந்த கயானா வெள்ளையின மக்கள் மீது இருக்கும் வெறுப்பினை நேரடியாக உணரும்போது பரிதவிக்கின்றான் . அப்பொழுதுதான் அவன் தங்கிருக்கும் விடுதியில் இருக்கும் முதிர் பெண்மணியை சந்திக்க இருவருக்கும் பரஸ்பர அன்புதான் படத்தின் அடிநாதம்.

இது தவிர அங்கேயே அவனுக்கு கிடைக்கும் ஒரு காதலி , இவன் தத்தெடுத்து வளர்க்கும் பையன் , இவன் வேலை செய்யும் மருத்துவமனை அங்கிருக்கும் நோயர்கள் என்று கதை பயணிக்கின்றது. இது உலக சினிமா விழாவில் தங்க விருது பெற்ற படம்.

நேரம் இருக்கும் பொது நல்ல சினிமா பார்க்க ஆசை இருப்பின் இந்தப் படத்தினை கண்டுகளியுங்கள் 

நன்றி 
செங்கதிரோன் 

Wednesday, November 18, 2015

இசை உலகின் இளம் தேவதைகள் :கெல்லி கிளார்க்சன்

சூப்பர் சிங்கர் போட்டி போன்ற ஒன்றான அமரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானப் பாடகியனவர் தான் கெல்லி கிளார்க்சன்.அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தில் பிறந்த கெல்லியின் தாய் ஆங்கில ஆசிரியை,தந்தை  பொறியாளர், கிறிஸ்து மீது மிக அதிக ஈடுபாடு கொண்ட கெல்லி, தான் தேவாலயத்திலேயே தான் அதிக நேரம் இருந்தததாக் குறிப்பிட்டு இருக்கின்றார். தேவாலயத்தில் பாடல் பாடும்  குழுவில் இருந்து மிகப்பெரிய  பாடகியானவர்களில் இவரும் ஒருவர்.


2002ல் அமெரிக்கன் ஐடல் (American Idol ) போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இசைத்துறையில் தடம் பதித்தார். அப்பொழுது தொடங்கிய இசைப்பயணம் மிக வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தாலும் , 2011ல் இவரின் the stronger என்னும் இசைத் தொகுப்பு தான் உலகம் முழுக்க உள்ள பாப் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க காரணமாக அமைந்தது.இந்தப் பாடலுக்கு இசைத் துறையின் உயரிய   விருதான கிராமி விருது பெற்றதன் மூலம்கெல்லி மிக முக்கியப் பாடகியாக அங்கீகாரம் பெற்றார்.அந்தப் அந்தப்பாடலின் உங்கள் குழாய் இணைப்பு:


மிக சமீபத்தில் வந்த hearbeat பாடலும் மிக அருமையாக இருக்கும். எனக்குப் பிடித்த மற்ற பாடல்களின் வரிசை கீழே. 

1.Thankful 
2.Becasue of you 
3.since u been gone 
4.Mr .Know it all 

மேற்சொன்னப் பாடல்களை கேட்க ஆரம்பித்தால் மற்றப் பாடல்களையும் நீங்களாகவே கேட்க ஆரம்பித்து விடுவீர்கள் , கெல்லி உங்கள் மனம் கவர்ந்த பாடகியாக மாறுவது உறுதி. 

இசை உலகில் வலம் வரும் மற்ற தேவதைகள் பற்றிய முந்தையப் பதிவுகள் : இசை உலகில் மூழ்கித் திளையுங்கள் நண்பர்களே.

1.இசை உலகின் இளம் தேவதைகள் :எல்லீ
2,இசை உலகின் இளம் தேவதைகள்:அலிசியா கீஸ்
3.நிக்கி மினாஜ் :இசை உலகின் இளம் தேவதைகள்
4.அடேல் :இசை உலகின் இளம் தேவதைகள்
5.இசை உலகின் இளம் தேவதைகள்: கேட்டி பெர்ரி (Katy Perry )
6.இசை உலகின் இளம் தேவதைகள்:டெய்லர் ஸ்விப்ட்
7.இசை உலகின் இளம் தேவதைகள் :ரியான்னா

நன்றி
செங்கதிரோன்

Tuesday, November 17, 2015

சரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும்

சீனர்கள் கண்டுபிடித்த காகிதங்களை நல்ல செய்திகளை உலகறியச் செய்ய பயன்பட்டிருந்தாலும்  மறுபக்கம் சரோஜாதேவி என்றழைக்கப்படும் மஞ்சள் பத்திரிக்கைகளை அச்சிடவும் பயன்பட்டது எதிர்பாராத நிகழ்வுதான்.சுதந்திரத்திற்கு முன்பே மஞ்சள் பத்திரிகை காலாசாரத்தினை ஆரமித்து வைத்த பெருமை லட்சுமிகாந்தன் என்பவருக்கு சொந்தமானது. பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உண்மை மற்றும் பொய் கலந்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் , ஒரு கட்டத்தில் இந்த செயல் மூலம் அவர்களிடம் பணம் பறிக்க ஆரம்பித்தார். இதே பாணியை தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரிடம் செய்த பொழுது அவரைக் கொலை செய்து விட்டனர்.இதனால் தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.க்ருஷ்ணனும் சிலவருடங்கள் சிறை தண்டனை அனுபவித்தனர் .சுதந்திரத்திற்கு முன் லட்சுமிகாந்தன் செய்த வேலையினைதான்  "சைதை தமிழரசி" "சமூக ஆர்வலர்" என்றழைக்கப்படும்கிஷோர் சாமியும் அரசியல் வாதிகளின் வாழ்க்கை குறித்து அசிங்கமாகி எழுதி பிரபலமானார் . 

