Thursday, October 29, 2015

யுவராஜிடமிருந்து தப்பித்த ஜோதிகா

தன் சாதி மானம்  காக்க போராடிய வீரன் போல தன்னைக் காண்பித்துக் கொள்ளும்  யுவராஜ் உண்மையிலே வீரரா? தன சாதிப் பெண்களை பிறர் தூக்கி சென்று விடாமல் தடுப்பது தான் தன்னுடைய தலையாயப் பணி என்றால் இவர் சாதி சார்ந்த ஆண்கள் பிற சாதி, மதம் சார்ந்த பெண்ணைக் காதலித்து மணந்தால்  அனைத்து துவாரங்களையும் மூடி அமைதி காப்பது ஏனோ ?


ஜோதிகா கோயம்புத்தூர் மாப்பிள்ளையான சூர்யாவை திருமணம் செய்து கொண்டதிலிருந்தே தெரிய வந்திருக்கும் , யுவராஜ் வம்சம் சார்ந்தவராகத்தான் இருப்பபார் என்று, அதுவும் சூர்யா யுவராஜ் தொடர்புடைய சமூகம் சார்ந்தவர் என்பதனை அவர் தந்தை சிவக்குமார் தீரன் சின்னமலை குறித்து முகப் புத்தகத்தில் பதிவு எழுதி பிரச்சனைக்கு உள்ளானதில் இருந்து தெள்ளத் தெளிவாக உணர முடியும்.

நடுத்தரக் குடும்பம் சார்ந்த இரு வெவ்வேறு சாதியினர் காதலிக்கும் போது  அவர்களிடம் சென்று தன் வீரத்தைக் காண்பிக்கும் யுவராஜ் தன் குலக் கொழுந்துகளான சூர்யாவிடம் தகராறு செய்யும் தைரியம் இருக்கின்றதா ? அப்படி செய்தால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்கும் . நடுத்தரக் குடும்பங்களை குறிவைத்து அவர்களை தாக்கினால் காவல் துறை பல மாதங்கள் கழித்தும் பிடிக்க முடியவில்லை.



தமிழகத்தின் அனைத்தத் தரப்பினருக்கும் பிடித்த ஒரு ஜோடி சூர்யா -ஜோதிகா இந்த இரு அழான உள்ளங்கள் இணைந்திருக்க சாதி தடையாக முதலில் இருந்தாலும் பின்னர் அவற்றை முறியடித்து தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். இதே போன்ற சுதந்திரம் அனைத்து தரப்பினருக்கும் வேண்டும் , அந்த சுதந்திரத்தில் இது போன்ற அல்லு சில்லுகள் நுழைவது தடுப்பது முதலில் அரசாங்கத்தின் கடமை , இரண்டாவது மக்களும் வெறுமென பெயருக்குப் பின் ஜாதிப் பெயரை எடுத்து விட்டதனால் மட்டும் மாற்றம் வந்து விடாது, தங்களின் மனத்திலிருந்தும் இந்த சாதிதீயை அகற்ற வேண்டும் .

 உயர் சாதி  ஆண் எந்த சாதி மதப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு வரலாம், அதையெல்லாம்  தங்கள் குலப் பெருமை ,மண்ணாங்கட்டி என்று வாழ்த்தும் இந்த சாதிவெறிக் கும்பல், தாழ்ந்த சாதி என்று முத்திரை குத்தப் பட்ட ஒருவன் , மற்ற சாதிப் பெண் மேல் ஆசைப்பட்டால்  அவர்களைத் துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம் ? 

பண்பட்ட தமிழ் சமூகம் இது போன்ற அறிவிலிகளை ஆதரிக்கவேக் கூடாது . சமூக முன்னேற்றத்திற்கு இது எள்ளவும் நன்மை பயக்காது நண்பர்களே , சிந்தித்து செயல்படுங்கள் .

