Wednesday, December 17, 2014

ஆரியத்துக்கு அந்துமணி திராவிடத்துக்கு கிளி மூக்கு அரக்கன்

தினமலரில் வெகுகாலமாக வந்து கொண்டிருக்கும் அந்துமணி கேள்வி பதில் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பெரியார், கலைஞர் குறித்து கிண்டலாக பதிலளிப்பது ,திராவிட கட்சிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்கள் என்று வாரமலரில் வாராவாரம் வரும். நீண்ட காலமாக இன்றுந்து வரும் இந்த பகுதிக்கு தகுந்த பதிலடிகள் இதுவரை இல்லாமல் இருந்து வந்தது. திராவிடர்களின் அந்த மனக்குறையைப் போக்கும் வகையில் முகநூலில் இளம் தலைமுறைக்கு திராவிட சிந்தனைகள் குறித்து பாடம் எடுத்து வருபவர் தான் கிளி மூக்கு அரக்கன்.


இருவருக்கும் உள்ள மிக முக்கிய ஒற்றுமை unknown identity அதாவது பெரும்பான்மையானோருக்கு அந்துமணி மற்றும் கிளிமூக்கு அரக்கன் யாரென்றே யாருக்கும் தெரியாது.





இருவருமே தங்களால் இயன்ற அளவுக்கு மக்க்ளிடம் திராவிடம் ஆரியம் குறித்த சிந்தனைகளை பரப்பி வருகின்றனர்.

Wednesday, December 10, 2014

இசை உலகின் பொறுக்கிகள்


நம் நாட்டில் சென்ற நூற்றாண்டு வரை இசை உலகம் என்பதே பக்திமான்களும் ஒழுக்கம் நிறைந்தவர்களும் கொண்ட ஒரு உலகமாகவே இருந்து வந்தது.இதற்கு வாழும் உதாரணம் இளையராஜா. ஆனால் தற்பொழுது அனிருத் செய்யும் அட்டகாசங்களை பார்த்தாலே இசை உலகம் எப்படி மாறிவிட்டது என்பதனை புரிந்து கொள்ள முடியும். இந்த மாற்றம் அனிருத்தின் தவறு அல்ல , எப்படி நம் திரைப்படங்களில் பாடல்கள் முதல் பின்ணணி இசை வரை வெளி நாட்டுப் படங்களில் இருந்து காப்பி அடிக்கப் படுகின்றதோ அதே போல அந்த இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை போல நம் நாட்டு இசை அமைப்பாளர்களும் வாழ ஆசைப் படுகின்றனர். அவர்களை போன்றே உடை அணிதல் , விலயுர்ந்த வாகனங்களை
வாங்குதல் மற்றும் பெண்கள் 
மீது மோகம் என்று தங்கள் வாழ்க்கை முறையையே மாற்றி வருகின்றனர்.கீழே உள்ள படத்தின் மூலம்  அனிருத் வெளிநாட்டு இசைக்கலைஞர் tyga போன்றே உடை அணிந்து அவர்களைப் போன்றே இருக்க இவர்களும் முயற்சிப்பதனை தெரிந்து கொள்ள முடியும். எனினும் மலேசியாவில் இயங்கி வரும் தமிழ்  ராப் பாடகர்களும் இதே போன்று தான் உடை அணிவர் என்பதும் உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன்.

                 
                                   
                    Tyga                          Anirudh


 அந்த இசைக் கலைஞர்கள் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் சிறந்த பாடல்கள் பற்றி வரும் வாரங்களில் எழுத இருக்கின்றேன். இதற்கு முன்பு இசை உலகின் தேவதைகள் என்று பாப் இசை உலகின் அழகிய இளம் பெண்கள் குறித்து எழுதி இருந்தேன்

இசை உலகின் இளம் தேவதைகள்: கேட்டி பெர்ரி (Katy Perry )
நிக்கி மினாஜ் (Nicki Minaj):இசை உலகின் இளம் தேவதைகள்
அடேல் :இசை உலகின் இளம் தேவதைகள்
இசை உலகின் இளம் தேவதைகள்:டெய்லர் ஸ்விப்ட்
இசை உலகின் இளம் தேவதைகள் :ரியான்னா(Rihanna
இசை உலகின் இளம் தேவதைகள்:அலிசியா கீஸ் 
 நேரம் கிடைக்கும் பொழுது இந்த தேவதைகள் குறித்து படித்துவிட்டு அவர்களின் இசையை கேட்டு மகிழுங்கள் 

