Tuesday, November 17, 2015

சரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும்

சீனர்கள் கண்டுபிடித்த காகிதங்களை நல்ல செய்திகளை உலகறியச் செய்ய பயன்பட்டிருந்தாலும்  மறுபக்கம் சரோஜாதேவி என்றழைக்கப்படும் மஞ்சள் பத்திரிக்கைகளை அச்சிடவும் பயன்பட்டது எதிர்பாராத நிகழ்வுதான்.சுதந்திரத்திற்கு முன்பே மஞ்சள் பத்திரிகை காலாசாரத்தினை ஆரமித்து வைத்த பெருமை லட்சுமிகாந்தன் என்பவருக்கு சொந்தமானது. பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உண்மை மற்றும் பொய் கலந்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் , ஒரு கட்டத்தில் இந்த செயல் மூலம் அவர்களிடம் பணம் பறிக்க ஆரம்பித்தார். இதே பாணியை தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரிடம் செய்த பொழுது அவரைக் கொலை செய்து விட்டனர்.இதனால் தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.க்ருஷ்ணனும் சிலவருடங்கள் சிறை தண்டனை அனுபவித்தனர் .சுதந்திரத்திற்கு முன் லட்சுமிகாந்தன் செய்த வேலையினைதான்  "சைதை தமிழரசி" "சமூக ஆர்வலர்" என்றழைக்கப்படும்கிஷோர் சாமியும் அரசியல் வாதிகளின் வாழ்க்கை குறித்து அசிங்கமாகி எழுதி பிரபலமானார் . 

வடிவேலு அவர்களின்  நகைச்சுவைக் காட்சி ஒன்றில் சரோஜாதேவி புத்தகத்தினைப் பார்க்கும் பொது ஏற்படும் பரவசத்தினை மிக அருமையாக வெளிப்படுத்தி இருப்பார்.இந்தப் புத்தகங்களை பருவ வயதினர் முதல் வயதானவர் வரை வயது வித்தியாசமின்றி வாங்கிப் படித்தனர் எனபதற்கு இந்த நகைச்சுவை காட்சி சிறந்த உதாரணம் .இதனைக் கீழே உள்ள உங்கள் குழாய்  இணைப்பில் கண்டு மகிழுங்கள்.


 ஒரு சின்ன உண்மை சம்பவத்தின் மூலம் இதன் மீது பருவ வயதினர் கொண்டிருந்த ஈர்ப்பினை உணரவைக்கின்றேன். குற்றம் ம்கடிதல் படத்தில் பாலியல் கல்வியின் அவசியம் குறித்து பேசும் ஆசிரியைப் போன்ற ஒருவர் எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் இருந்தார். ஆண்கள் பள்ளிகூடம் என்பதால் எங்களுக்கு பெண்கள் குறித்த ஒரு புரிதலினை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். அந்த காலகட்டத்தில் காமிக்ஸ் புத்தகம் மிகப் பிரபலமாக இருந்து வந்தது. எங்கள் வகுப்பில் பழையபுத்தகம் கடை முதலாளியின் மகன் ஒருவன் இருந்தான். ஒரு சிலர் அவனிடமிருந்து இந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்துக் கொண்டிருந்தனர். காமிக்ஸ் புத்தகங்களுடன் சரோஜாதேவி புத்தங்களையும் எடுத்துக் கொண்டு வந்து மாணவர்களிடம் விற்பனை செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் மதியம் எங்கள் ஆசிரியர் வகுப்புத் தலைவனான என்னை அழைத்து இன்று மதியம் நம் வகுப்பில் அனைத்து மாணவரின் பைகளையும் சோதனை செய்யப போகிறோம் தயாரக இரு என்றார். எங்கள் திட்டப்படி அன்று அனைத்து மாணவர்களையும் வெளியில் நிற்க வைத்து விட்டு ஒவ்வொரு பையாக சோதனை செய்தோம். வகுப்பில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களின் பைகளிலிருந்து சரோஜாதேவி புத்தகங்களை பறிமுதல் செய்தோம். எங்கள் ஆசிரியர் யாரையும் கண்டிக்கவில்லை, அந்த மாணவனையும் தண்டிக்கவில்லை.இந்தப் புத்தகத்தைப் படிப்பதானால் ஏற்படும் மோசமான பின் விளைவுகள் குறித்து மிக சுருக்கமாகக் கூறினார்.

