Wednesday, April 5, 2017

சித்தர்கள் மந்திரவாதிகளா :-உலக சித்த மருத்துவ தினம்

சித்தர்கள் குறித்த பல்வேறு கற்பனையான கட்டுக்கதைகள் உள்ளன. மந்திரவாதிகள் பலரும் சித்தர்கள் பெயரினை வைத்துக் கொண்டு மாந்த்ரீகம் ,பில்லி ,சூனியம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.  சித்தர்கள் அட்டமா சித்திகள் போன்ற சக்திகள் தவ வலிமையினால் பெற்றவை .  அது குறித்த ஒரு தெளிவான ஒரு காணொளி தான் இது . பர்த்து விட்டு  உங்கள் கருத்தினைக் கூறுங்கள்.



நன்றி 
செங்கதிரோன் 

Friday, March 24, 2017

புதிய சித்த மருத்துவ வரலாறு -உலக சித்த மருத்துவ தினம்

புதிய சித்த மருத்துவ வரலாறு :
இரண்டு கூறாக பிரிக்கலாம்- தெய்வ நம்பிக்கை சார்ந்தது, இலக்கியம் சார்ந்தது . இலக்கியம் சார்ந்தது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது . ஏனெனில் தொல்காப்பியம் மற்றும் திருக்குறளில் சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புகள் உள்ளன. இதிலிருந்து தெரியவருவது என்னவெனில் உலகின் பழமையான மருத்துவங்களில் சித்த மருத்துவமும் ஒன்று.

நன்றி
செங்கதிரோன்

Lion திரைப்படம் -ஊரை நோக்கி நம்மை ஓட வைக்கும் படம் ;



உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். காக்கா முட்டை படத்தில் வருவது போல அண்ணன் தம்பிகள். பக்கத்தில் உள்ள பெரு நகரத்திற்கு செல்கையில் இளையவன் காணாமல் போகின்றான். அவனை ஆஸ்திரேலிய தம்பதிகள் தத்தெடுத்து கொள்கின்றனர். பருவ வயது எட்டியவுடன் தன் பால்ய காலம் நினைவுக்கு வர தன குடும்பத்தை தேட ஆர்மபிக்கினறான். மிக சிறிய வயதில் தொலைந்து விட்டதால் தன ஊர்ப் பெயர் கூட நினைவில் இல்லை. என்வே Google map ல் தேடுகின்றான்.


சிறப்பம்சங்கள் ;
1. ஏ .ஆர் .ரகுமான் இசை -ஊர்வசி ஊர்வசி பாடல் படத்தில் தமிழிலேயே வருகின்றது. காதல் காட்சியில் மிக பொருத்தமான இடத்தில் பயனப்டுத்தி இருக்கின்றார்கள்.
2. தேவ் படேல் -SLUM DOG MILLIONORE படத்தில் நடித்த அவரே தான் , மிக அருமையாக நடித்திருக்கின்றார்.

ஏன் இந்தப்படம் நம் ஊரை நோக்கி ஓட வைக்கும்?


வெளிநாட்டிலோ வெளிமாநிலத்திலோ வாழ்பவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஞாபகம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இந்தப்படத்திலும் கதாநாயகன் தன் ஊரினை கூகிளில் தேடும் ராப்பகலாக தேடுகையில் அந்த தவிப்பு நமக்கும் வந்து விடுகின்றது. நானும் படம் பார்த்த பின்னர் கூகுள் EARTH ல் என்னுடைய வீட்டினை தேடிக் கண்டு பிடித்து மகிழ்ந்தேன். நீங்களும் lion படம் பார்த்த பின்னர் அதனை செய்வீர்கள்.

வார இறுதியில் பார்த்து மகிழ சரியான படம் -Lion

நன்றி
செங்கதிரோன் 

Thursday, March 23, 2017

உலக சித்தர் தினம் கொண்டாட்டம் -1

ஏப்ரல்  14 ம் தேதி உலக சித்தர் தினம் கொண்டாடப்படுகின்ற்து அதை முன்னிட்டு சித்த மருத்துவம் குறித்த புதிய தகவல்கள் தினமும் இத்தளத்தில் இடம்பெறும். நீங்கள் இம்முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.