ஏன் இசை உலகின் பொறுக்கிகள் என்று குறிப்பிடுகிறேன் என்றால் இவ்வகையான பாடகர்கள் அதிகம் முன்னிலைப் படுத்துவது வன்முறை
மற்றும்ஆபாசம். ஆனாலும்  நமது கானாப் பாடல்கள் போலவே இதற்கும் உலகெங்கும் மிகப் பெரிய வரவேற்பு உண்டு. தாளத்தோடு வரும் அந்தப் பாடல்களை முதல் தடவை கேட்கும் போது புரிந்து கொள்ள மிக சிரமம் தான் , ஆனால் அந்தப் பாடல்களின் காணொளியுடன் காணும் போது நடன அசைவுகளினாலும் அவர்கள் செய்யும் சேஷ்டைகளாலும் இந்தப் பாடல்கள் மிகவும் ரசிக்கத்‌தக்கவையாகவே இருக்கும். இதனை ராப்பர் உலகம் என்று அழைப்பர். ஆப்பிரிக்கர்களே அதிகம் இயங்கும் இவ்வகையான இசையில் எமினம் போன்ற வெள்ளையர்களும்   கலக்கி வருகின்றனர்.

 இந்த வகையான பாடகர்களின் ரசிகர்கள் பொதுவாக டீன் ஏஜ் வயதினராகத் தான் இருப்பர். ராப் இசை ரசிகர்களுக்கென்றே பொதுவான உடை அமைப்பே உண்டு. இடுப்பிலே நிற்காத ஜீன்ஸ் பேண்டும் ஹூடி என்று சொல்லப்படும் தலையினை மூடிக் கொள்ளும்படியான முழுக்கை சட்டையும் ,ஒரு பெரிய ஹெட் போன் (head phone) அணிந்து கொண்டு இருப்பர். இவர்களுக்காகவே தனியாக ஆடை விற்பனை செய்யும் கடைகளை பெரிய நகரங்களில் காணலாம். கீழே உள்ள புகைப்படம் அது போன்ற ஒரு கடையில் எடுக்கப்பட்டது.


இனி வரும் பதிவுகளில் ராப் இசையில் பிரபலமான பணக்கார பொறுக்கி குண்டு பொறுக்கி , கஞ்சா பொறுக்கி, குடிகார பொறுக்கி , கிரிமனல் பொறுக்கி என ஏகப்பட்ட இசை பொறுக்கிகள் குறித்து எழுத உள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பொறுக்கிகள் உங்களையும் கவர்ந்து விடுவார்கள் .








Monday, December 8, 2014

அய்யர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் ஆச்சரியமான ஓற்றுமைகள்:

லைப்பு பார்த்து பலருக்கும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போப்போடுவது போல் இருக்கின்றதே என்று நினைப்பீர்கள். ஏனென்றால் வரலாறு ரீதியாக ஆப்பிர்க்கர்களுக்கும் தமிழர்களுக்கும்(திராவிடர்கள்) உள்ள ஓற்றுமை குறித்து ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றது. பதிவர் கலையரசன் அவர்கள் கலாசார மற்றும் பண்பாட்டு ரீதியாக திராவிடர்களுக்கும் ஆப்பிர்ரிக்கர்களுக்கும் உள்ள தொடரப்பு குறித்த பல முக்கியக் கட்டுரைகளை எழுதி உள்ளார். அது மட்டுமன்றி முன்னால் அமைச்சர் பொன்முடி அவர்கள் கறுப்பர் இயக்கம் மற்றும் திராவிட இயக்கங்களின் செயல்பாட்டு ஓற்றுமை குறித்து புத்தகம் எழுதி இருக்கின்றார்.


