Monday, December 8, 2014

அய்யர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் ஆச்சரியமான ஓற்றுமைகள்:

லைப்பு பார்த்து பலருக்கும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போப்போடுவது போல் இருக்கின்றதே என்று நினைப்பீர்கள். ஏனென்றால் வரலாறு ரீதியாக ஆப்பிர்க்கர்களுக்கும் தமிழர்களுக்கும்(திராவிடர்கள்) உள்ள ஓற்றுமை குறித்து ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றது. பதிவர் கலையரசன் அவர்கள் கலாசார மற்றும் பண்பாட்டு ரீதியாக திராவிடர்களுக்கும் ஆப்பிர்ரிக்கர்களுக்கும் உள்ள தொடரப்பு குறித்த பல முக்கியக் கட்டுரைகளை எழுதி உள்ளார். அது மட்டுமன்றி முன்னால் அமைச்சர் பொன்முடி அவர்கள் கறுப்பர் இயக்கம் மற்றும் திராவிட இயக்கங்களின் செயல்பாட்டு ஓற்றுமை குறித்து புத்தகம் எழுதி இருக்கின்றார்.


ஆப்பிரிக்க மற்றும் அய்யர் சமூகங்களிடையேயான ஒற்றுமைகள் என்பது கால மாற்றத்தினால் ஏற்பட்டது. முதல் ஒற்றுமை என்பது இடம் பெயர்தல் . ஆப்பிரிக்கர்கள் அடிமை சமூகமாக மேலை நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று சொல்லப்படினும் அவர்கள் தங்கள் நாட்டில் பிழைப்புக்கு வழி இல்லாத காரணத்தால் தான் அவர்கள் அடிமைகளாக சென்றனர். பின்னர் அங்கேயே குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் ஏராளமான பிராமணர்கள் நன்கு படித்திருந்த காரணத்தினால் முதலில் பிரிட்டனுக்கும் பின்னர் மற்ற நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தனர். நிறைய ஊர்களில் அந்த ஊரை விட்டு முதலில் இடம் பெயர்ந்தது அய்யர்களாகத் தான் இருப்பார்கள் .நகரத்தை நோக்கி செல்வதில் மிக ஆர்வமாக இருப்பார்கள்.மற்ற சமூகத்தினர் இடம் பெயர்தலில் அதிக ஆர்வமற்றும் , தன் சொந்த இடத்தினை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே வாழ்ந்து மடிவர். ஒரு சிலர் வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தாலும் தன் ஓய்வு காலத்தில் சொந்த ஊருக்கே திரும்பி வந்து வாழ்வார்கள். இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான எந்த இணைப்பும் பிராமணர்களிடம் இருக்காது. ஆனால் நான் இதை ஒரு குற்றச்சாட்டாக சொல்லவில்லை. முதல் ஒற்றுமையான இடம் பெயர்தல் குறித்து பார்த்தோம்.இடம்பெயர்ந்த இடத்தில் இவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தில் பல ஒற்றுமைகள் உள்ளன. முதலில் தொழிலினை தேர்ந்தெடுக்கும் போது இருவருமே வணிகம் சார்ந்த துறைகளில் சேர்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டுவர் . அதனால் தான்  மேல் நாடுகளில் வங்கிகள், வியாபார நிறுவனங்களில் அதிகம் ஆப்பிரிக்கர்கள் இருப்பர்.அதே போன்று நம்மூர் ஐஐடி களில் தொழிற் படிப்பினை படித்த பின்னர் எம்பிஏ படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவோர் பெரும்பாலானோர் அய்யர்களாகவே இருப்பர்.உடனடியாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புடைய பணிகளில் தான் அதிகம் விரும்புவர்.முன்னர் கணினி தொடர்பான வேலைகளில் ஆர்வம் காட்டினர் ,தற்போது அங்கு பணி நிரந்தர உறுதியின்மையால் வியாபாரம் மற்றும் வர்த்தக துறைகளில் செல்கின்றனர்.ஆனால் இது போன்றதொரு திட்டமிட்டு தன் வாழ்க்கைக்கான பணியினை தேர்ந்தெடுக்கும் போக்கு இதர சமூக மக்களிடம் நான் கண்டது குறைவுதான். ஆனால் நான் மேற்குறிப்பிட்ட இரு சமூகத்தினரும் தன் வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்த துறை பயனளிக்குமோ அதை மட்டும் தான் தேர்வு செய்வர். இரண்டாவதாக தொழில் நிமித்தம் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை குறித்து பார்த்தோம்.
கண்டம் விட்டு கண்டம் இடம் பெயர்ந்தாலும் இவர்கள் வாழ்க்கை முறையில் எந்த ஒரு மாறுதலும் ஏற்படவே இல்லை. வெளி நாட்டுக்கு சென்ற பின்னரும் தங்கள் வழிபாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். உணவு முறைகளில் சைவ உணவுப் பழக்கங்களை அந்தளவு பின்பற்ற முடியாவிட்டாலும் முக்கிய விரத நாட்களில் அசைவ உணவுகளை உண்பதே இல்லை.அசைவ உணவுகளில் முட்டை , கோழி தவிர எதையும் பெரும்பாலான பிராமணர்கள் உண்பதில்லை. ஆனால் பிரமாண வகுப்பை சாராத மற்றவர்கள் குறிப்பாக ஆண்கள் வெளிநாடு சென்ற உடன் இது போன்ற மரபான பழக்கங்களை உடைத்தெறிகின்றனர். நல்ல உணவுகளை தேடி தேடி உண்பதில் நம் கேபிள் சங்கர் போல மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.ஆப்பிரிக்கர்கள் வெளி நாட்டுக்கு சென்று பல நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அவர்கள் மேலை நாட்டினர் உண்ணும் உணவுகளை உண்பதில்லை .அதிகமாக இறைச்சி உண்பது , அரிசி அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது , junk food களான  pizaa ,burger அதிகம் சாப்பிடுவது என தனித்தன்மையுடன் வாழ்கின்றனர். வாழ்வியலைப் பொறுத்தவரை இவ்விரு சமூகத்திற்குமான ஒற்றுமை

