Thursday, November 17, 2016

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த இந்தியர்களின் பார்வை குறித்து ஒரு நுட்பமான பதிவு:

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த இந்தியர்களின் பார்வை குறித்து ஒரு நுட்பமான பதிவு:


1.அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து இந்தியர்களுக்கான ஆர்வம் குறித்து ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் "எலி தான் காயுதேன்னா எலி புழுக்கை ஏன்டா காயனும்" என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

2.ஏன் அவ்வாறு சொல்கின்றேன் என்றால்  அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடந்த விவாதங்களில் இந்தியா என்ற ஒரு நாட்டைப் பற்றி ஒரு வார்த்தை கூட டிரம்போ , ஹிலாரியோ பேசவே இல்லை.

3. அமெரிக்க அதிபர்  தேர்தல் விவாதங்களில்  முக்கிய இடம் பிடித்த  நாடுகள்: ரஷ்யா, சீனா , ஈரான் , மெக்சிகோ ,சவுதி அரேபியா (எனவே அந்த நாட்டு மக்கள் தான் இந்த தேர்தலில் அதிக ஆர்வமாக இருந்திருக்க வேண்டும்)

4. டிரம்ப்  நேரடியாக  இஸ்லாமிய அமைப்புகளின் மேல் குற்றம் சாட்டுவதால் தான்  இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் அவருக்கு தாங்களாக முன்வந்து ஆதரவு கொடுத்தனர். இந்து அமைப்புகள் எப்போதுமே  இஸ்லாமியர்களுடன்  நேரடியாகவே மோதுவார்கள். ஆனால் கிறித்துவர்களுடன் அவர்களின் பொருளாதர பலத்தின் காரணமாக நேரடியாக மோதாமல் மறைமுகமாகவே தாக்குவார்கள்.

5.டிரம்ப் உலகமயமாக்கலுக்கு எதிரானவர் , அதனால் தான் அந்த ஊரில் உள்ள தொழிலாளர்கள் அவரை ஆதரித்தார்கள் என்றொரு பொய்யினை ஒரு சிலர் சொன்னார்கள். ஏன் இது பொய்? வெள்ளையின மக்களில் பெரும்பகுதியினருக்கு உழைப்பை விட நிர்வாகம் செய்வது தான் பிடிக்கும். எனவே தான் ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்களை இறக்குமதி செய்து அவர்களை பயன்படுத்தி கட்டுமான வேலைகளை செய்தனர். ஆனால் கறுப்பர்கள் சம உரிமை கேட்டுப் போராடி அங்கயே உயர் பதவி வரை வந்து விட்டனர். அடுத்து மெக்சிகோ மக்களை இது போன்று குறைந்த ஊதியத்துக்கு விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகின்றனர். மாறாக  அமெரிக்காவில் அவர்களின் வேலையை அதிகம் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்த கல்வியறிவு பெற்றவர்கள் தான் என்பது தான் நிதர்சனம்.

6. டிரம்பின் பெண்கள்  குறித்த தவறான கருத்துகள் விவகாரம் ஏன் பெரிதாக எதிரொலிக்கவில்லை:மிகப் பெரும் பணக்காரர் மற்றும்  மூன்று மனைவி கொண்ட டிரம்ப் பெண்கள்  குறித்த பேசும் பேச்சுக்களில் நமக்கு எந்த ஆச்சரியமம் இல்லை. நம்மூரில் உள்ள இந்து அமைப்புகள் இந்த உளறல்களை நியாயப்படுத்தி பேசும் பேச்சுக்களை தான் ஆய்வுக்குரியது. முதலாவது இந்து அமைப்புகளுக்கும் பெண்கள் என்பது குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம் மட்டுமே , எனவே தான் அவர்கள் டிரம்பை ஆதரிக்கக் கூடும்.

டிரம்பின் வெற்றியோ ,ஹிலாரியின் தோல்வியோ இந்தியாவை துளியளவும் பாதிக்காது  என்பது தான் நிதர்சனம்.

டிரம்பின்  வெற்றிக்கு பின்னர்  அவரை எதிர்த்த அனைவரும் அவர் குறித்த நல்ல செய்திகளை தேடி தேடி படிக்க ஆரம்பித்து விட்டனர். இதன் மூலம் தெரிய வருவது என்னவெனில் பிடிக்காத  ஒருவரை திருமணம் செய்த பின்னர் இவருடன் தான் காலம் முழுக்க வாழ்ந்தாக வேண்டும் என்று நிலை வந்தவுடன்  அவரின் நல்ல குணங்களை மட்டும் பார்க்க ஆரம்பித்து  வாழ பழகிக் கொள்ளும் மனப்பான்மைக்கு  அமெரிக்கர்களும் தயாராகி விட்டனர்.

அடுத்த பதிவில் முதல் பெண் அமெரிக்க பெண் வேட்பாளர்  ஹிலாரியின் தோல்வி எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த முக்கிய செய்திகளை பார்ப்போம்அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த இந்தியர்களின் பார்வை குறித்து ஒரு நுட்பமான பதிவு: