Tuesday, May 19, 2015

ஹாலிவுட்டின் கில்மா இயக்குனர் :ரஸ் மேயர்

ஹாலிவுட் படங்களில் வன்முறையும் ஆபாசமும் சற்று தூக்கலாகவே இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று.ரஸ்  மேயர் முழுக்க முழுக்க கில்மா படங்களை எடுப்பதையே தன்  லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர்.குறைந்தது 15 வருடங்கள் திரைத்துறையில் இயங்கிய அவர் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். 

தள்ளாத வயதிலும் எப்படிப்பட்ட ரசனைக்காராக இருக்கின்றார் பாருங்கள்.

பிரபல தமிழ் சினிமா பதிவர்கள்  யாரும் இவர் குறித்து  எழுதி இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. இல்லை எனில் இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகின்றேன்.

மிக பிரபலமான தொலைகாட்சி தொடரான Game of thrones  வீடியோவினை primewire இணையதளத்தில் தேடிக் கொண்டிருக்கும் பாத்து தான் Vixen என்ற ஒரு படம் அங்கே கண்ணில் பட்டது .ஆரம்பமே அதகளமாக இருந்தது, போக போக முழுக்க ஒரே கில்மா தான்,பின்னர் தான் இந்தப் படத்தின இயக்குனர் யார் என்று கண்டுபிடித்தால் ரஸ் மேயர் என்று விக்கி பீடியா சொன்னது. அவரின் மற்றொரு படமான் up உம் இதே ரகம் தான்.


பேச்சிலர்கள் சனிக்கிழமை இரவுகளில் பார்க்க தகுந்த படம். திருமணமானவர்கள் மனைவி மாமனார் வீட்டுக்கு சென்றவுடன் இந்தப் படத்தினைக் கண்டு களியுங்கள்.


Thursday, May 14, 2015

இசை உலகின் கஞ்சா பொறுக்கி : (Snoop Dogg)


சித்த மருத்துவத்தில் கோரக்கர் மூலி என்றழைக்கப்படும் கஞ்சாவினை அதிகம் பயன்படுத்தும் ஒரு இசை பிரபலம் குறித்து தான் இப்பதிவு . ராப் இசைக் கலைஞர்கள் பலரும் கஞ்சாவினை பயன்படுத்தினாலும் ,ஸ்நூப் மட்டுமே இதனை மிக வெளிப்படையாக செய்வது மட்டுமன்றி . அதனை பயன்படுத்துவதையும் வெளிப்படையாக செய்வார்.


இவர் பெயருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் dogg என்பது குடுமபப்  பெயர் அல்ல, மாறாக நம்மூரில் வெண்ணிற ஆடை நிர்மலா , நிழல்கள் ரவி போன்றோருக்கு அவர்கள் நடித்த முதல் படத்தில் வந்து போலதான், இவருக்கும் தனது முதல் இசை தொகுபான doggystyle என்ற மிகப்பெரிய வரவேற்பினை பெற்றதில் இருந்து இந்த dogg என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. அந்த இசைத் தொகுப்பில் வரும் whats my name பாடலில் தனது பெண் தோழியுடன் படுக்கையில் இருக்கையில் அவளின் அப்பா வரநாயாக உருவெடுத்து தப்பிக்கும் பாடலை பாருங்கள்.



னைத்து வெளிநாட்டவருக்கும் இந்தி திரையுலகம் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும், அது ஸ்நூப் அவர்களுக்கும் இருந்தது அதன் விளைவாக அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த singh is king படத்தில் ஒரு பாடலினை பாடி நடனம் ஆடி இருப்பார். அதன் வீடியோ கீழே  உள்ளது.