ஆப்பிரிக்க மற்றும் அய்யர் சமூகங்களிடையேயான ஒற்றுமைகள் என்பது கால மாற்றத்தினால் ஏற்பட்டது. முதல் ஒற்றுமை என்பது இடம் பெயர்தல் . ஆப்பிரிக்கர்கள் அடிமை சமூகமாக மேலை நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று சொல்லப்படினும் அவர்கள் தங்கள் நாட்டில் பிழைப்புக்கு வழி இல்லாத காரணத்தால் தான் அவர்கள் அடிமைகளாக சென்றனர். பின்னர் அங்கேயே குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் ஏராளமான பிராமணர்கள் நன்கு படித்திருந்த காரணத்தினால் முதலில் பிரிட்டனுக்கும் பின்னர் மற்ற நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தனர். நிறைய ஊர்களில் அந்த ஊரை விட்டு முதலில் இடம் பெயர்ந்தது அய்யர்களாகத் தான் இருப்பார்கள் .நகரத்தை நோக்கி செல்வதில் மிக ஆர்வமாக இருப்பார்கள்.மற்ற சமூகத்தினர் இடம் பெயர்தலில் அதிக ஆர்வமற்றும் , தன் சொந்த இடத்தினை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே வாழ்ந்து மடிவர். ஒரு சிலர் வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தாலும் தன் ஓய்வு காலத்தில் சொந்த ஊருக்கே திரும்பி வந்து வாழ்வார்கள். இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான எந்த இணைப்பும் பிராமணர்களிடம் இருக்காது. ஆனால் நான் இதை ஒரு குற்றச்சாட்டாக சொல்லவில்லை. முதல் ஒற்றுமையான இடம் பெயர்தல் குறித்து பார்த்தோம்.



இடம்பெயர்ந்த இடத்தில் இவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தில் பல ஒற்றுமைகள் உள்ளன. முதலில் தொழிலினை தேர்ந்தெடுக்கும் போது இருவருமே வணிகம் சார்ந்த துறைகளில் சேர்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டுவர் . அதனால் தான்  மேல் நாடுகளில் வங்கிகள், வியாபார நிறுவனங்களில் அதிகம் ஆப்பிரிக்கர்கள் இருப்பர்.அதே போன்று நம்மூர் ஐஐடி களில் தொழிற் படிப்பினை படித்த பின்னர் எம்பிஏ படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவோர் பெரும்பாலானோர் அய்யர்களாகவே இருப்பர்.உடனடியாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புடைய பணிகளில் தான் அதிகம் விரும்புவர்.முன்னர் கணினி தொடர்பான வேலைகளில் ஆர்வம் காட்டினர் ,தற்போது அங்கு பணி நிரந்தர உறுதியின்மையால் வியாபாரம் மற்றும் வர்த்தக துறைகளில் செல்கின்றனர்.ஆனால் இது போன்றதொரு திட்டமிட்டு தன் வாழ்க்கைக்கான பணியினை தேர்ந்தெடுக்கும் போக்கு இதர சமூக மக்களிடம் நான் கண்டது குறைவுதான். ஆனால் நான் மேற்குறிப்பிட்ட இரு சமூகத்தினரும் தன் வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்த துறை பயனளிக்குமோ அதை மட்டும் தான் தேர்வு செய்வர். இரண்டாவதாக தொழில் நிமித்தம் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை குறித்து பார்த்தோம்.




கண்டம் விட்டு கண்டம் இடம் பெயர்ந்தாலும் இவர்கள் வாழ்க்கை முறையில் எந்த ஒரு மாறுதலும் ஏற்படவே இல்லை. வெளி நாட்டுக்கு சென்ற பின்னரும் தங்கள் வழிபாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். உணவு முறைகளில் சைவ உணவுப் பழக்கங்களை அந்தளவு பின்பற்ற முடியாவிட்டாலும் முக்கிய விரத நாட்களில் அசைவ உணவுகளை உண்பதே இல்லை.அசைவ உணவுகளில் முட்டை , கோழி தவிர எதையும் பெரும்பாலான பிராமணர்கள் உண்பதில்லை. ஆனால் பிரமாண வகுப்பை சாராத மற்றவர்கள் குறிப்பாக ஆண்கள் வெளிநாடு சென்ற உடன் இது போன்ற மரபான பழக்கங்களை உடைத்தெறிகின்றனர். நல்ல உணவுகளை தேடி தேடி உண்பதில் நம் கேபிள் சங்கர் போல மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.ஆப்பிரிக்கர்கள் வெளி நாட்டுக்கு சென்று பல நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அவர்கள் மேலை நாட்டினர் உண்ணும் உணவுகளை உண்பதில்லை .அதிகமாக இறைச்சி உண்பது , அரிசி அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது , junk food களான  pizaa ,burger அதிகம் சாப்பிடுவது என தனித்தன்மையுடன் வாழ்கின்றனர். வாழ்வியலைப் பொறுத்தவரை இவ்விரு சமூகத்திற்குமான ஒற்றுமை

 என்பது தத்தம் பழக்கவழக்கங்களை உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் விட்டுக் கொடுக்காமல் வாழ்வது தான், ஆனால் பிற இனத்தவரோ தங்கள் அடையாளங்களை இழப்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடனேயே வாழ்கின்றனர்.


