Saturday, November 19, 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரியின் தோல்வி எப்படி நிகழ்ந்தது?




வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளும் தன்னை சுற்றி வைத்து இருந்த ஒருவர் தோல்வி அடையும் நிகழ்வுகள் விளையாட்டு , சினிமா , வணிகம் அனைத்திலும் நடக்கும். அதுவே தான் ஹிலாரிக்கும் நடந்தது. வெற்றிக்கு சாதகமான் அம்சங்கள் அனைத்துமே அவருக்கு தோல்வியினை ஏற்படுத்தும் காரணிகளாக மாறிவிட்டது தான் சோகம். அவற்றில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. முதல் பெண் வேட்பாளர்: அமெரிக்க மீன்கள் அனைவருமே இவரை ஒரு பெண்கள் முன்னேற்றத்த்திற்கான முன்மாதிரியாக பார்க்கவே இல்லை. ஏனென்றால் அடிமட்டத்த்தில் இருந்து ஒரு பெண் தனியாக போராடி மேலே வரும்  ஒருவரை தான் அனைவருமே கொண்டாடுவார்கள். ஆனால் ஹிலாரி நடுத்தர குடும்பப்பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் , அவரின் அரசியல் வளர்ச்சிக்கு அவரின் கணவரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான கிளிண்டனின் பங்கு மிக முக்கியமானது. எனேவ அவரை முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடைமொழிக்குள் வைத்து பெண்களால் கொண்டாட இயலவில்லை. நம் நாட்டில் மம்தா ,மாயாவதி போன்றோர் இவ்வாறுதான் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து முதலமைச்சரானார்கள் .

2. ஒபாமா:  ஒபாமாவின் ஆதரவு ஹிலாரிக்கு மிக பக்க பலமாக இருந்திருந்தாலும் , ஒபாமா தொடந்து இரண்டு முறை ஆட்சி செய்து அதே கட்சியில் இருந்து ஹிலாரி இன்னொரு முறை ஆட்சி செய்ய வாய்ப்பு கேட்டதே அவருக்கு ஆப்பாக அமைந்து விட்டது. ஏனென்றால் உலகை உய்விக்க வந்த கடவுள் போல கொண்டு வரப்பட்ட ஒபாமா பெரிய அளவுக்கு எந்த மாற்றமும் அமெரிக்காவில் நடக்கவில்லை என்பது தான் நிதர்சனம். மாற்றம் விரும்பிய மக்கள் ஹிலாரியை புறக்கணித்து விட்டார்கள்.

3. பில் கிளிண்டன்: அமெரிக்காவை இரண்டு முறை ஆட்சி செய்தவரின் மனைவி என்பதனால் நிறைய ஆதரவு கிடைத்த. அந்த ஆதரவு தளத்தினை நசுக்கும் விதமாக கிளிண்டன் ஆட்சி காலத்தில் நடந்த தவறான நிர்வாக முடிவுகளின் விளைவுகளையும் ஹிலாரியின் தோல்வியாக ,டிரம்ப் தொடந்து முன்னிறுத்தினார். அந்த அணுகுமுறை டிரம்புக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்தது (கிளிண்டன் கொண்டு வந்த நாப்டா ஒப்பந்தத்தினால்   தான் அமெரிக்கர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டது என்ற குற்றசாட்டினை தொடர்ந்து பிரச்சாரங்களில் பதிவு செய்தனால் ஹிலாரிக்கு பெரும் சேதம் ஏற்பட்டது)



இது போல ஏராளமான காரணங்கள் இருப்பினும் மேற்சொன்னவை தான் ஹிலாரியின் தோல்விக்கு மிக முக்கிய காரணிகளாக அமைந்தன.

 நன்றி
செங்கதிரோன்