சர்ச்சைகளில் சிக்குவதேன்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ,பள்ளி முடித்தவுடன் கோகின் வைத்திருந்தற்காக சிறைக்கு செல்ல ஆரம்பித்தவர், தொடர்ந்து பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டார். அது போக எந்த  நாடுகளுக்கெல்லாம செல்கின்றாரோ அங்கும் ஏதாவது ஒரு பிரச்சனைகளில் சிக்குவார்.குறிப்பாக ஆஸ்திரிலியா மற்றும் நார்வே ஆகிய நாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய இவருக்கு தடை விதித்தன.இருப்பினும் இந்த சர்ச்சைகள் அவருக்கு தொழில் ரீதியாக எந்த பாதிப்பினையும் உண்டாக்கவில்லை. 

1993 ல் தொடங்கிய இசைப் பயணம் இன்றும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. அதும் இன்றைய இளம் தலைமுறை பாடகர்களுடன் எந்த ஒரு ஈகோவும் இன்றி அவர்களின் பாடல் தொக்குப்பில் தோன்றி கலக்கிக் கொண்டிருக்கின்றார்.நான் முன்பு இசை உலகின் இளம் தேவதைகள் பற்றி எழுதிய கேட்டி பெர்ரியுடனும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளார். ராப் இசை எனபது முதலில் புரிவதற்கு சிரமமாக இருந்தாலும் போகபோக பிடித்து விடும்.

Wednesday, May 13, 2015

அல்லோபதி மருத்துவர்களும் அல்லோலூய குரூப்பும்

அல்லோபதி மருத்துவர்களும் அல்லோலூயா குரூப்பும் இணையும் மையப் புள்ளி என்பது இவர்கள் தொழில் சார்ந்தும் ,வழிபாடு சார்ந்தும் பின்பற்றுவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றிலிருந்து தொடங்குகின்றது.
 பரவி வரும் பன்றிக் காய்ச்சலை தடுக்க சித்த மருந்தான கப சுரக் குடிநீர் நல்ல பலனளிக்கின்றது. தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்த இந்த காலத்திலும் நம் பண்பாட்டு மருத்துவம் நமக்கு நன்மை அளிக்கின்றது. ஆனால் தமிழர்களாக இருந்தாலும் ஆங்கில் மருத்துவமான அலோபதி படித்தவுடன் தான் ஆங்கிலேயனாக மாறி விட்டது போல நினைத்துக் கொண்டு சித்த மருத்துவத்த்தை இழிவாகப் பார்ப்பதும் எள்ளி நகையாடுவதுமானப் போக்கினைக் கொண்டிருக்கின்றனர். மேற்குலகமே கூட்டு மருத்துவம் நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில் , ஆங்கில மருத்துவம் மட்டுமே அனைத்திற்கும் தீர்வு எனற தட்டையான போக்கில் தமிழ் நாட்டில் உள்ள அலோபதி மருத்துவர்கள் இருப்பது வெட்ககேடு .

தமிழக பாஜக தலைவரின் கணவர் சுந்தர்ராஜன் அவர்கள் சிறுநீரக கோளாறு (Urologist )நிபுணர் , இவர் ஒரு முறை ஆனந்த விகடன் கட்டுரையில் சித்த மருந்துகள் சிறுநீரக கோளாறை உண்டு பண்ணுகின்றன என்று எந்த ஆதாரமும் இன்றி குற்றம் சாட்டினார். அப்போதே பல சித்த மருத்துவர்கள் அனந்த விகடனுக்கு மறுப்பு கடிதம் எழுதினர் . ஆனால் எதையும் ஆனந்த விகடன் வெளியிட மறுத்து விட்டது. ஒரு பக்கத்திற்கு போலி சித்த மருத்துவர்கள் கொடுக்கும் விளமபரங்களை  வெளியிடுபவர்கள் உண்மை கருத்தை சொல்ல விழையும்போது அதை தடுக்கின்றனர் .

சித்த மருந்துகளின் நம்பகத்தன்மை குறித்தும் , சித்த மருத்துவ கோட்பாடு குறித்தும் மேலும் அறிய நான் ஏற்கனவே எழுதிய இரண்டு கட்டுரைகளை  வாசிக்கவும் .