இப்படிப்பட்ட பரவசம் கொடுக்கும் இந்தப் புத்தகங்கள் இணையதளம் வருகைக்குப் பின்னர் சுவாரசியமற்ற ஒன்றாக மாறிவிட்டது. மூலைக்கு மூலை இணையதளம் கடைகள் தொடங்கிய பின்னர் அங்கே சென்று சரோஜோ தேவி புத்தகங்களில் வரும் நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கும் அனுபவம் கிடைத்து. வெளிநாட்டில் இருந்து வெளியான இந்தக் காட்சிகளை கண்டு கொண்டிருந்தவர்களுக்கு "சுதேசி" தயாரிப்பாளராக மாறிய டாக்டர் பிரகாஷ் அவர்கள் உள்ளூரிலேயே இவற்றை எடுத்து பின்னர் பலகாலம் சிறை தண்டனை அனுபவித்தார்.


இந்தப் புத்தங்கள் ஒரு வழியாக அச்ச்டிப்பதே நின்று விட்டாலும் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஏகப்பட்ட பாலியல் வீடியோக்கள் இளைய சமூகத்தை சீரழிக்கின்றன.என்னுடைய தொடர் பதிவான பாலியல் உணர்வு ஷங்கர் படமா ராம் படமா என்றப் பதிவினில் இது போன்ற வீடியோக்களை ஏன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கின்றேன்.

1.சேலம் சிவராஜ் வைத்தியரும் பாலியல் நிபுணர் நாராயண ரெட்டியும் : இரு துருவங்கள்
2.பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+
3.பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :2
4.பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :3

நன்றி 
செங்கதிரோன் 

Sunday, November 15, 2015

லிவின்டுகதரை(Live-in together) தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் விக்ரமன்

மணிரத்தினத்தின் படமான ஓ காதல் கண்மணி தான் லிவிங் டுகதர் குறித்த முதல் தமிழ் படம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் 1990ம் ஆண்டு வெளிவந்த புது வசந்தம் படம் தான் முதன் முதலில் லிவிங் டுகதர் குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துக்கு விக்ரமன் அவர்கள் அறிமுகப்படுத்தி விட்டார்.

புதுவசந்தம் படத்தில் சொன்ன லிவிங் டுகதர் என்பது மூன்று  ஆண்களுடன் ஒரு பெண் ஒரே வீட்டில் தங்கி இருப்பது, இதே போன்ற ஒரு சூழ்நிலையினை 90களில் கற்பனை கூட செய்ய இயலாது. விக்ரமன் மிக தைரியமாக அந்தகே கதையினை தன் முதல் படத்திலேயே எடுத்து மிகப்பெரிய வெற்றி கண்டவர்.இப்பொழுது மிக தீவிரமாக செயல்படும் கலாச்சார காவலர்கள் அப்பொழுது செயல்பட்டிருந்தால் இது போன்ற ஒரு நவீனப் பார்வை கண்ட கதைகள் தொடர்ந்து வருவது தடுக்கப்பட்டிருக்கும்இருக்கும்.இது மட்டுமல்லாது விக்ரமன் அவர்கள் இதே போன்ற மிக வித்தியாசமான கதைகள் கொண்ட பல படங்களை எடுத்தவர். அவருக்கு மணிரத்தனம் பாலசந்தர் ,பாரதி ராஜா போன்றோரின் வரிசையில் அவருக்கான இடத்தினை நாம் வழங்கி இருக்க வேண்டும். ஏனோ சினிமா விமர்சகர்களும் அவரின் பங்களிப்பினை சரியாக பாராட்டவில்லை.


விக்ரமனின் லிவிங் டுகதர் கதையும் மணிரத்னத்தின்  லிவிங் டுகதர் கதையும் வெவ்வேறு திசையிலானது. முதலாவது எந்த ஒரு மன உடல் ஈர்ப்ப்பும் இல்லாமல் இந்த மூன்று ஆண்களும் அந்தப் பெண்ணுடன் வாழ்வர்,இரண்டாவதில் முழுக்க முழுக்க உடல் ஈர்ப்பிலான லிவிங் டுகதர். இந்த லிவிங் டுகதர் வெளிநாட்டில் இருந்து நாம் கற்றுக் கொண்ட வாழ்க்கை முறையாக இருப்பினும் , உணமையிலேயே அங்கே லிவிங் டுகதர் என்பது மிக மிக வித்தியாசமானது.


