Tuesday, April 19, 2016

பேலியோ என்னும் மாயாஜாலம்:

முகபபுத்தகத்தில் தற்போது எப்படி இருந்த நான் இப்படி ஆயீட்டேன் என்ற படங்கள் ஆரோக்கியம் நலவாழ்வு என்ற குழுமத்தில் மிகப் பிரபலமாகி வருகின்றது. சினிமா அரசியல் தாண்டி உடல் நலம் தொடர்பான குழுமத்தில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பேர் இணைத்திருப்பது ஆச்சர்யமான ஒன்று .


இந்தக் குழுவின் நிறுவனத் தலைவர் அண்ணன் நியாண்டர் செலவன் அவர்கள் பொறுமையின் சிகரம் ,அவரால் தான் இந்தக் குழுமம் இன்றுவரை மிக சிறப்பாக இயங்கி வருகின்றது. ஒவ்வொருவர் கேள்விக்கும்  மிகப் பொறுமையாக பதிலளிப்பதனால் தான் பலரும் மிக நம்பிக்கையாகப் பேலியோ உணவு முறையினைக் கடை பிடிக்கின்றனர்.தமிழகத்தில் பல்வேறு புரட்சிகள் நடந்திருக்கின்றன, அவற்றுள் செல்வன் அவர்களின் கொழுப்புப் புரட்சியும் ஒன்றாகும்.





இந்த பூமியில் விவசாயம் தோன்றுவதற்கு முன்பின்ருந்த காலம் பேலியோ என்றழைக்கப்படுகின்றது. அந்த காலத்தில் இருந்த உணவு முறையை கடைபிடிப்பதால் இதற்கு பேலியோ என்ற பெயர் வந்தது. 


இதன் நன்மை என்ன: உடனடியாக உடல் எடைக் குறைய உதவுகின்றது , இரண்டாவது இருதய நோய் வராமல் தடுக்க உதவி புரிகின்றது.மதுமேகம் என்றழைக்கபடும் நீரிழிவு இருப்பவர்களுக்கு இந்த உணவு முறை மிகச் சிறந்த ஒன்று. இன்னும் உணவு சீரணக் கோளாறு , தைராய்டு பிரச்சனை போன்றவற்றையும் தடுக்க உதவுகின்றது.


இந்தக் குழு மிகப்பிரபலமாக ஆவதற்கு பிரபல பதிவர்கள்  ஜாக்கி சேகர் ,கேபிள் சங்கர் ஆகியோருக்கு முக்கியப் பங்கு உள்ளது.



மருத்துவர்கள் இந்த குழுமத்தில் இணைத்த பின்னர் , குழுவில் சேரும் புதியவர்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டதோடு மட்டுமன்றி எந்த பயமும் அற்று பேலியோவினைப் பின்பற்ற ஆரம்பித்தனர். 

தற்பொழுது தமிழகத்தின் சென்னை நகரையும் தாண்டி அனைத்து சிறு நகரங்களில் வசிப்பவர்களும் இக்குழுமத்தில் இணைத்து இருக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் இணைந்திருக்கின்றனர்.


ஏன் பேலியோ உணவு முறை அவசியம்:

கனடாவில் வசித்த  செல்வ கன நாயகம் என்ற பேராசிரியர் Fellow of the Royal Society of Canada விருது வாங்க க்யூபெக் நகருக்கு மனைவியுடன்  சென்ற பொழுது இரவு உணவு அருந்தி விட்டு வரும் வழியில் தனது 60 வயதில் மாரடைப்பில் ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் இறந்து விட்டார். எவ்வளவு பெரிய இழப்பு சமூகத்திற்கும் ,அவர் குடும்பத்திற்கும் என்று  நினைத்துப் பாருங்கள், (இந்தப் பேராசிரியர் குறித்து மேலும் அறிய இந்த இணைப்புக்கு செல்லுங்கள்). 

இருதய நோய் தாக்கி உயிரிழத்தல் தெற்காசியாவில் தான் அதிகம் , அதற்கு முக்கியக் காரணியாக இருப்பது நம் உணவு முறைகள் தான், பல்வேறு உணவு முறைகள் உலகில் இருந்தாலும் தற்போதைய நிலையில் பேலியோவின் வெற்றி நம் கண்முன்னே தெளிவாகத் தெரிகின்றது.

நடுத்தர வயதுடையவர்கள் நீரிழிவு மற்றும் இருதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள பேலியோ என்ற இந்த முன்னோர் உணவு சரியானதொரு வாய்ப்பு.

உங்கள் அனைவருக்கும் முன்பே தெரிந்து போல நான் படித்து பட்டம் பெற்ற சித்த மருத்துவர் ,தற்போது மூளை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவன் . இந்தப் பேலியோ குறித்து இணையத்தில் ஒரு மாத காலம் தேடிப் படித்த பின்னரே கடந்த மூன்று மாதமாகப் பேலியோவினைப் பின்பற்றி வருகின்றேன் .
நீங்களும் நல்ல ஆரோக்கியத்துடன் நலமோடு வாழ தகுந்த ஆலோசனைப் பெற்று பேலியோவினைப் பின்பற்றுங்கள்.
தற்பொழுது நியண்டர் செல்வன் அவர்கள் எழுதிய பேலியோ குறித்த புத்தகமும் வெளிவந்துள்ளது அதனையும் படித்து விட்டு இந்தக் குழுமத்தில் உள்ளவர்களின் ஆலோசனைப் பெற்று பேலியோவினைக் கடைபிடியுங்கள்.
மேலும் அறிந்து கொள்ள இக்குழுமத்தின் மூத்த உறுப்பினர் சங்கர் அவர்களின் பேலியோ குறித்த இந்தக் காணோளியைக் காணுங்கள்.



நன்றி 
செங்கதிரோன்