1.தங்க பற்பம்
2.சித்த மருத்துவ உண்மைகள்

அலோபதி மருத்துவ முறைகளில் கொடுக்கப்பட்ட்டுள்ள பெரும்பாலான நோய்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் பெரும்பாலும் அம்மருத்துவம் தோன்றிய இடத்தினை மையமாகக் கொண்டவை. அதே போல வெளிநாடுகளில் மருத்துவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.அதே நேரத்தில் அந்த நாடுகளும் செல்வ செழிப்பானவை மற்றும் வளர்ந்த நாடுகளில் அமெரிக்கா  தவிர அனைத்திலும் மருத்துவ செலவினை அரசாங்கமே ஏற்றுக் கொள்கின்றது. 

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக இந்தியாவில் இருக்கும் அலோபதி மருத்துவர்கள் தாங்களும் வெளிநாட்டில் உள்ள  மருத்துவர்கள் போல வாழ்வதற்காக இந்த ஏழை நாட்டில் மருத்துவ செலவினை நாளுக்கு நாள் ஏற்றிக் கொண்டே செல்கின்றனர்.மேலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளி உயிரிழந்தாலோ அல்லது மருத்துவரின் அலட்சியத்தால் பாதிப்பு ஏற்பட்டாலோ மருத்துவர்களை தாக்கும் ஆபத்தான போக்கு நிலவை வருகின்றனது. இதற்கான மூலக்காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் மக்கள் மனதில் அரசு மருத்துவர்கள் அதிக  முக்கியத்துவம் கொடுப்பது  தனது சொந்த மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளுக்குத்தான் என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்டது.

தமிழ் நாட்டிலேயே தோன்றிய பழமை வாய்ந்த சித்த  மருத்துவத்தினை  அலோபதி மருத்துவர்கள்  முன்னேற்றுவதற்காக எந்த ஒரு முயற்சியினையும் இந்நாள் வரை எடுக்கவை இல்லை. எனினும் மருத்துவ உலகின் சூப்பர் ஸ்டார் என்று நான் குறிப்பிட்ட மரு .தெய்வநாயகம் போன்ற  அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவத்தினை வளர்க்க பாடுபட்டாலும் அவர்களை கேலி கிண்டல் செய்வதனையே மற்ற அலோபதி மருத்துவர்கள் தொழிலாக வைத்துள்ளனர். இந்திய மருத்துவ கவுன்சிலானது சித்த மருத்துவத்தினை ஒழித்துக் கட்டுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றது.
அடுத்து அல்லேலூயா குருப்புகளின் அட்டகாசம் .
 கிறித்துவப் பள்ளியில் படித்த நான் தேவாலயங்களுக்கு செல்வதினை ஒரு மற்ற இந்து ஆலயங்களுக்கு செல்வது போலவே கருதி பயபக்தியுடன் இன்றும் சென்று வருபவன். Life  of  pi படத்தின் ஆரம்பக் காட்சிகளில் சொல்லப்பட்டது போல இந்தியாவில் பிறந்தவர்கள் மூன்று மதக் கடவுள்களையுமே ஒன்றாகக் கருதி வழிபடும்  வழக்கம் 90 களின் இறுதி வரை இருந்து வந்தது. பாபர் மசூதி இடிப்பு போன்ற சமபவங்கள் மதங்களுக்கிடையே ஒரு காழ்ப்புனர்ச்சியினை உண்டாக்கி விட்டது.அடுத்து ஒரு தமிழ் இந்து ஏசுவை கும்பிடுவதற்கு எந்த ஒரு தயக்கமும் காட்டுவதில்லை . வட  தமிழகத்தில் வருடா வருடம் வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்க்காவிற்கு செலவதனை இன்றும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படி மத நல்லினக்கத்தினை பார்த்த எனக்கு சென்னை வந்த பிறகு கிறித்துவத்தில் ஒரு பிரிவினர் முருகன் விநாயகர் போன்றோரை பூதம் என்று அழைப்பதைக்   கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.