வயது என்பது லிவிங் டுகதருக்கு அங்கே தடையே இல்லை , 20பது வயது முதல் 80 வயது வரை எப்பொழுது வேண்டுமானாலும் லிவிங் டுகதர் வாழ்க்கை தொடங்கும். இதிலிருந்து தெரிய வேண்டியது உடல் மட்டுமே இங்கே முதன்மையானது அல்ல , இரண்டு உள்ளங்களுக்குமான சரியான புரிதல் தான் மிக முக்கியமானது . அதைத்தான் my soul met  என்று குறிப்பிடுகின்றனர்.

மிக மிக தெளிவான எல்லையினை தங்களுக்குள் வகுத்தே லிவிங் டுகதர் வாழ்க்கையினை தொடங்குகின்றனர்.அதாவது இந்த வாழ்க்கையில் இருவரும் இணைத்து வாழும் இடம் , உணவு ஆகியவற்றுக்கு தனித்தனியே தான் செலவு செய்வர். உணவகங்களுக்கு சென்றாலும் அவ அவருக்கான தொகையினையும் தனியாகவே செலுத்துவர். இந்த காலகட்டத்தில் அவர்கள் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பபட்டு விட்டாலும் நம்பிக்கை அதிகரித்து விட்டாலும் திருமணத்திற்கான முடிவினை எடுப்பார்கள் . ஆனாலும் இந்த முடிவினை சில மாதங்களிலோ அல்லது ஓராண்டிலோ எடுப்பதில்லை. குறைந்தது இரண்டு வருடம் முதல் ஐந்தாண்டு வரை கூட லிவிங் டுகதர் வாழ்க்கைக்குப் பின்னரே திருமணம் குறித்து சிந்திப்பார்கள். 

தமிழ்நாட்டில் அந்தக் காலம் முதலே லிவிங் டுகதர் மிகப் பிரபலம் , அரசியலில் முதல்வர்களில் முக்கால்வாசி பேர் லிவிங் டுகதரில் வாழ்ந்தாக கிசுகிசு உலாவந்தன. சினிமாவிலும் அதே தான் அனைத்து முன்னனி நடிகர் நடிகைகள் லிவிங் டுகதர் வாழக்கையின வாழ்ந்து காட்டியவ்ர்கள் தான்.சீரியல் நடிகை லாதா ராவும் அவர் கணவர் ராஜ்கமலும் கூட தாங்கள் லிவிங் டுகதரில் வாழ்வதாக பத்திரிக்கைகளுக்கு பேட்டி  அளித்து பரபரப்பினை ஏற்படுத்தினர். சென்னையில் பொறியியல்  கல்லூரிகள் அதிகரித்த பின்னர் அங்கு படித்த பணக்கார மாணவ மாணவிகளும் இந்த வாழ்க்கையினை வாழ ஆரம்பித்தனர்.இன்னும் சற்று மிகவும் பின்னோக்கிப் போனால்  லிவிங் டுகதருக்கான ஆதாரம் தொல்காப்பியத்திலேயே இருப்பத்தாக இலக்கியவாதிகள் குறிப்பிடுகின்றனர், நாம் இந்துவாக மதம் மாறிய பின்னர் அதையெல்லாம் மறந்து விட்டோம்  என்று நினைக்கின்றேன்.


நம்  ஊரில் இந்த லிவிங் டுகதர்  வாழ்வானது மிக மோசமான ஒன்றாக கலாச்சார காவலர்களால்  கருதப்படுவதால் வெளியில் சொல்ல தயங்குகின்றனர்.இதற்கு  கமல் தான் மிக மிக சிறந்த எடுத்துகாட்டு சரிகாவுடன் வாழ்ந்த வாழ்க்கையில் தனது இரண்டு பெண் பிள்ளைகளையும் தாலி கட்டாமலே  பெற்றுக் கொண்டவர் , தற்பொழுது கௌதமியுடனான  வாழும் வாழ்க்கையினை மட்டும் மிக மிக ரகசியமாக வைத்திருந்து மிக சமீபத்தில்தான் அது பற்றி வெளிப்படையாக ஒப்புக் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றார். 

முடிவாக சொல்ல விழைவது லிவிங் மேல்நாட்டுக் கலாசாரத்தினை நாம் பின்பற்றுவதில் தவறில்லை இருப்பினும்  அவற்றை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு பின்பற்றினால் தான் சிறப்பாக இருக்கும். எனவே சினிமாவில் மணிரத்னம் போன்றவர்கள் காண்பிக்கும் லிவிங் டுகதர் என்பது போலியான ஒன்றுதான்.