நன்றி 
செங்கதிரோன் 

இந்தப் பதிவு தொடர்புடைய மற்றொரு விரிவானப் பதிவு விரைவில் வரவிருக்கின்றது .
கை கூடாத காதல் திருமணம் : நடிகர் திலகம் சிவாஜி முதல் இளவரசன் வரை  

Wednesday, October 28, 2015

சண்டி வீரன் தோல்வி -பஜ்ரங்கி பைஜான் வெற்றி :ஏன் ?

மண் மணம் சார்ந்து படம் எடுக்கக் கூடியவர்களின் பட்டியல் ஒன்று எடுத்தால் அதில்  இயக்குனர் சற்குனத்திற்கு ஒரு முக்கிய இடம் இருக்கும், அவரின் களவாணிப் படம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. வட  மாவட்டம் சார்ந்த எனக்கு அந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தயும் மிக எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடியும். 

இரண்டு கிராமங்களுக்கு சாமி சிலையால் வரும் பகை, எருக்கம் பூவினைக் கொண்டு தேர்வில் வெற்றியா தோல்வியா என தீர்மானிப்பது , அம்பாசிடர் கார் நிறுத்துமிடம் , டியூஷன் சென்டர் என்று பல நிகழ்வுகள் வட மாவட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கக் கூடியவையாக இருந்தன. தமிழ் சினிமா  மதுரை போதையில் தத்தளித்துக் கொண்டிருக்க சற்குணத்தின் இந்தப் படம் ஒரு புதிய உலகை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது.


ஆனால் அடுத்து அவர்  கொடுத்த தோல்வி படங்களினால் சறுக்கல் குணமாக மாறிவிட்டார். நையாண்டியின் மோசமான தோல்விக்குப் பின்னரும் அவரின் திறமை மேல் நம்பிக்கை வைத்து,  இயக்குனர் பாலா  அவருக்குக் கொடுத்த வாய்ப்புதான் சண்டி வீரன் . இந்தப் படத்தின் ட்ரைலர் பார்த்த பொழுது அப்பாடா மீண்டும் மண் சார்ந்தக் கதை கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் என்றெண்ணினேன் .ஆனால் நடந்ததோ சற்று எதிர்மறை. ஏன் எதிர்மறை என்று ஆராயும் முன்னர் பஜ்ரங்கி பாய்ஜான் பட வெற்றிக் குறித்து பார்ப்போம் .

பஜ்ரங்கி பைஜான்(Bajrangi Bhaijaan)
வாய்பேச முடியாத ஒரு பாகிஸ்தான்  சிறுமி இந்தியாவில் தனித்து விடப்படுகின்றாள். அவள் தீவிர இந்துவான சல்மானிடம் தஞ்சம் அடைய அச்சிறுமியை பாகிஸ்தான் சென்று சேர்ப்பிக்க சல்மான் செய்யும் சாகசம் தான் பஜ்ரங்கி படத்தின் கதை. முதல் பாதி இந்துக்களுக்காகவும் , இரண்டாம் பாதி முஸ்லீம்களுக்கு  என்று மிக அருமையாக எடுக்கபட்டு மிகப் பெரும் வெற்றி அடைந்தது இந்தப் படம் . முதல் பாதியில் இந்துக் கோவில், ஆர்.ஸ் .ஸ்  என்று செல்லும் ,இரண்டாம் பாதியில் பாகிஸ்தானின் தர்க்கா , அம்மக்களின் இந்தியா குறித்த நெகிழ்ச்சி மிக்க உணர்வுகள் என்று நம்மைக் கலங்கடிக்க செய்யும் காட்சிகள் உள்ளன. இந்தப் படத்தினை இது வரைப் பார்க்காதவர்கள் உடனடியாகப் பாருங்கள் .