வெளிநாட்டு மதத்தினை பின்பற்றுவதனாலும் வெளிநாட்டுப் பெயர்களை வைத்துக் கொள்வதாலும் வெளிநாட்டவர் மாதிரி உடை அணிந்து கொள்வதாலும்  இவர்கள் தங்களை வெளிநாட்டவர்கள் என்றே சில சமயங்களில் நினைத்துக் கொள்வர். பதிவர் கலையரசன் அவர்கள் இதனை மிக அழகாக சொல்லி இருப்பார். இஸ்லாமிய நாடுகளில் வாழ்பவர்கள் ஐரோப்பா மற்றும் அமேரிக்கா செல்லும் போது  தாங்களும் அவர்கள் போன்று வெள்ளையாக இருப்பதால் மிக சுலபமாக அந்து சமூகத்துடன் கலந்து விட முடியும் என்ற நப்பாசையில் சென்று பின்னர் ஏமாற்றம் அடைவதே நடக்கின்றது. ஆபிரிக்க முஸ்லீம்களுக்கும் அதே நிலைதான் , பள்ளிவாசல் வரை மட்டும் தான் அந்த உறவு அதை தாண்டி அரபு நட்டார் ஆப்பிரிக்க முஸ்லிம்களை அனுமதிப்பதில்லை.

இந்தக் கட்டுரையின் சாரம்சம் என்பது எவ்வளவு தான்  எண்ணெய் தடவி உருண்டாலும் ஒட்டுவதுதான் ஓட்டும். கிருத்துவர்களும் அலோபதி மருத்துவர்களும் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவமோ மதமோ அதை நீங்கள் கடை பிடிக்க தடை இல்லை. ஆனால் இங்கு தொன்று தொட்டு பயன் பாட்டில் இருந்து வரும் சித்த மருத்துவத்தை இழிவுபடுத்துவதும் , சிவ வழிபாடுகளைக் கிண்டல் செய்வது உங்களயே அவமதிக்கின்ற செயலாகும். 

Monday, May 11, 2015

கமல் நடனத்தை பரிகாசித்த பாண்டியராஜன்


நடனமே ஆடதெரியாத பாண்டியராஜன் எப்படி கமலை விமர்சிக்கலாம் என்ற உங்கள் கோபம் புரிந்தாலும் இதுதான் உண்மை .இது நடந்தது 1989ஆம் ஆண்டு வாக்கில் , தனது நெத்தியடி படத்தில் தான் இதனை செய்தார். 

நெத்தியடி படம் பல சிறப்புகளை உள்ளடக்கிய படம் , ஆனால் இடைவேளை வரை மட்டும்தான் படம் நனறாக நகைச்சுவையாக இருக்கும்.

1. அன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாததால் இறப்பு செய்தியினை அந்த ஊரில் உள்ள இளைஞர்களை  அருகில் உள்ள சொந்த பந்தங்களுக்கு செய்தி சொல்ல  அனுப்புவார்கள். அப்படி செய்தி சொல்ல செல்லும் பாண்டியராஜன் காலை மதியம் இரவு என்று  சினிமா பார்த்து அவர் அப்பா ஜனகராஜை ஏமாற்ற முயற்சிக்கும் காட்சி மிக அருமையாக இருக்கும்.
 2. இந்தப் படத்தின் நாயகி வைஷ்ணவி , இவர் குளிக்கும் போது  அவரின் முதுகை அழகை பார்த்து பாண்டியராஜனுக்கு காய்ச்சல் வந்து விடும். அடுத்து குளித்து முடித்தவுடன் கமலின்(stud) திருவானி தொலைந்து விடும் . முன்பெல்லாம் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்தது, அப்போது திருவானி தொலைத்து விட்டு அம்மாவிடம் திட்டு வாங்கிய பெண்கள் ஏராளமான பேர் இருப்பர்.