இசை மற்றும் நடனம் இவை இரண்டையுமே இவ்விரு சமூகத்தினரும் தாங்கள் சென்றவிடமெல்லாம் கொண்டு சென்றனர். ஆப்பிரிக்கர்களுக்கு ஹிப் ஹாப் நடனம் மற்றும் இசை என்றால் பிராமணர்களுக்கு பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசை தனி அடியாளமாகத் திகழ்கின்றது. இந்த துறைகளில் இவ்விரு சமூகம் சாராத மக்கள் நுழைவது என்பது மிகக் கடினமான ஒன்று. வெள்ளை இனத்தை சேர்ந்த பிரபல ராப்  பாடகரான எமினம் (Eminem) அவர்களை ஆப்பிரிக்க ஹிப் ஹாப் சமூகம் இன்றளவும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை.அதே போன்ற நிலை தான் இங்கே இசை ஞாநி இளையராஜாவுக்கும் கர்நாடக சங்கீத சபையில் இது வரை எந்த ஒரு சிறப்பான அங்கீகாரமும் அவருக்கு அளிக்கப்படவில்லை. இதிலிருந்து அறிவது ஆபிரிக்கர்களும் அய்யர்களும் தங்கள் சமுதாயம் சாராத மக்களுக்கு என்றுமே அங்கீகாரம் அளிக்க மாட்டார்கள். 

மேல சொன்ன ஒப்பீடுகள் ஒரு மாறுபட்ட கோணத்திலிருந்துதான்  சொல்லப்பட்டவை என்றாலும் இவை அனைத்தும் உண்மையே என்பதனை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். 

Tuesday, December 2, 2014

வெளி நாட்டுப் பெண்கள் எல்லாம் விபசாரிகளா?

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான குணங்கள் பல உண்டு. உணவு வகைகளில் காரம் அதிகம் சேர்த்து சாப்பிடுவது, பண விவகாரங்களில் மிகவும் கஞ்சத்தனமாக நடந்து கொள்வது என்று ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றுள் வெளிநாட்டுப் பெண்கள் குறித்து இந்திய செய்திஊடகங்களும் திரைப்படங்களும் ஏற்படுத்தி இருக்கின்ற மாயத் தோற்றம் குறித்து தான் இந்தப் பதிவு.

வெளிநாட்டுக்கு சென்று வந்த ஒவ்வொரு இந்திய ஆணும் கன்னி கழிந்து விட்டதாகவே அனைவரும் நம்புகிறனர்.வெளி நாடு செல்லும் ஆண்களும் இதைப் போன்ற அதீதமான கற்பனைகளுடன் தான் செல்கின்றனர். காந்தி அவர்கள் வெளி நாடு செல்லும் போது தன் அன்னைக்கு செய்த சாத்தியங்களில் பெண்கள் தொடர்பான சத்தியத்தையும் செய்து கொடுத்தார். அந்தளவுக்கு அங்கே பெண்கள் சுகம் மிக மலிவாக கிடைப்பதாக ஒரு பிம்பம் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. அது எந்தளவுக்கு உண்மை எனபததைப் பார்ப்போம்.


ஹாலிவுட் படங்கள் மற்றும் போர்நொ படங்களில் காண்பிக்கப்படும் காட்சிகளை மட்டும் கருத்தில் கொண்டே வெளிநாட்டுப் பெண்களை பற்றி ஒரு முன் முடிவுக்கு நாம் வந்து விடுகின்றோம். இங்கே நிலவும் பாலியல் வறட்சியினாலும் காட்டுப்பட்டியான சமூக அமைப்பினாலும் நம் நாட்டுப் பெண்களை அவர்களுடன் ஒப்பிட்டு வெளிநாட்டுப்பெண்கள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று ஆணித்த்ததரமாக நம்புகின்றோம்.

