Friday, March 8, 2013

நல்லா வாய் கொப்புளிங்க பாஸ்

இருபத்தைந்து வயதிலிருந்து நாற்பது வயது வரையிலான காலகட்டம் நமது வாழ்வின் மிக முக்கியமான ஒன்று. கல்வி அறிவு ,பணம் சேர்த்தல் ,புகழ் சேர்த்தல் ,அனுபவ அறிவு ஆகியவற்றுடன் உடல்நலம் பாதுகாப்புக்கு அடித்தளமாக அமையும் இக்காலகட்டத்தில் மிகக் குறைவான கவனம் நம் பற்களுக்கு செலுத்தினால் பல நோய்களா வராமல் காத்திட முடியும். எனவே இப்பதிவில் பற்கள் பாதுகாப்பின்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனைத் தடுக்க எளிய வழிகள் குறித்தும் மிக சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன்.

நிறைய நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதாலோ கணினியில் அதிக நேரம் வேலை செய்வதாலோ எவ்வாறு கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனை நன்கு உணர்ந்த நாம் நம் உடலின் முக்கிய நுழைவாயிலான வாய் மற்றும் பல் பாதுகாப்பில் சரியாக கவனம் செலுத்துவதில்லை

நம்மில் பல பேர் தினமும் பல் துலக்குவது மட்டுமே பல் பாதுகாப்பிற்கு போதுமான ஒன்றாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். வார நாட்களில் தாமதாக எழுந்து கடமைக்குப் பல் துலக்குவதால் பற்கள் எந்த வகையிலும் சுத்தமானதாக இருக்க வாய்ப்பில்லைவாய் மற்றும் பற்களை சரிவர பராமரிக்காதவர்களுக்கு  உறவு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட அதிகமான வாய்ப்பு உள்ளது.
உறவுகளில் ஏற்படும் சிக்கல்:

பற்களில் ஏற்படும் சொத்தை மற்றும் ஈறுகளின் வீக்கம் போன்றவை வாய் நாற்றத்தினை உண்டு பண்ணும். தற்காலத்தில் வாய் நாற்றத்தின் மிக முக்கிய பாதிப்பு நட்பை இழக்கவோ  அல்லது காதலன் காதலியுடனான உறவில விரிசல் ஏற்படவோ  இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது. பெரும்பாலானோர் இந்தக் காரணத்தை வெளியில் சொல்லமாட்டார்கள் எனவே அதனை புரிந்து கொளவது கடினம்.முக்கிய நபரை சந்திக்கும் பொழுதோ  அல்லது பொது இடங்களுக்கு செல்லும் போதோ இதைப் போன்ற வாய் நாற்றம் உள்ளவர்களுக்கு வரவேற்பு எனபது மிகக் குறைவாகவே இருக்கும்.
உடல் ரீதியாக ஏற்படும் சிக்கல்:
உறவு ரீதியான பிரச்சனைகளைக் கூட சமாளித்து விட முடியும் .ஆனால் உடல் ரீதியான பாதிப்பு எனபது வாழ்நாள் முழுவதும் துன்பம் தரும்.அளவுக்கு அதிகமான நொறுக்கித் தீனிகளும் ,குளிர் மற்றும் மது பானங்கள் பற்களை மிகவும் பாழ்படுத்தி விடுகின்றன. இதனை விளைவாக நாற்பது வயதினைக் கடந்தவுடன் பற்கள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் நமக்கு வர ஆரம்பித்து விடும்.
இதைப் போன்ற உணவுப் பொருட்களில் உள்ள அதிகப்படியான அமிலங்களும் சர்க்கரைக் கலந்த பொருட்களும் பற்களுக்கு தேய்மானத்தை உண்டு பண்ணுவதோடு மட்டுமன்றி நிறையக் கிருமிகளின் புகலிடமாகவும் ஈறுகளில் வீகத்தினையும் உண்டுபண்ணி நாளடைவில் பலவேறு நோய்கள் நம்மை எளிதில் அணுகக் கூடியதான ஒரு சூழ்நிலையினை  ஏற்படுத்திவிடும்.


மிக சமீபத்தில் ஆராய்ச்ச்சியாலர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று மிக அதிர்ச்சியானது அதாவது பற்கள் பாதுகாப்பின்மையால் பற்கள் பாதுகாப்பில் கவனம்செலுத்தாதவர்களுக்கு நீரிழிவு (Diabetes ) மற்றும் இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

மிக எளிதான தீர்வு :
காலை எழுதவுடன் பல்துலக்கிய பின்னர் மற்றும் மதிய உணவுக்குப் பின்னர் கடைசியாக படுக்கப் போகும் முன் பதினான்கு முறை வாய் கொப்புளிக்கும் பழக்கத்தினை நாள்தோறும் பின்பற்றினால் பற்களுக்கு மிகச் சிறந்ததொரு பாதுகாப்பினை மிக எளிதாகக் கொடுக்கலாம்.


இதனால் கிடைக்கும் நமைகள்:


    இதனை செய்ய ஆரம்பித்த முதல்  நாளிருந்தே உங்கள் மன அளவிலே ஒரு மாறுதலை நன்கு உணர  முடியும். மனதில் ஒரு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும்  மிக அதீதமான ஒரு ஆற்றலும் கிடைத்ததைப் போன்ற உணர்வு ஏற்படும்.

உங்கள்  நல்ல கருத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் மற்றவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

மிக  உறுதியாகச் சொல்கின்றேன் உறவுகளில் காதலன் காதலி அல்லது கணவன் மனைவியரிடையே பழகுதலில் நல்ல மாறுதலை உணர முடியும்.

மன ரீதியான மாற்றங்களை உடனடியாக  உணர்வது போன்று உடல் ரீதியான மாற்றங்கள்  வெகு விரைவாக உணர முடியாவிட்டாலும் நோய்கள் வெகு ஆரம்பித்த நம்மை அணுகாதவாறான ஒரு அரணை  பல்  பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்.

நவ நாகரீக நோய்களான நீரிழிவு  மற்றும் இருதய  நோய்களை வராமல் காப்பதில் பற்பாதுகாப்பு ஒரு முக்கியக் காரணியாக இருக்கும்.

பின் குறிப்பு :


இது தவிர சுடுநீரில் சிறுது உப்பு கலந்து கொபுளிக்கலாம்.
சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலாப பொடியை சுடுநீருடன் கலந்து வார இறுதி நாட்களில்   கொப்புளிக்க நல்ல பலன் கிடைக்கும்.

மதிய உணவுக்குப் பின்னர் chewing gum மெல்லுவதும் நல்ல பலன் கொடுக்கும்.

எனவே எல்லோரும் இன்றிலிருந்தே நன்றாக வாய் கொப்புளிங்க  பாஸ்