நன்றி 
செங்கதிரோன் 

அடுத்த பதிவு : சரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும் 

Friday, November 13, 2015

பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :3

முந்தையப் பாகத்தில் கைபழக்கம் குறித்த ஒரு தெளிவான விளக்கங்களை அளித்திருந்தேன். சீக்கிரம் வெளிவருதல் என்பது உலகம் வெப்பமாதல் போல இதுவும் ஒரு உலகளாவியப் பிரச்சனை தான், ஏனெனில் மேற்குலகமும் இந்தப் பிரச்சனையில் அதிகம் கவனம் செலுத்திவருகின்றது.

இருப்பினும் இது ஒன்றும்  அபாயகரமான ஒரு நோய் அல்ல , மிக மிக எளிதாக சரி செய்யக் கூடிய ஒன்றுதான். சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் இந்த சீக்கிரம் வெளியேறுதல் ஏன் எதற்காக நிகழ்கின்றது என்பதனையும் தெரிந்து கொள்வது சரியாக இருக்கும்.

காரணங்கள் :

1. பதட்டம், பயம் - இவை இரண்டும் கலவிக்கு முன் அனைவருக்குமே இருக்கக் கூடிய ஒன்று. இது தவிர்க்க முடியவே முடியாததாகத் தோன்றினாலும் , காலப் போக்கில் சரி செய்யக் கூடியது .

2.இரண்டாவது மிக முக்கியமானது,மிக அதிகமான பாலியல் காணொளிகள் பார்ப்பதானால் உண்மையாகவே கலவி என்பது என்ன என்பதற்கான அர்த்தத்தினை தவறாகப் புரிந்து கொள்வதால் ஏற்படும் விபரீதம் .

3. பொறுமையின்மை , கலவி என்பது பகிர்ந்துண்ணும் உணவு போல என்று காமசூத்ரா குறிப்பிடுகின்றது , எனவே அந்த எண்ணம் இல்லாமல் மனைவியை  ஒரு பொருளாகப் பாவித்து நடப்பதானால் அது ஒரு சம்பிரதாயமான நிகழவாகவே நடந்து முடிந்து விடுகின்றது.

4. சொல்லித் தெரிவதில்லைக் காமக் கலை என்று சொல்லியே ஒரு தலை முறை பாழடிக்கப் பட்டு விட்டது. இங்கே இளைஞர்களுக்கு  டிஜிட்டல் இந்தியாவை விட மிக முக்கியமானது பாலியல் குறித்த தெளிவானப் பார்வை . சொல்லித் தெரிய வேண்டியது காமக் கலை(இந்தத் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருக்கின்றேன்) என்ற உண்மையினை ஊடகங்களாவது உரக்க சொல்ல வேண்டும்.

தீர்வுகள் :


1.பயத்தினைப் போக்குவது எளிது. நிறைய ஆலோசனைகள் இருப்பினும் மிக எளிதானவை மனதினை மிக மிக அமைதியாக வைத்திருப்பது மிக முக்கியமான ஒன்று . அலுவலகப் பிரச்சனை, கடன் பிரச்சனை, சொந்தப் பிரச்சனை இவை போல பல பிரச்சனைகள் இல்லாமல் மறந்திருக்க வேண்டும்.

2. தேகப்பயிற்சி மற்றும் யோகப் பயிற்சி இவை இரண்டும் உள்ளம் உடல் மற்றும் உள்ளத்தினை உறுதியாக்கக் கூடியவை .மிக மிக எளிதானப் பயிற்சிகளே போதுமானவை. பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியினை என்னுடயை நோயாளிகளுக்கு செய்ய சொன்னதில் அதன் பின்னர் சிக்கரம் வெளிவருதல் வெகுவாக சரியனாதாக உறுதிபடுத்தி இருக்கின்றனர் .



3. ஒரு வேலையை திட்டமிடுவதற்கு முன்னர் எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கின்றீர்களோ அதே போல இதிலும் ஒரு திட்டமிடல் அவசியம் ,அதாவது எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்ற சிந்தனை இதற்குத்தான் சொல்லித் தெரிய வேண்டியது காமக் கலை என்று குறிப்பிட்டேன்.