 என்பது தத்தம் பழக்கவழக்கங்களை உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் விட்டுக் கொடுக்காமல் வாழ்வது தான், ஆனால் பிற இனத்தவரோ தங்கள் அடையாளங்களை இழப்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடனேயே வாழ்கின்றனர்.


இசை மற்றும் நடனம் இவை இரண்டையுமே இவ்விரு சமூகத்தினரும் தாங்கள் சென்றவிடமெல்லாம் கொண்டு சென்றனர். ஆப்பிரிக்கர்களுக்கு ஹிப் ஹாப் நடனம் மற்றும் இசை என்றால் பிராமணர்களுக்கு பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசை தனி அடியாளமாகத் திகழ்கின்றது. இந்த துறைகளில் இவ்விரு சமூகம் சாராத மக்கள் நுழைவது என்பது மிகக் கடினமான ஒன்று. வெள்ளை இனத்தை சேர்ந்த பிரபல ராப்  பாடகரான எமினம் (Eminem) அவர்களை ஆப்பிரிக்க ஹிப் ஹாப் சமூகம் இன்றளவும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை.அதே போன்ற நிலை தான் இங்கே இசை ஞாநி இளையராஜாவுக்கும் கர்நாடக சங்கீத சபையில் இது வரை எந்த ஒரு சிறப்பான அங்கீகாரமும் அவருக்கு அளிக்கப்படவில்லை. இதிலிருந்து அறிவது ஆபிரிக்கர்களும் அய்யர்களும் தங்கள் சமுதாயம் சாராத மக்களுக்கு என்றுமே அங்கீகாரம் அளிக்க மாட்டார்கள். 

மேல சொன்ன ஒப்பீடுகள் ஒரு மாறுபட்ட கோணத்திலிருந்துதான்  சொல்லப்பட்டவை என்றாலும் இவை அனைத்தும் உண்மையே என்பதனை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். 

7 comments:

Avargal Unmaigal said...

வாவ் மற்றும் ஒரு சுவராஸ்யமான அருமையான பதிவு.. பாராட்டுக்கள் இப்படி பட்ட பதிவுகள்தாம் என்னை அதிகம்கவருகின்றன... தொடருங்கள்

செங்கதிரோன் said...

உங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி....,

காரிகன் said...

உங்களின் இந்தப் பார்வை சரிதான்.அய்யர்களுக்கும் யூதர்களுக்கும் இடையேயான ஒற்றுமை குறித்து கருத்து உண்டா? அய்யர்களை இந்திய யூதர்கள் என்று சிலர் அழைக்கிறார்கள்.

செங்கதிரோன் said...
This comment has been removed by the author.
செங்கதிரோன் said...

யூதர்களுடன் ஒப்பிடாத இனமே இல்லை எனலாம்.

Mathu S said...

வணக்கம் நிறய மெனக்கடல் உள்ள பதிவு..
அருமையாக வந்திருகிறது வரிகளுக்கிடையே வம்பு வேறு கேபிள் கலை என்று...
ஜாலியாகவும் இருக்கிறது ...
தொடர்கிறேன்

செங்கதிரோன் said...

மிக்க நன்றி ....