இப்போது சண்டி வீரன், இரு கிராமங்களுக்கு இடையேயான குடிநீர் பிரச்சனை தான் படம் , அதில் உப்பு சப்பில்லாத  காதலை கலந்து வீணடித்து விட்டார்.இரு நாட்டுப் பிரச்சனை குறித்தே படம் எடுக்கும் போது , இரு மாநிலங்களுக்கிடையான காவேரிப் பிரச்சனையைக் கொண்டே திரைக்கதையை அமைத்திருக்கலாம்.  தென்னிந்தியாவில்  நமக்கும் கன்னடர்களுக்கும் தான் அதிக தொடர்பு இருக்கின்றது .பெங்களூரில் எண்ணற்ற  தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள்.

இந்த இரு மாநிலத்தையும் இணைக்கும் விடயங்கள் பல இருக்க சற்குணம் இதனைக் கொண்டே திரைக்கதை அமைத்திருக்கலாம் ,அதுவும் இந்தப் படத்தின் கதாநாயகனே கன்னடர் தான் ,எனவே அந்த மாநிலத்தவரும் எந்த ஒரு பிரச்சனையும் செய்திருக்க மாட்டார்கள் .இரு மாநிலத்திலும் காவேரிப் பிரச்சனையை பெரிது படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரும் பாடமாக அமைந்திருக்கும்.

பஜ்ரங்கிப் படம் எவ்வாறு இந்த இரு நாட்டில் உள்ள நல்ல உள்ளங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டியதோ அவ்வாறே சண்டி வீரன் படமும் ஒரு வேளை காவேரியை மையைப் படுத்தி எடுத்து இருப்பின் தண்ணீர் இன்றி அவதிப்படும் விவசாயிகளின் நிலை இரு மாநில மக்களும் உணர்ந்து இருப்பர். மேலும் இரு மாநில மக்களும் ஒருவர் மீது ஒருவர் எந்தக் காழ்ப்புணர்வின்றி  வாழ்கின்றனர் என்ற உண் மையினையும்  எடுத்துக் கூறும்  வாய்ப்பு கிட்டி இருக்கும் 

சற்குணம் அவர்களே அடுத்த படத்தில் ஒரு வலுவான திரைக் கதையுடன்  வட மாவட்ட சிறப்புகளை உலகுக்கு உணர்த்துங்கள்.

நன்றி 
செங்கதிரோன்  

Sunday, October 25, 2015

இசை உலகின் பொறுக்கி :எமினம்

ரோமியோ ஜூலியட் படத்தில் அடியே இவளே பாடலில்  ஜெயம் ரவி அணிந்து வரும்  அணிந்து வரும் டி-சர்ட்டில் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் தான் எமினம். இவ்வாறு அமெரிக்க சென்று திரும்பிய இளைஞர்களில் பெரும்பாலோனோரும் இந்த எமினம் படம் போட்ட டி-சர்ட்டை அணிந்து இருப்பர். என்னிடமும் ஒன்று உண்டு. 


ஆப்பிரிக்கர்கள் அதிகம் ஆக்கிரமத்திருக்கும் ராப் உலகில் நுழைந்த இந்த வெள்ளைத் தோல் இளைஞர் மிகப் பெரும் உச்சத்தினை ராப் இசையில் அடைந்தார்.மிச்சிகனில் பிறந்த எமினமின் உண்மையானப் பெயர் Marshall Bruce Mathers III. 1996ல் ஆரம்பித்த இசைப் பயணம் இன்றுவரைக் கொடிக் கட்டிப் பறக்கின்றது.

இவருடைய slim shady என்ற வார்த்தையும் , கையின் நடு  விரலைக் காண்பிப்பது என்ற இரண்டும் இவருடைய தனி அடையாளமாக இசை ரசிகர்கள்.இது போன்ற டி -சர்ட் அணிவது, அவர் போல நடந்து கொள்வது மட்டுமல்லாமல் அவருடைய பாடல்களையும் கேட்டுக் கொண்டிருப்பர் .