இங்கே குறிபிட்டுள்ள காரணங்களும் அவற்றின் தீர்வுகளும் உங்கள் அனைவருக்கும் சீக்கிரம் வெளிவருதல் குறித்த ஒரு தெளிவினை உண்டாக்கி இருக்கும் என்று எண்ணுகின்றேன்.இது முழுக்க முழுக்க மருத்துவ அடிப்படையில் எழுதப்பட்ட பதிவு.மேலும் உங்களுக்கு தெளிவு பெற வேண்டி இருப்பின் முதலில் உங்கள் மனைவியிடம் பேசுங்கள் , தயக்கம் தேவையில்லை , அடுத்து கட்டமாக நல்ல  மன நல ஆலோசகரை அணுகினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.தொலைக்காட்சிகளில் வரும் பாலியல் குறித்த போலி  சித்த மருத்துவர்களின் அருளுரைகளைப்  பார்ப்பதினை அறவே தவிருங்கள்.

நன்றி 

Sunday, November 1, 2015

ஹால்லோவீன் கொண்டாட்டப் பிண்ணனி :


காதலர் தினம் , நண்பர்கள் தினம் , அம்மா தினம் ,அப்பா தினம் என அனைத்தும் பட்டி தொட்டி வரை பிரபலமாகி விட்ட நிலையில் ஹால்லோவீன் இன்னும் பெரு நகரங்கள் தாண்டி சென்றடையவில்லை .

மேற்கத்திய நாடுகளில் இந்த திருவிழா  மூலை முடுக்கெல்லாம் மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படும்.

அதற்கு மிக முக்கிய காரணம் இது ஒரு கிறிஸ்தவ சமயம் சார்ந்த ஒரு பண்டிகை என்பதோடு மட்டுமன்றி , நம் நாட்டில்  இறந்தவர்களுக்குத் திதி கொடுப்பது போல , இந்த நாளில் இறந்தவர்களை நினைவுக் கூர்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பண்டிகை இப்போது முழுக்க முழுக்க குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கான கொண்டாட்ட நாளாக மாறிவிட்டது.

குழந்தைகள் கொண்டாடும் விதம் :

நம் ஊரில்  புரட்டாசி மாதத்தின் இறுதி வாரத்தில் பெருமாளுக்காக,   கோவிந்தா கோவிந்தா  பாடிக்  கொண்டு குழந்தைகள் வீடு வீடாக சென்று அங்கு அந்த வீட்டில் பட்சணங்களை வழங்குவர். அதே முறை தான் இங்கும் , குழநதைகள் ஹால்லோவீன் உடைகள் அதாவது பேய் மாதிரி வேடம் போட்டுக் கொண்டு பக்கத்து வீடுகளுக்கு செல்வர் , அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகள் வெளியே வந்து இனிப்பு மற்றும் சாக்லேட்டுகளை வழங்குவர். இதிலும் ஒரு குறியீடு உண்டு . அதாவது எந்த வீட்டின் வெளியில் ஹால்லோவீன்  அலங்காரம் செய்யப் பட்டிருக்கின்றதோ அந்த வீட்டுக்கு மட்டும் செல்வர். இது மட்டுமன்றி பொது இடங்களில் குழந்தைகளுக்குப் பல போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெறும்.

இளம் வயதினர் கொண்டாடும் விதம் :

பல்வேறு ஹாலிவுட் படங்களில் வரும் பேய்கள் போன்ற தோற்றங்களை போட்டுக் கொண்டு கொண்டாடுவதுதான் பொதுவான முறை. இது மட்டுமல்லாமல் இதே போன்ற ஹால்லோவீன் உடைகளுடன் மற்ற நண்பர்களின் வீட்டுக்கு கூட்டமாக சென்று பயமுறுத்துவார்கள்.வழக்கம் போல இதே உடையில் நன்கு குடித்து விட்டு மட்டையாவதும் ஒரு சில இடங்களில் நடைபெறும் இது தவிர உணவகங்களில் ஆரபித்து அனைத்து கடைகளிலும் அங்கு பணியாற்றுபவர்கள் இந்த  ஹால்லோவீன் உடைகள் அணிந்து கொண்டு வேலை செய்வதனைப் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கும் .