3.செந்தில் பல கட்சி பச்சையப்பன் என்ற அரசியல்வாதி கதாபத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார் .
4. ஜனகராஜ் கல்யாண சமையல்காரராக நடித்து இருப்பார் , இதில் அவர் பேசிய ஒரு வசனம் மிக பிரபலமானது , ''சரக்கு உன்து சைட் டிஷ் என்து'' 
5. மிக முக்கியமான் அம்சம் பாண்டியராஜனின் இன்னொரு ஜோடியாக அமலா நடித்திருப்பார்.
நேரம் கிடைத்தால் இந்தப் படத்தினை இடைவேளை வரை கண்டு மகிழுங்கள்.உங்கள் குழாயில் (Youtube ) இலவசமாகக் கிடைக்கினறது.

இப்பொழுது  தலைப்பிற்கு வருவோம். படம் பார்க்க  குழந்தையுடன் வரும் பெண்ணிடம் டிக்கெட் பரிசோதகர் குழந்தைக்கு டிக்கெட் எங்கு என்று கேட்டு  , எந்தக்  கழுதையாக இருந்தாலும் டிக்கெட் இருந்தாதான் உள்ளே விடுவேன் என்று சொல்ல ,கழுதையின் கழுத்தில் டிக்கெட் கட்டி தியேட்டாருக்குள்  செல்ல அந்த நேரம் கமல் குயிலியுடன் சூரசம்ஹாரம் படத்தின் வேதாளம் வந்திருக்கிறது பாட்டிற்கு குயிலயுடன்  ஆடிக்கொண்டிருப்பார்.



கமல் கிழே படுத்து உருண்டு இடுப்பை ஆட்டி ஆட கழுதை காட்டு கத்தல் கத்தி கமலை இம்சிக்கும். இந்தக் காட்சியைப்  பார்த்தால் தான் சொன்னது உண்மை என்று தெரியவரும். இது கமலுக்கு பாண்டியராஜன் கொடுத்த நெத்தியடி என்றும் வைத்துக் கொள்ளல்லாம் .

பி.கு. நான் உத்தம வில்லன் பார்த்தேன் படம் சூப்பர் .


Friday, May 8, 2015

செனம் சேராத நாய் தெரியுமா உங்களுக்கு

அல்சேஷன் நாய், ஹட்ச் நாய் கேள்விபட்டிருக்கோம் அது என்ன செனம்  சேராத நாய் அது எங்க கிடைக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. குழந்தையை கவனத்துடன் வளர்க்காவிடில் அந்தக் குழந்தை தான் பிற்காலத்தில் செனம்  சேராத நாயாக மாறி விடும். அது எப்படி மாறுகின்றது என்பதனை சமூக மற்றும் அறிவியல் நோக்கிலும் அதனைத் தடுப்பதற்கான எளிய வழிகளையும் எடுத்து சொல்லவே இந்தப் பதிவு .


செனம்  சேராத நாய் என்பதன் அர்த்தம் மக்களுடன் சரிவரப் பழகாமல் எப்பொழுதும் தனித்தே இருப்பவனை குறிப்பிடும் சொல் தான் செனம் சேராத நாய்.இது எப்படி உருவாகின்றது முதலில் குழந்தை வளர்ப்பில் உள்ள குறைபாடு அதாவது தந்தை தாய் இருவரும் பணி செய்பவர்களாக இருந்தாலோ , பெற்றோர் வீட்டிலேயே இருந்தாலும் குழந்தையின் மேல் அதிக அக்கறை இல்லாமல் இருந்தாலும் இது ஏற்பட வாய்ப்பு உண்டு.