முதலாவதாக அவர்களின் ஆடை அணியும் விதத்தை வைத்து தான் இந்த விமர்சனகள் அதிகம் வைக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள  ஒவ்வொரு பெண்ணும் என்ன மாதிரியான உடை அணிய வேண்டும் என்பதனை அப்பெண்ணின் பெற்றோர்கள், சகோதரர்கள் , மாமனார் அல்லது மாமியார் மற்றும் மிக முக்கியமாக கணவனோ தான் தீர்மானைக்கின்றார்கள். இப்படியான எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி அவர்களுக்கான உடையினை அவர்களே தேர்வு செய்கின்றனர். தாங்கள் உடை அணிவது மற்றவர்களுக்கு தான் பார்க்க அழகாக தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் உடை அணிவதாக அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.  இங்குள்ள மேலை நாட்டு ஆண்களும் அவர்கள் அது போல உடை அணிவதைத்தான் விரும்புகின்றனர். ஆண்களுமே கோடை காலங்களில் மேல் சட்டை இல்லாமல் வெற்றுடம்புடன் ஆனந்தமாகத் திரிவதைக் காணலாம். மேலும் இங்கு சின்ன பெண்  குழந்தை முதல் கிழவி வரை கவுன் மட்டுமே அணிந்து கொண்டிருப்பர். நம்மூர் போல உடை என்பது வயதுக்கு ஏற்றவாறு எந்த மாற்றமும் அடையாது. எனவே உடை அணியும் பழக்கத்தினை வைத்து அவர்களின் குணத்தினை மதிப்பீடு செய்யும் இந்திய மனம் வெளிநாடுகளில் பொருந்தவே பொருந்தாது. குறிப்பிடத்தக்க மற்றோர் செய்தி பெண் மருத்துவர்களுமே அரை குறை ஆடைகளைத்தான் அணிந்திருப்பார்கள். முதல் முதலாக நான் மருத்துவரைப் பார்க்க சென்ற போது அம்மருத்துவர் அணிந்திருந்த உடையைப் பார்த்தவுடன் நான் என்னுடய நோய் பற்றி சரிவர சொல்லாமல் திரும்பி வந்து விட்டேன். ஆனால் இந்த நான்கு வருடங்களில் அது கொஞ்ச கொஞ்சமாக சரியாகி விட்டது.

இரண்டாவதாக பொது  இடங்களில் அவர்கள் பேசும் விதத்தினை வைத்து மதிப்பீடு செய்கின்றார்கள்.நம்மூரில்  இரட்டை அர்த்த ஜோக்குகளை அதிகம் பெண்கள் தங்கள் பெண் நண்பர்களுடனும் , ஆண்கள் தங்கள் நண்பர்களுடனும் அல்லது காதலியிடமோ மட்டும் தான் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் இங்கே நிலமை தலைகிழானது, போது இடங்களிலும் , வேலை செய்யும் இடங்களிலும் மிக இயல்பாக ஆண் பெண் வித்தியாசமின்றி ஜோக்குகளை பறிமாறிக் கொள்வது வழக்கம். அதுவும் பார்ட்டிகளில் இது மிக அதிகமாக நடக்கும். என் வாழ்வில் நடந்த ஒன்றையும் குறிப்பிடுகின்றேன் . ஒரு வீட்டில் நடந்த பார்ட்டியில் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அக்குழந்தையின் தாய் வரவில்லை தந்தை மட்டுமே வந்திருந்தார். என் தோழி ஒருத்தி எல்லோரும் இருக்கும் அவ்விடத்தில் தன் மார்பகத்தை சுட்டி இதில் பால் இல்லை இருந்திருந்தால் கொடுத்திருப்பேன் என்று சொல்லி சத்தமாக சிரிக்க அனைவரும் கைதட்டி சிரிக்கின்றனர். எனவே பாலியியல் குறித்து மிக வெளிப்படையாகவே   போது இடங்களில் பேசுகின்றனர். பெண்ணின் அங்க வர்ணனைகளை அவளுக்குத் தெரிந்த நண்பர்கள் சொல்லும் போது ஒரு சிரிப்புடன் கடந்து விடுகின்றனர். அதை அவர்கள் அழகை ரசிக்கும் தன்மை என்று மட்டுமே பார்க்கின்றனர். ஓட்டல்களில் நாம் பார்க்கும் பெண் மிக அழகாக இருப்பின் நாம் சென்று நீங்கள் மிக அழகு என்று சொன்னால் thanks என்று சொல்லி சிரிப்பார்கள், அதே நம்மூரில் நடந்தால் செருப்படி தான் கிடைக்கும்.