இந்த தலைமுறை குழந்தைகள் காஞ்சனா மற்றும் டார்லிங் படங்களை கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கின்றனர் , எனவே இந்த ஹால்லோவீன் கொண்டாட்டம் இந்தியாவிலும் சீக்கிரம் பிரபலமாக வாய்ப்பு அதிகம் இருக்கின்றது 

நன்றி 
செங்கதிரோன் 


Thursday, October 29, 2015

யுவராஜிடமிருந்து தப்பித்த ஜோதிகா

தன் சாதி மானம்  காக்க போராடிய வீரன் போல தன்னைக் காண்பித்துக் கொள்ளும்  யுவராஜ் உண்மையிலே வீரரா? தன சாதிப் பெண்களை பிறர் தூக்கி சென்று விடாமல் தடுப்பது தான் தன்னுடைய தலையாயப் பணி என்றால் இவர் சாதி சார்ந்த ஆண்கள் பிற சாதி, மதம் சார்ந்த பெண்ணைக் காதலித்து மணந்தால்  அனைத்து துவாரங்களையும் மூடி அமைதி காப்பது ஏனோ ?


ஜோதிகா கோயம்புத்தூர் மாப்பிள்ளையான சூர்யாவை திருமணம் செய்து கொண்டதிலிருந்தே தெரிய வந்திருக்கும் , யுவராஜ் வம்சம் சார்ந்தவராகத்தான் இருப்பபார் என்று, அதுவும் சூர்யா யுவராஜ் தொடர்புடைய சமூகம் சார்ந்தவர் என்பதனை அவர் தந்தை சிவக்குமார் தீரன் சின்னமலை குறித்து முகப் புத்தகத்தில் பதிவு எழுதி பிரச்சனைக்கு உள்ளானதில் இருந்து தெள்ளத் தெளிவாக உணர முடியும்.

நடுத்தரக் குடும்பம் சார்ந்த இரு வெவ்வேறு சாதியினர் காதலிக்கும் போது  அவர்களிடம் சென்று தன் வீரத்தைக் காண்பிக்கும் யுவராஜ் தன் குலக் கொழுந்துகளான சூர்யாவிடம் தகராறு செய்யும் தைரியம் இருக்கின்றதா ? அப்படி செய்தால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்கும் . நடுத்தரக் குடும்பங்களை குறிவைத்து அவர்களை தாக்கினால் காவல் துறை பல மாதங்கள் கழித்தும் பிடிக்க முடியவில்லை.



தமிழகத்தின் அனைத்தத் தரப்பினருக்கும் பிடித்த ஒரு ஜோடி சூர்யா -ஜோதிகா இந்த இரு அழான உள்ளங்கள் இணைந்திருக்க சாதி தடையாக முதலில் இருந்தாலும் பின்னர் அவற்றை முறியடித்து தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். இதே போன்ற சுதந்திரம் அனைத்து தரப்பினருக்கும் வேண்டும் , அந்த சுதந்திரத்தில் இது போன்ற அல்லு சில்லுகள் நுழைவது தடுப்பது முதலில் அரசாங்கத்தின் கடமை , இரண்டாவது மக்களும் வெறுமென பெயருக்குப் பின் ஜாதிப் பெயரை எடுத்து விட்டதனால் மட்டும் மாற்றம் வந்து விடாது, தங்களின் மனத்திலிருந்தும் இந்த சாதிதீயை அகற்ற வேண்டும் .

 உயர் சாதி  ஆண் எந்த சாதி மதப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு வரலாம், அதையெல்லாம்  தங்கள் குலப் பெருமை ,மண்ணாங்கட்டி என்று வாழ்த்தும் இந்த சாதிவெறிக் கும்பல், தாழ்ந்த சாதி என்று முத்திரை குத்தப் பட்ட ஒருவன் , மற்ற சாதிப் பெண் மேல் ஆசைப்பட்டால்  அவர்களைத் துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம் ? 

பண்பட்ட தமிழ் சமூகம் இது போன்ற அறிவிலிகளை ஆதரிக்கவேக் கூடாது . சமூக முன்னேற்றத்திற்கு இது எள்ளவும் நன்மை பயக்காது நண்பர்களே , சிந்தித்து செயல்படுங்கள் .

நன்றி 
செங்கதிரோன் 

இந்தப் பதிவு தொடர்புடைய மற்றொரு விரிவானப் பதிவு விரைவில் வரவிருக்கின்றது .
கை கூடாத காதல் திருமணம் : நடிகர் திலகம் சிவாஜி முதல் இளவரசன் வரை