அப்படி என்ன சிறப்பு என்ன இருக்கின்றது அவருடைய பாடல்களில் ? I am slim shady ,without me , stan ,my name is ,the way I am போன்ற  பல பிரபல பாடல்கள் உள்ளன.அவரே எழுதும் இந்த பாடல் வரிகளில் உள்ள அர்த்தங்கள் தான் இளைஞர்களை அதிகம் ஈர்க்கின்றன .

stan என்ற பாடல் ஒரு ரசிகனுக்கும் இசைக்கலைஞருக்கும் இடையே  நடக்கும்  கடித பரிமாற்றம் குறித்த் பாடல் தான் மிக நெகிழ்ச்சியான ஒன்று. தன கடிதத்திற்கு பதில் எழுதாதால் கோபமடைந்த ரசிகன் தன கர்ப்ப மனைவியுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்யும் அளவுக்கு செல்வவ்ர். அந்தப் பாடலின் காணொளியின் உங்கள் குழாய் இணைப்பு 

ஒரு பாடலில் தான் கஞ்சா புகைப்பதை விட தன் அம்மா புகைப்பார் என்று ஒரு பாடலில் வரி அமைத்து மிக சர்ச்சைக்குள்ளானார். பிறகு அவரின் அம்மா வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றார்.

அவருடைய மிகப் பிரபலமானப் பாடலான slim shady பாடலின் காணொளியைக் காணுங்கள். எமினம் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடகராக இருப்பார் என்று நம்புகின்றேன் .


நன்றி 
செங்கதிரோன் 

Saturday, October 24, 2015

பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :2

முதல் பாகத்தில் குறிப்பிட்டுள்ளது போல பாலியலின் மிக முக்கியமான கைப்பழக்கம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம் . கைப்பழக்கம் தமிழ்  சமூகத்தின் இளைஞர்களிடையே நிலவும் மோசமான மூடப்பழக்கம்.இந்த மூடப்பழக்கத்தினை தொடர்ந்து நிலைநிறுத்த மட்டுமே ஊடங்கங்களும் , திரைப்படத்துறையும் மற்றும் இந்த பரம்பரை வைத்தியர்களும் பாடுபடுகின்றனரே தவிர யாருமே இந்த பழக்கம் குறித்த அச்சதினைப் போக்க எந்த ஒரு முயற்சியினையும் எடுக்கவே இல்லை.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் நமது முப்பாட்டன், பாட்டன் மற்றும் அப்பா ஆகியோருக்கு இந்தப் பழக்கம் இருந்ததாகவோ அல்லது அது குறித்த பயம் இருந்ததாக தெரியவில்லை. இல்லாமல் இருந்ததற்காக காரணங்கள்  இளவயது திருமணம், மிக கட்டுப்பாடான சமூக அமைப்பு , கூட்டுக் குடும்ப அமைப்பு முறைகள் என்று பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

உலக ரீதியாகப் பார்த்தாலும் இந்த அச்சத்தில் முதலிடத்தில் இருப்பதும் நம்மைப் போன்ற வளரும் நாடுகளில்தான் அதிகம்.இதற்கான காரணம் எழுத்தாளர் சாரு சொன்ன மாதிரி பாலியல் வறட்சி ஒரு முக்கியக் காரணம் இருந்தாலும் , அது தவிர பாலியல் குறித்த அறியாமையும் ஆகும்.