மேற்சொன்ன இரண்டு செய்திகளில் இருந்து வெளிநாட்டுப் பெண்கள் அனைவரும் மிக யோக்கியமானவர்கள் என்பதை நான் நிறுவ முயலவில்லை. ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரில் போது இடங்களில் பெண்கள் ஆண்களை கூவி கூவி அழைப்பதையும் காண முடியும். சனிக்கிழமை இரவுகளில் அவர்கள் அணிந்து செல்லும் உடைகளைப் பார்த்தால் நம் உணர்வுகளைக் கட்டுப் படுத்தவே முடியாது. அதே போல கடற்கரைகளில்  மிக மிக கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு மிக அங்கும் இங்கும் படுத்துக் கொண்டிருப்பார்கள். எனவே ஆண் வெகு சுலபமாக பெண்ணை நோக்கி ஈர்க்கப் படுகின்றான். பாலுணர்வு எனபதை பசி உணர்வு போல அந்த உணர்வு ஏற்படும்
போது அதனை தீர்த்துக் கொள்கின்றனர். அதை ஒரு வாழ்வியல் சார்ந்த ஒன்றாகப் பார்ப்பதில்லை. சனிக்கிழமை இரவுகளிலும் கொண்டாட்ட காலங்களிலும் மிக மகிழ்ச்சியாக இந்த பாலியியல் உணர்வை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த செயல் தான் நமக்கு மிக அருவருப்பாகவும் அந்தப் பெண்களை விபசாரிகள் என்று எண்ணுவதற்கு காரணமாக அமைகின்றது.

வெளிநாடுகளிலும் நம்மூர் போலவே குடும்ப அமைப்புகள் மிக வலுவாக இருக்கின்றது என்பதனை கேட்க நம்புவதற்கு கடினமாகத் தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை. நம்மூர் வழக்கப்படி பெண்ணை காதலிப்பது என்பதன் அர்த்தமே அவளை திருமணம் செய்து கொள்வதற்கான முதல் படி, மேலை நாட்டில் குறைந்தது இரண்டு மூன்று வருடம் காதலிப்பார்கள் அதற்குப் பிறகு தான் திருமணம் என்ற பந்தததிற்குள் நுழைவதைப் பற்றி யோசிப்பார்கள். அதனாலேயே இங்கே திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

வெளிநாடுகளில் இருக்கும் strip club (ஆடை அவிழ்த்து ஆடும் கூடம்) மற்றும் பெண்களின் உடை ,பழக்க வாழ்க்கங்கள் கொண்டு மட்டும் அப்பெண்ணின் குணத்தினை தீர்மானிக்க முடியாது. அவர்கள் தான் யாரோடு உறவு கொள்ள வேண்டும் எனபதனை தான் தான் முடிவு செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதனை மேல் நாட்டு ஆண்கள் நன்கு உணர்ந்திருப்பதால் தான் இங்கே கற்பழிப்பு சம்பவங்கள் நடப்பது குறைவாக இருக்கிறது. மாறாக வெளிநாட்டுப் பெண்களை அதிகம் கற்பழிப்புக்கு உள்ளாவது அதிகம் இந்தியாவில் நடப்பதற்கான காரணமே நாம் அவர்கள் விபசாரிகளைப் போன்றவர்கள் என்ற பொது புத்தி தான். மேலே குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து அவர்கள் பற்றிய ஒரு பொய்யான பிம்பத்தில் இருந்து நாம் வெளியே வருவோம் என்றும் நம்புகிறேன்.


 இந்தியாவில் விபசாரத்தினை சட்டப்பூர்வமாக்க இந்திய அரசு முயற்சி செய்வது அபாயகரமான விளைவுகளை உண்டாக்கும். கற்பழிப்புகள் வாடிக்கை நிகழ்வாக இருக்கும் நிலையில் இனி கற்பழிக்கும் ஆண்கள்  கற்பழிக்கப்பட்ட அப்பெண் விபசாரி என்று தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். மேலை நாடுகளில் அனைத்துத் துறைகளிலுமே பெண்கள் ஆண்களுக்கு நிகரான அளவில் பணிபுரிகின்றனர். ஆனால் நாம் நாட்டில் பெண்கள் பல துறைகளில் நுழைய முடியாத அளவிற்கு ஆண் ஆதிக்கம் உள்ளது. எனவே ஏழைப் பெண்களையும் தனித்து வாழும் பெண்களையும் கட்டாயமாக விபசாரத்திற்கு தள்ளும் விபரீதம் நிகழும்.