இவ்வாறு அதிக கவனிப்பில்லாமல் வளர்க்கப்பட்ட குழந்தைகள் பெரியவர்களானதும் அவர்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ மற்றும் பணி  செய்யும் இடங்களிலோ யாரிடமும் அதிகம் பேசாமல் தனித்தே இருப்பர். இந்தத் தனிமை அவர்களுக்கு புற உலகில் என்ன நடக்கின்றது என்பதனைப் பற்றி எந்தப் புரிதல் இல்லாமல் வாழ்வார்கள். சக மனிதர்களுடன் பழகாத காரணத்தினால் இவர்களைப் பற்றிய தவறான கண்ணோட்டமும் சமூகத்தில்  ஏற்பட வாய்ப்பு உண்டு.


ஆனால்  இந்த தனிமை  சில நேரங்களில் நல்ல விளைவுகளையும் உண்டாக்கும் . இதற்கு மிக முக்கிய உதாரணம் , கணித மேதை ராமனுஜம் இவர் தனிமையிலே அதிக நேரம் இருப்பார் ,இந்தத் தனிமையினை கணிதத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உண்டாக்க பயன் படுத்திக் கொண்டார். மேலும் ஞானிகளும் முனிவர்களும் நீண்ட நேரம் தனிமையில் தியானம் செய்வர். இதனால் தன்னைப் பற்றி முற்றும் உணர்ந்த மகான்களாக உருவாகின்றனர். இந்த பிரிவில் கௌதம புத்தரைக் கூட இணைத்துக் கொள்ளலாம். 


மேலே தனிமை நோயின் நன்மை தீமைகளை குறித்து பார்த்தோம். இவற்றில் நன்மை பயக்கும் விடயங்கள் மிக அரிதாகவே நடக்கக் கூடிய ஒன்று ,எனவே அதனை முழுதும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த தனிமையினை மருத்துவர்கள் ஒரு நோயாகவே பார்க்கின்றனர்.Isolation sickness என்ற  நோயானது மூளையில் பல்வேறு மாற்றங்களை உண்டு பண்ணும்.இது போன்ற தனிமை விரும்பிகள் பல்வேறு தீயப் பழக்கங்களுக்கு வெகு எளிதாக அடிமையாவார்கள் என்றும் இதனால் பல நோய்கள் உணடாகும்  என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் எலிகளைக் கொண்டு சில பரிசோதனைகளை செய்தனர். பிறந்த உடனேயே எலிகளை அதன் தாயிடமிருந்து பிரித்து (Maternal separation)  விட்ட பின்னர் அவற்றின்  நடவடிக்கைகளை  (behaviour ) பருவ வயதினை (Adult)எட்டிய  பின்னர் பரிசோதித்து பார்த்ததில் இவை மன அழுத்தத்துடனும் , மிக சோர்வாகவும் காணப்பட்டன.இவைகளின் மூளையினை பரிசோத்து பார்த்ததில் தனிமையில் வளர்க்கப்பட்ட எலிகளில் oligodendrocye என்னும் மூளை செல்களுக்கு உதவி புரியும் இந்த வகையான செல்களின் வளர்ச்சி மிக குறைவாகக் காணப்பட்டன.குறிப்பாக இந்த செல்களானது நாம் சமூகத்துடன்  இயல்பாக இருக்க உதவி பபுரியும் முன் மூளையில் (pre frontal cortex ) பகுதியில் இவற்றின் நீளம் குறைவாகக் காணப்பட்டது.
மேலே உள்ள புகைப்படம் குழந்தை தாயினிடமிருந்து பிரிந்து வளவர்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்குகின்றது 


மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு உணர்த்துவது குழந்தை வளர்ப்பில் நாம் அக்கறை  இன்றி இருப்பின் எதிர் காலத்தில் அந்தக் குழந்தை எதிர் காலம் இருண்டதாகவே அமையும். தலைப்பில்  சொன்னது போல அனைவரும் அக்குழந்தையினை செனம் சேராத நாய் என்று அழைக்கும் நிலை உண்டாகும்.

நன்றி 
செங்கதிரோன்