இந்த அறியாமையைப் போக்கவே இந்தப் பதிவு. ஆனாலும் இந்த அறியாமையைப் போக்க நவீன மருத்துவமான அலோபதி மருத்துவர்கள் எந்த முயற்சியையும் எடுக்கவே இல்லை. ஆங்கிலத்திலேயே இருக்கும் இந்தப் புத்தகங்களை படிக்கும் நம் நாட்டு மருத்துவர்கள் வெளி நாடுகளில் இருக்கும் நோய்கள் குறித்தே அதிகம் படித்து அந்தக் கோணத்திலேயே நோயினை அணுகுவார்கள்.வளர்ந்த நாடுகளில் கைப்பழக்கம் அதிக அளவில் இல்லை , எனவே அது குறித்து  அங்கு உள்ள மருத்துவர்களும் அதிக அளவில் அக்கறை கொளவதும் இல்லை, ஆராய்ச்சிகளும் நடைபெறவே இல்லை . ஆனால் இதே நடைமுறையை நம் நாட்டில் உள்ள மருத்துவர்களும் பின்பற்றுவதால் நம் நாட்டில் இளைய சமூகத்திடம் பீடித்துப் போயிருக்கும் கைப்பழக்கம் குறித்த அச்சம் போக்க எந்த முயற்சியினையும் இவர்கள் எந்த முயற்சியினையும் எடுக்காமல் இன்று வரை இருக்கின்றனர்.இருப்பினும் மருத்துவர் நாராயண ரெட்டி தான் இந்த சமூகத்தின் உண்மை நிலையினை உணர்ந்து அதற்கேற்ப இன்று வரை பாலியல் அறியாமையைப் போக்க பாடுபட்டு வருகின்றார்.

இவ்வாறு நவீன மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததனால், பரம்பரை மருத்துவர்கள் அந்த இடத்தினை ஆக்கிரமித்து இளைய சமுதாயத்தை சீரழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர். 

இந்தப் பழக்கம் குறித்த அச்சங்களும் அதற்கான விடைகளும் கீழே :

1. இந்தப் பழக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் . சீரான ஒன்று , தீவிரமான ஒன்று . சீரான என்பது எபோழுதாவது வாரம், மாதம் ஒரு முறை என இருப்பது .இரண்டாவது தீவிரமான என்பது அடிக்கடி நிகழ்வது.தினமும் அல்லது வாரத்தில் பல முறை என்று இருப்பது. எனினும் இரண்டாலும் தாம்பத்திய உறவில் எண்டஹ் ஒரு சிக்கலும் வரவே வராது எனவே அச்சமே வேண்டாம். மிக தைரியமாக முதலிரவொ அல்லது முதல் அனுபவத்தில் தைரியமாக இருங்கள். இனி தமிழகத்தில் ஒருவரும் இந்த பயத்தினால் தூக்கில் தொங்கினார்கள் என்று செய்தியே வரவே கூடாது.

2. பலரும் கிண்டல் செய்வது போல கை ரேகைள் இந்தப் பழக்கத்தினால் அழியும் என்பது  மிக மிக முட்டாள் தனம். கைகளில் இருக்கும் ரேகைகள் என்பவை நாம் ஒரு பொருளை வலுவாகப் பிடிப்பதற்கான அமைப்பு .அது ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் இருக்கும். இதனை அறிவியல் ரீதியாக நிருபித்திருக்கின்றனர் . எனவே இப்படி கிண்டல் செய்பவர்களுக்கு இந்த விளக்கம் அளியுங்கள் அல்லது அவர்களின் அறியாமைக் கண்டு பரிதாபம் கொள்ளுங்கள் .

3. உடல் சக்தி வீணாகும், சோம்பல் வரும் எனப்தெல்லாம் ஒரு மன பயம் மட்டுமே இவை திட்டமிட்டு பரம்பரை மருத்துவர்களால் பணம் பறிக்க பயன்படுத்தும் வாசகங்கள் .இவற்றைப் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கண்டால் தான் உண்மை என்ன எனபது தெரிய வரும்.

4.குழந்தைப் பிறப்பிற்கும் அதாவது இனப்பெருக்கத்திற்கும் இதற்குமான தொடர்பு இல்லவே இல்லை. எனினும் முன்பே சொன்னது போல தீவிரமானப் பழக்கம் ஒரு  சில வேளைகளில் அணுக்களின் அளவினை குறைக்கலாம் , இருப்பினும் அணுக்கள் குறைவாக இருப்பதற்கு புகைப் பழக்கம் மற்றும் ஏராளமான காரணங்கள் இருப்பதால் இந்தப் பழக்கம் வெகு சிலவாகவே பாதிக்கும்.