நன்றி

செங்கதிரோன் 

Wednesday, March 22, 2017

வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கத்தில் நரகம் : படிப்பகமாக திகழும் காபி கடைகள்

காப்பிக்கடைகள் என்றாலே அது ஆணும் பெண்ணும் டேட்டிங்கின் போது சந்திக்கும் இடமாகவே பெரும்பாலானோர் கருதுவது உண்டு. அந்தக் கூற்று சரியாக இருந்தாலும் , காபிக் கடைகளை தேர்வு சமயங்களில் படிப்பதற்கான முக்கிய இடமாக மாணவர்கள்  கருதுகின்றனர். நான் காபியின் மிகப் பெரும் ரசிகன் என்பதனால் ஸ்டார்பக்ஸ் தொடங்கி அனைத்து காபி கடைகளுக்கும் அடிக்கடி செல்வேன்.

வெளிநாடுகளில் டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பல்கலைக்கழக தேர்வுகள் நடக்கும். முதல் முறையாக அது போன்றதொரு சமயத்தில் இரவு பத்து மணிக்கு காபி குடிக்க சென்றேன். உள்ளெ ஏதோ டியூஷன் சென்டருக்கு வந்தது போல் ஒரு உணர்வு. மாணவர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மிக தீவிரமாக படித்துக் கொண்டிருந்தனர். மிக ஆச்சரியமாக இருந்தது. இங்கே காபி கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் , இலவச wifi வசதி இருக்கும். அதனாலேயே இந்த இடத்தினை மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.



பகல் நேரங்களில் சென்றால் பெரும்பாலும் வயதானவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அங்கேயும் நம்மூர் போல செய்தித் தாள்கள் வைத்திருப்பார்கள். அதில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடை தேடுவதில் தீவிரமாக இருப்பார்கள். 

குடியேறிகள் (immigrants ) காபி கடைகளை வார சந்ததிப்பிற்கான இடமாக வைத்திருப்பார்கள். அனைவரும் கூடி தங்கள் நாட்டு அரசியல் நிலை பற்றி விவாதிப்பார்கள். ஜெயமோகன் கூட கனடா சென்ற பொது அங்கு மிக பிரபலமான டிம் ஹார்ட்டன்ஸ் (Tim hortons ) காபி கடையில் நண்பர்களுடன் அமர்ந்து இலக்கியவிவாதத்தினை நடத்தியதனை தன்  பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். நாங்களும் சல்லிக்கட்டு தீவிரமடைந்தபோது காப்பிக்கடையில் கூடி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொண்டோம்.


நம்மூரில் புதிதாக வந்திருக்கும் காபி கடைகளில்  படித்த நவநாகரிக காதல் ஜோடிகளைத்தான் அதிகம் பார்க்க முடிகின்றது. அதற்கு காபி விலையும் மிக முக்கியக் காரணம் . சாதாரணக்கடைகளில் ரூ .10 என்றால் இது போன்ற கடைகளில் ஆரம்ப விலையே நூறு ரூபாய், எனவே அனைவராலும் அங்கு செல்ல முடிவதில்லை. ஆனால் வெளிநாடுளில் அந்த ஊர் மதிப்பிற்கு பார்த்தால் காபியின் விலை மிக குறைவு தான். அது மட்டுமன்றி நம்முடைய விருப்பத்திற்கேற்ப அளவினை தேர்ந்தெடுக்க முடியும் உ-ம் (large -Medium -small :பெரிது-சிறிது-மிக சிறிது ).



நாம் காபியினை காலை மாலை மட்டுமே குடிப்போம் ஆனால் இங்கே 24 மணிநேரமும் காபி குடிப்பார்கள். (நானும் அதே போன்று மாறிவிட்டேன்).  ஒரு காபியை நாம் 5 முதல் பத்து நிமிடத்தில் குடித்து விடுவோம் , ஆனால்  வெளிநாட்டில் குறைந்தது ஒரு மணி நேரம் ஒரே காபியை குடிப்பார்கள்.

மேற் சொன்ன செய்தியிலிருந்து காபி எப்படி வெளிநாட்டவரின் வாழ்க்கையில் மிக அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றது என்றும் , காபி கடைகளை நூலகம் போன்று படிப்பதற்கான முக்கிய இடமாக அவர்கள் கருத்துவதையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள் .

அடுத்து வேறு ஒரு சுவாரஸ்யமான ஒரு பதிவுடன் சந்திக்கிறேன் .

நன்றி