வடிவேலு அவர்களின்  நகைச்சுவைக் காட்சி ஒன்றில் சரோஜாதேவி புத்தகத்தினைப் பார்க்கும் பொது ஏற்படும் பரவசத்தினை மிக அருமையாக வெளிப்படுத்தி இருப்பார்.இந்தப் புத்தகங்களை பருவ வயதினர் முதல் வயதானவர் வரை வயது வித்தியாசமின்றி வாங்கிப் படித்தனர் எனபதற்கு இந்த நகைச்சுவை காட்சி சிறந்த உதாரணம் .இதனைக் கீழே உள்ள உங்கள் குழாய்  இணைப்பில் கண்டு மகிழுங்கள்.


 ஒரு சின்ன உண்மை சம்பவத்தின் மூலம் இதன் மீது பருவ வயதினர் கொண்டிருந்த ஈர்ப்பினை உணரவைக்கின்றேன். குற்றம் ம்கடிதல் படத்தில் பாலியல் கல்வியின் அவசியம் குறித்து பேசும் ஆசிரியைப் போன்ற ஒருவர் எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் இருந்தார். ஆண்கள் பள்ளிகூடம் என்பதால் எங்களுக்கு பெண்கள் குறித்த ஒரு புரிதலினை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். அந்த காலகட்டத்தில் காமிக்ஸ் புத்தகம் மிகப் பிரபலமாக இருந்து வந்தது. எங்கள் வகுப்பில் பழையபுத்தகம் கடை முதலாளியின் மகன் ஒருவன் இருந்தான். ஒரு சிலர் அவனிடமிருந்து இந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்துக் கொண்டிருந்தனர். காமிக்ஸ் புத்தகங்களுடன் சரோஜாதேவி புத்தங்களையும் எடுத்துக் கொண்டு வந்து மாணவர்களிடம் விற்பனை செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் மதியம் எங்கள் ஆசிரியர் வகுப்புத் தலைவனான என்னை அழைத்து இன்று மதியம் நம் வகுப்பில் அனைத்து மாணவரின் பைகளையும் சோதனை செய்யப போகிறோம் தயாரக இரு என்றார். எங்கள் திட்டப்படி அன்று அனைத்து மாணவர்களையும் வெளியில் நிற்க வைத்து விட்டு ஒவ்வொரு பையாக சோதனை செய்தோம். வகுப்பில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களின் பைகளிலிருந்து சரோஜாதேவி புத்தகங்களை பறிமுதல் செய்தோம். எங்கள் ஆசிரியர் யாரையும் கண்டிக்கவில்லை, அந்த மாணவனையும் தண்டிக்கவில்லை.இந்தப் புத்தகத்தைப் படிப்பதானால் ஏற்படும் மோசமான பின் விளைவுகள் குறித்து மிக சுருக்கமாகக் கூறினார்.

இப்படிப்பட்ட பரவசம் கொடுக்கும் இந்தப் புத்தகங்கள் இணையதளம் வருகைக்குப் பின்னர் சுவாரசியமற்ற ஒன்றாக மாறிவிட்டது. மூலைக்கு மூலை இணையதளம் கடைகள் தொடங்கிய பின்னர் அங்கே சென்று சரோஜோ தேவி புத்தகங்களில் வரும் நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கும் அனுபவம் கிடைத்து. வெளிநாட்டில் இருந்து வெளியான இந்தக் காட்சிகளை கண்டு கொண்டிருந்தவர்களுக்கு "சுதேசி" தயாரிப்பாளராக மாறிய டாக்டர் பிரகாஷ் அவர்கள் உள்ளூரிலேயே இவற்றை எடுத்து பின்னர் பலகாலம் சிறை தண்டனை அனுபவித்தார்.


இந்தப் புத்தங்கள் ஒரு வழியாக அச்ச்டிப்பதே நின்று விட்டாலும் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஏகப்பட்ட பாலியல் வீடியோக்கள் இளைய சமூகத்தை சீரழிக்கின்றன.என்னுடைய தொடர் பதிவான பாலியல் உணர்வு ஷங்கர் படமா ராம் படமா என்றப் பதிவினில் இது போன்ற வீடியோக்களை ஏன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கின்றேன்.

1.சேலம் சிவராஜ் வைத்தியரும் பாலியல் நிபுணர் நாராயண ரெட்டியும் : இரு துருவங்கள்
2.பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+
3.பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :2
4.பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :3

நன்றி 
செங்கதிரோன்