5. இனப் பெருக்க உறுப்பின் அளவும் இந்தப் பழக்கத்தினால் எந்தளவும் படிக்கபடாது.

6. மிக முக்கியமாக வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தகுந்த மருத்துவரை அணுகுங்கள்.

அடுத்த பதிவில் சீக்கிரம் வெளியேறுதல் குறித்து பார்ப்போம் . 


Friday, October 23, 2015

பாக்யராஜின் ருத்ராவின் காப்பி தான் ருத்ரம்மா தேவி :

 ருத்ரம்மா தேவி படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கதை மிகவும் நன்றாக இருக்கின்றதே என்று இணையத்தில் ருத்ரம்மா தேவி குறித்த வரலாற்றினைப் படித்துக் கொண்டிருந்தேன். ருத்ரம்மா குறித்து முன்பே யாரவது  படம் எடுத்திருக்கின்றார்களா என்று பார்த்தால் பாக்யராஜ் என்று சொன்னது இணையம் ,அந்தப் படம் ருத்ரா 1991ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சூப்பர் ஹிட் படம். 

அது எப்படி என்று கேட்கின்றீர்களா விரிவான விளக்கம் படத்துடன் கீழே :

ருத்ரா -கவுதமி , ருத்ரம்மா அனுஷ்கா பெண்ணாகப் பிறந்தவர் ஆண்  வேடமிட்டு முன்னவர் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழிவாங்குவார் ,பின்னவர் நாட்டைக் காப்பாற்றுவார் 

ருத்ராவில்  பாக்யராஜ் திருடன், ருத்ரம்மா தேவியில் அல்லு அர்ஜூன் திருடன் ஆனால் இருவருமே ருத்ராவுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

சிவதேவ அய்யாவாக  பிரகாஷ்ராஜ்  ருத்ரம்மாவை, ருத்ரனாக மாற்றுவார், ருத்ராவில் காவல் துறை அதிகாரி லக்ஷ்மி பெண்ணை ஆணாக மாற்றுவார்.

மேல சொன்ன ஒப்புமைகள் போல இன்னும் நிறைய சொல்லலாம் . இந்த ஒப்பு நோக்கில் பாக்யராஜின் திறமையை நாம் உணர்ந்து  கொள்ள முடியும் , எப்படி ஒரு வரலாற்று சம்பவமான ருத்ரம்மா தேவியின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு ஒரு அதிரடிப் படத்தினை உருவாக்கி வெற்றி அடைந்திருக்கின்றார் என்பது தான்.


இருப்பினும் இங்கே சொல்ல வந்த விடயம் வேறு என்பதனால் அதை நோக்கி பயணிப்போம். ஆந்திராவில் உள்ள ருத்ரம்மா தேவியின் சரித்திரம் கோயம்புத்தூரில் பிறந்த பாக்யரஜிக்கு தெரிந்த ரகசியம் என்னவென்றால் பாக்யராஜும் ஒரு தெலுங்கர் என்பதால் தான், ஆச்சரியமாக இருக்கின்றதா ஆந்திராவில்  நாயுடு சமூகத்தினர் தங்கள் சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பட்டியலில் பாக்யராஜின் புகைப்படத்தினையும் வைத்து இருக்கின்றனர்.

பாக்யராஜும் தன் தாய்மொழிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக ஆந்திராவைப் பூரிவீகமாகக் கொண்ட ருத்ரம்ம்மா தேவியின் வரலாற்றினை ருத்ராவாக எடுத்து தமிழர்களுக்கு அல்வா கொடுத்து இருக்கின்றார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இதையெல்லாம் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கின்றது.
நன்றி 

செங்கதிரோன்